23 அக்டோபர் 2020

பெண்களுக்கு ஆண் துணை வேண்டும்.,!

 ""பெண்களுக்கு ஆண் துணை வேண்டும். சிங்கிள் மதராக இருப்பது எளிதான விஷய்ம் இல்லை“  வனிதா

ஆணோ, பெண்ணோ தனித்து வாழ்ந்து சாதித்தவர்கள் அநேகர் தான். அதெல்லாம் அவரவர் வாழும் சூழலை பொறுத்தது. 

கணவன் எனும் பெயரில் ஒருவர் இருந்தும் இல்லாமல் நேர்மையாக நிமிர்ந்து வாழ்ந்து , உழைத்து தன்னையும், தன் பிள்ளைகளையும் பாதுகாத்து, படிக்க வைக்கும்  பெண்களை என்ன சொல்விர்கள்? 

எப்போதும் மேல் தட்டு பணக்கார செலிபிறட்டி  சமூகத்தை வைத்து  நிஜ உலகு குறித்து முடிவுக்கு வர முடியாது. வரவும் கூடாதுங்க..! 

பெண்களுக்கு துணை என்பது ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் தான். அதுக்கு பின் அவங்களே பக்குவப்பட்டு விடுவார்கள். ஆண்கள் இளவயது  திமிரில் துணை வேண்டாம் என்பர், வயது போன பின்பு யோசிப்பார்கள். 

அதே போல் ஒரு பெண்ணுக்கு துணை என்பது கணவனாக  மட்டும் இல்ல.. மகன், பேரன், நண்பன், அண்ணன் தம்பி சகோதர உறவில் கிடைக்கும் பாசம், கொஞ்சம் அக்கறை கூட போதுமாக இருக்கும். ஆனால் ஆண்களால் அது முடியாது. 

இன்றைய சூழலில் பலர் ஒரே வீட்டில் மனதாலும், உடலாலும் பிரிந்து குடும்பம், கௌரவம் என்று வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். 

சேர்ந்து வாழ்வோர் பிரிந்து வாழ, பிரிந்து வாழ்வோர் சேர்ந்து வாழ ஆசை படுவது தான்யதார்த்த நிலை ( அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை ) 

அவ்வளவு தான்..! 

அப்படியே இதையும் பாருங்கோ..வனிதா பெண்ணிய வாதியும் இல்லை. சிங்க பெண்ணும் இல்ல..!

 ஏமாந்து போவது.. ! 

நமக்கான நம்பிக்கை துரோகங்கள் தானே ஏமாற்றத்தை தரும்? 

ஒரு பெண் ஏமாந்து போனாள் என்றால் அது அவள் அறியாமல் செய்யும் ஒரு விடயத்தில் நம்பிக்கை பொய்த்து போகும் போது தானே? நம் எதிர்பார்ப்பு, அன்பு நம்பிக்கை பொய்க்கும் என்றே தெரிந்து கண்ணை மூடி கொண்டு செயல்பட்டு அதன்  பின்  வரும் விளைவுக்கு பெயர் ஏமாற்றம் இல்லை.

வனிதா விடயத்தில் அவ தெரிந்து செய்யும் அத்துமீறல்களை ஏமாற்றம் என்று சொல்ல முடியுமா? தெரிந்து தானே தனக்கு பப்ளிசிட்டி தேடி கொள்கின்றாள்?  

திருமணம் என்றொரு வீடியோ... என்ன நடக்குது என்று அறிய அதை பார்த்து தொலைத்தேன். அது சர்ச் வெட்டிங் இல்லை, அவங்க வீட்டில் செய்தாங்க.. இது பொம்மை கல்யாணம் என்று தான் உடனே நான் யோசித்தேன்.. அதுக்கேற்றது போல் அடுத்த நாளே அது லீகல் இல்லை. இல்லீகல்.. எங்க திருப்திக்கு செய்தது ( முதல் மனைவியை உரசி பார்க்கும் திட்டம்) என்று அறிக்கை விடடார். 

அன்று இல்லீகல் என்று சொன்ன பிறகும் என் ஏமாற்றம் வரணும்?

முதலில் அவள் எதை தேடுகின்றாள்? 

அவள் தேடலின் விளைவு இன்னொரு பெண் பாதிக்கப்படும் நிலையில் யார் இங்கே பரிதாபத்துக்கு உரியவர்? 

                      "பெண்களுக்கு ஆண் துணை வேண்டும். சிங்கிள் மதராக இருப்பது எளிதான விஷய்ம் இல்லை. என் மகளுக்கு அப்பா வேண்டும். தினமும் அவள் வாழ்க்கையில் சந்தித்து, அவளோடு வாழும்படியான ஒரு தந்தை வேண்டும். அது இல்லாததால் டாடி இஷ்யூஸ் வருகிறது. எனக்கே இந்த வயதில் அப்படி அப்பா இல்லாததால் தான் இப்படி பீட்டர் பாலிடம் போய் விழுந்தேன்" - வனிதா 

                        ஏற்கனவே திருமணமான ஒருவன், அந்த பெண்ணுக்கு உண்மை இல்லாதவன் இவைக்கு மட்டும் உண்மையாக இருப்பான் என நம்புவது யார் தவறு? அந்த முதல் மனைவி நிலை என்ன?  அவளும் பெண் தானே?  

இவர்கள் போல் பெண்ணுங்க இன்னொரு பெண்ணுக்கு, குழந்தைக்கு செய்யும் ஏமாற்றம் அநீதிக்கு யார் வீடியோ விடுவது? 

தன்னை பற்றி மட்டும் சிந்திக்கும் பெண். தன் குழந்தைங்க மன நிலை குறித்து யோசிக்க வேண்டாமா? 

அந்த பெண்குழந்தைகள் இவரின் செய்கையில் எத்தனை அவமானங்களை எதிர்கொள்ளுமோ? யாருக்கு தெரியும்? 

இத்தனை வயதுக்கு பின் அந்த டீன் ஏஜ் பெண்களுக்கு இன்னொரு அந்நிய ஆண் அப்பாவாக மாற முடியுமா?  இல்ல அவனுக்கு தான் அந்த பிள்ளைகளை தன் பெண் குழந்தை எனும் பாசம் வருமா?

அப்பா இருந்தால் இதெல்லாம் நடக்காது என்கின்றார் பாருங்கோ. அங்கே தான் இந்த வனிதாவின் கெட்டித்தனம் இருக்குது. எல்லோரையும் நல்ல ஞாபக மறதி கேஸ் என்று நினைத்து கொண்டாள்.அவள் என்ன அள்ளி விட்டாலும் பாவம் பரிதாபம் என்று இல்லை திட்டி தீர்த்தும் தனக்கு வருமானம் தேடி தருவாங்க என்ற நம்பிக்கையை எல்லோரும் காப்பாத்தி இருக்கீங்க.( உங்களுக்காக geogle  ல் தேடினேன். Comment link  உறுதி படுத்தி கொள்ளுங்கோ) 

அப்பா இருந்தால் இதெல்லாம் நடக்காது என்கின்றார். ஆனால் அவர்கள் அப்பா இருந்த போது அப்பாவை மதித்தது இல்லை.

