28 நவம்பர் 2020



 வெற்று சிரட்டைகள் வெற்றி பெறுகின்றன..? 

வெறுங்கைகள் முழம் போடுகின்றன..!

வெற்றிடங்கள் வெற்றி  கோட்டை தொடுகின்றன..!

























26 நவம்பர் 2020

விவசாய புரட்சியும், தொழில் நுட்பமும்





 #விவசாயம் #பண்ணை என்றால்  முந்தின காலம் போல் மண்ணுக்குள், சேத்துக்குள் கால் புதைந்து வேலை செய்யணும் என பலர் நினைக்கின்றார்கள்.. 

சிறு வீட்டுத்தோட்டங்களுக்கே இப்போதெல்லாம் மண் தோண்டி விதையோ  மரமோ நடுவது இல்லை. உடல் வலிக்க நீர் பாய்ச்சுவது இல்லை. நகத்தினுள் அழுக்கு படாமல் விவசாயம்..? 

மண்ணை கிளறி உரம் போட,விதை நட, 


மரம் நட, நீர் பாய்ச்சி, களை புடுங்கி உரமிட்டு, அறுவடை செய்து தரம் பிரித்து தரும் வரை இயந்தரங்கள் வந்து விட்டன.

பல ஏக்கர்கணக்கில் சோளன் விதைக்க மண் பதப்படுத்துவதில் இருந்து தரம் பிரிக்கும் வரை  ஓரிருவர் மட்டுமே  இயந்தரங்கள் மேலிருந்து  இயக்குகின்றார்கள்.

யப்பான் நாட்டின் அனுசரணையுடன் முன்னெடுக்கும் இந்த திட்டம் குறித்து  காடுகளில் விவசாயம் செய்வது குறித்தும் அதன் பாதுகாப்பு குறித்தும் சிந்திக்காமல் அரசு முடிவெடுத்து இருக்கும் என்று நினைக்கின்றிர்களா..? 

சிங்கள  குடியேற்றங்களை உருவாக்க நினைத்து திட்டமிட்டால்  விண்ணப்பம் , தேர்வு, பயிற்சி என்று அரசு பணி அதிகாரிகள் நேரத்தையும் விவசாய அபிவிருத்தி எனும் பெயரில் புதிய பணியாளர்களையும் நியமித்து பயிற்சி காலத்திலேஸே மாதம் 25 ஆயிரம் கொடுக்கும் அரசு முட்டாள் என்று நினைக்கின்றிர்களா..? 

மனித வலு மற்றும் பொருள் இயந்திர வலுக்களை கொண்டு இறக்கி காலத்தை வீணடிக்க அரசாங்கத்திடம் கஜானாவில் காசு நிரம்பி  வழிகின்றது என்று நினைத்து பேசிக்கொண்டிருப்பார் பேச்சுக்கு காது கொடுத்து கொண்டிருக்காமல் காரியத்தை பாருங்கோ..! 

சொல் அல்ல செயல் முக்கியம்..! தூரம் , துயரம்சொ

ல்லிக்கொண்டிருப்போர் இருக்கட்டும்.  

இராணுவத்தின் கீழ் இந்த காடுகள் வந்த பின் அவர்களுக்கு தூரம் துயரம் எல்லாம் புரியட்டும்.

விவசாய  புரட்சியும்,  தொழில் நுட்பமும்

எப்படின்னு இணைத்திருக்கும் படங்கள் உட்பட வீடியோ  இரண்டும்  பாருங்கோ ..! 


1.


2.

இதெல்லாம் நம்ம  பிச்சகார நாட்டுக்குள் வருமோ என்று யாராச்சும் குத்தம் சொல்லி கொண்டு வருவாங்க..,!  

வரும்....!  

நாம் எல்லோரும் இணைந்து செயல் பட்டால் வர வைக்க முடியும்..! 

பாகிஸ்தானிகேயே இதெல்லாம்  வந்து இருக்கு. நம்ம தேசத்துக்கும் வருவதுக்கு என்ன..? இந்த இயந்தரங்கள் எல்லாம் ஒவ்வொருவரும் தனியே வாங்குவது இல்லை. அரசு அதற்கு என்று ஒரு  ஆபீஸ் அல்லது தனியார் வாங்கி  வாடகைக்கு விடலாம். அப்டித்தான் சுவிஸில் நடக்குது. எல்லாமே தெரியாது என்று இருக்கும் வரைதான். 

நீங்கள் களத்திலாடுங்கோ மக்கா..!

விவசாய  புரட்சியும்,  தொழில் நுட்பமும்


இயக்கம் - உத்வேகம் - பார்வை - 1

 #motivation_inspiration_VISION 2021

நேற்று ஒருவர் நாங்கள் ஜூம்  மீட்டிங் போட்டோமே என் யாரும் கலந்துக்கல்ல  ..? அப்போது எல்லோரும் என்ன செய்தார்கள்..? சோம்பேறி சமூகம் என்கின்றார்? 

உண்மையில் யார் சோம்பேறிகள்? உடலில் வலுவும்,உளவியல் வளமும்  இல்லாமல்  அன்றாடம் உணவுக்கே அல்லாடி உழைத்து தின்ன பாடுபடும் அவர்களா..? இல்லை நாங்களா?

நாங்கள் எங்களை வைத்து எங்களை போல்  வாழ்க்கை வாழும் மக்களை குறித்த யோசித்து அடித்தட்டு மக்களுக்கு ஐந்தும் பத்தும் கொடுப்பதோடு எங்கள் தர்மங்களினை குறித்த பெருமிதத்தில் குற்ற உணர்வுகளை மறைத்து விடுகின்றோம். 

ஆனால்...? 

இன்டர்நெட்,you Tube Vidio , Facebook, Online zoom Meeting லிங்க் பார்த்து புரிந்து கொள்ளும் அறிவுத்திறன் கொண்டோருக்கான திட்டமும் இது இல்லை. சேத்தில் இறங்கி  முள்ளுக்குள்ளும், புல்லுக்குள்ளும் நடந்து உடலில் வியர்வை சிந்தி உழைக்கும் வர்க்கத்துக்கானது. இந்த மாதிரி திட்டங்களை நான்கு சுவற்றுக்குள் ஏசி அறைக்குள் இருந்து செய்வோருக்கு விளக்கப்படுத்தி பிரயோசனம் இல்லை. 

உழைத்து பிழைக்கும் ஆற்றலுள்ள பயனாளிகளுக்கு புரிய வைக்கணும். உதவி செய்யணும்.  கை தூங்கி விடணும். அவர்களுக்கு இத்திட்டவரைபும் தெரியாது. விண்ணப்பம் நிரப்பும் பெயரில் ஒருவருக்கு 1000 Rs ரேட் போட்டு வருமானம் சம்பாதிக்கவும் தெரியாது. நிலத்தில் இறங்கி உழைக்க மட்டும் தான் தெரியும். 

உங்களுக்கு ஒரு விடயம் தெரியல்ல என்றால் தெரியாது என்று தெளிவாக சொல்லணும் தவிர அப்பாவி மக்களை குற்றம் சொல்லி கிளப்பி விட கூடாது. உண்மையில் எங்களில் அநேகருக்கு நாங்கள் இருக்கும் அபாயமான நிலை புரியவில்லை. கொரோனாவுக்கு பின் வரும் உலகின் நெருக்கடி புலம் பெயர் வாழ் தமிழர்களுக்கு தரப்போகும்  சிக்கல்களின் தன்மை  உணரவில்லை. அவனவனுக்கு அவன் நாடும், மக்களுமே முக்கியம். 

மக்கள் கொந்தளிக்க ஆரம்பித்தால் மனிதாபிமானம், புரிந்துணர்வு எல்லாம் குப்பைக்குள் போகும் என்பதை மார்ச் ஏப்ரல் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரவில்லை என்பதற்க்காக சுவிஸ் நாட்டுக்குள் மருந்துகளும், உணவுப்பொருள்களையும் விடாமல் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மன் நாடுகள் தங்கள் எல்லைகளில் பல வாரங்கள் தடுத்து வைத்திருந்ததை நினைவுக்கு கொண்டு வாருங்கள்.

சமூகத்துக்கு  மீட்சி தேவை என்றால் முழு சமூகமும் ஒத்துழைக்கணும். தூங்கி கொண்டிருக்கும் அனைவரும் எழும்புங்கள்..! 🔥🔥🔥🔥

இயக்கம் - உத்வேகம் - பார்வை - 1

20 நவம்பர் 2020

Project Proposal - 2 ஒரு விவசாய அல்லது விவசாய வணிக முன்மொழிவை எழுதுவது எப்படி?

Project Proposal - 2 திடடவரைபு 

கடந்த சில நாட்களில் எனக்கு வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் எடுத்துக்காட்டுகளுடன் தெளிவாக விளக்கி எழுத   முயற்சித்து. ஆறு பிரிவுக்குள்  (  உங்கள் திட்டங்களுக்கு ஏற்றபடி நான்கு தொடக்கம் பத்து பக்கம் வரும்) அடக்கி இருக்கின்றேன்.

நீண்ண்ண்ண்ன்ட  பதிவு....!

ஆனால் உங்களை ஒரு தொழில்  முனைவோர் ஆக்கிட அவசியம் அறிந்துட வேண்டிய பதிவு. அவசியமானவர்கள் வாசித்து பயனடையுங்கள். சிறிய,பெரிய அளவுகளில் தொழில் முனைவோர்களுக்கு விவசாய / பண்ணை அமைப்பதற்கு தேவையான விபரங்களை முழுமைப்படுத்தி இருக்கின்றது.

