11 டிசம்பர் 2020

முதலீடு இல்லாமலே ஏற்படுத்த கூடிய சிறிய தொழில் முயற்சிகள்..!








🌺 சிறிய கைத்தொழில் முயற்சி மற்றவர்களை உங்களை நோக்கி திரும்பிப்பார்க்க வைக்கும்....! 

🌺 உற்பத்தியை ஊக்குவிப்பதால் வறுமையை மாற்ற முடியும்....! 

என்கின்றார்கள் இரண்டு இளம் தொழில் முனைவோர்களான குட்டிஸ்.இந்த குட்டிப்பையன்களை முன் நிறுத்தி வறுமையை வென்றெடுக்கும் செயல் முறை திட்டத்தில் வெற்றி  பெற்றிருக்கும்     Forehead Eye தரவுகளின் அடிப்படையில் இந்த பதிவை தொகுத்திருக்கின்றேன். 

முதலீடு இல்லாமலே ஏற்படுத்த கூடிய சிறிய தொழில் முயற்சிகள்

🌺 பனை சார்ந்த உற்பத்திகள் 

🌺.தெங்கு சார்ந்த உற்பத்திகள் 

🌺 பிரம்பு சார்ந்த உற்பத்திகள்

🌺 பன்புல் சார்ந்த உற்பத்திகள்

🌺 மூங்கில் சார்ந்த உற்பத்தி பொருட்கள்அதிக முதலீடு இல்லாத  வருமானங்களை தரக்கூடிய தொழில்கள் பல உள்ளன,

பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றாக இவ்வாறான உற்பத்திகள் தேவை அதிகரித்து வருகின்றன.  

ஆற்றங்கரை ஓரங்கள் குளக்கரைகள் பிரம்புச்செடி பன்புல்,மூங்கில் வளர்க்க திட்டமிடலாம்.இதன் மூலம் உங்கள் ஊரின் குளங்கள் ஆறுகளை அழகாக்கி  தூய்மைப்படுத்தலாம்.

ஒரு சிறிய உதாரணம்

இலங்கையில் வாழும் ஒரு ஏழைக்குடும்பத்தின் அன்றாட வாழ்வாதாரத்துக்கான வரவு செலவு.......!

ஆறு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவிற்கு  

இப்போதைய விலையில் / இலங்கை ரூபாய் 

அரிசி, மற்றும் மா, 480/- 

கறிச்செலவு 600/- 

தேனீர் செலவு 200/- 

நாளொன்றுக்கு 1280/- தேவைப்படும்.

விறகு  வெட்டி பிழைக்கும் ஒருவருக்கு  ஒருமாத வருமானம் ஆகக்குறைந்தது 39,000/- கிடைக்கின்றது என்றால்  அவருக்கான தேனீர் மற்றும் போக்குவரத்து செலவு ஒரு நாளைக்கு 300/- வீதம் மாதம் 9,000/- தேவைப்படும். 

அவர் நாளொன்றுக்கு ஆயிரம் ரூபா வீதம் ஒரு மாதம் 30,000/- வருமானத்தை பெறுகின்றார். மூன்று வேளை உணவு உண்ண  1280/- ரூபாய் செலவு செய்தால் தான் முடியும் என்ற நிலையில் அவரின் ஒரு நாள் வருமானம் ஆயிரம். தினமும்  280/- பற்றாக்குறை நிலவும். 

இதனிடையில் மது அருந்தும் அல்லது புகைத்தல் பழக்கமுடைய  ஒரு குடும்பத்தலைவன் எனில் 700/-அளவிலான பணம் மதுவிற்காக செலவிடப்படும். மிகுதி 300/- மட்டுமே குடும்ப செலவுக்கு கொடுப்பார்.

ஏற்கனவே காணப்பட்ட பற்றாக்குறை 280/-இதில் 700/- மதுவிற்காக சேரும் போது 980/-  ரூபாய்கள் தினமும் சாப்பாட்டுக்கே பற்றாக்குறை ஏற்படும். அந்தக்குடும்பம் கொடிய வறுமைக்குள் அகப்படும்.

▪️ பிள்ளைகள் தெருவில் கையேந்தி நிற்கும் நிலை ஏற்படும். 

▪️ சாதாரண ஏழைக்குடும்பங்கள் செலவை குறைப்பதெனில் ஒரு வேளை உணவையோ அல்லது  இரு வேளை உணவையோ, குறைக்க நேரிடும்.

▪️ தேவைகள் அதிகமாக இருக்கும் போது,வரவு குறைவாக இருக்குமானால்  எந்த தேவைகளும் முழுமைபெறாமல் வறுமையும் ஏழ்மையும் மன உளைச்சலும் ஏற்படும். 