அப்போதும் பெற்றோர் பற்றி கண்டபடி பேசி அவமானப்படுத்தினர் என்பது என் நினைவு. 

பெற்றோரையும், கூட பிறந்தவர்களையும் மிக கேவலமாக பேசி குடும்பத்தை சந்தி சிரிக்க வைத்தார் என்று அதுவும் இதே மீடியாவில் தான் விவகாரமானது. 

இது இன்னும் எத்தனை காலத்திக்கு....! உடலில் அழகும்,கவர்ச்சியம்  இருக்கும் வரை தானே எல்லாம்? 

அப்புறம்..? 

இங்கே பலர் ( முக்கியமாக பெண்கள், அதுக்கு 100, 1000 க்கணக்கில் லைக் வேறு )  அவவின் தைரியத்தை பாராட்டி ஆதரவு தந்து எழுதும் அளவுக்கு வனிதா பெண்ணிய வாதியும் இல்லை. சிங்க பெண்ணும் இல்ல. நல்ல முன் மாதிரியும் இல்லை. 

வனிதா நல்ல வியாபாரி...! 

வனிதா தான் செய்யும் பிழைகளை  மறைத்து தனக்கு  சார்பாக பேசி பரிதாபம் அல்லது அவமானம்  ரெண்டிலும் காசு சம்பாதிக்க தெரிந்து கொண்ட நல்ல வியாபாரி. தன்னை மூலதனமாக்கி சம்பாதிக்க தெரிந்த யதார்த்தவாதி. அவர் வளர்ந்த, வாழ்ந்த சூழலில் அது தான் அவருக்கு தெரியும். இது தான் முடியும். 

இதை கணவனை இழந்து அல்லது பிரிந்து வாழும் சாதாரண பெண் தானும் தன் பிள்ளைகளும் உயிர் வாழனும் எனும் நிலையில்  பிழைக்க வேறு வழி இன்றி  செய்தால் அவளுக்கு எங்கள் சமூகம் கொடுக்கும் பெயர் வேறு . 

தன்னம்பிக்கையோடும் ஆளுமையோடும் வாழும் ஏழைப்பெண்ணுக்கு ஒரு நீதி.. இம்மாதிரி உடல்  அழகை மூலதனமாக்கும் பெண்களுக்கு ஒரு நீதி. 

மாற வேண்டியது அவள் அல்ல ., எங்கள் சமூகத்தின் சிந்தனை.

எனக்கு இந்த டாப்பிக்கே எழுதும் இஷ்டம் இல்லை. ஆனால் நம்ம பெண்ணுங்க பலருக்கே பல புரியல்ல எனும் போது பேசிதானே ஆகணும்.

வனிதா பெண்ணிய வாதியும் இல்லை. சிங்க பெண்ணும் இல்ல


18 அக்டோபர் 2020


 பிரிவு என்பது காயம் 

யாராலும் குணப்படுத்த முடியாது. 


நினைவுகள் என்பது பரிசு 

யாராலும் திருட முடியாது. 


உணர்வு என்பது உயிர்ப்பு 

யாராலும் பிரிக்க முடியாது 


மனம் ஒரு குரங்கு 

தாவிக்  கொண்டே இருக்கும்


உறவு என்பது  வடு 

எவருமே  நிரந்தரம் இல்லை


வாழ்க்கை என்பது அனுபவம் 

அதை வாழ்ந்து தான் உணரணும்


இறப்பு தருவது நிம்மதி 

அனைத்திலிருந்தும்  விடுதலை

{( நிம்மதி) உண்மையா என்று எனக்கு தெரியல்ல🙄  உங்களுக்கு தெரியுமா.,? }


17 அக்டோபர் 2020

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'..!

 “  பசித்தவனுக்கு தொடர்ந்து மீன்  பிடித்து கொடுப்பதை  விட  மீன் பிடிக்க கற்று கொடு” 

மீன் பிடிக்க கற்று கொடுத்து விட்டால் போதாது.. ..மீன் பிடிக்கும் உபகரணம்  பெற்றும் கொடுக்க வேண்டும்..! 

மீன் பிடிக்க உபகரணமும், அறிவும் போதுமா.. ? 

இல்லை! 

மீன் பிடிக்க கூடிய  சூழல் வேண்டும்..! 

மீன் கிடைக்கும் எனும் நம்பிக்கையும், பொறுமையும், விடாமுயற்சியும் வேண்டும்..! 

( ஆறு, கடல், குளம் போன்ற நீர் நிலைகள் இல்லாத இடத்தில மீன் பிடிக்க மட்டும் தெரிந்திருப்பது பயனற்று போகும்) 

எங்கள் ஈழத்தமிழ் சமூகத்தின் மீட்சிதிட்டங்களுக்கு இவ்வாறான ஒருங்கிணைந்த ஒரு முனைப்பு தேவை. 

நாம் செய்யும் உதவிகள் தற்காலிகமானதாக இல்லாமல் நீண்டகால தூர நோக்கத்தில் எங்கள் தமிழ் சமூகத்தை தெளிவும், உறுதியுடனும் மீட்சி படுத்துவதாக இருக்க வேண்டும் என்று பல வருடங்களாக திட்டமிட்டு சிறுவர் கல்வி மேம்பாடு எனும் இலக்கில் கடந்த வருடம் மட்டக்களப்பில்  சில முன்னேற்பாடுகளை எடுத்திருந்தேன். 

இவ்வருடம் இலங்கை சென்று நேரில் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஆரம்பிக்கும்  திட்டம் இருந்தது. எனது உடல் நிலை மற்றும் கொரோனா வைரஸ் lockdown  காரணமாக எதையும் செயல் படுத்த முடியாத நிலையில் ... இன்னும் ஒரு வருடங்களும் அதற்கு மேலும் காலத்தை விரயமாக்கி  காத்திருப்பதை விட

வடக்கு,கிழக்கு,மலையக தமிழ் மக்களின் 

கல்வி தரத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஐந்து வருடங்களாக ஏதிர்கால இளையோர் சமூகத்தின் கல்வியின் முக்கியத்துவம் உணர்த்தும் பணியில்  E-Kalvi Charity Inc.

அமைப்புடன் இணைந்து மட்டக்களப்பில் கிராமத்து பள்ளி ஒன்றின் (களுமுந்தன் வெளி ) இலவச கற்பித்தல் வகுப்புகளுக்கான  வருடாந்த செலவுகளை முழுமையாக பொறுப்பெடுத்து இருக்கின்றேன்.  

அங்கும்,இங்கும், எங்கும் என்று அலை பாயாமல் இனி வரும் காலங்களில் என் முழு கவனத்தையும் எங்கள் பிள்ளைகளின் கல்விக்கான பணியில்  செலுத்தி  மட்டக்களப்பில் இன்னும் பல  திட்டங்களை உருவாக்க வேண்டும். 

