14 டிசம்பர் 2020

கருங்காலி






🌺 எப்போதும் தேவை உள்ளது. விலை கூடிய உயர்தர மரம்.அதை வாங்கக்கூடியவர்களால் இது நேசிக்கப்படுகிறது

🌺 மனிதர் பராமரிப்புகள் இல்லாமல் இயற்கையாகவே எமது வனங்களில் வளர்ந்து பயன் தந்த நமது மரங்களில் ஒன்று கருங்காலி. எமது வளங்களில் ஒன்றாக காலநிலையை  சீர்ப்படுத்தி, பருவ காலங்களை கட்டுப்படுத்தும் சக்தி கொண்ட பெரு மரங்கள் கருங்காலி, நீல வேம்பு, முதுரை போன்ற மரங்கள் அழிக்கப்பட்டு இலங்கையில் இயற்கை வனங்கள் வெறும் 20 % அளவில் சுருங்கி இருக்கின்றன. மீண்டும் காடுகளை அழித்து விவசாய நிலங்களை உருவாக்குவது மென்மேலும் இயற்கையை  சினம் கொள்ள வைக்கும்.

அதனால் எமது நோக்கம் மரங்களை அழிப்பதாக,  தற்காலிக பொருளாதார நோக்கம் கொண்டதாக இருக்காமல் அழிக்கப்பட்ட மரங்களை உருவாக்கி எமது பெருளாதாரத்தை நிலையானதாக அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் பாதுகாப்பு தரும் நோக்கத்துடன் இருக்க வேண்டும். 

அழிந்து வரும் பெரு விருட்சங்கள் மீண்டும் துளிர்க்க வேண்டும்.

🌺 கருங்காலி தேக்கை விட விலை உயர்ந்தது. கருங்காலி மரத்தை  பச்சைத் தங்கம் என்பார்கள்.

🌺 கருங்காலிப் பயலே’ என்று எதற்கும் அசையாத உறுதி கொண்ட மனிதர்களையும் 

„“கருங்காலிக் கட்டைக்கு நாணாக்கோ டாலி இருங்கதலித் தண்டுக்கு நாணும் “ என்று கருங்காலியைப் பற்றி பழந்தமிழ் பாடலில் ஔவையார் பாடியுள்ளார்.

🖤 கருங்காலி மரங்களை கருங்காலியாலான பிடியுடைய கோடரிகளே வெட்டுவதால், கருங்காலி துரோகத்தின் சின்னமானது. மரம் வெட்டும் கோடாலி மண்வெட்டிகளுக்கு கைப்பிடியாக கருங்காலி மர கம்புகள் பயன்படுத்ததும்  காரணத்தால் கூட இருந்து குழி பறிக்கும் நபரை “கருங்காலி“ என்றும் கூறுவர்.

🌳



கருங்காலி மரம்

கருங்காலி (Diospyros ebenum - இலங்கைக் கருங்காலி) என்பது ஒருவகை மரமாகும். இம்மரத்தில் இருந்து மிகவும் உறுதியான பலகைகள் பெறப்படுகின்றன. இம்மரம்  அரிதாகவே காணப்படுகிறது. தூய கருப்பு கருங்காலி 150 வயதுக்கு மேற்பட்ட மரங்களிலிருந்து மட்டுமே வருகிறது.

🚫 இலங்கையில், கருங்காலி ஒரு பாதுகாக்கப்பட்ட இனம் மற்றும் கருங்காலி அறுவடை மற்றும் விற்பனை சட்டவிரோதமானது சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

🚫 இந்திய வனத்துறையால் காடுகள் மற்றும் மலைகளில் வெட்ட அரசால் தடை செய்யப்பட்டு பாதுகாக்கப்படும் அழிந்து வரும் மர இனங்களில் ஒன்றாகும்.  

✅ மின் கதிர்வீச்சுகளை தன்னகத்தே ஈர்க்கும் சக்தி வாய்ந்த மரம் கருங்காலி. தீராத பிணிகளுக்கு அருமருந்தாகவும் செயல்படுகிறது. கருங்காலி அற்புதமான மருத்துவக் குணங்கள் கொண்ட அபூர்வமான மரம். மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த மரத்தின் பழமையை பொறுத்து அதன் பலன்களும் கூடுகின்றது. முற்றிய மரத்தின் கட்டையில் அளப்பரிய பல நற்குணங்கள் ஒளிந்துள்ளன. இதன் பிற பகுதிகளும் மருந்தாகின்றன. குளிக்கும் நீரில் போட்டு வைத்தால் அதன் நிறம் மாறும். இதில் குளித்து வந்தால் உடல் சோர்வு நீங்கி உடனே புத்துணர்வு கிட்டும். 

