04 நவம்பர் 2020

நேரமில்லை...!

எத்தனை  திறமைகளை எங்கள் நேரமின்மையால் முடக்கி கொண்டிருப்போம். எத்தனை கனவுகள் எங்களுக்குள் இருந்தது? அத்தனையும் நேரமில்லை எனும் ஒற்றை சொல்லுக்குள் அடக்கி கொண்டோம். 

💕 நாங்கள் வாழும் வீடு, கிச்சன் முதல் ஸ்டோர் ரூம் மசாலா பொருள் வைக்கும் அலுமாரியை   கழுவி துடைத்து clean பண்ணி மாத்தி வைக்க நினைச்சு நேரமில்லை.

💕 கம்யூட்டரில் என்னமோ கற்றுக்கொள்ளனும் . அட போட்டோஷாப் செய்ய கற்று கொள்ளணும் ஆனால் நேரமே யில்லை 

💕 உடுப்பு வைக்கும் அலுமாரி வடிவா பிரித்து அடுக்க நேரமில்லை

💕 வாரம் முழுதும் வேலை, வார இறுதி பார்ட்டி என்று மேக்கப், அலங்கார சாமான்கள் எல்லாம் குப்பையா குவிந்து கிடக்கு நேரமில்லை 

💕 சின்ன தையல் விரிசல், பட்டன் இல்லாமல் நல்ல துணிகள் ஒருபக்கம் கிடக்கு ஆனால் நேரமில்லை

💕 தச்சு வேலை தெரியும், ஏதேனும் மரத்துண்டு கண்டால் கற்பனை எகிறும். ஆனால் நேரமில்லை

💕 அழகான இயற்கை காட்சிகள் ரசிப்பது, புகைப்படம் எடுப்பது, பகிர்ந்து கொள்வதுக்கு ஆசை நிரம்ப இருக்கு ஆனால் நேரம் இல்லை. 

அவரவருக்கு ஆர்வம் இருக்கும் கலைகளில் வரைதல், தையல்,கைவேலை,பூக்கட்டுவது

எமராயிட்ட்,சுவேற்றார் பின்னுவது,கவிதை எழுதுவது, மன உணர்வுகளை இங்கே எழுதி நண்பர்களோடு கலந்து உரையாடுவது என எத்தனை எத்தனையோ ஆசைகள், எண்ணங்கள் அத்தனையும் நேரமில்லாமல் முடங்கி கிடக்குதே..! 

இது வரை ஓடிக்கொண்டிருந்தோம்.  இயற்கையை நின்று ரசிக்க நேரம் கிடைத்தது இல்லை. இளமையில் வேகமாக காலத்தை கடந்துவந்த நமக்கு நம்மை நாம் ஆராய்ந்து எமக்குள் மறைந்து இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வாய்ப்பாக பயன் படுத்த முடியும். 

❎ பொது மக்கள் கூடும் இடங்களை தவிர்த்து கொள்ளுவோம். அதுக்காக வீட்டுக்குள் முடங்கி மோட்டுவளையை பார்த்து கொண்டு வக்கிரமும், வன்முறையும் நிறைந்த சினிமா, சீரியல், தொலைக்காட்சி நிகழ்வுகளை பார்த்து  பொழுதை வீணாக்கனும் என்பது இல்லை.

❎ சூழ்நிலை புரியாமல்  வித விதமாக சமைத்து முக்கியமாக இனிப்பு, எண்ணெய் பலகாரங்களை பகிர்ந்து வாய் ஊற வைத்து உட்கார்ந்து தின்றே புது நோய்களை உருவாக்க வேண்டாம். அளவோடு ஆரோக்கியமாக சமைத்து உண்பதை பகிர்வது தவறும் இல்லை. அடுத்தவர்களை பார்த்து உங்கள் ஆரோக்கியத்துக்கு ஒவ்வாதவைகளை தின்னு எத்தனை  திறமைகளை எங்கள் நேரமின்மையால் முடக்கி கொண்டிருப்போம். எத்தனை கனவுகள் எங்களுக்குள் இருந்தது? அத்தனையும் நேரமில்லை எனும் ஒற்றை சொல்லுக்குள் அடக்கி கொண்டோம். 

💕 நாங்கள் வாழும் வீடு, கிச்சன் முதல் ஸ்டோர் ரூம் மசாலா பொருள் வைக்கும் அலுமாரியை   கழுவி துடைத்து clean பண்ணி மாத்தி வைக்க நினைச்சு நேரமில்லை.

💕 கம்யூட்டரில் என்னமோ கற்றுக்கொள்ளனும் . அட போட்டோஷாப் செய்ய கற்று கொள்ளணும் ஆனால் நேரமே யில்லை 

💕 உடுப்பு வைக்கும் அலுமாரி வடிவா பிரித்து அடுக்க நேரமில்லை

💕 வாரம் முழுதும் வேலை, வார இறுதி பார்ட்டி என்று மேக்கப், அலங்கார சாமான்கள் எல்லாம் குப்பையா குவிந்து கிடக்கு நேரமில்லை 

💕 சின்ன தையல் விரிசல், பட்டன் இல்லாமல் நல்ல துணிகள் ஒருபக்கம் கிடக்கு ஆனால் நேரமில்லை

💕 தச்சு வேலை தெரியும், ஏதேனும் மரத்துண்டு கண்டால் கற்பனை எகிறும். ஆனால் நேரமில்லை

💕 அழகான இயற்கை காட்சிகள் ரசிப்பது, புகைப்படம் எடுப்பது, பகிர்ந்து கொள்வதுக்கு ஆசை நிரம்ப இருக்கு ஆனால் நேரம் இல்லை. 

