19 நவம்பர் 2015

சிறுவர் கதை:பட்டணத்து எலியும் பட்டிக்காட்டு எலியும்

பட்டணத்து எலியும் பட்டிக்காட்டு எலியும்நண்பர்களாக பழகி வந்தது, ஒருநாள் பட்டிக்காட்டு எலி தன் பட்டணத்து சினேகிதனை தன் ஊருக்கு விருநதுக்கு அழைத்தது. விருந்துக்கு வந்த பட்டணத்து எலியும் பட்டிக்காட்டு எலியும் சேர்ந்து அங்கிருந்த வயல் வெளிகளில் வளர்ந்திருந்த நெற்கதிர்களையும்,காய்கனிகளையும் கொறித்து தின்று பயமில்லாமல் தம் இஷ்டம் போல் ஓடி விளையாடியது. 
அப்போது பட்டணத்து எலி இதெல்லாம் ஒரு விருந்தா? சுவையே இல்லை!இப்படியா விருந்து வைப்பது? பட்டணத்தில் வந்து பார்!எத்தனை விதமான உணவுகள் சீஸ்,தேன்,பால் சாக்லேட் என சுவையான உணவுகளேல்லாம் இருக்கின்றது!இதென்ன வாழ்க்கை!தினம் தினம் இங்கே கிராமத்தில் வயலில் ஓடி ஓடி களைத்து ஒவ்வொன்றாக பொறுக்கி தின்னும் நிலை உனக்கு கஷ்டமாக இல்லையா?
வா உடனே பட்டணத்துக்கு.விருந்தென்றால் என்னவென்று காட்டுகிறேன்.வாழ்க்கை என்றால் என்னவென்று நீ நேரில் வந்துஅனுபவித்து பார் என்று தான் இருந்த பட்டணத்துக்கு வரும்படிஅழைத்தது!
பட்டிக்காட்டு எலிக்கு பட்டணத்து எலி இப்படி சொன்னதும் ரெம்ப வெட்கமாக போய் விட்டதாம்.பட்டிக்காட்டு எலியும் பட்டணத்தில் ஒரு வேலையும் தேடி அங்கேயே செட்டிலாகி விட்டால் பட்டணத்து எலி மாதிரி தானும் ஜம்பமாக கூலிங்க் கிளாஸோட போன் எல்லாம் வாங்கி கொள்ளலாம் எனநினைத்து பட்டணத்தை பார்க்கும் ஆசையில் சந்தோஷமாக பட்டிக்காட்டை விட்டு பட்டணம் புறப்பட்டுபோனது! பட்டணத்து எலி ஒருபெரிய வீட்டிற்கு பின்னால் இருந்த பொந்தில வாழ்வதால் பட்டிக்காட்டு எலியும் அங்கே போனது!
பட்டிக்காட்டு எலியை வா வா என மகிழ்ச்சியோடு வரவேற்ற பட்டணத்து எலி தனனை தேடி வந்த பட்டிக்காட்டு எலிக்கு விருந்து கொடுக்க அந்த பெரிய வீட்டுக்குள் போய் வெண்ணெய் கேக்கு துண்டுகள் ரொட்டித்துண்டுகள், சீஸ்களை,சாக்லேட்களை எல்லாம் திருடிக்கொண்டு வந்தது. சாப்பாடு ரெடியானதும் இரண்டு எலியு்மாக சேர்ந்து சாப்பிட உட்காநதது. 
அப்போது தீடீரென மியாவ் மீயாவ் என்று சத்தம் வரவே இரண்டு எலியும் பயந்து போய் சாப்பாட்டை அப்படியே விட்டு விட்டு ஓடி ஒளிந்தது்!அந்த வீட்டுசொந்தக்காரர் வளர்க்கும் பூனை அது என்பதால் அது வீடு எங்கும் சுயாதீனமாய் திரியுமாம்.ரெம்ப திமிர் பிடித்த பூனை அது. 
இரண்டு எலிகளும் பூனைஅந்தப்பக்கமா போனதும் திரும்பி வந்து சாப்பிடஅமர்வதும் பூனை மியாவ் மியாவ் என வரும் போது எலிகள் ஒளிவதுமாக நிம்மதியில்லாமலே பயந்து பயந்து மெதுவாக த்தான் சாப்பிட முடிந்தது.பயத்தோடு சாப்பிட்டதனால் பட்டிக்காட்டு எலியால் சரியாக சாப்பிட முடியவில்லையாம். அதனோடு அடிக்கடி எழுந்து ஓடியதால் களைத்து போய் விட்டதாம்.  
கடைசியாக அந்தப்பக்கமா வந்த பூனை எலிகள் சாப்பிட்டுகொண்டிருந்த பக்கமாக வந்து எலிகள் திருடி அடுக்கி வைத்திருந்த சாப்பாட்டையெல்லாம் தட்டி சிதற அடித்து விட்டு மீதியை தானும் சாப்பிட்டே முடித்து விட்டது
எலிகளுக்கோகஷ்டப்பட்டு்திருடியும் சாப்பாடுகிடைக்கவில்லை என்பதோடு பூனை அருகில் இருப்பதால் நிம்மதியாக தூங்க முடியாமல் பயத்தில் திடுக் திடுக் என விழித்ததனால் உடம்பெல்லாம் நடுக்கம் வந்து விட்டதாம்.
மறு நாள் விடிந்ததும் பயத்தோடும் பசியோடுமிருந்த பட்டிக்காட்டுஎலி பட்டணத்து எலியை பார்த்து என் ஊரில் சாப்பாடு பால் சீஸ் பிரெட் போல் சுவையில்லாம இருந்தாலும். நிம்மதியாக சாப்பிடலாம் உன்னைப்போல பயந்து பயந்து சாப்பிட வேண்டாம். இதை பார்த்தா என் பட்டணம் பெரிது என்றாய்! சுதந்திரமில்லாமல் யாருக்கோ பயந்து பயந்து வாழும் உன் வாழ்வும் ஒரு வாழ்வா..!உனக்கு வெட்கமாக இல்லை. என் ஊரில் ராஜா போல் என் இஷ்டப்படி ஓடி விளையாடும் நான் எங்கே இப்படி அடிமை வாழ்வு வாழும் நீ எங்கே? இந்த வாழ்க்கையையா சொர்க்கம் என்பது போல் பெருமையாக சொன்னே!
எனக்கு சொர்க்கம் என் ஊரு தான்பா!
நான் என் ஊருக்கே போகிறேன் என்று அன்றே தன் ஊரைத்தேடி மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு ஓடியே போய் விட்டதாம்! 
இக்கதை நமக்கு என்ன சொல்வது என்ன..?
சொர்க்கமாயிருந்தாலும் நம்மூரு போல வருமான்னு நீங்க நினைக்கிறிங்க தானே?

