“ காய்கறிகள், பழங்களை வெந்நீரிலோ,
சோப்பு நீரிலோ, சானிடைசர், பிளீச் குளோரின் கலந்த நீரிலோ கழுவ வேண்டாம்”
” Waschen Sie Obst und Gemüse nicht mit Seife”
“Do not wash fruits and vegetables with soap “
சுவிஸ் கூட்டாட்சியின் உணவு பாதுகாப்பு மற்றும் கால்நடை அலுவலகம் ( BLV )
எச்சரிக்கின்றது
காய்கறிகளையும் பழங்களையும் சோப்பு நீரில் கழுவுவதை குறித்து பல ஆலோசனைகள் சொல்லப்படுகின்றன
மக்கள் உடல் நிலை சார்ந்த விடயங்களில் தற்கால Covid19 சுழலுக்குரிய அவசர முடிவுகள் பிற்காலத்தில் ஆபத்தை உருவாக்க கூடாது என்பதில் சுவிஸ் அரசு மிகவும் அவதானமாக இருக்கின்றது
" ஒரு விடயம் சரியான முறையில் பயன்படுத்தப்படாவிட்டால் அதன் பின் விளைவுகள் பாரதூரமாகவும் தேவையற்ற உடல் ஆரோக்கிய சீர் கேடடையும் உருவாக்கும் என உணவு துறை சார் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சுவிஸுக்கு கிவி, Peperoni, தக்காளி போன்ற பல உணவுகள் கொரோனா தொற்று பரவும் பகுதிகளிலிருந்து வருகின்றன. இருப்பினும் நீங்கள் அவற்றை சவர்க்காரம் மூலம் சுத்தம் செய்யக்கூடாது.
COVID-19 தொற்றுநோய்களின் போது கூட, பழங்கள் மற்றும் காய்கறிகளை சோப்பு மற்றும் வெந்நீரில் கழுவுவது நல்ல யோசனையல்ல என்று உணவு விஞ்ஞானிகள் லைவ் சயின்ஸிடம் தெரிவித்தனர்.
சவர்க்காரம் சிக்கலான இரசாயனங்கள் நிறைந்தது
"வீட்டு டிஷ் சோப்புகளை உட்கொள்வதில் நச்சுத்தன்மை பிரச்சினைகள் இருப்பதாக நாங்கள் 60 ஆண்டுகளாக அறிந்திருக்கிறோம்" டிஷ் சோப் குடிப்பது அல்லது சாப்பிடுவது குமட்டலுக்கு வழிவகுக்கும்என்பதால் இது வரை
உணவுப் பயன்பாட்டிற்கு பாத்திரங்களைக் கழுவுவதற்குசவர்க்காரம்அனுமதிக்கப்படவில்லை என்று வட கரோலினா மாநில பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் உணவு பாதுகாப்பு நிபுணருமான பெஞ்சமின் சாப்மேன்.( North Carolina State யூனிவர்சிட்டி பெஞ்சமின்Chapman )
Livescience.com இடம் தெரிவித்தார்.
"மனித வயிறு சவர்க்காரத்தில் உள்ள ரசாயன சேர்மங்களுக்காக உருவாக்கப்படவில்லை."
சவர்க்காரம் கலந்த நீரில் கழுவும் போது அதிலிருக்கும் இரசாயனங்கள் ”பழங்கள் மற்றும் காய்கறிகளின் ஊடுருவி உள் நுழைகின்றன.
அவைகளை உண்ணும் போது
“ பின் விளைவாக, இரைப்பை, குடல் எரிச்சல்,குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற நோய்கள் உருவாகும் என உணவு துறை வல்லுநர் தெரிவிக்கின்றார்
ஜாவேல் / பிளீச் / குளோரின் நீரில் கழுவுவதும் ஆபத்தானது
Covid 19 இற்கான தற்பாதுகாப்புக்கான ஆலோசனைகளில் உணவு பொருள் சுத்தப்படுத்தல் குறித்து தற்போது ஆன்லைனில்பரிந்துரைக்கப்படும் குறிப்புக்களை குறித்து ஜாவெல் நீர் போன்ற வெளுத்தப்பட்ட திரவங்களைப் போலவே, கலப்பு எலுமிச்சை சாறு அல்லது வினிகர் கிளீனர்கள் கூட சிறந்தது என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. இவை ஆபத்தானவை என பெஞ்சமின் Chapman அறிவுறுத்துகிறார்
அதற்கு பதிலாக, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள வல்லுநர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை குளிர்ந்த நீரின் கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்று ஒப்புக்கொள்கிறார்கள் ( vedio )
சர்ஸ்-கோவி -2 உணவில் இருந்து மனிதர்களுக்கு பரவுவதாக இன்றுவரை அறியப்படவில்லை என்பதால், கொரோனா அல்லாத காலங்களைப் போலவே குளிர்ந்த நீரில் கழுவுவது முற்றிலும் போதுமானது என்று சாப்மேன் கூறுகிறார்.
👇👇
உணவுப்பொருள்களை தொட்டு கையாளும் முன்னும் பின்னும் கைகளை கழுவுங்கள்
• முதலில் உங்கள் கைகளை கழுவுங்கள்
• ஓடும் நீரில் காய் + பழங்களை கழுவிய பின் நீர் நிறைந்த பாத்திரத்தில் முக்கி கழுவி உலர விடுங்கள்
• மீண்டும் உங்கள் கைகளை கழுவுங்கள்
• வெட்டும் முன்னும்உங்கள் கைகளை கழுவி பின்னும் கழுவ வேண்டும்
ஆதாரங்கள்:
பழங்களை எப்படி கழுவலாம்?
Live Science :
https://youtu.be/-xIw71M3Tro
Swiss news :
https://www.google.ch/amp/s/amp.20min.ch/14024560
Live Sceince : https://www.google.ch/amp/s/www.livescience.com/amp/do-not-wash-fruits-vegetables-with-soap.html
படம்1: geogle
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!