இதிலிருக்கும் விபரங்களின் படி நீங்களே உங்களுக்கு திட்டவரைபு செய்து கொள்வது போல் ஒரு படிவம் ( PDF ) செய்து  தரும் ஆலோசனை ஒன்றை என் கம்பெனி வடிவமைப்பு  நிறுவனத்திடம் ஒப்படைத்து உள்ளேன். இன்று இரவு அல்லது நாளை அதை தரவேற்றுவேன்.

அதற்கு முன் இந்த பதிவை புரிந்து தேவையான விபரங்களை தயார் செய்து கொள்ளுங்கள். 

இந்த பதிவிலிருக்கும் விபரங்களின் படி உங்கள் சொந்த யோசனையில் செய்ய   கூடியவர்கள் செய்து பகிருங்கள். 

ஒரு விவசாய அல்லது விவசாய வணிக முன்மொழிவை எழுதுவது எப்படி? 

ஒரு வேளாண்மை / பண்ணை வணிகத் திட்டத்தை எழுதுவது உங்கள் விவசாய வணிகத்தைத் திட்டமிடுவதற்கான ஒரு முக்கிய கருவியாக இருக்கும். இது உங்கள் பண்ணை வணிகத்திற்கான மானியங்கள், குத்தகை நிலங்கள் மற்றும் கடன்களைப் பெறுவதற்கான தேவையாகவும் இருக்கலாம். 

ஒரு பண்ணை வணிகத் திட்டத்தை எழுதும் செயல்முறை முதலில் பெரும் அச்சுறுத்தலாகத் தோன்றலாம், ஆனால் நீங்கள் அதை அதன்  விபரங்களை அறிந்து கொண்டால்  நீங்களே Project Proposal உங்கள் கற்பனை திறனுக்கேற்றபடி உருவாக்கி மெருகூட்ட முடியும். 

🟢 ஒரு வார்த்தை பதிலை வழங்குவதற்குப் பதிலாக, நீங்கள் வழங்கும் தயாரிப்பு (கள்) மற்றும் / அல்லது சேவை (கள்) பற்றிய துல்லியமான புரிதலைப்  கொடுக்க  வேண்டும்.

✅ Ex: தென்னை உங்கள் நோக்கம் என்றால் தென்னை மரம் என்று மட்டும் எழுதாமல் அது சார்ந்த தொழில் திட்டம் குறித்து நீங்கள் ஆரம்பிக்கும்  வரிகள்  சடடென மனதை கவரும் படி . சிறு பந்தி ஒன்றை விரிவாக எழுதலாம். 

உங்கள் திட்டத்துக்கு தலைப்பு  ஒன்றை தீர்வு செய்யுங்கள்.. (  Ex:செழிப்பான எதிர்காலம், தற்சார்பு நோக்கிய திட்டம் ) 

தேவையான  விபரம்: 

பெயர் :

முகவரி :

தேசிய அடையாள அட்டை : 

பிரதேச செயலகர் பிரிவு :

தொலைபேசி இலக்கம் :

மெயில் ஐடி : ( கட்டாயம் இல்லை) 

🟢

நீங்களே உங்களுக்கோர் திட்ட வரைபு உருவாக்கி கொள்வது எப்படி..? 

1. உங்கள் திட்டங்கள் மற்றும் நோக்கங்கள்?

🔹உங்களையும் உங்கள் திட்டத்தையும் அறிமுகப்படுத்துங்கள்.

▪️உங்கள் திட்டம் / பண்ணை யின் அவசியம் என்ன? ஏன் இந்த  தொழிலைத் தொடங்க விரும்புகின்றிர்கள்? 

( குடும்ப தொழில் பாரம்பரியம். இயற்கையின் மேலிருக்கும் ஆர்வம். எங்கள் மண்ணில்  எதையெல்லாம்  உருவாக்கலாம் என நிரூபிக்கும் கனவுத்திட்டம்,  சுயதொழில் முயற்சி / என்றெல்லாம் எழுதலாம் / எல்லோரும் இதை copy பண்ணாமல் மாற்றி யோசிக்கவும். ) 

▪️உங்கள் பண்ணை என்ன நோக்கத்திற்கு உதவுகிறது?  எதை அடைய விரும்புகிறீர்கள்? 

( இயற்கை வளங்களை பயன்படுத்தி வெற்றி  கொண்டு தற்சார்பு வாழ்க்கைக்கு தேவையானவைகளை உற்பத்தி செய்து என்னையும் என் சமூகத்தையும் பாதுகாத்து கொள்வது) 

▪️உங்கள் பண்ணை எங்கே இருக்க வேண்டும்?    

இது "பணம் சம்பாதிப்பதற்கு" அப்பாற்பட்டது என்பதை உங்கள் திட்டம் 

குறித்து முடிவு செய்யும் அதிகாரிகளுக்கு உங்கள் மீதான மதிப்புகள் மற்றும் ஆர்வமுள்ள விபரம் அறிந்த திட்டம்  தொழில் முனைவோனாக புரிய வைக்கும்  முக்கிய அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் திட்டத்தின்  நோக்கம் / அறிக்கை என்பது உங்கள் வணிகத்திற்கான மிக உயர்ந்த நோக்கமாகும்:

ஏற்கனவே நிறுவப்பட்ட வணிகமாக இருந்தால், உங்களின்  அடுத்து திட்டம் என்ன என்பதை காண்பிக்கும் எதிர்கால திட்டம் இருக்க வேண்டும்:

▪️நீங்கள் விவசாயத் தொழிலில் இருக்கிறீர்களா?

▪️அல்லது அதில் இறங்க திட்டமிட்டுள்ளீர்களா?

▪️ நீங்கள் எங்கே  வசிக்கின்றீர்கள்? 

▪️எத்தனை ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்கிறீர்கள்?

▪️நீங்கள் எப்போது விவசாயத்தைத் தொடங்கினீர்கள்?

▪️நீங்கள் தற்போது எவ்வாறு செயல்படுகிறீர்கள்?

▪️பாதுகாப்பு, உழவு, சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற விஷயங்களுக்கு நீங்கள் என்ன பொதுவான நடைமுறைகளைப் பயன்படுத்துகிறீர்கள்?

🟠

2.🔹 இலக்குகள் / குறிக்கோள்கள்

உங்கள் வணிகத் திட்டத்தின் குறிக்கோள்கள் உங்கள் சிறிய பண்ணையுடன் நீங்கள் அடையக்கூடிய குறுகிய கால இலக்குகள் ஒரு வருடத்திற்குள் நீங்கள் நிறைவு செய்யும் இலக்குகளாக வரையறுக்கப்படுகின்றன. நீண்ட கால இலக்குகள் நிறைவடைய ஒரு வருடத்திற்கு மேல் ஆகும்.

உங்கள் வணிகத் திட்டம் எதிர்நோக்குவது இங்குதான். இப்போது முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உங்கள் பண்ணை மூலோபாயத்தை நீங்கள் உருவாக்கப் போகிறீர்கள். 

தென்னை

✅ குறுகிய கால (நடப்பு ஆண்டு):

குறுகிய கால நோக்கங்கள் நீங்கள் ஒரு புதிய தொழிலைத் தொடங்கினால், ஆரம்ப வருமானத்துக்கு என்ன திட்டம்  வைத்து உள்ளீர்கள்?

✅ நடுத்தர கால (அடுத்த 1 - 2 ஆண்டுகள்):

தென்னை ஓலை, தும்புத்தடி, விளக்குமாறு

✅ நீண்டகால திட்டங்கள் 

தேங்காய், பால் மா,தேங்காய் பூ, இனிப்புகள் 

Ex: தென்னை மரம் வைத்து அவை வளர்ந்து பலன் தர எடுக்கும் இடைபடட காலத்தில் என்ன செய்ய  முடியும் என்றும் எழுதலாம் . ஊடு பயிர்கள் குறித்தும் 

பயறு, மஞ்சள் வெங்காயம்  கோடைகாலம், மழைக்காலம் வருடம் தோறும்  வருமானம் பெறக்கூடிய பயிர்கள் குறித்தும்..!   

🟠

3.தேவைகள் / வாய்ப்புகள் /ஆலோசனைகள்  

வேளாண்மை மற்றும் உள்ளூர் பண்ணை அமைப்பு  அல்லது கைத்தொழில் சார்ந்ததாக இருக்க வேண்டும்.   

இந்த பிரிவில் உள்ள பக்கங்களில் தேவைகள் மதிப்பீடு, சந்தை தேவை, கட்டுப்பாடுகள், வாய்ப்புகள், அட்டவணை போன்ற தலைப்புகள் இருக்கும்.

✅ நீங்கள் வழங்கும் வெவ்வேறு தயாரிப்பு (கள்) மற்றும் / அல்லது சேவை (கள்) கோடிட்டுக் காட்டி, உங்கள் வணிகத்தை சுருக்கமாக விவரிக்கவும்:

✅ உங்கள் வாடிக்கையாளர்களுக்கு அல்லது நிதி வழங்குநர்களுக்கு என்ன தேவை மற்றும் விரும்புகின்றன என்பதற்கான விளக்கமாக இருக்க வேண்டும். உங்களை அவர்களின் நிலையில் வைத்து, தேவையையும், உங்களுக்குத் தெரிந்த வரம்புகள் அல்லது காலக்கெடுவையும் விவரிக்கவும்.

