13 நவம்பர் 2015

கலைந்து போகும் கனவுகள்.


நீயும் நானும் நாமாகும் போது
தீதும் நன்றும் தானாயுணர்வோம்
தாயும் சேயும் நாமானாலும்
காலம் போடும் கோலம் வேறே
காதல் கொண்ட மனமது துள்ளும்
காண்பதுவெல்லாம் அவளென சொல்லும்
உணர்வுகளெல்லாம் அவளாகி போகும்
தேகமோ தவித்து உண்ர்வதை கொல்லும்
சகலமும் நீயென சரணாக செய்தே
கவிதைகள் எல்லாம் சரமாய் பறக்கும்.
காதலும், காமமும் மனமதை வெல்லும்,
சடுதியில் ஒரு நாள் நிதர்சனம் புரியும்.
கானல் நீரா இதுவென புரிபடுமுன்னே
கனவாய் அனைத்தும் கலைந்தே போகும்.
நீயும் நானும் நாமாகி இருப்போம்.

4 கருத்துகள்:

  1. அருமையான கவிதை அக்கா....
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. சடுதியில் ஒரு நாள் நிதர்சனம் புரியும்.

    கானல் நீரா இதுவென புரிபடுமுன்னே

    கனவாய் அனைத்தும் கலைந்தே போகும்.

    நீயும் நாமும் நாமாகி இருப்போம்.

    துவங்கியது தொடர்ந்தது
    மிகக் குறிப்பாய்
    முடித்தவிதம் வெகு வெகு அருமை
    அடுத்த கவிதையை ஆவலுடன் எதிர்பார்த்து...

    பதிலளிநீக்கு
  3. என்ன கவிதை இது?
    நச்சென அடிக்கிறது.

    நச்சா காதல்?
    உணர்வுகளின் உச்சமில்லையா?

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!