24 கருத்துகள்:

 1. அருமையான கதை சகோ/தோழி! நிஷா! இது நம் மக்களின் வாழ்க்கையோடு ஒத்துப் போவது தெரிகின்றதே. நாம் எல்லோரும் இப்போது பட்டணத்து எலியின் வாழ்க்கை முறையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் எல்லாவற்றையும் இழந்து!! எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றோம். ஆனால், இந்த வாழ்க்கையிலும் நாம் இந்த நிமிடத்தை வாழ்ந்து தைரியமாக சந்தோஷத்தை அனுபவிக்கக் கற்றுக் கொள்ள வேண்டியச் சூழல்...

  அருமையான கதை குட்டிகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிஷா என்றே அழையுங்கள். குழப்பம் வேண்டாம். சகோதரி தோழியாகவும் தோழி சகோதரியாகவும் இருக்க முடியும் தானே?

   எல்லாமே அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை நிலை தானே? அவரவர் அனுபவிக்கும் போது தான் புரியும்.

   தங்கள் பின்னூட்டத்துக்கும் தொடர் ஆதரவுக்கும் நன்றி.

   நீக்கு

 2. பட்டணத்திற்கு போனாலும் பூனைகள் இல்லாத வீட்டிற்கு சென்று வசிப்பதுதான் ஸ்மார்ட்டான எலி செய்யும் வேலை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூனைகள் இல்லாத வீடா? ம்ம் சரி சரி!

   கருத்திடலுக்கும் வருகைக்கும் நன்றிங்க!

   நீக்கு
 3. நினைக்கலாம்... செயல்படுத்த முடியுமா... ஹூம்ம்.. பெருமூச்சுதான்..

  சிறுவர்களுக்கான கதை மட்டுமல்ல.. பெரியவர்களுக்கும் சேர்த்துதான் நல்ல கருத்து சொல்கிறது. பாராட்டுகள் நிஷா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அக்கா?
   எனக்கு சுவிஸ் தான் பிடிக்கும்.

   கருத்திடலுக்கு நன்றிக்கா!

   நீக்கு
 4. நல்லதொரு சிறுவர்கதை! பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் இந்தக் கதையை படித்ததும் உடனே அபுதாபியை விட்டு உடனே தி கிரேட் தேவகோட்டை போயிடலாம்னு நினைக்கிறேன்.