✅ சந்தைப்படுத்தல் உத்தி மற்றும் திட்டம்

உங்கள் பண்ணை வணிகத் திட்டத்தின் அடுத்த பகுதியில், உங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான சந்தைப்படுத்தல் உத்தி ஒன்றை நீங்கள் உருவாக்கி கோடிட்டுக் காட்டுகிறீர்கள்

🔹️நீங்கள் ஒரு சிறிய விவசாயி அல்லது         நீங்கள் அத்தகைய அமைப்பைத் தொடங்க விரும்பினால், நீங்கள் புதிய வாடிக்கையாளர்களைத் அல்லது நிதி தேடுவீர்கள். அந்த தேவையை பூர்த்தி செய்யும் அல்லது அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் என்று நீங்கள் முன்மொழியும் தீர்வுகளை விவரிக்கவும். உங்கள் திட்டத்தை நிறைவேற்ற உங்களுக்குள் இருக்கும்  நம்பிக்கையை விவரிக்கவும். 

🔹️ஒரு செயல்பாட்டைத் தொடங்க அல்லது பெரிதாக்க நீங்கள் நிதிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு தேவையான  பொருட்களின் பட்டியலை நீங்கள் பெற்றிருக்கலாம், மேலும் அந்த சரிபார்ப்பு பட்டியலை குறிப்பிடுங்கள். 

🔹நீங்கள் ஒரு விவசாய நடவடிக்கையைத் தொடங்கினால் உங்களுடைய தற்போதைய திட்டமிடலுக்கு  தேவையான நிலங்களின் அளவு, மின்சாரத்தின் தேவை,  சூரிய ஒளியில் மின்சாரம், நீர்ப்பாசனம் மற்றும் உபகரணங்களை  குறித்து விவரிக்கலாம். 

மற்றும் வல்லுனர்களின் ஆலோசனை,

பேக்கேஜிங்,போக்குவரத்து,பயிற்சி  போன்ற விவசாய நடவடிக்கைகளுக்கு  தேவையான சேவையை  வழங்கும் படி நீங்கள் அரசுக்கு முன்மொழிந்தால், நீங்கள் செய்யும் ( திட்டமிடும் ) அனைத்து பணிகளையும் விவரிக்க  வேண்டும். 

தேவை அல்லது வாய்ப்பை நீங்கள் விவரித்த பிறகு நீங்கள் என்ன செய்ய முன்மொழிகிறீர்கள் என்பது பற்றிய அனைத்து விவரங்களையும் வழங்குவதன் மூலம் தீர்வை விவரிக்க வேண்டிய நேரம் இது. 

✅ உங்கள் திட்டங்கள் மற்றும் யோசனைகளின் அடிப்படையில்....!

Ex: நீங்கள் உணவகங்கள் அல்லது கடைகளுக்கு தயாரிப்புகளை விற்க விரும்பினால், உங்கள் தயாரிப்புகள் மற்றும் அவற்றின் கிடைக்கும் தன்மையை விவரிக்கும் பக்கங்களையும், செலவுகள் மற்றும் விநியோகம் அல்லது விநியோக விவரங்களை விளக்கும் பக்கங்களையும் சேர்க்க வேண்டும். நீங்கள் வெவ்வேறு ஒப்பந்தங்கள் அல்லது விருப்பங்களை விவரிக்கலாம். சுற்றுச்சூழல் நடைமுறைகளைப் பற்றி சொல்லலாம். 

✅ Ex: வெளியூர்  வணிக சந்தைகள் உங்கள் பகுதியில் கீரைகளின் தேவையைப் பொருட்படுத்தாமல் இருக்கலாம்; அல்லது உங்கள் மாவட்டத்தில் சமூக ஆதரவு வேளாண்மை ( பிரதேச  விவசாய அபிவிருத்தி அமைப்பினுடாக ) உள்ளூர் மக்களின் முக்கிய சில தேவைகள் குறித்து குறிப்பிடலாம். ( உள்ளூர் வாடிக்கையாளர்கள் சில தயாரிப்பு சந்தாக்களை வாங்க அடுத்த மாவட்டத்திற்கு செல்கின்றனர்) 

✅ Ex: நீங்கள் தரகர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மூலம் பயிர்களை பாரம்பரிய வழியில் விற்கலாம்.

✅ Ex: தற்சார்பு விவசாயம் மற்றும் பண்ணை முயற்சிகளுக்கும் விளை பொருட்களை மதிப்பு  கூட்டி பாதுகாத்தல்,சந்தைப்படுத்தல்

ஆலோசனைகள், பயிற்சிகள் குறித்து அரசின் உதவி.

✅ Ex: சோலார் மூலம் இயக்கம் உளர் இயந்திரங்கள், குளிர்பதன வசதிகள், பொதிகளில் அடைக்கும் முறைகள், ரின் களில் பதப்படுத்துதல், பாதுகாத்தல், உள் நாட்டு வெளி நாட்டு சந்தைப்படுத்தல் வாய்ப்புகள் ( வெளி நாடுகளில் இருக்கும் புலம்பெயர் உறவுகள் உதவியுடன் நீங்களும் ஏற்பாடு செய்யலாம்) அரசு ஏற்படுத்தி த்தரவேண்டும் ஏனும் கோரிக்கைகளுடன்  தொழிற்சாலை முயற்சிகள், உள் நாட்டுக்குள்  பசுமை அங்காடி திட்டங்கள் உட்பட பல்வேறான வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கின்றன.

🟠

4.🔹நிதி பகுப்பாய்வு

இந்த பிரிவில், உங்கள் விவசாய நடவடிக்கையின் நிதி அம்சத்தை நீங்கள் விவரிக்க வேண்டும். 

✅ அனைத்து வருமானம் மற்றும் இயக்க செலவுகள் உட்பட உங்கள் தற்போதைய நிதிகளை விரிவாக பட்டியலிடுங்கள். 

✅  உங்களின் சொந்த முதலீடு, நிதி கோரிக்கை, நிதிகளின் பயன்பாடு, திருப்பிச் செலுத்தும் திட்டம் மற்றும் கடன் வழங்குபவர் பார்க்க விரும்பும் பல்வேறு நிதி தலைப்புகள் ஆகியவை இருக்கலாம்.

உங்கள் புதிய மூலோபாயத்தைப் பற்றி குறிப்பிடுகையில், எதிர்கால வளர்ச்சிக்கு என்ன தேவை என்பதை நீங்கள் முன்னறிவிப்பீர்கள் மற்றும் மூலதனத்தின் அடிப்படையில் நீங்கள் கோடிட்டுக் காட்டிய இலக்குகளை அடைவீர்கள்.

🟠

5.🔹மேலாண்மை சுருக்கம்

✅ உங்கள் வணிகத் திட்டத்தின் இந்த பகுதி உங்கள் பண்ணை வணிக கட்டமைப்பை விவரிக்கிறது. வணிக நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ள அனைவரையும் இங்கே பட்டியலிட வேண்டும். வெளிப்புற ஆதாரங்களும் இங்கே வேண்டும். 

உங்களுக்கான தேவை அல்லது வாய்ப்பையும் உங்கள் முன்மொழியப்பட்ட தீர்வையும் நீங்கள் முழுமையாக விவரித்த பிறகு, உங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற உங்களை முழுமையாக ஏன் நம்பலாம் என்பதை விவரிக்க வேண்டும். 

🔹உங்கள் திட்டத்தை நிறைவேற்ற உங்களை ஏன் நம்பலாம் என்பதை உறுதிப்படுத்தும் படி எழுதுங்கள். 

✅ உங்களுக்கு வியாபாரம் தெரியும். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். 

உங்கள் வாடிக்கையாளர் அல்லது நிதி அமைப்பு குறித்து எவ்வளவு நன்றாகத் தெரியும்? உங்கள் முன்மொழிவை எழுதும் போது நீங்கள் அந்த நபரை அல்லது அமைப்பை எல்லா நேரங்களிலும் மனதில் வைத்திருக்க வேண்டும், ஏனென்றால் (நிச்சயமாக) உங்களுடன் வணிகம் செய்ய அவர்களை இணைத்து கொள்வதும்  உங்கள் நோக்கம்.

🟠

6.🔹இறுதி முன்மொழிவு பிரிவில்

✅ உங்கள் நிறுவனத்தின் வரலாறு, உங்கள் பணியாளர் அல்லது குழு உறுப்பினர்கள், உங்கள் நிபுணத்துவம் மற்றும் உங்கள் அனுபவத்தை விவரிக்க வேண்டும். நீங்கள் ஒத்த திட்டங்களில் பணிபுரிந்திருந்தால், அவற்றை பட்டியலிடும் பக்கத்தைச் சேர்க்கவும். 

உங்களிடம் உள்ள எந்த சிறப்பு பயிற்சி அல்லது நற்சான்றிதழ்கள் பற்றிய பக்கங்களையும், மற்றவர்கள் உங்களுக்கு வழங்கிய பரிந்துரைகள் அல்லது சான்றுகள் பற்றிய பக்கங்களையும் சேர்க்கவும். நீங்கள் விருதுகளை வென்றிருந்தால் அல்லது சிறப்பு சாதனைகளின் பட்டியலைக் கொண்டிருந்தால்,உங்களைப் பற்றி தற்பெருமை கொள்வதை விட மற்றவர்களின் அங்கீகாரம் எப்போதும் நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

✅ ஏற்கனவே அரசு நிலங்களில் தொழில் ஒன்றை தொடக்கி இருந்தால்  அதைக்குறித்து கிராமசேவக அலுவலகரிடம் உறுதிப்படுத்தி, புகைப்படங்கள் அளவுகள், எல்லைகள் குறித்தும் குறித்து கொள்ளுங்கள். 

