25 நவம்பர் 2015

நெஞ்சம் மறப்பதில்லை!

உயிருடலில் இருக்கும் வரை
உணர்விருக்கும்.
உணர்வென்னில் உள்ளவரை
உறவிருக்கும்
உறவில்லையென்றானால்
உணர்வாய் நானில்லை.
உணர்வுடனே  சொல்லிடலாம்
உரிமையாய் கேட்டிடலாம்
உள்ளமது சொன்னபடி
உண்மைதனை மறந்திடலாம்..!

தேவைகள் தேவதைகளாய்
உருப்பெறும் போது
தேடலுடன் நாடுகின்றோம்
பேசாத ஒரு நொடியில்
அசைவற்று போனதென
அன்பு வார்த்தை பல சொல்லி
அச்சமுகம் தோன்றுவதை
நெஞ்சமதில் விதைக்கின்றோம்.
வஞ்சமில்லா அன்புணர்ந்து
விதைப்பதுவே விளைவாகும்.

விளைவதெல்லாம் கனிதரும் தான்
விலைகளில்லா அன்பாயிருந்தால்..!
விலகல் சொல்ல ஆயிரம்
காரணங்கள்  நமக்கிருந்தாலும்..
விளைந்து விட்ட  விதையதிலே
காரணங்கள் வெந்நீராய் தாம் பொழியும்
அறியாது செய்து விட்டோம்
சொல்லித்தப்ப மூவைந்து
வயதும் நமக்கில்லை
பட்ட விதை பட்டதுதான்!

பட்ட மரம்  முளை விடலாம்
பட்டவைகள் மறந்திடுமா?
சொன்ன வார்த்தை தடம்மாறி
தந்த காயம் அழிந்திடுமா?
விதைகளெல்லாம் விளைவதில்லை
என்ற உண்மை புரிந்திடுமா?
இறைவனிடம் சரணடந்தாலும்
வாக்கு தனை மறந்து மனம்
மாறிட்டதை உணர்ந்திடுமா!
இழந்ததென்ன புரிந்திடுமா?


ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க!



18 கருத்துகள்:

  1. நெஞ்சில் நிற்க கூடிய கவிதை வரிகள் அருமை வாழ்த்துகள் தொடர.....

    பதிலளிநீக்கு
  2. காயம் தழும்பால் மறைக்கப்பட்டிருக்கும் நிஷா!
    மிக நன்று

    பதிலளிநீக்கு
  3. பல கேள்விகளை உள்ளடக்கியதாக அமைந்த உங்கள் கவிதை அருமையாக உள்ளத பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  4. உயிருடலில் இருக்கும் வரை
    உணர்விருக்கும்.
    உணர்வென்னில் உள்ளவரை
    உறவிருக்கும்
    உறவில்லையென்றானால்
    உணர்வாய் நானில்லை.
    வாவ் அருமையாக உள்ளது இந்த வரிகள்

    பதிலளிநீக்கு
  5. அருமையான வரிகள்! நிஷா...வலிகள் வேதனைகள் இதுவும் கடந்து போகும் என்று போவதில்லைதான் சில...

    பதிலளிநீக்கு
  6. பட்ட மரம் முளை விடலாம்
    பட்டவைகள் மறந்திடுமா?
    சொன்ன வார்த்தை தடம்மாறி
    தந்த காயம் அழிந்திடுமா?
    விதைகளெல்லாம் விளைவதில்லை
    என்ற உண்மை புரிந்திடுமா?
    இறைவனிடம் சரணடந்தாலும்
    வாக்கு தனை மறந்து மனம்
    மாறிட்டதை உணர்ந்திடுமா!
    இழந்ததென்ன புரிந்திடுமா?

    அட... அட...

    இப்படியெல்லாம் வரிகள் வார்த்தைகளாய்...
    ஒரு கவிதாயினியை காலம் ரொம்பநாளா கருத்து மட்டும் போட வச்சிருச்சே...

    அருமையான கவிதை அக்கா..

    பதிலளிநீக்கு
  7. அருமை. வேதனைகள் மறையட்டும். உலகெங்கும் அன்பு பரவட்டும்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    இரசிக்கவைக்கும் வரிகள் வாழ்த்துக்கள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. பட்ட மரம் முளை விடலாம்
    பட்டவைகள் மறந்திடுமா?
    சொன்ன வார்த்தை தடம்மாறி
    தந்த காயம் அழிந்திடுமா?
    விதைகளெல்லாம் விளைவதில்லை
    என்ற உண்மை புரிந்திடுமா?
    இறைவனிடம் சரணடந்தாலும்
    வாக்கு தனை மறந்து மனம்
    மாறிட்டதை உணர்ந்திடுமா!
    இழந்ததென்ன புரிந்திடுமா?