  ஒரேயொரு டவுட்டு எலி கூலி வேலை செய்தாவது கூலிங்கிளாஸ் வாங்கி கிடலாம் சரி செல் போணுக்கு சிம் கார்டு வாங்குவதற்க்கு ரேஷன் கார்டு கடையில் கேட்டால் என்ன செய்வது ?

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட்டாடாட்ட்ட்ட்டா? கூலி வேலை செய்து கூலிங்க் கிளாய் வாங்க லாம் எனும் டாபிக்கை நான் மறந்தே போயிட்டேனே சார்.

   ரேசன் வாங்கும் கடையில் போய் நீங்க ஏனுங்க செல் போன் கேட்குறிங்க? செல் போன் கடைக்கு செல் லணும் என யாருமே சொல் லித் தரலையாங்க சார்!

   தொடர் ஆதரவுக்கு ரெம்ப நன்றிங்க !

   நீக்கு
 6. நல்ல கதை. ஆனால் அவரவர் பழக்கத்துக்குட்ப்பட்ட வாழ்வே அவரவர்க்கு சிறந்தது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நிஜம். எலி வளையானாலும் தனி வளையே சிறப்பு!

   கருத்திடலுக்கு நன்றிங்க!

   நீக்கு
 7. நல்ல கருத்துள்ள கதை
  கிராமம் விட்டு காங்கிரீட் காடுகளில்
  வசிப்போருக்கும் இது பொருந்தும்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்.

   ஒய்யாரக்கொண்டையாம் தாழம்பூவாம். உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும். அது போல் தான் அனைத்தும். உள்ளே போனால் தான் அனைத்தும் புரியும்.

   கருத்திடலுக்கும் வருகைக்கும் நன்றி.

   நீக்கு
 8. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமான்னு ஊருக்கே திரும்பிப் போயிருச்சாக்கும்... அங்க நயன்தாராவைப் பார்க்கலாம்ன்னு சொல்லியிருந்தா ஒருவேளை பட்டிக்காட்டு எலி பட்டணத்துலயே இருந்திருக்குமோ என்னவோ...

  எது எப்படியோ... நம்மூருக்கு ஓடிடனுங்கிற நினைப்பை அதிகமாக்கிவிட்டது இப்பதிவு...

  அருமை அக்கா....

  பதிலளிநீக்கு
 9. இந்தக் கதை நமக்கு சொல்லும் உண்மை இதுதான் சொர்க்கமாயிருந்தாலும் நம்மூரு போல வருமான்னு நீங்க நினைக்கிறிங்க தானே?

  இந்தக் கதை பட்டணத்திற்கு தொழிலுக்கு வந்த நமக்கும் பொருந்தும் நமக்கு இஸ்டப்பட்டதை இஸ்டப்பட்ட நேரம் செய்ய முடியாத அடிமை வாழ்வும் உண்டு

  வந்து பாருங்கள் எங்கள் கிராமப் புரங்களில் எவ்வளவு சுதந்திரம் எவ்வளவு மகிழ்வு எவ்வளவு ஒற்றுமை

  கதை கற்றுத்தந்த பாடம்


  சொர்க்கமாயிருந்தாலும் நம்மூரு போல வருமா?

  என்பதுதான்

  நன்றி அக்கா இன்னும் தொடருங்கள் இது போன்ற பயனுள்ள வற்றை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிங்க தும்பி சார்1

   உங்கள் கருத்திடலுக்கு ரெம்ப நன்றி.
   ஆனால் நான் ஊருக்கு வர மாட்டேனே!

   நீக்கு
 10. இஸ்டப்படாமல் கஸ்டப்படுகிறோம் கதை அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் இஷ்டப்பட்டுத்தான் கஷ்டப்படுகின்றேனாக்கும். ஹாஹா ஹாசிம். பின்னூட்டலுக்கு நன்றிப்பா. முடியும் போது வாருங்கள்.

   நீக்கு
 11. கருத்துள்ள கதை. சொர்க்கமே என்றாலும் நம்மூரு போலாகுமா.....

  நம்மில் பலரும் இப்படித்தான் இருக்கிறோம். வேலை நிமித்தமாக வெளியே வந்துவிட்டு திரும்பும் வாய்ப்பு எப்போது என்று காத்துக் கிடக்கிறோம் -

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்திடலுக்கு நன்றிங்க ஐயா. தொடர்ந்து வாருங்கள்.

   நீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!