மரங்கள் மனிதனுக்கு ஆதாரமானவையாகத் திகழ்கின்றன. மரங்கள்தான் மனித இனத்தை வாழ வைக்கும் சக்திகளாக விளங்குகின்றன. இதனால் தான் நம் முன்னோர்கள் கோவில்களில் தல விருட்சமாக மரங்களை வளர்த்து வணங்கினர். நல்ல சக்திகளை(passitive Energy) நமக்கு பெற்று தந்து நம்மிடம் இருக்கும் எதிர்மறை சக்திகளை(negative Energy) களையும் மாற்றும் ஆற்றல் கருங்காலி மரத்திற்க்கு உண்டு.

கருங்காலி ஒரு அடர்த்தியான கருப்பு / பழுப்பு கடின மரமாகும், கருங்காலியில் Diospyros பல இனங்கள் உண்டு.  இதில் பெர்சிமோன்களும் உள்ளன. 

Ebony Tree Trivia மற்ற வகை மர கருங்காலிகளைப் போலல்லாமல் நீரின் மேற்பரப்பில் மிதக்க முடியாது. அது மிகவும் அடர்த்தியானது, அது கீழே மூழ்கும்.. இது நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மெருகூட்டும்போது கண்ணாடி போல் பளபளக்கும்அ.லங்கார மரமாக மதிப்புமிக்கதாக மாறுகின்றது. 

“கருங்காலி “என்ற சொல் பண்டைய எகிப்திய hbny இலிருந்து பண்டைய கிரேக்கம் throughβενος (enbenos) வழியாக, லத்தீன் மற்றும் மத்திய ஆங்கிலத்தில் வந்தது. பண்டைய எகிப்திய கல்லறைகளில் செதுக்கப்பட்ட துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு நீண்ட பயன்பாட்டு வரலாற்றைக் கொண்டுள்ளது. 

எகிப்தில், கருங்காலி பெரும்பாலும் 4500 ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டது பின்னர், ரோமானியப் பேரரசும் கருங்காலி மரத்திற்கான தேவையில்  பெரும்பகுதி இந்திய Diospyros இனங்களால் பூர்த்தி செய்யப்பட்டது.  இந்தியாவில் இருந்து முக்கியமாக வர்த்தகம் செய்யப்படும் இரண்டு கருங்காலி இனங்கள் D. melanoxylon மற்றும் D. ebenum ஆகும். 

இருப்பினும், D. ebenum  "கோடுகள் அல்லது அடையாளங்கள் இல்லாமல் ஒரு கருப்பு மரத்தை மட்டுமே தருகிறது ..." 

இந்த மரம் முதன்முதலில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு ரோமுக்கு கொண்டு வரப்பட்டது. மற்றும் மறுமலர்ச்சியின் போது ஐரோப்பாவின் ஆட்சியாளர்களுடன் வர்த்தகம் செய்யப்பட்டது. 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இந்தியாவில் கருங்காலி அறுவடை செய்யப்பட்டுள்ளது, பிரிட்டிஷ் வருகையின் போது கருங்காலி மரங்கள் பெரிய அளவில் வெட்டப்பட்டது, மிகவும் அழிவுகரமான முறைகளைப் பயன்படுத்துவதன் பெருகி வளர  விடப்படவில்லை. துணைக் கண்டத்தில் இனங்கள் அதிகம் வளர விடப்படவில்லை, 

இலங்கையில் (அப்போதைய இலங்கை) ஆங்கிலேயர்களுக்கு மிகவும் தேவைப்படும்  ஏராளமான மரங்கள் இருந்தன. இந்த மரத்தின் முக்கிய ஆதாரமாக சில பங்குகள் பெரிதும்  அழிந்து விட்டாலும் இன்றும் உள்ளன. 

உயிரினங்களின் உயர் மதிப்பு மற்றும் விஞ்ஞான நிர்வாகத்துடன் உறுதியளிக்கும் திறன் இருந்தபோதிலும் அது விஞ்ஞான உலகத்தின் கவனத்தைப் பெறவில்லை. இலங்கை இந்தியாவின்  இம்மரங்களை வெட்டுவதற்கு அரசு தடை செய்து உள்ளது. 

🌳








கருங்காலி மரம் பொதுவான பெயர்கள்:

Gaboon கருங்காலி, ஆப்பிரிக்க கருங்காலி, நைஜீரிய கருங்காலி, Cameroon கருங்காலி

கருங்காலி மரங்களின் வகைகள்: வெவ்வேறு கருங்காலி மர வகைகள்:

• அமெரிக்க கருங்காலி மரம், டியோஸ்பைரஸ் வர்ஜீனியா

• கருப்பு கருங்காலி மரம்

• இலங்கை எபோனி மரம், தென்னிந்தியா மற்றும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டது

• காபோன் கருங்காலி மரம், ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது

• மக்காசர் கருங்காலி மரம்இந்தோனேசியாவை பூர்வீகமாகக் கொண்டது 

• மலேசிய பிளாக்வுட் மரம்

• Mun கருங்காலி மரம்

• Persimmon கருங்காலி மரம் 

• Diospyrus வர்ஜீனியா

வெள்ளை கருங்காலி மரம்

✳️ கருங்காலி இனங்களில் தென்னிந்தியா மற்றும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட Diospyros ebenum (சிலோன் கருங்காலி) வானிலை மற்றும் காலநிலை எதிர்த்து வளரும் தன்மை கொண்டது. 

