08 நவம்பர் 2020

“ மரவள்ளி கிழங்கு குச்சியும் இஞ்சியும் ஒன்றாக தின்னலாமோ..? - 2

“ மரவள்ளி கிழங்கு மற்றும் இஞ்சியை ஒன்றாக சாப்பிடக்கூடாது’ என்பதற்குப் பின்னால் உள்ள அறிவியல் காரணம் என்ன? 


மரவள்ளிக்கிழங்கு குறித்த காலம் காலமாக தொடரும் எச்சரிக்கை பலருக்கும் குழப்பமாகபே இருந்திருக்கின்றது. இக்காலத்தில் அதெல்லாம், அப்படி எல்லாம் இல்லை என்று பலரும், எதுக்கு  ரிஸ்க் எடுப்பான் என்று சிலரும்  காரணம் தெரியாமலே மரவள்ளி + இஞ்சி  சேர்த்து உண்பதை தவிர்க்கின்றோம். 

நம்ம பாடடனும் பியூட்டியும் என் இப்படி    சொன்னாரகள்..? அவங்களுக்கு என்ன அறிவியல் தெரியும்..? 

சாப்பிட்ட பின் நல்லா சிரித்து பேசி கொண்டிருந்தார்..! தலை சுத்துது என்றார்... திடிர்னு என்ன ஆச்சு என்று புரியல்ல ... இப்படிலாம் அடிக்கடி நம்ம காதில் விழும். நாலு நாள் அழுது பேசி களைவோம், காரணம் தேட மாட்டோம். 

உணவுக்கு பின் வரும் திடீர் மரணங்கள்,  நரம்பு சார்ந்த வலிப்புகள், ஒவ்வாமைக ளும் காரணம் என்று புரிந்து தவிர்க்க கற்று தந்தது எமது பாரம்பரியம். 

அதன் அறிவியல் காரணம் என்ன என்பதை விரிவாக   அறிய தொடர்ந்து  வாசியுங்கள். 

இஞ்சியில் லினமரேஸ் என்ற நொதி உள்ளது, இது மரவள்ளியில்  உள்ள சயனோஜெனிக் கிளைகோசைடை ஹைட்ரஜன் சயனைடு (HCN) ஆக மாற்ற தூண்டுகிறது. Hydrogen cyanide ( HCN ) சில செறிவுகளில் மனிதனுக்கு நச்சுத்தன்மையளிக்கும்.

மரவள்ளிக்கிழங்கு சமைக்கும் போதும்  ​​HCN வாயுவை ஆவியாக்க வெளியேற விட வேண்டும்.

மரவள்ளி ( Tapioca Cassava) என்பது கிழங்கு  (Euphorbiaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகைச் செடி.

                         மரவள்ளிக் கிழங்கு    

Manihot esculenta, manioc, cassava  குச்சிக் கிழங்கு, குச்சிவள்ளிக் கிழங்கு, மரச்சினி கிழங்கு என்று பல பெயர்களில்  அழைப்பார்கள். 

தென் அமெரிக்காவையும் மேற்கு ஆப்பிரிக்காவையும் தாயகமாகக் கொண்ட இச்செடி இன்று ஆப்பிரிக்காவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. மேற்கு ஆப்பிரிக்க நாடான  நைஜீரியா  உலகின் மிகப்பெரிய மரவள்ளி உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. வெப்பவலய, துணைவெப்பவலயப் பகுதிகளில் ஆண்டுப் பயிராகப் பயிரிடப்படும் மரவள்ளியிலிருந்து உணவுக்குப் பயன்படக்கூடிய கிழங்கு பெறப்படுகின்றது. 

மனிதர்களின் உணவுக்கான ( carbohydrates)கார்போவைதரேட்டுக்களைத் தருவதில் உலகின் மூன்றாவது பெரிய மூலம் மரவள்ளியாகும். மனிதர் மற்றும் விலங்குகளின் உணவுப் பொருளாகவும் பல்வேறு தொழில்துறைகளில் இது ஒரு மூலப்பொருளாகவும் பயன்படுகிறது.மரவள்ளிக்கிழங்கிலிருந்து ஜவ்வரிசி தயாரிக்கப்படும்.

மரவள்ளிக் கிழங்கில் சயனோசெனிக்  குளுக்கோசைட்டு ( cyanogenic glycosides linamarin ) எனப்படும் நச்சுப் பொருள் காணப்படுகின்றது.,

cyanogenic glucosides of cassava (linamarin and lotaustralin) இப்பொருள் இருக்கும் அளவைப் பொறுத்து மரவள்ளிக் கிழங்கு "இனிப்பு" மரவள்ளி, "கசப்பு" மரவள்ளி என இரண்டு வகைகளாக உள்ளது. மற்ற வேர்கள் மற்றும் கிழங்குகளைப் போலவே, கசப்பான மற்றும் இனிப்பு வகைகளிலும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள  காரணிகள் மற்றும் நச்சுகள் உள்ளன

மரவள்ளிக் கிழங்கின் இலைகள் வேர்களில்   சயனோஜெனிக் கிளைகோசைடுகள் லினாமரின் ( cyanogenic glycosides linamarin ) (  90% சயனோஜென் + லோட்டாஸ்ட்ராலின் 10% ) 

இருக்கின்றது. இது கிளைகோசைடுகளின் குழுவிலிருந்து பரவலான தாவர நச்சுகள் ஆகும். 