எமது  ஈழத்து சமூகத்தின் கல்வி மீட்சிக்காக

🔹 வகுப்பறை 

🔹 இணைய, மின்சார இணைப்பு வசதி, 

🔹 லப்டப், ப்ரொஜெக்ட்டர்கள் போன்ற முன்னேற்பாடுகளும், 

🔹 சமூக பற்றும், திறமையும் கொண்ட ஆசிரியர்கள் 

🔹 பள்ளி அதிபதின் ஒத்துழைப்பு 

புலம் பெயர்ந்து வசதி வாய்ப்போடு வாழும் நாங்கள் எமது உதவிகளை கடலில் கரைத்து விடும் பெருங்காயம் போல்  பத்தோடு பதினொன்று என்று  தொடராமல்  சிதைந்து சின்னாபின்னமாகி இருக்கும் எங்கள் பள்ளி மாணவர்களின் கல்வி    மேம்படுத்தும் சவால் மிக்க பணியில் ஒரு பள்ளியை பொறுப்பில் எடுத்து அதன் வளர்ச்சிக்கு உதவி செய்யலாமே ..? 

நீங்கள் படித்த பள்ளியின் தற்போதைய கல்வி தரம் எப்படி இருக்கின்றது? உங்கள், எங்கள் ஊர் பள்ளி மாணவர்கள் கல்வி தரம் மேம்பட  நீங்களும் எங்களுடன் இணைந்து கொள்ளலாமே ..! வாய்ப்பை ஏற்படுத்தி தந்தமைக்கு நன்றி  Kumaravelu Ganesan நீண்ட காலம் கிட்ட தட்ட இரண்டுக்கும் மேற்பட்ட வருடங்கள் அவதானித்து தனி மனித விருப்பு வெறுப்புக்களை கடந்து சமுகப்பணிகளை முன்னெடுத்து செல்லும் அர்ப்பணிப்பும், சமூக அக்கறையும், மனித நேயமும் கொண்ட உங்களுடன் தொடர்ந்து பயணிப்பதில் மகிழ்ச்சி ஐயா. 

சாரிட்டி அறிமுகம் தந்தமைக்கு நன்றி Yoga Valavan Thiya ஐயா. 

இப்பதிவுக்கான நோக்கம் ... விருது, விருந்து, பாராட்டு, பெருமைக்கானது அல்ல..!  இது போல் நீங்களும் ஒரு பள்ளியின் முன்னேற்றத்தில் அக்கறை கொள்வீர்கள் எனும் நம்பிக்கைக்கானது.

'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்

ஆலயம் பதினாயிரம் நாட்டல்

பின்னருள்ள தருமங்கள் யாவும்

பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்

அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'

நன்றி ❣️

#ஆல்ப்ஸ்தென்றல்நிஷா

16 அக்டோபர் 2020

France & Uk அவசரகால நிலை பிரகடனம்!

 France 🇫🇷 

UK ( லண்டன் ) 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿

கொரோனாவைரஸ் பரம்பலின் இரண்டாவது அலை தீவிரமாவதை தொடர்ந்து  அவசரகால நிலை பிரகடனம்!

🔹 France 🇫🇷  சனிக்கிழமை (17.10.2020) இரவு 9மணி முதல் காலை 6 மணிவரை Paris , Rouen, Lille, St Etienne, Lyon, Grenoble, Montpellier, Marseille and Toulouse. பெரு நகரங்களில் கொரோனா வைரஸ் பரம்பலின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும்  இலக்குடன் ஊரடங்கு அமுல் ! 

🔹Lieferung  கூரியர் செய்யும்உணவகங்கள் 

தவிர்ந்த ஏனைய உணவகங்கள்,  கடைகள் அனைத்தும்  இரவு 9 மணிக்கு மூடப்பட வேண்டும். மக்களது நடமாட்டங்கள் பொலீஸாரால் கண்காணிக்கப்படும். ஊரடங்கை  மீறினால் குறைந்தது 135 ஈரோக்கள் அபராதம் அறவிடப்படும் !

🔹 ஊரடங்கு சமயத்தில் அவசர தேவைகளுக்கு  நடமாடுவதற்கான அனுமதிப்பத்திரம் பெற வேண்டும்.இரவுப்பணி செய்வோர் தொழில் நிமித்தம் ஊரடங்கு நேரத்தில் நடமாட வேலைத்தள அடையாள அட்டையுடன் உள் துறை அமைச்சின் அனுமதிப்பத்திரமும் வைத்திருக்க வேண்டும். பொதுப் போக்குவரத்து வழமை போன்று நடைபெறும்.

🔹 அனைத்து களியாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளது.

14.10.2020

14 அக்டோபர் 2020

COVID 19 இரண்டாம் அலை..!

 COVID 19 முதல் அலை 

நவம்பரில் சீனா, பெப்ரவரி இத்தாலி உலகளவில் மார்ச் மாதம் Lock down  ஆரம்பித்தது.

இரண்டாம் அலை COVID 20  செப்டம்பரில் ஆரம்பித்து முன்னரை விட மும்மடங்கு வேகமாக பரவுகின்றது. ஐரோப்பா நாடுகள் கனடா, அமெரிக்க எங்கும் மீண்டும் ஊரடங்கு நிலை பகுதி பகுதியாக அமுல் படுத்துகின்றார்கள். 

 எனினும் முதல் அலை, இரண்டாம் அலை இரண்டுக்கும் இடையிலான பாதுகாப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகள்  அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும்மாறுபட்டிருக்கின்றன

COVID 19 முதல் அலையில் நோயை பரவ விட்டு நோயாளிகளை தனிமைப்படுத்தி நோய் தீவிரமடைந்த பின் நூறு, ஆயிரம் நபர்கள் என்றளவில் Corona Virus test செய்து மருத்துவம் செய்தார்கள். அதனால் இறப்பு வீதமும் அதிகமானது. 

COVID 20  இரண்டாம் அலை தடுப்பு நடவடிக்கைகள் குறைக்கப்பட்டு  சோதனைகள்  அதிகரித்துள்ளார்கள்.   இலட்சக்கணக்கானோருக்கு தினமும் ஆரம்ப நிலைகளிலேயே  Test செய்ய பட்டு positiv வருமானால் அந்த நபர் சார்ந்து பழகியோருக்கு அறிகுறி இல்லாமலே test  செய்து விடுகின்றார்கள். அதனால் அனாவசிய தனிமைப்படுத்தல்கள், பயங்கள் தவிர்க்க படுகின்றன. 

உதாரணமாக இப்போது இருமல், தடிமன், காய்ச்சல், தொண்டை வறட்சி, நோ, சுவாசத்தில் வாசனை இல்லை, நாக்கில் சுவை மரப்பு ( இந்த அறிகுறிகள் Covid 19 க்கானது மட்டும் அல்ல )  உங்களுக்கும் கொரோனா  வைரஸ் தொற்று இருக்குமோ என்று ஐயம் இருந்தால் உடனே உங்கள் குடும்ப மருத்துவருக்கு தொடர்பு கொண்டு corona வைரஸ் test செய்ய வேண்டும் என்று கேட்கலாம். இதன் மூலம் நோயானது ஆரம்ப நிலையிலேயே கண்டு பிடிக்கப்பட்டு  கையாளப்படுகின்றது. நோயாளர்களை தனிமைப்படுத்தும் நாள்களும் குறைக்கப்பட்டிருக்கின்றன,

இப்போது நோய் பரவும் வேகத்துக்கு  இழப்புகள் குறைவாக இருப்பதாக ஊடகங்களில் வெளியிடுகின்றார்கள். ஆனாலும் நிலைமையின் தீவிரம் அடுத்தடுத்த மாதங்களில் தான் உணர முடியும். .