இன்று கிடைக்காத மிகச் சிறந்த தரம்: மிகவும் கடினமானது, துளைகள் இல்லாமல், மெருகூட்ட எளிதானது.16 - 19 ஆம் நூற்றாண்டுகளில் தளபாடங்கள் கட்டுமானத்தின் சிலோன் கருங்காலி வகையானதாக இருந்தது.

✳️ Kamerun-கருங்காலி (Diospyros crassiflora) மேற்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது.இது உலக சந்தையில் மிகவும் பரவலான கருங்காலி ஆகும், இது பெரும்பாலும் ஆழமான கருப்பு நிறத்தில் இருக்கும், ஆனால் பெரும்பாலும் சாம்பல் நரம்புகளுடன். சுமார் 10%  மட்டுமே ஒரே மாதிரியான கறுப்பைக் காட்டுகின்றன.

✳️ மடகாஸ்கர் கருங்காலி (Diospyros perrieri) மிகவும் அடர் பழுப்பு நிறத்தில் உள்ளது.இந்தோனேசியாவை பூர்வீகமாகக் கொண்ட Diospyros celebica (சுலவேசி கருங்காலி) மற்றும் அதன் ஆடம்பரமான, பல வண்ண மர தயாரிப்புக்கள்  மதிப்புள்ளது. மொரிஷியஸ் கருங்காலி, Diospyros tessellaria. 

17 ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களால் பெரும்பாலும் (16 ஆம் நூற்றாண்டின் முடிவில் ) ஆடம்பர வர்த்தகத்திற்கான சிறந்த பெட்டிகளும் பாரிஸில் தயாரிக்கப் பட்டன. மரத்தின் அடர்த்தியான கடினத்தன்மை சுத்திகரிக்கப்பட்ட மோல்டிங்கிற்கு மிகக் குறைந்த நிவாரணத்தில் (அடிப்படை-நிவாரணம்) வழக்கமாக உருவகப் பாடங்களில் அல்லது செம்மொழி அல்லது கிறிஸ்தவ வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகளைக் கொண்டு செதுக்குவதன் மூலம் மிகச்சிறிய விரிவான சித்திர பேனல்களை ஒரு குறுகிய காலத்திற்குள் வடிவமைத்தது. 

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு, பிரான்சின் மிகச்சிறந்த தச்சர்களுக்கு “எபனிஸ்ட்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டது 

கருங்காலி - பிரபஞ்ச ஆற்றல் வாங்கி தரும் ஒரு வங்கி. நீடித்த அறுவடையின் விளைவாக, ஆப்பிரிக்கா  உள்நாட்டு கருங்காலி மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்ட்டு பல இனங்கள் இப்போது மிகவும் அரிதான அல்லது அழிந்துவரும் மரங்களில் ஒன்றாக இருப்பினும் இலங்கை,மியான்மர், மலேசியா, இந்தோனேஷியா, இந்தியா போன்ற நாடுகளில் இம்மரம் வளர்கிறது. 

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும் வடமத்திய மாகணத்திலும் தென்மாகாணத்தின் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் கருங்காலி மரங்கள் காணப்படுகின்றன. இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் (அதிக குளிர் மற்றும் குளிர் பிரதேசங்கள் தவிர) கலப்பு இலையுதிர் காடுகளிலும், வனாந்திர மலை அடிவாரங்களிலும் பரவலாக காணப்படும். மணற்பாங்கான ஆற்றுப்படுகையில் மற்றும் நீர்பிடிப்பு பகுதியில் காணப்படும்.

🌳

பொதுப்பண்பு :  கருங்காலி மரம் சராசரி அளவுடைய இலையுதிர் மரமாகும்.

ஒருங்கமைந்த இலைகளை கொண்டது. 30 – 50 சோடி இலைகள் ஒன்றினைந்து கொத்தாக காணப்படும்.நெற்றானது 10 15 செ.மீ நீளமுடையது மற்றும் 2 – 3 செ.மீ அகன்றது. பூக்கள் வெண்மையானது. உடல், தண்டு, கிளை, இலை எங்கும் முட்கள் கொண்ட மரம் அது. முட்கள் பார்க்கவே அழகாக இருந்தன. கருங்காலியின் முட்கள் அதன் தற்காப்பு. இது பச்சை, மஞ்சள் நிறமலர்களையும், முற்றியபின் செறிந்த சாம்பல் நிறப் பட்டையையும், செந்நிற கடினமான கட்டையையும் உடைய இலையுதிர் மரமாகும். 