ஆல்கஹால் மற்றும் கார்போஹைட்ரேட் (சர்க்கரை) ஆகியவற்றின் கலவை, ஹைட்ரஜன் சயனைடு என்றும் அழைக்கப்படும் நச்சு ஹைட்ரஜன் சயனைடு (HCN) 

மரவள்ளிக்கிழங்கின் தோலின் உட்புற எல்லை செல் சுவர்களில்  Linamarase காணப்படுகிறது.  மரவள்ளிக்கிழங்கு பிடுங்கும் போது  அல்லது தரையில் இருக்கும்போது, ​​கிழங்கின் வெளிப்புற தோல் காயப்பட்டால் அல்லது அகழ்ந்தெடுத்த பின் இரண்டு நாள்களுக்கு மேல் சேமித்து வைத்தால் இந்தச் சத்து ”ஹைரோ சயனிக் அமிலம்” என்னும் நஞ்சாக மாறி விடுகின்றது.  அவை சாப்பிடுபவருக்கு ஆபத்தானவை. மனிதர்களில், நாள்பட்ட நச்சுத்தன்மை மரணத்தை விட அதிகமாக உள்ளது.

மரவள்ளி கிழங்கு முறையாக சமைக்கவில்லை என்றால் நச்சு ஊறும் என்பர்.மரவள்ளி கிழங்கு சமையலின் போது நன்கு கழுவி மூடாது அவிப்பதனால் இந்த நஞ்சு அமிலத்தை எளிதில் அகற்றி விடலாம்.

Linamarase, or beta-D-glucosidase (EC 3.2.1.21), இது  மரவள்ளி மற்றும் இஞ்சி உள்ளிட்ட பல தாவரங்களில் காணப்படும் ஒரு நொதியாகும். Linamarase நொதி, சயனைடு கொண்ட சேனைடுகளை ஹைட்ரஜன் சயனைடாக மாற்றுவதை ஊக்குவிக்கிறது, 

Linamarase நொதி சேர்மங்களைக் கொண்ட சயனைடை அசிட்டோன் சயனோஹைட்ரின் ஆக மாற்றுகிறது, இது தன்னிச்சையாக ஹைட்ரஜன் சயனைடு (HCN) ஆக சிதைகிறது.

இஞ்சியில் Linamarase லினமரேஸ் அல்லது பீட்டா-டி-குளுக்கோசிடேஸ் உள்ளது,  

அதனால் தான் மரவள்ளிக் கிழங்கு இஞ்சி அல்லது இஞ்சி சேர்த்த உணவு உண்பது தவிர்க்கப்பட வேண்டும். அவை சாப்பிடுபவருக்கு ஆபத்தானவை

மரவள்ளியைச் சமைக்கும்போது இஞ்சியைக் கலந்து சமைத்தல் அல்லது மரவள்ளி உணவுடன் இஞ்சி கலந்த உணவுப் பொருள்களை உட்கொள்ளல் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது என அறியப்பட்டுள்ளது. 

மது அருந்தியவர்களும் மரவள்ளி கிழங்குசாப்பிடக்கூடாது. முறையாகச் சமைக்கப்படாத "கசப்பு" மரவள்ளி Konzo என்னும் நோயை உருவாக்கக்கூடும்.  

கொன்சோ: உணவு ( மரவள்ளி ) சயனோஜெனிக் விஷத்துடன் தொடர்புடைய ஒரு தனித்துவமான நரம்பியல் நோய்..!   

     ஆரம்ப அறிகுறிகளில் தலைவலி, தலைச்சுற்றல், வேகமான இதய துடிப்பு, மூச்சுத் திணறல் மற்றும் வாந்தி ஆகியவை அடங்கும். இந்த கட்டத்தைத் தொடர்ந்து வலிப்புத்தாக்கங்கள், மெதுவான இதயத் துடிப்பு, குறைந்த இரத்த அழுத்தம், நனவு இழப்பு மற்றும் இதயத் தடுப்பு ஆகியவை ஏற்படலாம். அறிகுறிகளின் ஆரம்பம் பொதுவாக சில நிமிடங்களில் நிகழ்கிறது. தப்பிப்பிழைத்த சிலருக்கு [தெளிவற்ற] நீண்டகால நரம்பியல் பிரச்சினைகள் இருக்கலாம். 

Link பார்க்கவும். 

இதிலிருந்து சில தகவல் ஆதாரத்துக்கு இணைத்துள்ளேன். 

மரவள்ளிக் கிழங்கு 

Linamarase

Hydrogen cyanide ( HCN )

Konzo

சயனைடு மீது இஞ்சி மற்றும் பூண்டு  - ரிசர்ச் கேட்

மரவள்ளி கிழங்கில் உள்ள மருத்துவ குணங்கள் 





1 கருத்து:

  1. மரவள்ளிக் கிழங்கு இரு பதிவுகளும் பார்த்தேன்...நாம் இஞ்சி சேர்த்துச் செய்வதில்லை. மற்றபடி நீங்கள் சொல்லியிருப்பது போல் செய்வதுண்டு. கேரளத்திலும் மரவள்ளிக் கிழங்கு நீங்கள் செய்தது போலவே செய்வதுண்டே. பல வகை செய்வதுண்டு. நம் வீட்டில் மிகவும் பிடிக்கும்..

    கீதா

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!