சுவிஸ் .
14.10.2020
ஹோட்டலறி சார்ந்த துறைகள் வருமானம் இன்றி மீண்டும் வேலை வீதம் குறையும் வாய்ப்பு என்பதால் உணவு துறை நிறுவனங்களில் வேலை செய்வோருக்கு நவம்பரிலிருந்து சம்பளம் குறையும்.
( ஆரம்பத்தில் இப்படி எழுதிய போது இங்கே அப்படி எல்லாம் நடக்காது என்றவர்கள்.. இப்போது தங்கள் சூழல் சரி இல்லை என்று பூசி மெழுகுவதை அவதானித்தேன் 😎)
இவ்வருட கொரோனா வைரஸ் திடீர் lock down சமாளிக்க தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகளில் வட்டி இல்லாத கடன் பரிந்துரைத்திருந்தார்கள்.
அந்த கடன்களை திரும்ப செலுத்த வருமானம் இல்லை என்றால் நிறுவனங்கள் காலாவதி ஆகி இழுத்து மூடி விட்டால் .... கடன் கொடுத்த வங்கிகள் நிலை..... அடுத்து வரும் வருடங்களில் வங்கிகள் அரசை நெருக்கும் வாய்ப்பும் உருவாகும். இனி வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசுகள் திணறி வேறு வழி இன்றி MASK அணிந்து வாழும் அறிவித்தலோடு எல்லாவற்றையும் திறந்து விட்டிருக்கின்றார்கள்.
பள்ளி, கல்லூரிகள்.....?
இந்த வாரம் சில நாள்கள் யுனிவசிட்டி சில பிரிவுகள் மீண்டும் ஒன்லைன் கிளாஸ் அறிவித்து இருக்கின்றார்கள்.
ஆரம்பத்திலிருந்து சொல்வது தான் .. இனி வரும் சில வருடங்கள் புதிய திட்டங்கள், முதலீடுகளை தவிர்த்து பணத்தை சேமித்து உண்ணவும், உடுக்கவும், தங்கவும் போதுமென திட்டமிடுங்கள். வேறு எதுவும் வேண்டாம்... உயிர் பாதுகாப்புடன் ஆரோக்கியமும் முக்கியம்..!
வருமுன் காப்பதே அறிவுடைமை....!
கொரோனா வந்தபின் வருந்துதல் பெருமடமை...!!
வருமுன் காப்பதே அறிவுடைமை - சரியாகச் சொன்னீர்கள்.
பதிலளிநீக்கு