🌳

பொருளாதார முக்கியத்துவம்

முக்கிய பயன்கள் :

கருங்காலி மரத்தில் இருந்து பெறப்படும் பலகைகளை, கருங்காலி பலகை என்பர். இவை மிகவும் பெறுமதிமிக்க பலகை வகையாகும். இப்பலகை கருப்பு நிறம் கொண்டவை. நூற்றாண்டுகளாக இரும்பை ஒத்த உறுதியுடன் கூடிய பலகைகள் இம்மரத்தில் இருந்து பெறப்படுகின்றன. கருங்காலி மரம் வலிமையானதாகவும், தேக்கை விட விலை உயர்ந்ததாகவும் பல்வேறுபட்ட பயன்களைத் தர வல்லவை. 

இந்த மரத்தின் நடுப்பாகமான கருமை நிறம் கொண்டப் பகுதியை வைரம் என்பர்.

அதாவது வைரம் பாய்ந்த கட்டை.  மிகவும் பழமையான வயதான மரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்கள் மிகவும் சக்தி வாய்ந்தது.அது கருப்பு நிறத்தில் இருக்கும்.ஆனால் அதற்க்கு மேல் உள்ள பகுதி இயல்பான நிறத்தில் இருக்கும். அநேகமாக கருங்காலி மரத்தில் இருந்தே "உலக்கை" செய்யப்படுகிறது. சில இடங்களில் கருங்காலி அல்லாத பலகைகளில் இருந்து உலக்கை செய்யப்பட்டாலும் கருங்காலி உலக்கைகளுக்கான பெறுமதியை மற்றையப் பலகைகள் பெறுவதில்லை.

மரம் :




கருங்காலியில் கட்டில், அலமாரி மட்டுமல்லாமல் உலக்கை செய்வதும் ஒரு காலத்தில் வழக்கத்தில் இருந்தது. இதன் பட்டை, பிசின், வேர் ஆகியன மருத்துவப் பயன்களைத் தருகின்றன.

இதன் மரம் கடினமானது மற்றும் எளிதில் அறுபடும் தன்மையற்றது. எனவே இம்மரம் வேளாண் உபகரணங்கள், வீட்டு தூண்கள், எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆலைகளின் மர உபயோகப்பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. மேலும் இம்மரம் படகு மற்றும் சக்கரம் தயாரிக்க பயன்படுகிறது.

இயற்கை சாயம் செய்யப் பயன்படுகிறது. அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்கள் பழ நூற்றாண்டுகளை கடந்தும் நிலைக்கிறது என்றால் அது தான் நமது சிறப்பு.

அடர் கருங்காலி சாயம் பருத்தி மற்றும் பட்டு ஆடைகளுக்கு வண்ணமூட்ட பயன்படுகிறது . அச்சு மை தயாரிக்கவும் பயன்படுகிறது.

பசுந்தாழ் தீவனம் :

இம்மரத்தின் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.

கோந்து :

இம்மரத்தின் தரமான கோந்தை தரவல்லது. கருங்காலி மரத்தின் பிசின்  பற்களுக்கு வலிவூட்டும், ஈறுகளில் ரத்த கசிவை தடுக்கும்,பற்களுக்கு உறுதிதன்மை கொடுக்கும்,

மரப்பாச்சி பொம்மை:

பிளாஸ்டிக் பயன்பாடு வருவதற்க்கு முன்பு குழந்தைகளுக்கு விளையாட கருங்காலி மரத்தினால் செய்யப்பட்ட மரப்பாச்சி பொம்மை தருவார்கள்,அது இருக்கும். 

கொலு பொம்மைகள்:

கொலுவில் வைக்கப்படும் பெரும்பாலான பொம்மைகள் வைரம் பாய்ந்த கருங்காலி மரத்தில் தான் செய்யப்படும். தற்போது மர பொம்மைகள் செய்து கருநிற சாயத்தில் ஊற வைத்த பொம்மைகள் கிடைக்கிறது. கருங்காலி மரத்தால் செய்யப்பட்ட பொம்மை எனில் நீரில் மூழ்கும். 

மரக்கட்டை:

மிக கடினமாகவும், அறுப்பதற்கும் கடினமாக இருக்கும். இவை வேளாண் உபகரணங்கள், கருவிகள், கைப்பிடி தயாரிக்கப்படுகிறது. கருங்காலி மரத்தை எளிதில் கரையான் அரிக்காது,உடைபடாது, அதிர்ச்சி தாங்கியாகவும் இருக்கும். கோடாலி,

கொந்தாளம்,மண்வெட்டி,களைவெட்டி போன்ற இரும்பு ஆய்தங்களுக்கு கைபிடி ஆக கருங்காலி மரம் தான் பயன்பட்டது. 