அவரவருக்கு ஆர்வம் இருக்கும் கலைகளில் வரைதல், தையல்,கைவேலை,பூக்கட்டுவது, எமராயிட்ட்,சுவேற்றார் பின்னுவது,கவிதை எழுதுவது, மன உணர்வுகளை இங்கே எழுதி நண்பர்களோடு கலந்து உரையாடுவது என எத்தனை எத்தனையோ ஆசைகள், எண்ணங்கள் அத்தனையும் நேரமில்லாமல் முடங்கி கிடக்குதே..! 

இது வரை ஓடிக்கொண்டிருந்தோம்.  இயற்கையை நின்று ரசிக்க நேரம் கிடைத்தது இல்லை. இளமையில் வேகமாக காலத்தை கடந்துவந்த நமக்கு நம்மை நாம் ஆராய்ந்து எமக்குள் மறைந்து இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வாய்ப்பாக பயன் படுத்த முடியும். 

❎ பொது மக்கள் கூடும் இடங்களை தவிர்த்து கொள்ளுவோம். அதுக்காக வீட்டுக்குள் முடங்கி மோட்டுவளையை பார்த்து கொண்டு வக்கிரமும், வன்முறையும் நிறைந்த சினிமா, சீரியல், தொலைக்காட்சி நிகழ்வுகளை பார்த்து  பொழுதை வீணாக்கனும் என்பது இல்லை.

❎ சூழ்நிலை புரியாமல்  வித விதமாக சமைத்து முக்கியமாக இனிப்பு, எண்ணெய் பலகாரங்களை பகிர்ந்து வாய் ஊற வைத்து உட்கார்ந்து தின்றே புது நோய்களை உருவாக்க வேண்டாம். அளவோடு ஆரோக்கியமாக சமைத்து உண்பதை பகிர்வது தவறும் இல்லை. அடுத்தவர்களை பார்த்து உங்கள் ஆரோக்கியத்துக்கு ஒவ்வாதவைகளை தின்னும்  முயற்சி வேண்டாம். 

💝  நீங்கள் பகிர்வதோடு மற்றவர்கள் பகிர்வுகளையம் உங்களுக்கு பிடிக்காது விட்டாலும் அவர்கள் திறமைக்கு லைக் போட்டு உற்சாகம் தரலாம். 

💝 ஒருவரையொருவர் பாராட்டுவது எங்களுக்குள் பொசிட்டிவ் அலையை உருவாக்கும் என்று உணர்ந்து பாருங்களேன். உங்களை நீங்களே ராஜாவாக, ராணியாக உணருவீர்கள். 

❣️ நான் இப்போதெல்லாம் நெகடிவ் அலை என்னை நெருங்க விடுவதே இல்லை. நிரம்ப வாசிக்கின்றேன். மருத்துவம் சார்ந்து தேடல்கள், ஆய்வு கட்டுரைகளை ஆங்கிலம், ஜேர்மன் மொழிகளில் தேடி வாசிக்கின்றேன்.

❣️ முத்து லட்சுமி ராகவன் நாவல்களை வாசித்து  கேரளா மற்றும் மலை நாடுகளுக்கு கற்பனைக்கு அப்பால் மிதக்கின்றேன். 

❣️ ஒன்லைனில் நண்பர் ஒருவர் சிங்கள மொழி பேசும் பயிற்சி தொடங்குகின்றாராம். அதிலும் இணையலாம் என்று சிங்கள சொல்கள் தேடி மனனம் செய்கின்றேன். 

❣️ இந்தியா, இலங்கையில்  பொருளாதார நெருக்கடி, கொரோனா தொற்று என்று  சோர்ந்து போகும் நண்பர்களுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு உற்சாகம் தருகின்றேன். புதிய எதிர்காலம் குறித்து சிந்திக்க வைக்கின்றேன். 

❣️ நம்பினால் நம்புங்கள்.   காது கேட்கும் திறன் குறைந்தும் இத்தனையும் எப்படி கற்று கொண்டேன்..?  புதிய மொழி ஒன்றை எப்படி கிரகித்து கொண்டேன்  என்றுஎன்னை பார்த்து ஆச்சரியப்படுவோர் அநேகர். என் நேரம் வெட்டி பொழுது ஆனதே  இல்லை. நேரம் இல்லை என்று சொல்வதும் இல்லை. 

அதெப்படி ஒரு நாளில் 24  மணி நேரத்தில் நேரம் இல்லாமல் போகும்? 

நமக்கான நேரத்தை நாமே உருவாக்கி கொள்ள வேண்டும் 

🦋 வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் என் வாழ்க்கை என் கையில்..! 🦋

நீங்களும்  வாருங்கள் சேர்ந்து வடம் இழுப்போம்..!

நேரமில்லை

                      🪂🪂🪂🪂 🪂🪂🪂🪂 🪂🪂🪂🪂 🪂🪂

1 கருத்து:

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!