13 டிசம்பர் 2020

Sustainable Development Goal - 2 நிலையான அபிவிருத்தி இலக்கு

Awareness, pre-warning

விழிப்புணர்வு,முன் எச்சரிக்கை 

மூன்று சம்பவம் 

ஒன்று : 2015  எங்கள் பக்கம் நூறு வருடங்களுக்கு பின் கடும் வெள்ளம். ஆறுகள் நிரம்பி, வீடுகளின் நிலவறைக்குள் எல்லாம் தண்ணீர். பாலங்கள்  நிறைந்து பலமிழந்து வாகனங்கள் தடை  செய்யப்படடன. பல கோடி மில்லியன் Fr அழிவு. 

அம்மா நம்ம வீட்டுக்குள் சுனாமி வருது எங்கள் வீட்டு பால்கனி கதவுகளை இழுத்து முடுங்கோ என்று அன்றைய  மழைக்கு என் மகன்  வர்ணனை  செய்தான். 2004 டிசம்பர் சுனாமி அத்தனை ஆழமாக அவனுள் பதிவாகி இருந்தது. 

மலையிலிருந்து தொடர்ந்து மழை எப்போதும் அணை உடையும். பாலம் உடையும் என ஊடகங்கள், பத்திரிக்கை வானொலிகள் எச்சரித்து  கொண்டிருந்தன. 

நாங்கள் வேலை செய்யும் நண்பர்கள்  20 பேர்  ஒரு தோழி வீட்டில் விருந்து. பாதி விருந்தில் அணை உடைந்தது என பக்கத்து  வீட்டிலிருந்து சொல்ல .. அப்படியே போட்டது போட்டபடி ... ஓட்டம். 

எனக்கு பிள்ளைகளை விட்டு விட்டு  வந்த பதட்டம் ( 4 & 7 வயதுகள் ) பாலங்கள் கடந்து மேட்டில் என் வீடு. எப்படி வீட்டுக்கு போவது என்று அழுது கொண்டிருந்த என்னை  இழுத்து கொண்டு  ரோட்டுக்கு வந்து சிக்னலுக்கு நின்ற காரின் சொந்தக்காரரிடம் கேட்காமல் ஏறி  உட்கார்ந்து விட்டாள் தோழி. பாதி வழி கார்.. மீது நடை என்று வீட்டுக்கு போனேன்.

அன்று அணை உடையவில்லை. அது உடையவே இல்லை.  நீர்  நிறைந்து விட்டால் என்ன நடக்கும் என்று எங்களுக்கு உணர்த்தப்பட்ட்து. ஆனால் அதிக நீர் அழுத்தம் பாலங்களை பலமற்றதாக்கி இருந்தது. மழை தொடர்ந்தால் எதுவும் நடக்கலாம் எனும் நிலை இருந்தது. கடைகளுக்கு சரக்கு கொண்டு வரும்  கனரக வாகனங்கள் தடை செய்தார்கள். 

அடுத்து வந்த  மாதங்கள் முழுதும் பகுதி பகுதியாக வடிகான்கள், பாலங்கள், பாதைகள் விரிவு படுத்தப்பட்டு வெள்ளம் தேங்காதபடி நீர் ஓடும் வழிகளை செம்மை படுத்தினார்கள். ஆறு மாதங்களுக்கும் மேல் பாதைகளை அடைத்து  வாகனத்தில் ஒரு நிமிடத்தில் கடக்க வேண்டிய பாலம் தடை  செய்து  மூன்று கிலோ மீற்றர்கள்  சுத்தி வந்தோம். 

இது மக்களுக்கானது..! 

இரண்டு : பிரான்ஸ் நீஸ் தீவிர வாத தாக்குதல் தொடர்ந்து சுவிஸில் சில இடங்களில் முக்கியமாக  பிரதான புகையிரத நிலையத்தில் தீவிரவாதிகள் நுழைவு, குண்டு வெடிப்பு ..  நள்ளிரவில் வாகனங்கள் கடும் சோதனை 

மூன்று: ஆறுமணிக்கு மேல்  தனியே வெளியில் திரியும் சிறுவர்களை கடத்தி செல்கின்றார்கள் என்று  பள்ளிகளில் பரப்பப்பட்டு  யார் அந்த மர்ம மனிதர் என  பதட்டப்படுத்தி ஒரு தற்காப்பு பயிற்சி.முதல் ஒரு வாரம் பயத்தில் ஆறு மணிக்கு முன் வீட்டுக்குள் வந்த பிள்ளைகள் அடுத்த வாரம் நான்கைந்து பேர் வெளியில் செல்ல யாரோ  முகமூடிஸோடு  அவர்களில் ஒருவரை பிடிக்க வர இவர்கள் பயப்படாமல் அவனை துரத்த ...

மிகைப்படுத்தல் ..  தான்..! 

அந்தந்த நேரம் மக்களுக்கு  விழிப்புணர்வு,தற்பாதுகாப்பு, முன்னேற்பாட்டுக்கு  நல்லது செய்யும் என்றால் 

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்  „“ 

 சந்தர்ப்பம் சூழ்நிலைகள் சரியானதை தவறு என்பது போல் தவறொன்றை சரியென நம்ப  வைக்கும். எமது சமூகத்தின் மனநிலை அப்படி..! சில சம்பவங்களுக்கு  மிகைப்படுத்தல் நாட்டுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விழிப்புணர்வு உருவாக்குகின்றது. 