ஒட்டுப்பலகை தயாரிக்க :

கோந்து எடுக்க வெட்டப்பட்ட இதன் மரத்துண்டுகளை கொண்டு ஒட்டுப்பலகைகள் தயாரிக்கப்படுகிறது.

எரிபொருள் :

இம்மரம் 5200 கிலோ கலோரி வெப்பத்தை தரவல்லது. மேலும் இம்மரம் தரமான கரி தயாரிக்க பயன்படுகிறது.

விறகு கட்டை:

கலோரி அளவு – 5200கி






🌳

மருத்துவப் பயன் 

🔹இதன் பட்டை, பிசின், வேர் அதிக மருத்துவப் பயன் கொண்டவை. துவர்ப்புத் தன்மை மிக்கது. 

நீரிழிவு நோய், பெருவயிறு, வயிற்றுப்புழு நோய் ரத்தக் குறைவால் உருவாகும் திமிர் வாதம், பெருநோய், அழல் குன்மம் போன்றவை நீங்கும். கொழுப்பை குறைக்கும்

🔹 கருங்காலி வேர் : வயிற்றுப்புண் ஆறும். வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

🔹 கருங்காலி மரப்பட்டை :

இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். பித்தத்தைக் குறைக்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலைக் குறைக்கும். நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோயாளிகள் இதை அருந்துவது நல்லது. வாய்ப்புண்ணை அகற்றி வாய் நாற்றத்தைப் போக்கும். ஈளை, இருமல் நீங்கும். சுவாச காச நோய்கள் அகலும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். உடலில் உள்ள தேவையற்ற விஷ நீரை வெளியேற்றும். பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தும்.

🔹கருங்காலி மரத்தின் பிசின் கரப்பான் நோயினை போக்கவல்லது.

🔹பால்வினை நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். அதிக இரத்தப்போக்குள்ள பெண்களுக்கு சிறந்த மருந்தாகும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கி புத்துணர்வு கொடுக்கும். பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தும். மலட்டுத் தன்மையைப் போக்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலைக் குறைக்கும்.

🔹கருங்காலிக் கட்டையை தண்ணீரில் ஊறவைத்தால் அந்நீரின் நிறம் மாறும். அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தால், உடலில் உண்டாகும் அனைத்து வலிகளும் நீங்கும்.

🔹இதுபோல் கருங்காலிப்பட்டை, வேப்பம் பட்டை, நாவல்பட்டை இம்மூன்றையும் ஓர் எடை எடுத்து இடித்து நாள்பட்ட புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் ஆறும்.

🌳

நம்பிக்கைகளும் முக்கியத்துவமும் 

கருங்காலி மரத்தை நம்மக்கள் பழங்காலம் தொட்டு உபயோகப்படுத்துவதன் நோக்கம் இது பிரபஞ்சத்தில் உள்ள நல்ல சத்திகளை தன்னுள் ஈர்த்து வெளிப்படுத்தும், (கெட்ட)எதிர் மறை சத்தியை விலக்கி விடும் அல்லது தங்கவிடாது எனும் நம்பிக்கை உண்டு. 

உலக்கை:

முற்காலங்களில்  பூப்பெய்தும் பெண்கள்அமர்ந்து இருக்கும் இடத்திற்க்கு (பச்சை மட்டையில் கட்டிய குடில்) முன்பு கருங்காலி உலக்கையை போட்டு பாதுகாப்புக்கு வைப்பார்கள். கெட்ட சக்தி (எதிர்மறை சக்தி) தடுக்கவும்  இரத்த வாடையால் வரும் விலங்குகளை வரவிடாமல் தடுக்க,வந்தால் விரட்ட உலக்கையை வைப்பார்கள்.

தண்டம்:

சித்தர்கள்,ரிசிகள்,ஞானிகள் ' Y ' வடிவ வைத்து இருக்கும் கட்டையை தண்டம் என்று அழைப்பார்கள். இதனை கொண்டு தலையில் வைத்தோ அல்லது உடல் பாகங்கள் மீது வைத்தோ நல்ல வாக்கு (வார்த்தைகள்) கூறி ஆசி தருவார்கள்,இந்த தண்டம் கருங்காலி மரத்தால் செய்யப்பட்டதாகதான் இருக்கும்.

மாலை :  -கருங்காலி மரத்தின் நன்கு முற்றிய (சேவு) பகுதியை மணியாக உருண்டை வடிவில் செய்து அதில் செம்பு கம்பி அல்லது பருத்தி நூல் கொண்டு மாலையாக செய்து யோகம்,தியானம், வழிபாடு செய்பவர்கள்,மந்திர ஜபம் செய்பவர்கள் அணிந்து கொள்வார்கள். 