⚫️

அவ்வளவுதான் - வணிக திட்டத்தின் அடிப்படை கட்டமைப்பு என்பதை இப்போது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்:

பலங்கள், பலவீனங்கள், வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள்.ஒரு தொழில் முனைவோனாக,உங்கள் உள் பலம் மற்றும் பலவீனங்களை பகுப்பாய்வு செய்யுங்கள். போட்டியாளர்கள், புதிய சந்தைகள், அரசாங்க விதிமுறைகள், பொருளாதார நிலைமைகள் மற்றும் பல வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் இருப்பதை வெளிப்புறமாகப் பாருங்கள்.

மாற்று உத்திகளை உருவாக்கவும். நீங்கள் சேகரித்த தகவல்களையும், நீங்கள் செய்த பகுப்பாய்வையும் பார்த்து, உங்கள் பண்ணை மூலோபாயத்திற்கான விருப்பங்கள் மூலம் சிந்தியுங்கள். விலையை மட்டும் நம்ப வேண்டாம்; சிறிய பொருளாதார மட்டத்தில் பொருளாதாரங்கள் சவாலானவை....!

உடனடியாக ஒரு முடிவுக்கு செல்ல வேண்டாம். 

சில உத்திகளின் பிரத்தியேகங்களைத் தெரிந்துகொள்வதற்கும் அவற்றின் நன்மைகள் மற்றும் தீமைகளைப் பார்ப்பதற்கும் சிறிது நேரம் செலவிடுங்கள். உங்கள் உள் பலங்களை வெளிப்புற சூழலில் உள்ள வாய்ப்புகளுடன் இணைக்கும் விருப்பங்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்கவும்.உங்களது அனைத்து உத்திகளையும் பாருங்கள், பின்னர் உங்கள் பணி அறிக்கையை மீண்டும் படிக்கவும். சிறந்த பண்ணைத் திட்டம் உங்கள் பணிக்கு ஏற்றதாக இருக்கும். செயல்படுத்தும் திட்டத்தை எழுதுங்கள். 

அனைவரும் ஒரே விதமான முயற்சி செய்யாமல்  பல்வேறு தேவைகளை நிறைவேற்றும் ஒருங்கிணைந்த தற்சார்பு பண்ணை ஒன்றை ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒருங்கிணைப்பது அப்பகுதி பிரதேச செயலகத்தில் இத்திட்டத்துக்கு என நியமிக்கப்படும் அபிவிருத்தி அதிகாரிகளின் கடமையாகும்.

எவ்வாறான முயற்சிகளை திட்டமிடலாம்..? 

அதற்கான மேலதிக தகவல்களை பெற 

🟢 கொரோனாவின் பின்னரான தற்சார்பு வாழ்க்கை நோக்கி லிங்க் சென்று 

#வேளாண்_சார்ந்த_தொழில்கள் 1 - 13 மற்றும் #மரம்_நடுகை. ஹாஸ்டேஷ் கீழ் தொடரும் பதிவுகளை பாருங்கள். 

அதில் இருக்கும் இணைப்புகளினுடாக தகவல்களை  அறிந்து,ஆராய்ந்து முடிவெடுத்த பின் திட்ட வரைபு ஒன்றை தயார் செய்யுங்கள். 

இந்த அடடவனையை கோர்வையாக உருவாக்குவது குறித்தும் தரவிறக்கி கொள்ளும் ( PDF) கோப்பும் அடுத்த பதிவில் வரும். 

மாதிரி திட்ட வரவு படத்தில். ( copy Right)




கிரீன் ; விவசாயம் இயற்கை சார்ந்த லோகோ கலர்

Project Proposal-1  

Project Proposal - 2 

18 நவம்பர் 2020

இளம் தொழில் முனைவோருக்கான காணி துண்டுகள் பெற விதிமுறைகள் என்ன..?


இளம் தொழில் முனைவோருக்கான ஒரு லட்சம் காணி துண்டுகள்  

15.11.2020  வரை  அரசின் காணிக்கு விண்ணப்பித்தவர்கள்  குறிப்பிட்ட  தகுதிகளுக்குள்  அடங்கிய   விண்ணப்பதாரர்களை பிரதேச செயலகம்  20  நாட்களுக்கு பின் வரும்  ஒரு  மாதத்துக்குள் நேர்முக தேர்வுக்கு அழைக்க வேண்டும். ( திகதிகள் விண்ணப்பங்கள் அளவை பொறுத்து பிரதேச செயலகம் முடிவு செய்வார்கள். உதாரணம்  5.12.2020 -  05.01.2021 ) 

இந்த திட்டத்தின் ஊடாக இலவச காணி பெற விரும்பி  விண்ணப்பித்திருக்கும்  ஒருவரை நேர்முக தேர்வுக்கு  அழைப்பது குறித்து விண்ணப்பங்களை ஆராய்ந்து முடிவு செய்ய  பிரதேச செயலகத்தில்  தொழில் சார் வல்லுநர்கள் குழு ஒன்று உருவாக்கப்படும். 

🔷 விண்ணப்பித்தவர்கள்  அனைவரையும் நேர்முக தேர்வுக்கு அழைக்க மாட்டார்கள்.       

• உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படுமானால்  எழுத்து மூலம் அதன் காரணத்தை  அறிவிக்க வேண்டும் . 


✅ செயல்பாடு மற்றும்  உற்பத்தி கொள்திறனை கருத்தில் கொண்டு காணியின் அளவை தீர்மானிப்பார்கள் என்பதால் இத்தகைய விண்ணப்பங்கள் செயதோர் நேர்முக தேர்வுக்கு செல்லும் போது அவர்களது தொழில் முறை அல்லது வேலைத்திட்டம் குறித்த. திட்ட அறிக்கையுடன்  ( project proposal ) செல்ல வேண்டும். 

🌳

இளம் தொழில் முனைவோருக்கான காணி துண்டுகள்  பெற  விதிமுறைகள் என்ன..?   

கீழிருக்கும் குறிப்புகளுக்குள் நீங்கள் இருக்கின்றிர்களா..?  

நீங்கள் சுயமாக உங்கள் முயற்சியில் எழுந்து நிற்பதற்கு தொழில் முயற்சியில் ஈடுபடும் வாலிபரா?

✓ சவால்களை தைரியமாக முறியடிப்பதற்கு முடியுமா? 

✓18 - 45 வயதெல்லைக்கு உட்பட்டவரா ( உங்கள் தொழிலை பொறுத்தவரையில் வயதில்லை நிர்ணயிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு)

✓தற்போது உற்பத்தித் துறையில் உங்கள் தொழிலை அமைத்துக் கொண்டுள்ள ஒருவராக அதை மேலும் வளப்படுத்துவதற்கு வலுப்படுத்துவதற்கு முயற்சி செய்யும் ஒருவரா?

தேசிய சந்தையை மற்றும் சர்வதேச சந்தையை மையப்படுத்தி உற்பத்தியை மேற்கொள்ளும் நபரா?

✓கூட்டாக அல்லது கூட்டுறவு முறையில் விவசாயத்தை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றார்களா?

✓விவசாயத்துக்கு உகந்த உங்கள் நிலங்கள் தீர்க்க முடியாத பிரச்சினை களுக்கு உட்பட்டு இருக்கின்றதா? 

✓உங்கள் பெயரில் நடைமுறையில் இருக்கும் உற்பத்தி சார்ந்த துறைக்கு இடப்பற்றாக்குறையா?

✓தொழில் முயற்சிக்கு குறிப்பிட்டளவு  முதலீடு செய்ய உங்களால் முடியுமா? 

உங்கள் முயற்சி மூலம் மற்றவர்களுக்கு தொழில்  வாய்ப்புக்களை உருவாக்க முடியுமா?

✓ இப்பொது செய்யும் தொழிலை மேலும்

மேம்படுத்த்தும் திட்டங்கள் இருக்கின்றதா?  

18 - 45  வயது எல்லைக்குள் இல்லாத ஒருவர்  வெற்றிகரமான தொழில் முயற்சியை  மேற்கொள்ளக்கூடிய திறமையும், உடல் வலுவும் கொண்டிருந்தால் வயது தடையாகாது. காணிக்கு விண்ணப்பித்து நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படும் ஒருவர  ஆர்வமும் நிதி முதலீடு செய்யும் கொண்டவராக இருந்து  அனுபவமற்ற இளையோர் அனுபவம் வாய்ந்த ஒருவருடன் கூட்டு சேர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள முடியும். 

சொந்த காலில் நிற்க விரும்பும் / சுய தொழில் ஆர்வம் கொண்ட உற்சாகமான சவால்களை எதிர்கொள்ள திறன் கொண்ட ஒருவரை தேர்வு செய்ய  தீர்வு குழு உங்களை பல வகைகளில் சோதனை செய்யலாம். கேள்விகள் கேட்கலாம். உங்கள் ஒத்துழைப்பை பொறுத்து அவர்கள் முடிவு செய்யும் உரிமை பெற்றவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

🟢 தொழில்  முனைவோர் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் முன் வைக்கும் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கிடைக்கும்.

🟢 உள் நாட்டு உற்பத்திகளை ஊக்கப்படுத்தல்,வெளி நாட்டுக்கு இறக்குமதி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழில்  முனைவருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் 

🟢 காணியின் மேற்கொள்ள இருக்கும்  தொழில் முயற்சிக்கு தேவையான நிதி குறிப்பிட்ட அளவுக்கு  பங்களிப்பு செய்ய கூடியவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும்.

நேர்முக தேர்விலும் நீங்கள்  தேர்ந்து எடுக்கப்பட்டால்  உங்கள ஆவணங்களை   உரிய பிரிவுக்கு அனுப்பி மூன்று  மாதத்துக்குள் உங்களுக்கான காணி வழங்கப்படும். 