✳️ இலங்கையில் சுகாதார துறை முதல் அலையை உலகளவில் சிறப்பாக கையாண்டு  குறைந்த இழப்புகளுடன் கடந்திருந்தது. 

இரண்டாம்  அலையை கையாள்வதில் சற்று பதட்டம்  அடைவதாக தோன்றுகின்றது. எனக்கு இப்படி தோன்றுகின்றதா..? அல்லது கொரோனா வைரஸ் இரண்டாம் அலை குறித்த போதிய தெளிவு இன்மையால் பதறுகின்றார்களா..? 

அப்படியே அவரவர் நாட்டு சூழலையும் இங்கே எழுதினால் கடந்த முறை போல் எமது மருத்துவ நண்பர்களுக்கும், சுகாதார துறை பணியாளர்களும்கும் பயன் படும். 

Covid 19 இரண்டாம் அலை

இதையும் கடந்து வருவோம்

COViD 19 பரவல் தடுப்பு தற்பாதுகாப்பு ஆலோசனைகள் எச்சரிக்கைகள்இரண்டாம் தடவை. கொரோனா Virus ...!

 சுவிஸில்  ( 14.10.20)   

2,823  நபர்களுக்கு Covid 19  நோய்த்தொற்றுகளை உறுதிப்படுத்தி இருக்கின்றார்கள். 

ஒரு முறை வந்து குணமானவர்களுக்கு இரண்டாம் முறை கொரோனா Virus உள்ளுறுப்புகளில் கடும்பாதிப்பை  உருவாக்குகின்றது..25 வயதான ஒருவர் குறுகிய காலத்திற்குள் இரண்டாவது முறையாக கொரோனா நோயால் பாதிக்கப்பட்டார்.  அவருக்கு இரண்டாம் தடவை. வென்டிலேற்றார் தேவை பட்டது. 

அடிப்படையில், SARS Covid  -2 முதல் முறை நோய்த்தொற்றுக்குப் பிறகு  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி  ( Immune response) குறைவாக இருப்பதால்  இரண்டாவது நோய்த்தொற்றின் போது உயிரணுக்களுக்கு வைரஸ் அணுகலை அனுமதிக்கக்கூடும் அதனால் இரண்டாவது நோய்த்தொற்று கடுமையாக பாதிப்புகளை

உருவாக்குகின்றது. ஒரே நபரினுள் முதல் முறை தொற்றிய வைரஸ் இரண்டாம் முறை மரபு மாறியும் இருந்தது. 

மேலும் விரிவாக இங்கே : 

Live Science

NPR Org 

படம் : வைரஸ்  நேரடி மற்றும் மறைமுக சேதத்தை ஏற்படுத்தும் உடல் உள் உறுப்புகள்
கொரோனா வந்தபின் வருந்துதல் பெருமடமை...!!

 சுவிஸ் . 

14.10.2020 

ஹோட்டலறி சார்ந்த துறைகள் வருமானம் இன்றி  மீண்டும்  வேலை வீதம் குறையும் வாய்ப்பு என்பதால் உணவு துறை நிறுவனங்களில் வேலை செய்வோருக்கு நவம்பரிலிருந்து  சம்பளம் குறையும். 

( ஆரம்பத்தில் இப்படி எழுதிய போது இங்கே அப்படி எல்லாம் நடக்காது என்றவர்கள்..  இப்போது தங்கள் சூழல் சரி இல்லை என்று பூசி மெழுகுவதை அவதானித்தேன் 😎) 

இவ்வருட கொரோனா வைரஸ் திடீர் lock down சமாளிக்க தொழில் நிறுவனங்களுக்கு  வங்கிகளில் வட்டி இல்லாத கடன் பரிந்துரைத்திருந்தார்கள்.

அந்த கடன்களை திரும்ப செலுத்த வருமானம் இல்லை என்றால் நிறுவனங்கள் காலாவதி ஆகி இழுத்து மூடி விட்டால் .... கடன் கொடுத்த வங்கிகள் நிலை..... அடுத்து வரும் வருடங்களில் வங்கிகள் அரசை நெருக்கும் வாய்ப்பும் உருவாகும். இனி வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசுகள் திணறி வேறு வழி இன்றி MASK அணிந்து வாழும் அறிவித்தலோடு எல்லாவற்றையும் திறந்து விட்டிருக்கின்றார்கள். 

பள்ளி, கல்லூரிகள்.....? 

இந்த வாரம் சில நாள்கள் யுனிவசிட்டி சில பிரிவுகள் மீண்டும் ஒன்லைன் கிளாஸ்  அறிவித்து இருக்கின்றார்கள்.

ஆரம்பத்திலிருந்து சொல்வது தான் .. இனி வரும் சில வருடங்கள் புதிய திட்டங்கள், முதலீடுகளை தவிர்த்து பணத்தை சேமித்து உண்ணவும், உடுக்கவும், தங்கவும் போதுமென திட்டமிடுங்கள். வேறு எதுவும் வேண்டாம்... உயிர் பாதுகாப்புடன்  ஆரோக்கியமும் முக்கியம்..!

வருமுன் காப்பதே அறிவுடைமை....! 

கொரோனா வந்தபின் வருந்துதல் பெருமடமை...!!


13 அக்டோபர் 2020

பூமி எங்கும் பறந்து திரிந்து வர ஆசை

 எத்தனை ஆசை நிறைவேறும் ..? 

சின்ன பெரிய ஆசை நிறைவேறுமா மக்களே..,🪂? 