அனைத்து கோயில்களிலும் கும்பாபிசேகத்தின் பொது கருங்காலி கட்டைகளை கலசத்தின் உள்ளே போடுவார்கள்.

தாயத்துகள்:

நரிகுறவர் இன மக்கள் தரும் தாயத்துகள் அனைத்திளும் கருங்காலி கட்டை உறுதியாக இருக்கும்.

குறி சொல்லும் கோல்:சங்க காலத்தில் குறி சொல்லும் குறவஞ்சி பெண்கள் கருங்காலி மரத்தினால் ஆன கோல் (குச்சி) ஒன்றை கையில் வைத்து இருப்பார்கள்,குறி கேட்க வருபவர்கள் கையில் இந்த கோலை வைத்து அழுத்தி (தொட்டு) குறி சொல்வார்கள்.

ஆன்மிக நம்பிக்கை   

ஒவ்வொரு தெய்வத்திற்கும்,நவ கிரகங்களுக்கும், ராசிகாரர்களுக்கும், நட்சத்திரகாரர்களுக்கும் உகந்த தனி விருட்சங்கள் உண்டு.ஆனால் அனைத்து தெய்வத்திற்கும்,நவ கிரகங்களுக்கும் உகந்த விருட்சங்களில் (மரம்) குறிப்பிடதகுந்த மரம் கருங்காலி.

கருங்காலி மரத்தின் வைரம் பாய்ந்த கருநிற கட்டைகளில் சிறு துண்டு எடுத்து பால் மற்றும் நீரில் கழுவி பிறகு அதற்க்கு உரிய பூஜை முறைகள் தெரிந்தால் செய்து பின் வீட்டு பூஜை அறையில் வைக்கலாம் அல்லது சுத்தமான ஒரு இடத்தில் வீட்டில் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம்,கையில் சட்டை பையில் வைக்கலாம்.

🌳

ஏற்றுமதி முக்கியத்துவம் / சந்தைப்படுத்தல் வாய்ப்புகள்  





மிக பெரிய  தாவரவியல் பூங்காவின் கருங்காலி மற்றும் ரோஸ்வுட் நிபுணர் மடகாஸ்கர்  கருங்காலி   மர வர்த்தகத்தை "ஆப்பிரிக்காவின் இரத்த வைரங்களுக்கு  சமமானது"  என்கின்றார்.

நவீன பயன்பாடுகள்

சிலுவைகள், மற்றும் கறுப்பு பியானோ, ஆர்கன் (இசை) மற்றும் ஹார்ப்சிகார்ட் விசைகள், வயலின், வயோலா, மாண்டோலின், கிட்டார், டபுள் பாஸ் மற்றும் செலோ கைரேகைகள், டெயில்பீஸ்கள், ஆப்புகள், chinrests, மற்றும் வில் தவளைகள் இந்த கருப்பு மரத்திலிருந்து பல பிளெக்ட்ரம்கள் அல்லது கிட்டார் தேர்வுகள் தயாரிக்கப்படுகின்றன.

வரலாற்று ரீதியாக ஒரு பியானோவில் உள்ள கருப்பு விசைகள் கருங்காலி மற்றும் வெள்ளை விசைகள் தந்தங்களால் செய்யப்பட்டவை.

பாரம்பரியமாக, சதுரங்க செட்களில் உள்ள கருப்பு துண்டுகள் கருங்காலியில் இருந்து தயாரிக்கப்பட்டன. பாக்ஸ்வுட் அல்லது தந்தங்கள் வெள்ளை துண்டுகளுக்கு பயன்படுத்தப்பட்டன.

நவீன ஈஸ்ட் மிட்லாண்ட்ஸ்-பாணி சரிகை தயாரிக்கும் பாபின்கள், சிறியதாக இருப்பதால், அவை பெரும்பாலும் கருங்காலியால் ஆனவை மற்றும் பித்தளை அல்லது வெள்ளி கம்பி மூலம் பிணைக்கப்படும்போது அலங்காரமாக இருக்கும். 

அதன் வலிமை காரணமாக, பல கைத்துப்பாக்கி பிடிப்புகள் மற்றும் துப்பாக்கி முன்-முனை கருங்காலியால் செய்யப்பட்டவை. 

🚫 2012 ஆம் ஆண்டில் கிப்சன் கிட்டார் நிறுவனம் 1900 ஆம் ஆண்டின் லேசி சட்டத்தை மீறியதற்காக அமெரிக்க மீன் மற்றும் வனவிலங்கு சேவையால் சோதனை செய்யப்பட்டது, இது அச்சுறுத்தப்பட்ட வன விலங்குகள், மரங்களை  இறக்குமதி செய்வதைத் தடைசெய்கிறது. 