பிரதேச செயலாளர் தலைமையில்  நடைபெறும் நேர்முக தேர்வின் போது உங்களிடமிருந்து  பெறப்படும் ஆவணங்கள் நீங்கள்  அதற்கு தகுதியானவரா என உறுதிப்படுத்தப்படட பின். பின்வரும் துறைகளுக்கு அனுப்பப்பட வேண்டும். 

1.பிரதேச செயலகம் 

2.மகாவலி அதிகார சபை 

3.காணி மறு சீரமைப்பு ஆணைக்குழு 

4. உரித்து சீராக்கல் ஆணைக்குழு 

5. உற்பத்திகளை விற்பனை செய்தல் 

        ▪️தொழில் முனைவோருக்கான பயிற்சி 

        ▪️ நிதி  வசதிகள் / அடகுக்கடன்

        ▪️உற்பத்திக்கான இயந்திரங்களை பெற்று கொள்ளல் 

        ▪️வேறு கோரிக்கைகள் 

காணி உரிமத்தை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கைகள்

அரசாங்க காணிக்குரிய விண்ணப்ப படிவங்களை   பிரதேச  செயலாளர் அனுமதி பத்திரம் / அளிப்பு பத்திரம் 

மாவட்ட காணி பயன் பாட்டு  திட்டமிடல் திணவுக்களத்தின் மூலம் நேர்முக தேர்வுக்கு  அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் தற்பொழுது  மேற்கொள்ளும்அல்லது 

எதிர்காலத்தில் அமைக்க.திட்டமிடும் சகல   நடவடிக்கைகளையயும் பூர்த்தி செய்துள்ள வலுவான  தொழில் முனைவோரை தெரிவு செய்து காணி ஆணையாளர் நாயகம்,  மாகாண காணி ஆலோசகசருடன் ஆலோசித்து அவர்களுக்கு காணி அபிவிருத்தி மறு சீரமைப்பு அல்லது மகாவலி அபிவிருத்தி எல்லையில் காணி துண்டொன்று வழங்கபபடும். 

🌻இக்காணிகள் நிபந்தனைக்குட்பட்டது. விற்கவோ /  கிரயம் செய்யவோ அனுமதி இல்லை. 

விண்ணப்பித்திருக்கும் ஒருவர் உங்கள விண்ணப்பம் குறித்து தகவல்களை ( Status of the application ) கேட்டு பெரும் உரிமை உண்டு. அதற்கென நியமிக்கப்படும் தனி அதிகாரி உங்களுக்கு பதில் தர வேண்டும்.

🔴 இந்த திட்டத்தை பயன் படுத்தி  காணியொன்றை பெரும் நோக்கமாக, தொழில் முனைவோர்  எனும் பெயரில் வரும் போலியான விண்ணப்பதாரரை இனம் கண்டு உண்மையான தொழில் முனைவோர் /  தொழில் முயற்சி ஆற்றலுடையயோருக்கு காணியை பகிர்ந்து கொடுப்பது தெரிவுக்குழுவுக்கு இருக்கும்  முக்கிய எச்சரிக்கை..!

✅ இத்திட்டத்தினுடாக காணிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் பயிற்றப்பட்ட அபிவிருத்தி  அதிகாரிகளின் வழி காட்டுதலின் கீழ் அவர்களுக்கு தேவையான பயிற்சி, நிதி உதவிகள், உற்பத்திகள், 

சந்தைப்படுத்தல் குறித்த ஆலோசனைகளைளுடன் தேவைப்படுவோருக்கு பயிற்சிகளும் தருவார்கள். 

🟢 இந்த முயற்சியை நீங்கள் பயன் படுத்தி கொண்டால் எதிர்காலசத்தில் சொந்த நிலத்தில் பலருக்கு வேலை உருவாக்கி கொடுக்கும் இளம் தொழிலதிபராக உருவாகுவீர்கள்...! 

🔴 உடல் உழைப்புக்கு தயங்கி வெளி நாட்டு காசில் இப்படியே காலம் கழிக்க  நினைத்தால்  வடகிழக்கில் இருக்கும்  காடுகளை இராணுவத்தில்  பொறுப்பில் கொடுக்கப்பட்டு அப்போதும் நீங்களே அவர்களுக்கு  கீழ் விவசாய வேலைகள் செய்ய வேண்டும். 

உங்கள் முன்  உயர்வு தாழ்வு எனும் இரண்டும் உண்டு. நிகழ் காலத்தில் எதை தேர்ந்து எடுக்கின்றிர்கள் என்பதை  பொறுத்து  எதிர்காலம் தீர்மானிக்கப்படும் 

திட்ட அறிக்கை ( project proposal ) குறித்து அடுத்த பதிவில் ...!

Facebook  

16 நவம்பர் 2020

எனக்கு இப்படியும் யோசிக்க தோணுது...!


வடக்கில் என்னென்னமோ கதைகள் அடிபடுதாம்..... காணி கிடைக்கும் வாய்ப்பு இல்ல... சிங்களவரை குடியேற்ற திட்டம் இடுகின்றார்கள்...  விண்ணப்பம் கூடினால் திட்டமே கேன்சலாகும் அப்படி சொல்லி உங்கள் நம்பிக்கையை தளர்த்தி அயற்சி உருவாக்கி  மக்களை  எல்லா நேரமும்.. எல்லாவற்றையும் எதிர் மறையாக அணுகுதலுக்குள்  வைத்திருப்பதும் ஒரு வித உளவியல் செயல்பாடு...  பேசுவோர் பேசட்டும்..... ! 

எனக்கு இப்படியும் யோசிக்க தோணுது...! 

🟠 இந்த #காணி  விடயத்தில் விண்ணப்பங்கள் போதவில்லை என்று  திகதி நீட்டிப்பு குறித்து ... ! இது தான் சாக்கு என்று சிங்களவருக்கு நிலங்களை கொடுத்து நீங்க விண்ணப்பிக்கல்ல .. very SORRY என்று சொல்லி இருக்கலாம் தானே..? சிங்களவருக்கு கொடுக்கணும் என திட்டமிருந்தால்  திரும்ப திகதி நீட்டிக்க  தேவையே இல்லையே ..?  

“ தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன”என்று சொல்வார்கள்.நமக்கு நல்லது கெட்டது நமக்குள்ள தான் இருக்கு..! 

🔵 கொரோனாவுக்கு பின்னரான தற்சார்பு நோக்கிய வாழ்க்கைக்கு தயாராகுங்கள் எனும்  அழைப்போடு  வீட்டுத்தோட்டம், விவசாயம் விதைகள், நிதி உதவிகள் என்று அறிவித்தார்கள். அதன் பின் கிராமங்களை தற்சார்பு நோக்கிய முன்னேற்றம், துடிப்பான இளையோர் சமூகத்தை உருவாக்குதல்,  சுய தொழில் ஊக்குவிப்பு என்று நாடு முழுவதும் ரீதியில் அபிவிருத்தி சார்ந்த பல்வேறு திட்டங்கள்  முன்னெடுக்கின்றாரகள். 

🟢 இத்திட்டத்தின் கீழ்  ஆயிரக்கணக்கான இளையோர் Development Officer  பணிக்கு உள் வாங்கப்பட்டு பயிற்சி வகுப்புகள் நடந்து கொண்டுள்ளது. சிங்கள அமைசசர்கள், அதிகாரிகள் குழுக்களாக பிரிக்கப்பட்டு கிராமங்கள் தோறும் சென்று மக்களை சந்திக்கின்றார்கள்.  அறிவிப்புகளும்,அழைப்புகளும்  தனி பேஜ் மூலம் மூன்று மொழிகளிலும் பகிரப்படுகின்றன. 

இலங்கை தமிழ் மக்களுக்கு  என்ன தோணுது..?
                      தமிழ் மக்கள் பெரும்பான்மை யோருக்கு சிங்களம் தெரியாது. இதனால் அரசின் நோக்கம்  குறித்த நேரடி புரிதல் இல்லாமல் இருக்கின்றது. பல பிரச்சனைகளின் ஆணி வேர் இது தான்...!   

🟢  தொழில் வாய்ப்பு மற்றும்  தற்சார்பு  பொருளாதார நிறைவு மட்டுமல்ல    கொரோனாவுக்கு பின் உலகம் எதிர் கொள்ள போகும் உணவுத்தட்டுப்பாட்டை எதிர்வுகொள்ளும் வணிக நோக்கம், பொருளாதார ரீதியில் வலுப்படுத்தலின் மூலம் அந்நியர் ஆக்ரமிப்பிலிருந்து 
பாதுகாத்து கொள்ளும் ஆரம்ப முயற்சியாக இருக்கலாமே....? 

( அமெரிக்கருடன் ( 20)  நாட்டை குறுக்கால கூறு போடும் ஒப்பந்தம் இன்னமும் கையெழுத்திடாமல் இருக்கு ..! காடுகளை மக்களிடம் தந்து விட்டு இடமில்லையே என்று அவனிடம் கைவிரிக்கவும் முடியுமே ..? ) 

🔴 அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட  உலகின் வல்லரசு நாடுகளின் கிடுக்கி  பிடிக்குள் நாடு சிக்கி கடந்த ஆட்சியாளர்களின் தவறுகள் நாட்டை  அடிமைப்படுத்தும் நிலையில் மக்கள் தான் இனி நாட்டை பாதுகாக்கணும் எனும்  முடிவுக்கு  Our President கோத்தபாய  ராஜபக்ச @ Co வந்திருக்கலாம்.