உங்களுக்கு இருக்கும்

ஆசைகளை சொல்லுங்கோ...❣️

🔹

பென்னம் பெரிய ஆசை 

பறந்து செல்ல ஆசை 

பூமி எங்கும் பறந்து திரிந்து வர ஆசை 

பூவுலகம் எங்கும் மிதந்து வர ஆசை 


காணும் மனிதர்  எல்லாம் கட்டி அழ ஆசை 

தொட்டணைத்து கன்னம் முத்தமிட ஆசை 

ஆத்தங்கரை நாவல் பறித்து திங்க ஆசை 

குளத்தருகே கோயில் கும்பிடவும் ஆசை 


பள்ளிக்கு சென்று பாடம் படிக்க ஆசை 

பட்டாம் பூச்சி போல பட்டம் விட ஆசை 

பல்லுக் கூச மாங்காய் கடித்து திங்க ஆசை 

பாட்டி வீட்டில் தேங்காய் திருடி வர ஆசை 


கிட்டி புள் தடியை தெறிக்க விட ஆசை 

கிட்டி வரும் மேகம் தொட்டு வர ஆசை 

ஊஞ்சல் கட்டி ஆடி உள்ளம் கொய்ய ஆசை 

கொய்யா மரம் ஏறி கோதி தின்ன ஆசை 


குறுக்குகட்டி கிணத்தில் குளித்து மகிழ  ஆசை 

கிணத்து  நீரை அள்ளி அள்ளிப்பருக ஆசை

விழிமாங்காய் சேர்த்த மீன்சொதிக்கு ஆசை

வழியில்  தொட்டால் சிணுங்கி  தொட்டு வர ஆசை 


துட்டுக்காக ஒட்டு தடுத்து விட ஆசை 

வட்டி வாங்குவோரை வெட்டித்தள்ள ஆசை 

குட்டித் திட்டுவோரை குதறிவிட ஆசை 

குனிந்து வாழ்வோரை நிமிர்த்திவிட ஆசை 


காணும் கனவு உடனே பலித்து விட ஆசை 

பல்லி சொல்லும்சேதி புரிந்து கொள்ள ஆசை 

Face புக்கில்10000 லைக்கு வாங்க ஆசை 

லைக்கெல்லாம் வித்து சைக்கிள் வாங்க ஆசை😎


கொரோனவை இன்றே வென்று விட ஆசை 

கொல்லும் மனிதர் கொள்கை கொன்று வாழ ஆசை 

பென்னம் பெரிய ஆசை, பெட்டி நிரம்ப ஆசை 

என்னென்னமோ ஆசை, எண்ணமெல்லாம் தோசை🤣😜  விளிமாங்காய்

நாவல்


#ஆல்ப்ஸ்தென்றல்நிஷா

பூமி எங்கும் பறந்து திரிந்து வர ஆசை

10 அக்டோபர் 2020

உலக மனநல நாள் ( அனைவருக்கும் மன ஆரோக்கியம்') Part -2

 'Mental health for all' 

   ' அனைவருக்கும் மன ஆரோக்கியம்'.

                          Part -2 

               1992  ம் ஆண்டு தொடக்கம் ஆண்டு தோறும்  October 10  வெவ்வேறு கருüபொருளில் உலக மனநல நாளாக அனுசரிக்கபடுவதன் மூலம் மனிதர்களின் மனஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வும் உலகளவில் கவனயீர்ப்புக்குரியதாகின்றது.

2020 கருப்பொருள் 

                 'Mental health for all'

        ' அனைவருக்கும் மன ஆரோக்கியம்'.

இன்றைய உலகில்  மன அழுத்தத்தினால் பாதிக்கபடாதவர்கள் யாருமே இல்லை. விழிப்புணர்வு தரும் உளவியல் ஆய்வாளர்கள், மருத்துவர்கள்,ஆலோசகர்கள், ஜனாதிபதி, பிரதமர், அதிகாரி,  வீட்டில் வேலை செய்யும் ஆயா உள்பட அனைவரும் எதோ ஒரு சூழலில் மன அழுத்தத்தில் 

பாதிக்கபடுகின்றார்கள்.  ஏனைய உடல் சார்ந்த நோய்கள் போல் இது மனம் சார்ந்த நோய். இதில் வெட்கப்பட எதுவும் இல்லை. அதனால் யாருக்கும் வராத நோய் ( Depressive) உங்களுக்குள் இருப்பதான  குழப்பம் வேண்டாம். 

உளவியல் அழுத்தம் உருவாக்கும் மாற்றங்கள் குறித்த அறியாமையும், கவலையீனமும் தான் பலரை தற்கொலை, கொலை போன்ற முடிவுகளுக்கு தூண்டுகின்றது..!

🌻❣️🪂 இதை எழுதும் எனக்குள்ளும் உளவியல் சோர்வுகள் உண்டு. அவைகளை  எனக்கான Positive  ஆக மாற்றி கொள்கின்றேன். எனக்கு பிடிக்காத, பிரச்சனை தரும் விஷயங்களை விட்டு விலகி என் சிந்தனையை புதிதாக்கி கொள்வேன். 

யார் மேலும் குற்றம் குறை சொல்லாமல், யாரும்  புரிந்து கொள்ளவில்லை., அவர்கள் எனக்காக மாற வேண்டும் என்று கவலைப்படாமல்  அவரவர்க்கு தெரிந்தது அவ்வளவு தான் என்றளவில் என்னை தேற்றி  கொள்வேன். 🪂🌻❣️

உங்களுக்கு மனம் குழப்பமாக இருக்கின்றதா..? 

❎  குழப்பமான மன நிலையில் புதிய  முடிவுகளை எடுக்க வேண்டாம். 

உளவியல் அழுத்தத்திலிருந்து எங்களை நாங்கள் பாதுகாத்து கொள்ள சில வழிமுறைகளை  இங்கே காணலாம்.


சுய பாதுகாப்பு பயிற்சி: 

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யக்கூடிய பல மாற்றங்கள் உள்ளன.

🔹 சிறு ஓய்வு எடுத்து, உங்களை நீங்களே சுய ஆய்வு செய்து ஏன்..? எதனால்..? 

யாரால் ..? எனும் காரணங்களை ஆராய்ந்து பாருங்கள். உங்கள் குறிப்பிட்ட தேவைகளைப் புரிந்துகொள்வதே சுய பாதுகாப்புக்கான அம்சமாகும். உங்களுக்கு என்ன வேண்டும் என்று நீங்களே கேட்டுக்கொள்ள நேரத்தைக் கண்டுபிடித்து அதற்காக செல்லுங்கள்.

🔹 அவசியம் என்றால் உங்களுக்கு நம்பிக்கையான, புரிந்து கொண்டு உதவ கூடிய குடும்பத்தினர், நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள். அவர்களுடன் மனதிலிருந்து  பேசுங்கள்.  உங்களுக்கு வேதனை தரும் விடயங்களை ஒதுக்கி விடுங்கள். 

🔹 விளையாட்டும் ஆரோக்கியமான உணவும், போதுமான நித்திரையும் உங்கள் உடலுக்கு  ஆரோக்கியமானதும் அவசியமானதும்கூட..! 

உங்களுக்கு ஆரோக்கியம் தரும் நீண்ட நடைப்பயிற்சி செய்வது போன்ற 

உடல் பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.

🔹 வழக்கமான தூக்க நேரத்தை தொடர்வது. உங்களுக்கு விருப்பமான விடயங்களில் ஈடுபடுவதுடன் தொடர் பணிகளுக்கிடையில் ஓய்வு, இடைவேளையை எடுத்துக் கொள்ளுங்கள்.

🔹 உடலை தளர்த்தி அமருங்கள். உள்ளிருக்கும் பயம், மன அழுத்தங்களை வெளியேற்றுங்கள் ( தியானம் செய்யுங்க என்பார்கள்) ஆனால் குழப்பமான மன நிலையில் மனதை ஒருமுகப்படுத்த முடியாது. ஆனால் எல்லாத்தையும் துங்கி போட்டு விட்டு அக்கடா என்று உடல் இறுக்கம் தளர்ந்து அமர முடியும். உடலை லேசாக விட்டாலே உடல் வலிகள் ஓடி விடும். 

🔹 உங்களுக்கென சிறு திடடம், ஒரு நாள் என்று ஒதுக்கி புதிய மாற்றங்களை உருவாக்குங்கள். 

🔹 ஒரு டயரியில் உங்களுக்கு பிடித்த அழகான இனிய நல்ல நினைவுகளை எழுதுங்கள். Positive சிந்தனை தரும் காரணங்களை குறித்து கொள்ளுங்கள். 

🔹 உங்களுக்கு எரிச்சல் தரும் காரியங்களை விலக்கி, உங்களை வருத்தம் தரவென விமர்சிப்போரை விட்டு விலகுங்கள். 

