16 நவம்பர் 2015

பெண்!

பேதைபெண்ணவள் கபடம் அறியாள்
பெதுமையாயிவள் மனதினுள் நுழைபவன்
மங்கையானதும் மறைவாய் ஓடுவான்!
மடந்தையாயிருந்தே சுமைகள் சுமப்பாள்!
அரிவையாவள் மனக்கலக்கங்கள் தீர்க்க
தெரிவையானவள் திடப்பட்டு நிற்பாள்!
ஆயிரம் உறவுகள் தானிருந்தாலும்
பேரிளம் பெண்ணவள் அனுபவம் பேசுமாம்!
பெண்ணிவள் வாழ்விலும் பருவங்கள்
உண்டெனதருணங்கள் உணர்ந்தவன் 
தரணியை ஜெயிப்பானே!
தள்ளாத வயதிலும் தன்மானத்தோடு
தங்கமாய் ஜொலிக்கும் மாதரே  நீர் வாழி!

14 கருத்துகள்:

  1. சிறப்பான வரிகள்... தொடர வாழ்த்துகள்...

    உங்கள் தளத்தில் உறுப்பினராக (Followers) சேர்ந்து விட்டேன்... தொடர்கிறேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தன்பாலன் சார்!

      பதிவுலகம் வந்த சில நாட்களிலேயே தங்கள் அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ந்தேன். தங்களை குறித்தும் தங்கள் பணிகள் சிறப்புகள் குறித்தும் படித்து அறிந்து ஆச்சரியப்பட்டிருக்கின்றேன்.

      நன்று! நன்றி சார்!

      என்றும் தங்கள் வழிகாட்டலையும் வழி நடத்தலையும் நாடி......

      நீக்கு
  2. பெண்ணின் பருவங்களை வகைப்படுத்தி எழுதிய கவிதை சிறப்பு! தொடருங்கள்! இரண்டு நாள் முன்னதாகவே உங்கள் தளம் வர வேண்டியது. மின் இணைப்பு தடைபட்டதால் வரமுடியவில்லை! தொடர்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிங்க சார்,, அங்கே மழை வெள்ளம் பாதிப்பு என அறிந்தேன். தங்கள் சூழலில் எப்படி இருகின்றது? அனைவரும் நலம் தானே?

      நீக்கு
  3. நல்லதொரு சிந்தனை வார்ப்பு நன்று பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சார்

      உங்கள் வருகை தொடர்வதில் மகிழ்ந்தேன்

      நீக்கு
  4. கவிதை அருமை அக்கா...
    இவ்வளவு நாளும் எங்கே இருந்தன இப்படிக் கவிதைகள் எல்லாம்...
    சூப்பர்... கலக்குங்க....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கேயும் வைத்திருக்கவில்லை. நான் ஏற்கனவே முத்தமிழ் மன்றம், தமிழ் மன்றம், சேனைத்தமிழ் உலா போன்ற இணைய தளங்களில் எழுதியவைகள் நிரம்ப உண்டேப்பா! நீங்கள் படிக்கும் வாய்ப்பு வரவில்லை என நினைக்கின்றேன்.

      உங்கள் ஆதரவுக்கும் ஊக்கமூட்டலுக்கும் ரெம்ப நன்றி குமார்!

      நீக்கு
  5. உங்கள் தள அறிமுகம் பற்றிக் குமார் சொன்னதுமே எங்கள் தளத்திலும் இணைத்து, உங்கள் தளத்திலும் இணைந்துக் கருத்துகள் இட நினைத்து மழையினால் அவ்வப்போது ஏற்பட்ட மின் தடையினாலும், இணையப்பிரச்சினையினாலும் வர முடியாமல் போனது. இதோ வந்துவிட்டோம்...

    எங்கள் தளத்தில் நாங்கள் இருவர் நண்பர்கள் எழுதுகின்றோம். ஒருவர் துளசிதரன், பாலக்காடு, மற்றொருவர் கீதா. சென்னை.

    அருமையான கவிதை சகோ! பெண்ணின் பருவங்கல் விவரித்து....வாருங்கள் கலக்குங்கள்! உங்கள் கடவுளைக் கண்டேன் இனிதான் பார்க்க வேண்டும். எங்கள் தொடர் இடும் வரையில் வேறு தொடர்பதிவுகளைப் படிக்கவில்லை.
    இதோ செல்கின்றோம்....பதிவுலகிற்குத் தங்களை வரவேற்கின்றோம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரெம்ப நல்லதுங்க ! உங்களை குறித்த அறிமுகத்துக்கு நன்றி
      மழையினால் அனைவரும் பாதிக்கபட்டிருப்பதை அறிந்து மனம் கஷ்டமாக இருக்கின்றது. ஆனால் யார் யாருக்கு பரிதாபப்படுவது என புரியாதபடி இப்போது எங்கும் குழப்பமும் அழிவுகளுமாய் இருக்கின்றதே!

      வருகைக்கும் தருகைக்கும் நன்றி
      தொடருங்கள்.

      நீக்கு
  6. தள்ளாத வயதிலும் தன்மானத்தோடு
    தங்கமாய் ஜொலிக்கும் மாதரே நீர் வாழி

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!