▪️ சில குடும்பங்கள் தேவைகளை நிறைவு செய்யும் வகையிலோ, அல்லது திட்டமிடப்படாத தொழில்முயற்சிகளில் ஈடுபடும் நிலையிலோ, கடன் பெற்று மீளச்செலுத்த இயலாத நிலையில் தற்கொலை வரை சென்றுள்ளதையும் காணமுடிகிறது.

ஒரு குடும்பத்தின் நிதி, நிருவாகம் உணவு, உடை, மருத்துவம், கல்வி, சுகாதாரம், மின்சாரம், எரிபொருள், போக்குவரத்துக்கு, பொழுதுபோக்கு, அலங்கார பொருட்கள்,பாதுகாப்பு, வழிபாடு,

மது மற்றும் புகைத்தல்,என மிக நீண்ட பட்டியல் இருக்கும்.வருமானம் உள்ள குடும்பம்,அல்லது வருமானம் குறைந்த அல்லது வருமானமற்ற குடும்பம் என்று இருக்காது  ஒவ்வொரு குடும்பத்திலும் தவிர்க்க இயலாத செலவினமாக இருக்கும்.

அப்படியாயின் இதிலிருந்து மீள்வது எப்படி?

நீங்கள் முன்னேற வேண்டுமாயின் உங்களின் குடும்ப நிர்வாக ஒழுங்கினை மேம்பத்திக்கொள்ள வேண்டும்.உங்கள் நாளாந்த வருமானத்தில் இருந்து செலவுகளை வரையறை செய்யுங்கள்.

1.சுகாதார பழக்கத்தை கடைப்பிடிப்ப தாலும் இயற்கை உணவுமுறை பழக்கத்தை ஏற்படுத்துவதாலும் மருத்துவ செலவுகளை  தவிர்க்க அல்லது இல்லாது செய்யலாம்.

2.மின்சார பாவனையை கட்டுப்படுத்தி பணத்தை மீதப்படுத்தலாம்.

3.மதுப்பழக்கம் புகைத்தல் என்பவற்றை தவிர்க்கலாம்.

4. பொழுபோக்கு சாதனங்களை தவிர்க்கலாம்.

5. அலங்கார பொருட்களை குறைக்கலாம்.

6. மேலே உள்ள செலவுகளில் கறிச்செலவு 600/- எனில் ஒரு சிறிய வீட்டுத்தோட்டம்  400/- செலவை மீதப்படுத்தும். 

7. வீண் விரயங்களை தவிர்க்க வேண்டும்

8. நீங்கள் நாளாந்த வரவு செலவு கணக்கு ஒன்றை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஆரம்பத்தில் பற்றாக்குறைய நிவர்த்திக்க உதவும் வீட்டுத்தோட்டம்.படிப்படியாக உங்களுக்கு சிறிய வருமானத்தையும் கொடுக்கும்.இது உங்களுக்கு புதிய உற்சாகத்தை தரும். உங்களை  தற்காத்துக்கொள்ள சிறிய நல்லதொரு முயற்சி இதுவாகும்.

சிறுவர்கள் சிறுவயதிலேயே வரவு செலவு கணக்குகளை பார்க்கவும் கற்றுக்கொடுக்க வேண்டும்.ஒவ்வொரு பிள்ளையும் தனது குடும்ப வறுமான நிலையை உணரும்போது

பொறுப்பான பிள்ளைகளாக மாற வாய்ப்பு ஏற்படும்.

குடும்ப  அங்கத்தவர்கள் இணைந்து அநாவசிய பொழுது போக்கினை தவிர்த்து உங்களுடைய நேரங்களை பெறுமதி மிக்கதாக மாற்றிக்கொள்லலாம்.

உங்கள் குடும்ப அங்கத்தவர்களோடு மனம் விட்டு பேசுங்கள் புதிய தொழில் முயற்சியிகள் பற்றி புதிய முதலீடு அற்ற தொழில் வாய்ப்புகள் பற்றி,வறுமையில் விடுபடும் வழிகள் பற்றி பேசுங்கள். முடிவெடுங்கள்.

 அன்றாடம் வருமானம் பெறக்கூடிய  சிறிய கைத்தொழில் முயற்சி ஒன்றை ஏற்படுத்த முயற்சியுங்கள்.நாம் வெற்றியடைய வேண்டுமெனில் நம்மில் நாம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.நம்மிடையே அபிவிருத்திக்கான அத்திவாரம் இடவேண்டும்.









https://www.facebook.com/100000786292216/posts/3477645745604934/?d=n



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!