🌳

வேளாண் மேலாண்மை 

        விதை ,நாற்று, மண் காலநிலை  





மண் : வண்டல் மண் கலந்த மணல், மணற்பாங்கான மண், கரிசல் மண் மற்றும் செம்பொறை மண் ஆகியவற்றில் நன்கு வளரும். கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் : 900 – 1200 மீ உயரம் வரை வளரும்.

மண் pH : 6 மற்றும் 7

மழையளவு : 500 – 2000மி.மீ 

வெப்பநிலை : 37 – 43 டிகிரி செல்சியஸ் வரை தாங்கி வளரும்.

நிலப்பரப்பு : சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதி ஆகியவற்றில் நன்கு வளரும்.

மரப்பண்பு :

அதிக ஒளியை விரும்பும் மரமாகும். நிழலை தாங்கி வளரும் தன்மையற்றது. பனியை தாங்கி வளரக் கூடியது. மிதமான தீயை தாங்கி வளரக் கூடியது.

வளரியல்பு : இலையுதிர் மரம்

🌳

விதைகள் நாற்று

நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

இயற்கை முறையில் பெருக்கமடையக் கூடிய வீதம் சற்று குறைவாகவே இருக்கும். நன்கு வளர்ச்சியடைந்த மரங்களில் மறுதாம்பு மூலம் தழைத்து வளரக்கூடியது.

தகுந்த சூழ்நிலைகளிருப்பின் விதைகள் மூலம் பெருக்கமடையும் தன்மையுடையது. இது ஒரு எளிதான சிறந்த முறையாகும்.

இம்மரம் இளம் வயதிலிருந்து ஒவ்வொரு வருடமும் வளமான விதையை தரக்கூடியது. 

விதைகள் மரத்திலிருக்கும் பொழுது பூச்சிகளின் பாதிப்பு இருப்பதில்லை. எனவே விதைகள் மரத்திலிருக்கும் பொழுதே சேகரித்துக்கொள்ள வேண்டும்.

நெற்றானது நவம்பர் முதல் பிப்ரவரி மாத கால இடைவெளியில் முதிர்ச்சியடைகிறது.

முதிர்ந்த நெற்று சேகரிக்கப்பட்டு வெயிலில் உலர்த்தப்படுகிறது. உலர்த்தப்பட்ட நெற்றிலிருந்து விதைகள் தனியே பிரித்து எடுக்க வேண்டும். ஒரு கிலோ  எடையில் 4590 நெற்றுகளிருக்கும்.

நன்கு சுத்தம் செய்யப்பட்ட விதைகளை காற்று புகாத கொள்கலனில் அடைத்து வைக்கப்படுகிறது. 6-8 மாதங்கள் வரை விதைகளை முளைப்புத்திறன் குறையாமல் சேமிக்கலாம். ஒரு கிலோ எடையில் 40000 விதைகளிருக்கும்.

1 வருடம் வரை சேமித்து வைக்கப்படும் பொழுது விதை முளைப்புத்திறன் 5 – 17 சதவிகிதமிருக்கும். 2 வருடம் வரை சேமித்து வைக்கப்படும் பொழுது விதை முளைப்புத்திறன் 9 சதவிகிதமிருக்கும்.

ஒவ்வொரு தனி மரமும் 0.5 – 2 கிலோ விதைகளை உற்பத்தி செய்யக்கூடியது.

விதைப்பதற்கு முன் சல்பியூரிக் அமிலம் கொண்டு விதை நேர்த்தி செய்வதன் மூலம் விதை முளைப்புத்திறனை அதிகரிக்கலாம்.

கொதித்து ஆறிய நீரில் 6 மணி நேரம் அல்லது குளிர்ந்த நீரில் 24 மணி நேரம் ஊரவைத்து விதை நேர்த்தி செய்வதன் மூலம் விதை முளைப்புத்திறனை அதிகரிக்கலாம்.

பிப்ரவரி மற்றும் மார்ச் மாதகால இடைவெளியில் விதைப்பு செய்வது சிறந்ததாகும்.

நாற்றாங்கால் படுக்கை:

விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படவேண்டும். விதைகளானது 20 செ.மீ இடைவெளியில் விதைக்கப்பட  வேண்டும். ஒவ்வொரு வரிசைகளுக்கிடை

யேயான இடைவெளி 2 செ.மீ என இருக்க வேண்டும். 0.5 செ.மீ ஆழத்தில் விதைகள் விதைக்கப்பட வேண்டும்.

விதைக்கப்பட்டவுடன் பூவாளி கொண்டு தாய்பாத்திக்கு நீர் இறைக்க வேண்டும்.