🔹 குழந்தைகள், பொருளாதார சிக்கல்கள், காதல் தோல்வி போன்ற காரணங்கள் எதுவானாலும் அனைத்தும் தற்காலிக பிரச்சனைகளே  என்று உணர்ந்து  கொள்ளுங்கள்.( யோசித்தது பார்த்தால்  கடைசியில் ஒன்றும் இருக்காது ) 

✳️  ( இணையதளங்களில் ) Face book ல் எழுதும் பதிவுகளும் பலர் மனஅழுத்தத்தின் வெளிப்பாடாக இருக்கும். 

✅ பலருக்கு இங்கே எழுதுவதே மன அழுத்தத்திலிருந்து ரிலாக்ஸ் தரும். 

❎ இணைய வழி நண்பர்கள் பதிவுகளை பாலன்ஸ் செய்ய முடியாதவர்களுக்கு ஓவர் மன அழுத்தமும் உருவாக்கும். இணைய

நட்புகளுடன்  தாமரை இலையும் தண்ணீரும் போல் இருந்தால் எல்லாமே  ஆரோக்கியமாக இருக்கும். 

            “ எண்ணம் போல் வாழ்க்கை“

எங்கள் எண்ணம் நலமாக இருந்தால் வாழ்வும் வளமாகும். 

உலக மனநல நாள் ( அனைவருக்கும் மன ஆரோக்கியம்'. Part -2உலக மனநல நாள் ( World Mental Health Day) Part - 1

 அக்டோபர் 10 ...! 

                       உலக மனநல நாள்

                ( World Mental Health Day) 

                                 Part - 1 

உறவினர்கள், உறவுகளின் பிரச்சினைகள் 

பணியிடம், பொருளாதாரச் சிக்கல்கள், அடாவடியாக கொடுமைக்கு ஆளாதல், நாள் பட்ட உடல் வலிகள் என்று பல்வேறு பட்ட சூழல்களில் மனிதர்கள் மன அழுத்தம், மனப்பித்து இருமுனையப் பிறழ்வு போன்ற உளவியல் பாதிப்புகளுக்குஉட்படுகின்றார்கள். 

மன நோயின் ஐந்து பிரதான எச்சரிக்கை அறிகுறிகள்: 

🔹நீண்டகால சோகம் அல்லது எரிச்சல்.

🔹உயர்ந்த மற்றும் குறைந்த மனநிலை மாற்றம்.

🔹அதிகப்படியான பயம், கவலை அல்லது

சோர்வு 

🔹சமூகதிலிருந்து விலகி வாழ்தல் 

🔹உணவு அல்லது தூக்க பழக்கத்தில் வியத்தகு மாற்றங்கள்.

உடல், மனபழக்கவழக்கம் தொடர்பில் மாற்றங்களை ஏற்படுத்தும். மன அழுத்தத்தின் பொதுவான அறிகுறிகளை உணர்வு, உடல் மற்றும் செயல் பாடுகளின் மாறுதல்கள் மூலம் புரிந்து கொள்ள முடியும்.


உணர்வு  மாற்றம்

🖤 அதிக கவலை

🖤 மனச்சோர்வு

🖤 பயம் 

🖤 மனப் போராட்டம்

🖤 எளிதில் எரிச்சலுறல்  

🖤 கோபப்படல்

🖤 குற்றவுணர்வு 

🖤 இயலாமை

🖤 வெட்கம்

🖤 தனிமையாக உணர்தல்

🖤 எச்சரிக்கை உணர்வு

🖤 மனக் குழப்பம் / மனக் கலக்கம்

🖤 மனதை ஓய்வாக வைத்துக்கொள்ள முடியாமல் உணர்தல்

🖤 மனதை ஒருமுக படுத்த முடியாமல் அலைபாயும் தன்மை 

🖤 எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலைமை 

🖤 ஆளுமைச் சிதைவு


உடற்றொழிலியல்  மாற்றம்

🔹 தசைகளில் ஏற்படும் இறுக்கம் 

🔹 கடுமையான உடல்வலி 

🔹 தலைவலி

🔹 நெஞ்சுவலி போன்ற வலிகள் 

🔹 வயிற்றுப்போக்கு (Diarrhoea) 

🔹 மலச்சிக்கல், (Constipation)

🔹 குமட்டல் (Nausea)

🔹 தலைச்சுற்றல் (Dizziness)

🔹 அதிகரித்த இதயத் துடிப்பு

🔹 அதிரினலின் சுரப்பு அதிகரிக்கும்


மாற்றமடையும் பழக்கவழக்கம் :

▪️ மிக அதிகமாகவோ, மிகக் குறைவாகவோ உணவு உட்கொள்ளல்

▪️ அதிக தூக்கம் அல்லது தூக்கமின்மை 

▪️ சமூகத்திலிருந்து ஒதுங்கி இருத்தல்

▪️ வேலைகளைப் பின்போடல் 

▪️ பொறுப்புக்களில் இருந்து ஒதுங்குதல் 

▪️ அதிகரிக்கும் மதுபானப் பாவனை

▪️ போதைப்பொருள் பாவனை

▪️ புகைத்தல் 

▪️ நகம் கடித்தல் போன்ற ஒழுங்கற்ற பழக்கங்கள்.

கணவன், மனைவி, பிள்ளைகள், பெற்றோர், உறவுகள், அயலார், நண்பர்கள், நமக்கு

தெரிந்தவர்கள்  சற்று கூர்ந்து கவனித்தால் அவர்களின் செயல் பாடுகள், உணர்வுகளில் படிப்படியான  மாற்றங்களை அவதானிக்க  முடியும். 

உளவியல் பாதிப்புக்கு அடிப்படை காரணங்கள் என்ன என்பதை ஆராய்ந்து அந்த சூழலிலிருந்து விலகி அன்பு, ஆதரவு கிடைத்தாலே பலர் ஆரம்ப நிலையில் மீண்டு விடுவார்கள். அறியாமை மற்றும் கவலையினம் உயிர் இழப்புக்களை உருவாக்கி விடுகின்றது. 

உலக மனநல நாள் ( World Mental Health Day)கொரோனா வைரஸ் இரண்டாம் அலை

 என் வசிப்பிடத்தில் இருந்து Swiss , Bern மாநகர பெரிய Insel Hospital, 68 Km தூரம் ( இது சுவிஸ் நாட்டின் அனைத்து New அறிவியல் மருத்துவ தொழில் நுட்ப வசதிகளையும் கொண்ட பிரதான பெரிய மருத்துவ மனை) 

பொதுப்போக்குவரத்தில் ( Bus - Train - Walk - Tram )  பயணத்துக்கு ஒரு மணி நேரம் தேவை ( After OP வேகமாக இயங்க முடியாது என்பதால்  எனக்கு மேலும் 30 நிமிடங்களும் தேவை.) எனக்கு இங்கே தான் கடந்த ஐந்து வருடம் தொடர் check up . மாதம் ஒரு தடவை எனும் check up இருக்கும். ஜூன் மாதத்துக்கு பின் வாரம்  ஒருதடவை என்றானதும்  பொதுப்போக்குவரத்தில் தான் பெரும்பாலும் பயணம். 

🔹

எங்கள் நகர Hospital 6  km  தூரம்.