🟣 பங்களாதேஷ், பூட்டான், சோமாலிய நாடுகளில் அபிவிருத்தி எனும் பெயரில் நுழைந்த மேற்குலக  நாடுகள் பத்தே ஆண்டுகளில் எப்படி சின்னாபின்னமாக்கினார்கள்   என்ற உண்மை சிங்களவருக்கும் தெரிந்து தானே இருக்கும்..? அரசியல் வாதி என்றாலும் சிங்களவன் தேசபக்தியும், தெய்வ பயமும் நிறைந்தவன் எனும் உண்மையும் மறக்க கூடாது..! 

அனைத்துக்கும்  எதிர் சிந்தனை, பயம்,  
எதிர்ப்புணர்வு,போராட்டம் ஆர்ப்பாட்டம் கருத்துவாதங்கள் எவர் பசியையும் தீர்க்கப்போவதில்லை. ஆதி,அந்தம் தேடி இன்றைய  இருப்புக்களை இழக்காமல் முன் யோசனைதோடு எதிர்காலத்துக்கான நிம்மதியான வாழ்க்கைக்கு இன்றைய  நாட்டு நடப்புகளை கூர்ந்து கவனியுங்கள். 

🟡  புலம்பெயர் தமிழரின் கல்வி,பொருளாதாரம்  சார்ந்த உதவிகளை கண்டும் காணாமல்  சிங்கள அரசு தரும் ஒத்துழைப்பு குறித்தும்... உண்மையில் தமிழரை அழிக்கணும் என்று நினைத்தால் இதை அனுமதிக்காமல் தடுக்க இலங்கை அரசால் முடியாது எண்டு நினைக்கீங்களோ..?  

🟤 நான், என் குடும்பம், என் சமூகம் நல்லாருக்கணும் என்றால் நாடு நமக்கு இருக்கணும் என்று இனி  என்றாலும் எதிர்வர போகும் ஆபத்துகளை எப்படி தடுக்கலாம் என யோசிங்கோ..! நாங்க நல்ல இருக்கணும் என்றால் நாடு 
 முன்னேறணும், பாதுகாப்பாக இருக்கணும்.. அது உங்கள் கைகளில் என்று நினைத்து பாருங்கோ..

“ யார்.. யாரால் என்று மீண்டும் மீண்டும் கடந்த கால  குற்றம் குறை  பேசி மண்ணோடு மண் அழிவதை விட. நிகழ்காலத்தை சரியாக கட்டமைத்து எதிர்காலத்தை எங்கள் வசமாக்குவது விவேகம்“


சில விடயங்கள் கற்பனை போலிருக்கும்... ! உண்மையை சொல்வோரை  .. வேலையற்றவன் புலம்பல் 🤣 கிண்டலோடு கடந்து விடுவோம். அதன் உண்மை உணரும் போது காலம் கடந்து இருக்கும்.

சிங்கப்பூர்: 2

 சிங்கப்பூர்: 2 


புதிய சிந்தனைகளை உள்ளீர்த்து அபிவிருத்தியின் உச்சம் தொட்ட சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ “ தலைமைத்துவம்”  Visionary leadership  இன் ஆசியாவின் மிகப்பெரும் உதாரணம்!!

1980  ஆம் ஆண்டு சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு வந்த அன்றைய சிங்கப்பூர் பிரதமர்  Lee Kuan Yew, Prime Minister of Singapore (1959–1990 ) 

அன்றைய இலங்கை வளர்ச்சியை  பார்த்து   “ சிங்கப்பூரை விரைவில் இலங்கையை போல் வளம் மிகு தேசமாக  மாற்றுவேன்.“ என்று சொன்னாராம். அவர் கனவு 1990  ஆண்டுகளில் நிறைவேறியது..“ முப்பதே ஆண்டுகளில் ஆசியாவின் வளம்கொழிக்கும் நாடாக வளர்ச்சியடைந்தது. 

சிங்கப்பூர்: 1 

Facebook 1

அன்றைய சிங்கப்பூரின்  ( 1960 - 1970 ) முன்னெடுப்புகளையும்“ Vision of Prosperity'திட்டத்தின் கீழ் இன்றைய இலங்கைக்கான திட்டங்களையும் உங்கள் சிந்தனைக்கு..! மாற்றம் நோக்கிய நகர்வுகளுக்கு  நாட்டுமக்கள்  அனைவரினதும்  புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்பு அவசியம்..!  

அடுத்து வரும்  பகிர்வுகளுக்கு சிறு முன்னோட்டம் இது..!  



1. Priority to National Security 

தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை

2. Friendly, Non-aligned, Foreign Policy 

நட்பு, சீரமைக்கப்படாத, வெளியுறவுக் கொள்கை

3. An administration Free from Corruption 

ஊழலற்ற  நிர்வாகம்

4. A New Constitution that Fulfils the Wishes of the People’s: மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் புதிய அரசியலமைப்பு

5. A Productive Citizenry and Vibrant Human Resource: உள் நாட்டு உற்பத்தி குடிமகன் மற்றும் துடிப்பான மனித வள 

6. People Centric Economic Development

மக்கள் மைய பொருளாதார மேம்பாடு

7. Technology Based Society

தொழில்நுட்ப அடிப்படையிலான சமூகம்

8. Development of Physical Resources

உடல் வளங்களின் வளர்ச்சி

9. Sustainable Environmental Management

நிலையான சுற்றுச்சூழல் மேலாண்மை

10. Disciplined, Law Abiding and Values Based Society: ஒழுக்கமான, சட்டத்தை மதிக்கும் மற்றும் மதிப்புகள் சார்ந்த சமூகம்

தேசிய பாதுகாப்பின் சரிவு அல்லது  சரிவின் முடிவில்  ஒரு நாடு ஒரு தேசிய அரசாக அதன் நிலையை இழக்க வழிவகுத்த பல சர்வதேச எடுத்துக்காட்டுகள் உள்ளன. தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்க புதிய வழிமுறைகளை நமது அரசாங்கம் பின்பற்றும்.

Facebook 2


15 நவம்பர் 2020

நாடெங்கும் ஒரு இலட்சம் தொழில் முனைவோர்..!

 #காணி!

சுயதொழில் முயற்சி!!

அடுத்து என்ன செய்யப் போகிறோம்???

ஒரு தெளிவான விளக்கம்!!! 

உங்கள் திட்டத்தை எவ்வாறு நிறைவேற்றப் போகிறீர்கள் என்ற விபரிப்பு!!

காணியை தயார்ப்படுத்துவதில் இருந்து அதில் இருந்து பெறப்படும் உற்பத்தியை சந்தைப்படுத்துவது வரை என்ன என்ன செய்ய இருக்கிறீர்கள்? 

எப்படி செய்ய இருக்கிறீர்கள்? 

இந்த வீடியோவில்  Thirunavukkarasu Thayanthan  பேசுவதை கேளுங்கள்..! 

ஒரு  இலட்சம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் உள் நாட்டு உற்பத்திகளை பெருக்குவதன் மூலம்  தனி நபர்  மற்றும் சமூகத்தின் தற்சார்பு  பொருளாதாரம் , உள் நாட்டினுள் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு திட்டத்தில் விவசாயம்,பண்ணை,ஆடு மாடு கோழி வளர்ப்பு முதல் அனைத்து சுயதொழில், உள் நாட்டு வெளி நாட்டு ஏற்றுமதி உற்பத்திக்கான திட்டங்கள் செய்யும் ஆர்வமுள்ளோருக்கு  அரசு காடுகளை இலவசமாக வழங்குவதாக அறிவித்திருந்தது. 

இந்த திட்டத்தில் வடக்குக்குள் மட்டும்  ஒரு இலட்சம்  தொழில் முனைவோர் உருவாகும்வாய்ப்பு இல்லை. 

நாடெங்கும் ஒரு இலட்சம்..! 

உதாரணமாக  இலங்கையில் 25  மாவட்டம்   மாவட்டத்துக்கு சராசரி 4000 தொழில் முனைவோர் 

இது ஐந்து வருட திட்டத்தில்  ஒரு வருடத்துக்கு ஒரு மாவட்டம் 800  துண்டு நிலம் நாட்டின் அபிவிருத்தி, உள்நாட்டினுள் தற்சார்பு உற்பத்தி விவசாயம், பண்ணை வளர்ப்பு, உள்நாட்டு வெளி நாட்டு ஏற்றுமதி திட்டங்கள் நண்டு இறால் வளர்ப்பு நாட்டுக்குள் தற்சார்பு பொருளாதாரத்தை வளர்க்கும் திட்டங்கள். போன்ற  சுயதொழில் முயற்சிகளுக்கு முன்னுரிமை  தருவார்கள்.

தேக்கு மரம்  வளர்ப்பு திட்டத்துக்கு இந்த திட்டத்தில் நிலம் ஒதுக்க மாட்டார்கள். விண்ணப்பம் செய்ய வேண்டாம்.அதுக்கு  அரசின் குத்தகை நிலம் பெறலாம். அதன் விபரம் தேவை எனில் கேளுங்கள்.

விண்ணப்பங்கள் பிரதேச செயலகத்தில் கொடுத்து குறிப்பிட்ட நாட்களுக்குள் உங்களை நேரில் அழைத்து விசாரிப்பார்கள். 

அதற்கு தெளிவான  திட்டவரைவு தயார் செய்து கொள்ளுங்கள். திடடவரைவு எப்படி இருக்கணும்..? உண்மையில் உதவி தேவைப்படுவோர் மட்டும் என் inbox ல் விபரங்களை type  பண்ணுங்கள். Mail I’d தருவேன். நண்பர்களும் உங்களுக்கு உதவ என்னுடன் இணைந்து கொள்வார்கள்.  