    அருமை. தொடருங்கள் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. சிந்தனையின் வேகம்
    பிரமிக்க வைக்கிறது
    இருவேறு நிலைகளுக்கும் சொல்லிப்போகும்
    உவமைகள் மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் நிஷா !

    நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை அளிப்பதில்லை !
    பாடல்தான் நினைவுக்கு வருகிறது அருமை அருமை தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !

    பதிலளிநீக்கு
  12. கில்லர்ஜீக்கு தாங்கள் இட்ட பின்னூட்ங்களைக் கொண்டு
    பயணத்தில் ஆர்வம் உள்ளவர் எனப் புரிந்து கொண்டோம்
    படங்களுடன் பயண அனுபவங்களைப் தாங்கள் பதிவிட்டால்
    என் போன்ற கிணற்றுத் தவளைகளுக்கு பயனுள்ளதாக இருக்குமே
    வாழ்த்துக்களுடன்..

    பதிலளிநீக்கு
  13. உங்கள் அன்புக்கு நன்றி.

    பயணத்தில் ரெம்ப ஆர்வம் என்றும் இல்லை ஐயா! எதை செய்தாலும் அதை முழுமனதோடு ஈடுபாட்டோடு செய்வேன். நான் படித்தவற்றினை முழுமையான் உள் வாங்கி பின்னூட்டம் இட முயல்வேன். அப்போது பதிவுடன் ஒத்து என் பின்னூட்டங்களில் நான் அறிந்ததை பகிர்வேன் ஐயா. அத்தோடு இங்கே பிள்ளைகளுக்கான வருடாந்த விடுமுறையில் எங்கேனும் சுற்றுலா அழைத்து செல்ல வேண்டியது கட்டாயம் என்பதால் எங்கள் வண்டியில் எல்லாம் தூக்கி போட்டு விட்டு கிளம்புவோம். இது தான் இலக்கு என நிர்ணயிப்பதில்லை. இத்தனை நாட்கள் என மட்டும் திட்டமிடுவோம். தங்குமிடம் அங்கங்கே செல்லும் போது பார்த்துகொள்வோம்.

    மனதளவில் நிரம்ப பகிர்ந்திட ஆர்வம் இருக்கின்றது ஆனால் சூழலும் நேரம் இக கடுமையாய் இருக்கின்றது. நான் ஈவண்ட் மனேஜிங்க் செய்வதால் ஒரு பார்ட்டிக்குரிய அனைத்தினையும் முழுமைப்படுத்த என் சிந்தனையை அங்கே முழுமையாக குவிக்க வேண்டி இருக்கின்றது.. இங்கே சென்று பாருங்கள். https://www.facebook.com/Hegas-Catering-Fine-Indian-Swiss-Food-Services-152352458258136/

    என்னால் இயன்றவரை முயற்சிக்கின்றேன் ஐயா

    பதிலளிநீக்கு
  14. பட்ட மரம் முளை விடலாம்
    பட்டவைகள் மறந்திடுமா?

    மனதைத் தொட்ட வரிகள்,,,,,,,,
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. //விளைவதெல்லாம் கனிதரும் தான்
    விலைகளில்லா அன்பாயிருந்தால்..!
    விலகல் சொல்ல ஆயிரம்
    காரணங்கள் நமக்கிருந்தாலும்..
    விளைந்து விட்ட விதையதிலே
    காரணங்கள் வெந்நீராய் தாம் பொழியும்
    அறியாது செய்து விட்டோம்
    சொல்லித்தப்ப மூவைந்து
    வயதும் நமக்கில்லை
    பட்ட விதை பட்டதுதான்!

    பட்ட மரம் முளை விடலாம்
    பட்டவைகள் மறந்திடுமா?
    சொன்ன வார்த்தை தடம்மாறி
    தந்த காயம் அழிந்திடுமா?
    விதைகளெல்லாம் விளைவதில்லை
    என்ற உண்மை புரிந்திடுமா?
    இறைவனிடம் சரணடந்தாலும்
    வாக்கு தனை மறந்து மனம்
    மாறிட்டதை உணர்ந்திடுமா!
    இழந்ததென்ன புரிந்திடுமா?
    //

    ஆதங்கம் நிறைந்த வரிகள் அருமை நிஷா...

    பட்ட பின் புத்தி வந்திடும் நிஷா ...

    பதிலளிநீக்கு
  16. அருள்மொழிவர்மன் ஆகிய நான் என் மனது எனது முதல் பதிவு
    http://n-eem.blogspot.in/2015/11/blog-post.html

    பதிலளிநீக்கு
  17. மனதின் ஆதங்கங்களை அருமையாய் வார்த்தையில் வடித்திருக்கிறீர்கள். அருமை நிஷா!

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!