இரண்டு பஸ் மாறி செல்ல 30  நிமிடங்கள்

கார் பயணம் என்றால் 10 நிமிடங்கள்.

வாரத்துக்கு இரண்டு தடவை ( சில நேரம் மூன்று ) இங்கே பிசியோ தெரபி இரண்டு வருடமாக செல்கின்றேன்.( ட்யூமர் தலை சுத்துக்கு தெரபி) மார்ச்  ஆகஸ்ட் ( Corona virus Lock down ) தெரபிக்கு போகவில்லை . செப்டம்பர் 20 தொடக்கம் மீண்டும் பிசியோ தெரபி ஆரம்பம். 

போன கிழமை வரை பொதுப்போக்குவரத்து 

பயணங்களில் மக்கள் நெருக்கடி இல்லை.  சானிடைசர் தடவி, மாஸ்க் அணிந்து இரண்டு மீட்டர் டிஸ்ட்னஸ்  தூரத்தில் நின்று ( நான் மட்டும் அமரும் இருக்கை😍) என்று கடைப்பிடித்தேன். ஒன்றும் பயமில்லை.

🔹

ஆனால் இன்று.... !?  

07.10.2020. 7.45 க்கு Bern - Insel Hospital நோக்கி பயணம்... நான்கு நபர் அமரும் இருக்கையில் முதல் முப்பது நிமிடம் நான் மட்டுமே..! அதற்கு பின் திபு.. திபு என்று கூட்டம்.  ரயிலுள் அமரும் இருக்கைகள் நிரம்பி நிற்போரும்நெருங்கி... முன் இருக்கையில் ஒருவர் அமர என் வலது  பக்கத்து இருக்கையில் கைப்பை வைத்திருந்தேன். அதை எடுத்து ஒருவர அமர .. நெஞ்சுக்குள் ஒரு வெப்பம் பரவ ஆரம்பித்தது உண்மை... இதில் எங்கே டிஸ்டன்ஸ் கடைப்பிடிப்பது...? அப்படியே திருப்பி ஜன்னல் பக்கமே பார்த்து கொண்டு...வேற வழி இல்லையே..🥵

கொரோனா வைரஸ் முதல் அலை மார்ச் -  யூலை வரை என் உடல் நிலை கருதி வெளியே எங்கும் செல்லாமல் அளவாக வாங்கி, குறைவாக உண்டு வீட்டுக்குள் பத்திரமாய் இருந்தேன். 

இனி....🖤🖤🖤🖤

பள்ளிகளுக்கு Holi day  என்பதால் குழந்தை குட்டிகளுடன் பயணம் செல்கின்றார்கள். ரயில்வே ஸ்டேஷனில் மீண்டும் திருவிழா கூட்டம்...! கொரோனா வைரஸ் இரண்டாம் அலை என்கின்றார்களே ...? Mask  அணிந்தால்  பாதுகாப்பு என்று ஏனைய நாடுகள் போல் அசால்ட்டாக திரிகின்றார்களோ..? 

இப்படி பயணித்தால் நிச்சயம்   கொரோனா வைரஸ் நோய் சீக்கிரம்  வேகமாக பரவும். அது தான் அரசின் திட்டமும் என்று தெரிகின்றது.

பள்ளிகள், கல்லூரிகளுக்கும்  12  வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கும் மாஸ்க் அணிவது  கடடயாம் இல்லை என்று அறிவித்திருப்பதன் மூலம்  இளையோருக்குள் கொரோனா வைரஸ் பரவ விட்டு மீண்டு வர

போகின்றார்களோ..? 

அது அத்தனை இலகுவானதாக இருக்குமோ.,? 

இங்கே நாங்கள் புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயம்.  மந்தை எதிர்ப்பு சக்தி சரியாக செயல் பட குறைந்தது 70 % மக்களுக்குள் கொரோனா வைரஸ் பரவ வேண்டும். நோய் தொற்றில் எதிர்த்து தாக்கு பிடித்து மீண்டும் வருவோர் இந்த பூமியில் வாழும் தகுதி பெறுவார்..! 

எனில் ..,,,? உங்கள், எங்களதும் பிள்ளைகளதும் பாதுகாப்பு எங்கள் முயற்சிகளால் மட்டுமே சாத்தியம். 

குளிர் காலம் வேறு  ஆரம்பித்து விட்டது. குளிர்காலத்தில பரவும் Grippe ( வைரஸ் ) இருமல்,தடிமன்,தொண்டை வறட்சி என்று ஆரம்பிக்கும். அதுவா ...இதுவா என்று புரியாமல் பிள்ளைகளுடன் நெருங்கவும், விலகவும் முடியாமல் தவிக்கும் நிலை உருவாகும். 

வர போகும் ஆபத்தை தெளிவாக புரிந்து கொள்ளுங்கோ..அவ்வளவு தான் 

நன்றி 

நிஷா

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை


COVID19 - Switzerland, Bern

 07.10.2020

Switzerland, Bern மாநகரத்தின்  அனைத்து பொது உள்ளரங்குகளுக்குள்ளும் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் அடுத்த வாரம் திங்கள் கிழமை (12.10.2020) முதல் Mask அணிய வேண்டும். 

🔹கடைகள் / Geschäfte

🔹வணிக மையங்கள் / Einkaufszentren

🔹தபால் நிலையம் / Poststellen

🔹ரயில் நிலையம் / Bahnhöfe

🔹அருங்காட்சியகங்கள் / Museen

🔹தேவாலயங்கள் / Gotteshäuser

🔹பிரார்த்தனை அறைகள் / Gebetsräume

🔹சினிமா திரையரங்குகள்/Kino & Theater 

🔹நூலகங்கள் / Bibliotheken

🔹நிர்வாக அலுவலக கட்டிடங்கள் 

🔹வழிபாட்டுத் தலங்கள் / Gotteshäuser

🔹 உணவகங்கள்,  / Restaurants 

பொது மக்களின் பாவனைக்குரிய அனைத்து இடங்களுக்கும் திங்கட்கிழமை முதல் Mask கட்டாயமாக்கபட்டிருக்கின்றது. 

🌻 பார்கள், கிளப்புகள், டிஸ்கோக்கள் மற்றும் நடன அரங்குகள் மற்றும் உணவகங்களில்

Mask அணிய வேண்டும். ( விருந்தினர்கள் மேஜையில் அமர்ந்திருக்கும்  போது Mask கழற்ற அனுமதிக்கப்படுவார்கள்.) பார்ட்டி லிமிட்  300 பேர் வரை மட்டுமே ..! 

🌻அனைத்து  வரவேற்பு அறை, 

ஆடை மாற்றும் அறை மற்றும் கேட்டரிங் பகுதிகளில் Mask தேவைப்படுகிறது.

👼 Kindertagesstätten :குழந்தைகள், சிறுவர்கள் பராமரிப்பு நிலையங்களில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பொறுத்து  சிறப்பு சூழ்நிலைகளில் அல்லது தனிப்பட்ட உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப Mask  அணிய வேண்டும்.

✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️

♦️கல்வி மற்றும் கலாச்சார இயக்குநரகத்தின் மேற்பார்வையில் உள்ள

அரசு மற்றும் தனியார் பள்ளிகள்  &  பல்கலைக்கழகங்களின் உள்ளரங்குகளுக்குள்  Mask அணிவது கட்டாயம் இல்லை ( இருப்பினும்,  உள்ளரங்குகள் தொற்றுநோயியல் நிலைமைக்கு மிக விரைவாக மாற்றியமைக்க வேண்டும்.) 

♦️வங்கிகளின மண்டபங்கள் மற்றும் சுய சேவை பகுதிகளிலும்  Mask அணிவது கட்டாயம் இல்லை

♦️விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிப் பகுதிகளிலும் Mask அணிவது கட்டாயம் இல்லை.

இந்த அறிவிப்பு 2021  ஜனவரி இறுதி வரை  கட்டாயமாக்க பட்டிருந்தாலும் இடைப்படட காலங்களில்  எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் இருக்குமானால் மாற்றப்படலாம். 

வெளிப்புற பாதுகாப்பு அடையாளமாக சுகாதார முகமூடிகள் செயல்படுகின்றன. மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். 

                 “ Bern மாநகரம் ஆபத்தில்

              உள்ளவர்களையும் அவர்கள்                              

         சுதந்திரங்களையும் பாதுகாக்க             

      விரும்புகிறது” 

                           "எல்லோரும் சுகாதார விதிகளுக்குக் கீழ்ப்படிய வேண்டியது மிகவும் முக்கியம், முடிந்த போதெல்லாம் தனி நபர்களுக்கிடையில் 1.5 மீட்டர் தூரத்தை  Distanz வைத்திருங்கள் "என்று சுகாதார துறை அதிகாரி அறிவித்துள்ளார். 
#07.10.2020

Switzerland, Bern மாநகரத்தின்  அனைத்து பொது உள்ளரங்குகளுக்குள்ளும் 

12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் அடுத்த வாரம் திங்கள் கிழமை (12.10.2020) முதல் Mask அணிய வேண்டும். 

🔹கடைகள் / Geschäfte

🔹வணிக மையங்கள் / Einkaufszentren

🔹தபால் நிலையம் / Poststellen

🔹ரயில் நிலையம் / Bahnhöfe

🔹அருங்காட்சியகங்கள் / Museen

🔹தேவாலயங்கள் / Gotteshäuser

🔹பிரார்த்தனை அறைகள் / Gebetsräume

🔹சினிமா திரையரங்குகள்/Kino & Theater 

🔹நூலகங்கள் / Bibliotheken

🔹நிர்வாக அலுவலக கட்டிடங்கள் 

🔹வழிபாட்டுத் தலங்கள் / Gotteshäuser

🔹 உணவகங்கள்,  / Restaurants 

பொது மக்களின் பாவனைக்குரிய அனைத்து இடங்களுக்கும் திங்கட்கிழமை முதல்  

Mask கட்டாயமாக்கபட்டிருக்கின்றது. 

🌻 பார்கள், கிளப்புகள், டிஸ்கோக்கள் மற்றும் நடன அரங்குகள் மற்றும் உணவகங்களில்

Mask அணிய வேண்டும். ( விருந்தினர்கள் மேஜையில் அமர்ந்திருக்கும்  போது Mask கழற்ற அனுமதிக்கப்படுவார்கள்.) பார்ட்டி லிமிட்  300 பேர் வரை மட்டுமே ..! 

🌻அனைத்து  வரவேற்பு அறை, 

ஆடை மாற்றும் அறை மற்றும் கேட்டரிங் பகுதிகளில் Mask தேவைப்படுகிறது.

👼 Kindertagesstätten :குழந்தைகள், சிறுவர்கள் பராமரிப்பு நிலையங்களில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பொறுத்து  சிறப்பு சூழ்நிலைகளில் அல்லது தனிப்பட்ட உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப Mask  அணிய வேண்டும்.

✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️

♦️கல்வி மற்றும் கலாச்சார இயக்குநரகத்தின் மேற்பார்வையில் உள்ள

அரசு மற்றும் தனியார் பள்ளிகள்  &  பல்கலைக்கழகங்களின் உள்ளரங்குகளுக்குள்  Mask அணிவது கட்டாயம் இல்லை ( இருப்பினும்,  உள்ளரங்குகள் தொற்றுநோயியல் நிலைமைக்கு மிக விரைவாக மாற்றியமைக்க வேண்டும்.) 


♦️வங்கிகளின மண்டபங்கள் மற்றும் சுய சேவை பகுதிகளிலும்  Mask அணிவது கட்டாயம் இல்லை

♦️விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிப் பகுதிகளிலும் Mask அணிவது கட்டாயம் இல்லை.

இந்த அறிவிப்பு 2021  ஜனவரி இறுதி வரை  கட்டாயமாக்க பட்டிருந்தாலும் இடைப்படட காலங்களில்  எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் இருக்குமானால் மாற்றப்படலாம். 

வெளிப்புற பாதுகாப்பு அடையாளமாக சுகாதார முகமூடிகள் செயல்படுகின்றன. மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். 

                 “ Bern மாநகரம் ஆபத்தில்

              உள்ளவர்களையும் அவர்கள்                              

         சுதந்திரங்களையும் பாதுகாக்க             

      விரும்புகிறது” 

                           "எல்லோரும் சுகாதார விதிகளுக்குக் கீழ்ப்படிய வேண்டியது மிகவும் முக்கியம், முடிந்த போதெல்லாம் தனி நபர்களுக்கிடையில் 1.5 மீட்டர் தூரத்தை  Distanz வைத்திருங்கள் "என்று சுகாதார துறை அதிகாரி அறிவித்துள்ளார். 

Mask அணிய வேண்டும்


#

ஆப்பிள் வற்றல்

 பிசியோ தெரபியே செய்து உடல் அசைத்து களைத்து வந்து  நிடோ பால் கோப்பி & ( இலங்கை சுக்கு மல்லி கோப்பி  ) ஆப்பிள் வற்றலும் இன்றைய பின்னேர சிறு உணவானது. 

ஆப்பிள் வற்றல்  தங்கை ( Jeruscha Jeeva) வீட்டு ஆப்பிள் மரத்து பழங்களை வற்றலாக பதப்படுத்தி, Johannisbeeren பழங்களில் ஜாமும்  செய்து எனக்கும் கொடுத்தாள் ❤️

நீங்களும் செய்யலாம். ( மாதக்கணக்கில்  வைத்து உண்ணலாம்). கடைகளில் 100 gr பாக்கட் 3 SFr. சீசன் காலத்தில் மலிவாக ஆப்பிள் கிடைத்தால் வற்றல் செய்து பிள்ளைகளுக்கு சிற்றுண்டியாக கொடுக்கலாம். பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம்.

ஆப்பிள் பழங்களை கழுவி  நடுவில் இருக்கும் விதை நீக்கி மெல்லிய துண்டுகளாக நறுக்கி நல்ல கோடை வெயிலில் உலர்த்தி எடுக்கலாம். அல்லது back ofen இல் வைத்து கிரில் setting இல் காய விடலாம். 

( கடந்த வருடம் நானும் செய்தேன். இவ்வருடம் நான்உணவு பொருட்கள் ஒன்றுமே பதப்படுத்தவில்லை 🖤)

ஆப்பிள் வற்றல்