உங்கள் திட்டத்தினை ஆரம்பிக்க உங்களிடமும் ஓரளவு சொந்த முதலீடு இருக்கணும்.  

#காணி  ஒதுக்கிய பின் அதில் முயற்சிகளுக்கு அரசின் நிதி உதவிகளும், வங்கி கடன்களும் கிடைக்கும்.அடுத்தவரிடம் கையேந்தாமல் சொந்தமாக  உழைத்து இன்னும் நாலு பேருக்கு வேலையும் கொடுக்க முடியும்.

சுய உழைப்புக்கு அஞ்சாத, வசதி, வாய்ப்பு இல்லாத  ஆர்வமிருக்கும் இளையோருக்கு  உதவுவோம். 

தயவு செய்து இலவசம் என்று எங்கள் நேரத்தை விரயம் செய்ய வேண்டாம்.. 

ப்ளீஸ் 🙏



தொழில் முனைவோர்

“ எலிபண்ட் “ தமிழ் தான்..!

 “ எலிபண்ட் “ தமிழ் தான்..! 

சுவிஸில் பிறந்த எங்கள் பிள்ளைகளுக்கு கிண்டர் கார்டன் ல் புதிய  சொல் கற்பிக்கும் போது ஜேர்மன் சொல்லுக்கு தமிழில் என்ன என்று கேட்பார்கள். ஒரு  தடவை மகனிடம் யானை பொம்மையை காட்டி இதுக்கு பேர் என்ன என்று கேட்க அவன் “ எலிபண்ட் “ என்று சொல்ல டீச்சர் அது இல்லை தமிழில் சொல் என்று திரும்ப திரும்ப கேட்க “ எலிபண்ட் “சொல்லி இருக்கார். 

“ எலிபண்ட் “ தமிழ் தான்..! 

வீட்டில் எப்படி சொல்வாய்..? 

“ எலிபண்ட் “  தான்..!

அம்மா சொல்லி  தந்தது என்றும் சொல்லி இருந்திருக்கார். 

டீச்சர் அம்மாவிடம் திரும்பவும் கேட்டு வா என்று சொல்லி அனுப்பி இருந்தார். என்னிடம் வந்து கேட்டான்.  

“ எலிபண்ட் “ என்றேன் அம்மா 😂

மகன் : இல்லை...! தமிழில் என்ன..? 

 “ எலிபண்ட் “ தமிழ் தான்..! 

மகன் நான்கு வயதில்  “ யானை” படம் வரைந்து எழுதிக்கொண்டு Kinder Garden போனார்..! 

பிறகு parents மீட்டிங் ல் எங்களிடமும் உன் பிள்ளைக்கு நிரம்ப சொல்லுக்கு தமிழ் தெரியல்ல .. English சொல் சொல்ரான்.. தமிழில் சொல்லி கொடு என்று சொல்லி இப்போ மகன் (23) நல்ல தமிழ் பேசுவான். 

மகன் 18  வயதுக்குள்  நான்கு மொழியில் முழு தேர்ச்சி  பெற்று இருந்தான்.

தமிழ் 

ஜேர்மன் 

ஆங்கிலம் 

பிரெஞ்சு 

ஒருவர்  தாய் மொழியை சரியாக கற்றிருந்தால் ஏனைய மொழிகளை பேச எழுத  இலகுவாக இருக்குமாம். சுவிஸ் அரசு தாய்மொழி கல்விக்கு தனி கவனம் எடுக்குது.    சுவிஸில் பிறந்து வளர்ந்த எங்கள்  பிள்ளைகள் தமிழ் பேசும் ஆரம்ப உத்வேகம் இது தான். பெற்றோர் ஒத்துழைத்தோம்

ஒரு  குழந்தையின் முதல் மொழி தாய்மொழியாக  இருக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளுக்கும் தாய் மொழி கல்விக்கு கவனம் கொடுங்கள். தாய் மொழியை ஒதுக்கி தரணியை வெல்ல முடியாது.

மகன்

14 நவம்பர் 2020

நெஞ்சுக்கு தேவை மனசாட்சி- 2

நெஞ்சுக்கு தேவை மனசாட்சி- 2 

தேசத்தின்  பாதுகாப்பு உள் நாட்டு உற்பத்தி, அபிவிருத்தி, கல்வி மேம்பாடு, மனிதவள மேம்பாடு சார்ந்த தனி நபர், சமூக பொருளாதார தற்சார்பில் அடங்கி இருக்கின்றது. பொருளாதார மேம்பாடு  நாட்டு மக்களின் ஒத்துழைப்பால் உருவாகின்றது. 

Vision of Prosperity 

திட்டங்களின் கீழ் இலங்கையில் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள், ஒரு  இலட்சம் தொழில் முனைவோர் என்று பல்வேறு திட்டங்களின் கீழ் பல சிங்கள கிராமங்கள் சிங்கள  அமைச்சர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றது. 

#காணி

வடகிழக்கு மாகாணத்தில் காணி சார்ந்த அதிகாரங்கள் அந்தந்த பிரதேச செயலகத்துக்கு  கொடுக்கப்பட்டு இருக்கின்றது. 

அரசின் அறிவிப்புகள் அனைத்தும் ( மொழி அறியாமையால்) மக்களுக்கு புரிவது இல்லை. தமிழில் மொழி பெயர்த்து மக்களுக்கு விழிப்புணர்வு தர வேண்டியவர்கள் குறித்து  எனக்குள் எந்த விமர்சனமும் இல்லை.

தமிழ் பகுதிகள் தவிர்த்த ஏனைய பிரதேசங்கள் எவ்வாறு  அபிவிருத்தி அடைகின்றது எனும்  கேள்வி க்கு பதிலும் எமக்கு தெரிய வேண்டும். சிங்கள, முஸ்லீம் இன ஆளுமைகள் துடிப்போடு செயல்பட்டு தம் மக்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொள்கின்றார்கள். 



அப்படி என்றால்...? 

விபரம் அறிந்த பெரும்பாலான தமிழ் மக்கள் மனதளவில் ஓய்ந்து நம்பிக்கை இழந்து ராமன் ஆண்டாலும், இராவணன்  ஆண்டாலும்  நமக்கென்ன எனும் மனநிலையில் ஒதுங்கி கொண்டார்கள்

ஈழத்தமிழர்களில்  பெரும்பான்மை கற்றோர் சமூகம்  புலம்பெயர்ந்து விட்டது. எஞ்சி இருப்போரும் 

“ நான்” “என்னால்”  “ எனக்கு எல்லாம் தெரியும்”  என  வாழ்கின்றது. 

விளைவு..? 

இன்றைய இளையோர் சரியான வலுவூட்டல்  இல்லாமல் எடுப்பார் கைப்பிள்ளைகளாகி போனார்கள்..! 

இதில் யாரால்..? யார் சரி ..? யார் பிழை என்று எழுதி நேரத்தை விரயம் செய்ய விரும்பவில்லை. நான் கடந்த காலம் எழுத போவது இல்லை. 

நிகழ் காலத்தை ஆராய்ந்து  அதனுள் மறைந்து இருக்கும் பாசிட்டிவ் என்ன..? சிங்கள மொழி அறியாமையானால் உங்களுக்கு மறைக்கப்படும்

உண்மைகள் என்ன என்பதை என்னால் முடிந்த வரை எழுத போகின்றேன். 

உங்களை சுற்றி என்ன நடக்கின்றது என்று அறிந்து நிகழ் காலத்தில்  எதிர்காலத்தை நோக்கி திட்டமிட விரும்புவோர் என் தலைப்பில் தொடர போகும் பதிவுகளை படியுங்கள். 

கடந்த கால குறைகளையும், கறைகளையும், கசப்புகளையும் காவி திரிந்து அழிந்து போவோம் என நினைப்போர் எட்டி நில்லுங்கள். 

எங்கள் எல்லோருக்கும் கடமை இருக்கின்றது  எல்லோர் மேலும்

பிழை இருக்கின்றது. நாங்கள் எல்லோரும் குற்றவாளிகள் என்று உணர்த்தபபடுவோர் 

எங்கள் தேசம், மக்கள்,பாதுகாப்பு, முன்னேற்றம், அபிவிருத்தி என்று உண்மையில் உள்ளத்துள் உணர்ந்தும் புரிந்தும் கொண்டவர்கள் என் பதிவில் உங்கள் கருத்துகளை கொடுங்கள். சரி பிழை சொல்லுங்கள். மாற்று கருத்துக்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். 

கடந்த செப்டம்பர் மாதம் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய அவர்கள் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார்..!

அது என்ன ..? 

நெஞ்சுக்கு தேவை மனசாட்சி- 4 ம் பதிவில் வரும். 

நெஞ்சுக்கு தேவை மனசாட்சி- 2 

எல்லோருக்கும் இனிய தீபத்திரு நாள் நல்வாழ்த்துகள்...!

 எல்லோருக்கும் இனிய  தீபத்திரு நாள் நல்வாழ்த்துகள்...! 


புன்னகை மனங்களோடு 

புதியதோர் உலகை நோக்கி  

உள் உறங்கும் அறியாமை 

இருள் அகன்று 

புது வெளிச்சம் வரட்டும் ..!          

    🪔  🪔  🪔 🪔  🪔  🪔 🪔  🪔  🪔 

இனி வரப்போகும் என்  பதிவுகளுக்கான சிறு முன்னோட்டம் இது..!   

