14 நவம்பர் 2020

எல்லோருக்கும் இனிய தீபத்திரு நாள் நல்வாழ்த்துகள்...!

 எல்லோருக்கும் இனிய  தீபத்திரு நாள் நல்வாழ்த்துகள்...! 


புன்னகை மனங்களோடு 

புதியதோர் உலகை நோக்கி  

உள் உறங்கும் அறியாமை 

இருள் அகன்று 

புது வெளிச்சம் வரட்டும் ..!          

    🪔  🪔  🪔 🪔  🪔  🪔 🪔  🪔  🪔 

இனி வரப்போகும் என்  பதிவுகளுக்கான சிறு முன்னோட்டம் இது..!   

                    🇸🇬 சிங்கப்பூர் 🇸🇬

சிங்கப்பூர் 1960  ஆம் ஆண்டில் கடுமையான வேலையில்லாப் பிரச்சினையையும், வீட்டுவசதிப் பற்றாக்குறையையும் எதிர்கொண்ட சிங்கபுயூர் 

30ஆண்டுகளில் உலகமே வியந்து நோக்கும்  வளம் பொருந்திய நாடக  மாறியது என்று பலர் அறிந்திருப்பீர்கள்..! அறியாதவர்களுக்கு சிறு குறிப்பு தருகின்றேன்..! 

 🪔  🪔  🪔 🪔  🪔  🪔 🪔  🪔  🪔 

சிங்கப்பூர்.....! 

1960  ஆம் ஆண்டில் கடுமையான வேலையில்லாப் பிரச்சினையையும், வீட்டுவசதிப் பற்றாக்குறையையும் எதிர்கொண்ட  இயற்கை வளங்கள் அதிகம் இல்லாத நாடு..! 

எப்படி முன்னேறியது..? 

1960கள் தொடக்கம் 1970கள் ஊடாக நவீனமயமாக்கத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியது. இத்திட்டம்,

உற்பத்தித் தொழிற்றுறை ஒன்றை நிறுவுதல், பெரிய வீட்டுத் திட்டங்களை அமைத்தல், கல்வியில் பெருமளவு முதலிடுதல் என்பவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

30ஆண்டுகளில்......! 

1990கள் அளவில், சிங்கப்பூர் வளர்ச்சியடைந்த சுதந்திர சந்தைப் பொருளாதாரம், வலுவான பன்னாட்டு வணிகத் தொடர்புகள், ஜப்பான் தவிர்ந்த ஆசியாவின் மிகக்கூடிய "நபருக்கான உள்நாட்டு உற்பத்தி" ஆகியவற்றுடன், உலகின் மிகவும் வளம் பொருந்திய நாடுகளில் ஒன்றாக ஆனது.

சுதந்திரத்துக்கு முன்....! 

இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் ஜப்பானியப் பேரரசு சிங்கப்பூரைகைப்பற்றி 1942 இல் இருந்து 1945 வரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். போர் முடிந்த பின்னர் கூடிய அளவு தன்னாட்சியுடன்  சிங்கப்பூர் மீண்டும் பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 

1963 இல்  சிங்கப்பூர் மலாயக் கூட்டமைப்பில் இணைந்ததன் மூலம் மலேசியா உருவானது. எனினும், சிங்கப்பூர் மக்கள் செயற்பாட்டுக் கட்சிக்கும், மலேசியாவின் கூட்டணிக் கட்சிக்கும் இடையே உருவான பிணக்குகளினாலும், உள்நாட்டுக் கலகங்களாலும், மலேசியக் கூட்டமைப்பில் இருந்து சிங்கப்பூர் வெளியேறி 09.08.1965  ஆம் தேதி சிங்கப்பூர் சுதந்திரக் குடியரசானது.

        🪔  🪔  🪔 🪔  🪔  🪔 🪔  🪔  🪔 

எங்களுக்கு பின் அந்நியர்  பிடியிலிருந்து சுதந்திரம் பெற்ற நாடு எப்படி ஆசியாவின் வளம்  கொழிக்கும் நாடாக மாறியது..? 

அரசியல் வாதிகள், அதிகாரிகள் மட்டும் காரணமா ..? 

இல்லை ... இது என் தேசம்.. இந்த தேசத்தின் மீட்சி,  பாதுகாப்பு, உயர்வு  என்னால் எனும் எண்ணம் ஒவ்வொரு தனி மனிதருக்குள்ளும் உணர்த்த  பட்டதனால் தான் என்பதை கீழிருக்கும் இவ்வருட தேர்தல் வெற்றி எமக்கு உணர்த்துகின்றதா இல்லையா..? 


11.07.2020 News 

சிங்கப்பூரில் கடந்த 1959-ம் ஆண்டிலிருந்து மக்கள் செயல் கட்சிதான் ஆட்சியில் இருந்து வரும் நிலையில் இந்த முறையும் ஆளும் கட்சிக்கே மக்கள் வாக்களித்துள்ளனர். 

🪔  🪔  🪔 🪔  🪔  🪔 🪔  🪔  🪔 

சிங்கப்பூர் குறித்த எனது பதிவினுடாக  

இலங்கை  எனும் எங்கள் தேசத்தின் தற்சார்பு பொருளாதாரம் அபிவிருத்தி நோக்கி அரசு எடுக்கும் முயற்சிகளின் பின் இருக்கும் நாட்டின் பாதுகாப்பு மீட்சி குறித்த  கவனயீர்ப்பும் இருக்கின்றது. 

அந்நியர் அடிமைத்தனத்தில் சிக்கி சின்னாபின்னமாகாமல் எமது நாட்டை வளமுடையதாக்கி ஆசியாவின் கனவு தேசமாக  மாறும் படி உருவாக்க முடியும் எனும் நம்பிக்கையோடு  இந்த தீபாவளியை கொண்டாடுங்கள். 

எல்லோருக்கும் இனிய  தீபத்திரு நாள் நல்வாழ்த்துகள்...!

 🪔  🪔  🪔 🪔  🪔  🪔 🪔  🪔  🪔 

      “இனி வரும் காலம் எமதாகும்“

1 கருத்து:

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!