விதைக்கப்பட்டதிலிருந்து ஒரு வாரத்தில் விதைகள் முளைக்கத்துவங்குகிறது. 3 வார முடிவில் அனைத்து விதைகளும் முளைத்துவிடுகிறது. விதை முளைப்புத்திறன் 70 – 80 சதவிகிதமாகும். 

மரக்கன்றுகள் நன்கு வளர்ந்த பிறகு 10 x 15 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பைகளில் மாற்ற வேண்டும்.

பாலித்தீன் பை மரக்கன்று:

22 x 9 செ.மீ அல்லது 23 x 13 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பையில் விதைகள் நேரடியாக விதைக்கப்படுகிறது.பாலித்தீன் பையில் 3:1 விகிதத்தில் மண் மற்றும் மக்கிய சாணத்தை கலந்து கலவையை நிறப்ப வேண்டும். நைட்ரோஜீனஸ் உரம் பைக்கு 2 கிராம் வீதம் மே – ஜுன்கால இடைவெளியில் 4 முறை இட வேண்டும்.

50 – 60 செ.மீ உயரம் வளர்ந்த அல்லது 3 – 4 மாதங்களான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது. ஜுலை மாத காலத்தில் நாற்றுகள் நடப்படுகிறது.

நடுகை 

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

பாலித்தீன் பை கன்று:

மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.நாற்றுகள் நடப்படுவதற்கு முன் குழிகளுக்கு நீர் இறைக்க வேண்டும்.

கர்னைகள் நடவு: 12-15 மாத வயதுடைய மரத்தில் இருந்து நாற்று குச்சி பெறப்படுகிறது.10 மி.மீ சுற்றளவு கொண்ட குச்சிகள் இம்முறை நடவு செய்யப்படுகிறது.பருவ மழை நின்றவுடன் இம்முறையில் நாற்றகள் உற்பத்தி செய்ய வேண்டும்

பசுந்தீவன நடவு: இம்முறை நடவிற்கு 5 x 5மீ இடைவெளி பின்பற்றப்படுகிறது.4 - 5 வருடங்கள் வரை கால்நடைகள் மற்றும் காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க வேலி அமைக்க வேண்டும்.

களையெடுத்தல் :

முதல் வருடம் - மூன்று முறை

இரண்டாம் வருடம் - இரண்டும முறை

நடப்பட்ட பண்ணையில் ஆகஸ்டு – செப்டம்பர் மாதகால இடைவெளியில் களையெடுத்தல் வேண்டும்.

பக்க கிளைகளை நீக்குதல்:

5 வருடமான மரத்திற்கு பக்க கிளைகளை நீக்க வேண்டும். அதன் பின் 10, 15, 20 மற்றும் 25ம் வருடங்களில் பக்க கிளைகளை நீக்க வேண்டும்

🌳

இன்று காடுகளில் உள்ள மரங்களை அழித்து கான்கிரீட் காடுகளாக மாற்றிக்கொண்டு வருகிறோம். இதனால் எதிர்கால சந்ததியினருக்கு நாம் கொடுப்பது பலமற்ற உடலையும், நோயும்தான்.

மரங்களின் மருத்துவப் பயன்கள் அளவற்றவை. எதிர்விளைவுகளை ஏற்படுத்தாதவை. இத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களில் கருங்காலி மரமும் ஒன்று.

கருங்காலி மர கன்றுகள் வனத்துறை நர்சரிகளில் உறுதியாக கிடைக்கும் மேலும் மற்ற நர்சரிகளில் கிடைக்கும் அல்லது சொல்லி வைத்தால் வாங்கி தருவார்கள்.

இந்த கன்றுகளை வாங்கி வீடு,தோட்டம்,பொது இடம்,கோவில் இவற்றில் வைத்து பராமாரிக்கலாம்.

கருங்காலி மரத்தின் வைரம் பாய்ந்த கருநிற கட்டை மற்றும் அதன் பொருள்கள்

மரம் அறுவை ஆலை அல்லது மர சேமிப்பு ஆலைகளில் கிடைக்கும்,அவர்களிடம்  கருகாலி(நாட்டு மரம்) வேண்டும் என்று கேளுங்கள்,இல்லை என்றால் வரும் போது தகவல் தர சொல்லுங்கள்,சதுராஅடி அல்லது எடை கணக்கில் தருவார்கள்













கருங்காலியினால் செய்யப்படும் பயன்பாட்டு  பொருட்கள் படத்தில் பாருங்கள்.

https://www.facebook.com/100000786292216/posts/3484256921610483/?d=n

1 கருத்து:

  1. அன்பின் அக்கா...
    நலமா?
    முகநூல் மற்றும் வாட்ஸப் அரட்டையில் உங்களைக் காண முடியாதவாறு, தொடர்பு கொள்ளாதவாறு எங்கே போனீர்கள்..?
    உடல் நலம் எப்படியிருக்கிறது..? உடல் நலம் பாருங்கள்...

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!