                    🇸🇬 சிங்கப்பூர் 🇸🇬

சிங்கப்பூர் 1960  ஆம் ஆண்டில் கடுமையான வேலையில்லாப் பிரச்சினையையும், வீட்டுவசதிப் பற்றாக்குறையையும் எதிர்கொண்ட சிங்கபுயூர் 

30ஆண்டுகளில் உலகமே வியந்து நோக்கும்  வளம் பொருந்திய நாடக  மாறியது என்று பலர் அறிந்திருப்பீர்கள்..! அறியாதவர்களுக்கு சிறு குறிப்பு தருகின்றேன்..! 

 🪔  🪔  🪔 🪔  🪔  🪔 🪔  🪔  🪔 

சிங்கப்பூர்.....! 

1960  ஆம் ஆண்டில் கடுமையான வேலையில்லாப் பிரச்சினையையும், வீட்டுவசதிப் பற்றாக்குறையையும் எதிர்கொண்ட  இயற்கை வளங்கள் அதிகம் இல்லாத நாடு..! 

எப்படி முன்னேறியது..? 

1960கள் தொடக்கம் 1970கள் ஊடாக நவீனமயமாக்கத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியது. இத்திட்டம்,

உற்பத்தித் தொழிற்றுறை ஒன்றை நிறுவுதல், பெரிய வீட்டுத் திட்டங்களை அமைத்தல், கல்வியில் பெருமளவு முதலிடுதல் என்பவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

30ஆண்டுகளில்......! 

1990கள் அளவில், சிங்கப்பூர் வளர்ச்சியடைந்த சுதந்திர சந்தைப் பொருளாதாரம், வலுவான பன்னாட்டு வணிகத் தொடர்புகள், ஜப்பான் தவிர்ந்த ஆசியாவின் மிகக்கூடிய "நபருக்கான உள்நாட்டு உற்பத்தி" ஆகியவற்றுடன், உலகின் மிகவும் வளம் பொருந்திய நாடுகளில் ஒன்றாக ஆனது.

சுதந்திரத்துக்கு முன்....! 

இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் ஜப்பானியப் பேரரசு சிங்கப்பூரைகைப்பற்றி 1942 இல் இருந்து 1945 வரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். போர் முடிந்த பின்னர் கூடிய அளவு தன்னாட்சியுடன்  சிங்கப்பூர் மீண்டும் பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 

1963 இல்  சிங்கப்பூர் மலாயக் கூட்டமைப்பில் இணைந்ததன் மூலம் மலேசியா உருவானது. எனினும், சிங்கப்பூர் மக்கள் செயற்பாட்டுக் கட்சிக்கும், மலேசியாவின் கூட்டணிக் கட்சிக்கும் இடையே உருவான பிணக்குகளினாலும், உள்நாட்டுக் கலகங்களாலும், மலேசியக் கூட்டமைப்பில் இருந்து சிங்கப்பூர் வெளியேறி 09.08.1965  ஆம் தேதி சிங்கப்பூர் சுதந்திரக் குடியரசானது.

        🪔  🪔  🪔 🪔  🪔  🪔 🪔  🪔  🪔 

எங்களுக்கு பின் அந்நியர்  பிடியிலிருந்து சுதந்திரம் பெற்ற நாடு எப்படி ஆசியாவின் வளம்  கொழிக்கும் நாடாக மாறியது..? 

அரசியல் வாதிகள், அதிகாரிகள் மட்டும் காரணமா ..? 

இல்லை ... இது என் தேசம்.. இந்த தேசத்தின் மீட்சி,  பாதுகாப்பு, உயர்வு  என்னால் எனும் எண்ணம் ஒவ்வொரு தனி மனிதருக்குள்ளும் உணர்த்த  பட்டதனால் தான் என்பதை கீழிருக்கும் இவ்வருட தேர்தல் வெற்றி எமக்கு உணர்த்துகின்றதா இல்லையா..? 


11.07.2020 News 

சிங்கப்பூரில் கடந்த 1959-ம் ஆண்டிலிருந்து மக்கள் செயல் கட்சிதான் ஆட்சியில் இருந்து வரும் நிலையில் இந்த முறையும் ஆளும் கட்சிக்கே மக்கள் வாக்களித்துள்ளனர். 

🪔  🪔  🪔 🪔  🪔  🪔 🪔  🪔  🪔 

சிங்கப்பூர் குறித்த எனது பதிவினுடாக  

இலங்கை  எனும் எங்கள் தேசத்தின் தற்சார்பு பொருளாதாரம் அபிவிருத்தி நோக்கி அரசு எடுக்கும் முயற்சிகளின் பின் இருக்கும் நாட்டின் பாதுகாப்பு மீட்சி குறித்த  கவனயீர்ப்பும் இருக்கின்றது. 

அந்நியர் அடிமைத்தனத்தில் சிக்கி சின்னாபின்னமாகாமல் எமது நாட்டை வளமுடையதாக்கி ஆசியாவின் கனவு தேசமாக  மாறும் படி உருவாக்க முடியும் எனும் நம்பிக்கையோடு  இந்த தீபாவளியை கொண்டாடுங்கள். 

எல்லோருக்கும் இனிய  தீபத்திரு நாள் நல்வாழ்த்துகள்...!

 🪔  🪔  🪔 🪔  🪔  🪔 🪔  🪔  🪔 

      “இனி வரும் காலம் எமதாகும்“

அன்பு மனிதநேயத்திற்கான உண்மையாகிறது..?


"உலகில் எங்கேனும் நடக்கும் அநீதிக்கு எதிராக நீ குரல் கொடுத்தால் நீயும் என் தோழனே !" 

"WE MUST STRUGGLE EVERYDAY SO THAT THIS LOVE FOR HUMANITY BECOMES REALITY"

"ஒவ்வொரு நாளும் நாங்கள் கடுமையாக போராட வேண்டும், அன்பு மனிதநேயத்திற்கான உண்மையாகிறது"

சே குவேரா


12 நவம்பர் 2020



பெண்கள் முன்னேற்றம்  தற்சார்பு, சுயதொழில் வழிகாட்டும் செயல்அமைப்புகள்

தனித்து சுயதொழில் செய்யும்பெண்கள்

கைப்பணி,பனை, தென்னை சார்ந்த தொழில், விவசாயம்  கோழி ஆடு மாடு வளர்ப்பு என்று தற்சார்பு பண்ணை சார்ந்த 

கூட்டு முயற்சி திட்டங்கள் எதுவானாலும் நான்கைந்து பேர்  இணைந்தும் தனித்தும் விண்ணப்பிக்கலாம்

இன்னும்  1  நாள் உங்களுக்கு உண்டு. ( 13.11.2020)

உங்களின் இதுவரையான முயற்சிகள்  செயல்பாடுகளை குறித்து வரைவு ஒன்றை  தயார் செய்து அதை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கம் என்று குறிப்புடன் 

🔹18- 45 வயதுக்கு உட்பட்ட இலங்கை பிரஜைகள்  அனைவரும்  விண்ணப்பிக்கலாம்!!

🔹 சுய தொழில் முயற்சி தொடர்பான அபிவிருத்தி செய்யும் ஆர்வம் இருப்போர்

🔹 உள் நாட்டு, வெளி நாட்டு சந்தை உற்பத்தியில் ஆர்வமிருப்போர்

🔹 இப்போது  குடியிருக்கும் காணி  நிரூபணம்   பிரச்சனை  இருப்போர் 

🔹 இப்பேதைய சுயதொழில்  திட்டங்களுக்கு  மேலும் அபிவிருத்தி செய்ய நினைப்போர் 

🔹 குழுவாக இணைந்து கூட்டுப்பண்ணை,விவசாயம் செய்யும் ஆர்வம் இருப்போருக்கு முன்னுரிமை  கிடைக்கும். 

🔹பண்ணை, மீன்வளர்ப்பு, சிறு தொழிற்சாலை, போன்ற தொழில் முயற்சியாளர்கள்,  

பிரதேச செயலகத்தின் காணி அலுவலரை சென்று சந்தித்து பொருத்தமான அரச காணி விபரங்களை கேட்டு, அவர்களிடம் இதுக்கு என்று ஒதுக்கப்படட நிலம்  குறித்து தரவு இருக்கும்.  

ஒரு இடத்தில இடம் இல்லை என்றால்  இடம் இருக்கும் இடத்தில எங்கே  இடம் இருக்கு என்று  கேளுங்கோ 

காணி கோரல் விண்ணப்பத்துடன் அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வழங்கப்படும் காரணத்திற்கு மேலதிகமாக பிரத்தியேக  முன்மொழிவுகள் எதுவும் தற்போது  சமர்பிக்க வேண்டியதில்லை. 

நேர்முகத்தேர்வின்போது தான் அது பரிசீலிக்கப்படும்.  ( மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட ஆவணத்தில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல். ) 

எல்லா மாவட்டங்களிலுமிருந்தும்  நீங்கள் எந்த தொழில். செய்து கொண்டிருந்தாலும்  பரவாயில்லை!! அந்த தொழிலை செய்து கொண்டே இந்த காணியில் புதிய தொழில் முயற்சிகளை தொடங்கலாம்!!  

மேலும்:காணி

உங்களுக்கான அருமையான வாய்ப்பு இது.  

குறிப்பிட்டபடி நாட்டின் இறைமைக்கு சேதம் தராமல் அபிவிருத்தி & வளர்ச்சி திட்டங்களோடு வீண்ணப்பம் செய்வோருக்கு  முன்னுரிமை தருவார்கள்.

சுயதொழில் சார்ந்த அரசு உதவிகள், கடன் உதவிகளுக்கு காணி கிடைத்த பின் விண்ணப்பிக்கலாம். 

 Facebook