நடக்காதவைகளை நடந்தது, நடக்கவில்லை எனும்   நிறுவுவதை விட நிரூபிக்க எடுக்கும் நேரத்தை  இப்படி ஒரு சம்பவம் எமக்கும் நடக்கலாம்.. எச்சரிக்கை உணர்வு...தனி நபர்  சிந்தனைக்குள் சிறந்த  விழிப்புணர்வை உருவாக்கும். 

ஒரு கொலை, தற்கொலை நடந்தால் அது எப்படி நடந்திருக்கும் எனும் கற்பனைகளும், விபரங்களும் மிகைப்படுத்தப்படுவது  ஆபத்தான பின் விளைவுகளை உருவாக்கும் என்பதால்  சுவிஸ்  போன்ற வளர்ந்த நாடுகளில் இவ்வாறான செய்திகளை பகிர்வதற்கு  ஊடகங்களும்  கட்டுப்பாட்டுடன் செயல் படும். பல சம்பவங்கள் பக்கத்து வீட்டுக்கும் தெரியாமல் இருக்கும். காவல் துறை,குற்றப்புலனாய்வு நிர்வாகம்  உட்பட சம்மந்தப்பட்ட அனைவரும்  அடக்கி ஆளுகை.செய்வார்கள். காரணம் மனிதர்களில் உளவியல் சார்ந்தது. 

எங்கள் சமூகத்தில்  நடப்பது என்ன? 

மிகைப்படுத்த  வேண்டியவைகளை  அரசியல் அதிகார விருப்பு வெறுப்பு டன்  அணுகுவதும், அடக்கி ஒடுக்க வேண்டியதை சமூகத்துக்கு தீமைகளை பகிர்ந்து பரபரப்பு உருவாக்கி தவறுகளுக்கு துணை செய்கின்றோம்.

உலகத்தில் எல்லா நாடுகளிலும் இயற்கை கால நிலை மாறுகின்றது. ஆனாலும் சில பகுதிகளில் வெள்ளம் புயல் அதிக அழிவு தருகின்றது. சில பகுதிகளில் தகுந்த முன்னேற்பாடு உயிர் பொருள் இழப்புகளை தடுக்கின்றது. 

எங்கள் பகுதியில் சில நேரம்  பெரிய  அலாரம் அடிக்கும். இராணுவ முகாம், தீயணைப்பு என்று மக்கள் எவ்வாறு ஆயத்தமாக இருக்கின்றார்கள் என்றும் சில சோதனைகள் ...  குடி நீர் நிறுத்துவார்கள், (  திருத்த வேலை முன் அறிவித்து செய்தாலும் )  மின்சாரம் நிறுத்தி  

எதுவும் நடக்காது  எனும் நம்பிக்கை தருவதை விட இப்படியும்  நடக்கலாம் எனும் உணர்த்தல் பல நன்மைகளை உருவாக்குகின்றது.

மக்கள் சமூக விழிப்புணர்வுக்கு பிழைப்படுத்தலும் , மக்கள் சமூக நலன்கள் சார்ந்து கட்டுப்பாடுகளும் மக்கள் சமூக செயல்பாடுகளில் நெகட்டிவ் விமர்சனங்களை அல்ட்சியப்படுத்தவும் பக்குவப்பட்ட சமூகம் நோக்கி முன் செல்லுகின்றது.

💥💥

வெள்ளம் ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகளில் சமூக ஆயத்தத்தின் தாக்கம் 

தொழில்நுட்ப முன்கணிப்பு மற்றும் எச்சரிக்கை திறன்கள் குறைவாக இருக்கும் சூழ்நிலைகளில். மேலும், சமூக தயார்நிலையை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் முயற்சிகள் பேரழிவால் தூண்டப்படும் இழப்புகளை கிட்டத்தட்ட ஒரு பாதியில் குறைக்க உதவும்.

சமூக தயார்நிலை, குறிப்பாக, ஆபத்து பற்றிய விழிப்புணர்வு, வெள்ள அனுபவத்தின் பின்னடைவு memory நினைவகம் தொடர்பானது. அதிகாரிகள் மீதான நம்பிக்கை, அல்லது சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான தொடர்புகள் போன்ற மனித நடத்தை பண்புகளால் வலுவாக பாதிக்கப்படுகிறது

கூடுதலாக, திறமையான இடர் குறைப்பு சேவைகள் இருக்கும்போது சமூக விலகல், பொறுப்புகள், செயல்திறன் குறைப்பு நடவடிக்கைகளின் செலவுகள், அல்லது ஊடகங்கள்,அபாயகரமான தன்மை மற்றும் தனிப்பட்ட மறுப்பு ஆகியவை வெள்ள தணிப்பு நடத்தையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆய்வு அறிக்கை யில்   

 சுவிஸ் சூரிச் யுனிவசிட்டி குறிப்பிடுகின்றது.

முதல் நிலையான அபிவிருத்தி இலக்கு - வறுமையை முடிவுக்குக் கொண்டுவருதல். 

First Sustainable Development Goal - End Poverty. 

பேசுவோம்..!

Nishanthi

12.12.2020

https://www.facebook.com/100000786292216/posts/3482293218473520/?d=n 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!