15 நவம்பர் 2015

கடவுளைக்கண்டேன் - தொடர் பதிவு!

பூவைப்பறிப்பதற்கு  கோடாரி எதற்கு எனக்கேட்கும் கில்லர்ஜி
கையில் நகச்சுத்தி வந்து  ரெம்ப  சீரியஸா ஹாஸ்பிடல்ல இருக்கின்றாராம் அவரை சுத்தி  20 டாக்டர்களும், 30 நர்சுங்களும்  நின்று கொண்டு கடவுள் வருவாரா? சம்மதம் தருவாரா எனகாத்துக்கொண்டிருப்பதாகவும்... கடவுள் வரவேண்டும் எனில்  இப்பூவுலக தமிழ்ப் பதிவர்கள் அனைவரும் கடவுளை சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டும் எனவும் அக்கோரிக்கைகளை  கடவுள் நிறைவேற்றிய பின் தான் டாக்டர்களை சந்தித்துஆப்ரேசனுக்கு அனுமதி அளிப்பார் எனவும் வானத்திலிருந்து  அசரிரி வந்ததாம். 

கனவில் அந்த சத்தம்  கேட்டு பதறிஅடிச்சு எழுந்த சிந்தனைகளை சிறைகௌ விரித்து  பறக்க வைக்கும் நம்ம  மனசு குமார் தன்னோட இன்னும் பத்து பேரு சேர்ந்து போய் கோரிக்கை வைத்தால் கடவுள் சீக்கிரமே தன்னை சந்திக்கவே ஒப்புக்கொள்வார் என  நினைத்து மனுஎழுதிக்கொண்டு  சிபாரிசுக்கு ஆல்ப்ஸ் தென்றல் நிஷா  பேரையும் முதலாவதா போட்டு விட்டார். 

நிஷாவும் அவர் கூப்பிட்டாரே என  பின்னாடி போய்.. கனவில் கடவுளை கண்டேன், கடவுளை கண்டேன் என கண்டதா சொல்லிக்கொள்கின்றார்களே! கடவுளை எங்கே போய் கண்டிருப்பார்கள். அவர் ரெம்ப தூரத்திலா இருக்கின்றார்? என ஒன்றும் புரியாமல்   ஞே என விழித்துகொண்டு நிற்கிறாராம்!

கடவுள் இரவும் பகலும் இருபத்து நான்கு மணி நேரமும் இந்த   ஆல்ப்ஸ் தென்றல் நிஷா வீட்டில் நிரந்தரமாக வாடகை தராமல் தங்கி ஓசியில் சாப்பிட்டு  தூங்கி கொண்டிருக்கின்றார் எனும் ரகசியம் இன்னும் குமாருக்கு தெரியாத வரைக்கும் நல்லது தான்!

நல்லது செய்தால் என்னை உயர்த்தும் என் தேவனுக்கே ஸ்தோத்திரம் என சொல்வதும்... தீமையோ துன்பமோ நடந்தால்... எல்லாமே நன்மைக்கு தான்.. என் கூட கடவுள்  இருக்க என்னால் தாங்க இயலா துயர் என்னை அண்டாதே எனும்  தன்னம்பிக்கையும், அப்படி எனக்கு  பெரிய கஷ்டம் தந்து  விடுவாரா என் கடவுள் எனும் அகம்பாவமும்.. அகம்பாவம் போக்க  வந்த துயர்முன்னே என் தப்பை உணர செய்ய  இதை அனுமதித்தீரோ என உரிமையாய் திட்டுவதுமாய்.. தினம் தினம் ஒவ்வொரு நொடியிலும் அவரை நினைத்து அவருடன் பேசிட்டு நான் காண்பதில் கேட்பதில்  எல்லாம் அவரைத்தானே கண்டு கொண்டிருக்கின்றேன். 

இருந்தாலும்  எனக்குள்ளும் அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்இருக்கத்தான் செய்கின்றது.. அத்தோடு மனசு குமார் ரெம்ப நம்பிக்கையாக தன்னோட அக்காவை கடவுளை சந்திக்க வைக்கணும் என ஆசைபட்டு முதல் ஆளா நிற்க வைத்திருப்பதால்... குமாருக்காக நானும்எங்கூடவே இருக்கும் கடவுளிடம் என் ஆசையை சொல்லலாம் என முடிவு செய்து விட்டேன். 

சரி ஸ்டாட் செய்திரலாமா?

என்னோட வேண்டுதல்கள்! 

1.நிஷா_ என்னோட 13 வயதில் எனக்கு ஏற்பட்ட விபத்தும்   இரண்டாம் மாடியிலிருந்து பின்னந்தலை அடிபட விழுந்ததும் அதனால் தொடரும் அனைத்து பாதிப்புக்கள்  காது, கண் , தலை என தொடரும் வலிகள் அனைத்தும் என்னை விட்டு நீங்கி நான் மீண்டும்  13 வயதுக்கு முன்னாடி இருந்தது போல்  படிப்பில் விளையாட்டில்  என அனைத்திலும் முதலாகிடணும். அப்படியே என் டாக்டராகும் கனவும் நிறைவேறணும்....!

கடவுள்> அடப்போம்மா!இதை என்னால் நிறைவேற்றவே முடியாதும்மா. என் கிருபை உனக்கு போதும் மகளே போதும்!  உனக்கு எல்லா திறமையையும் நான் தந்திட்டால் நாளைக்கு என்னையே நீ யாருன்னு கேட்பே மகளே!

 நிஷாவின் மனசாட்சி> அவர் சொல்லிட்டார்..ஆனால் நான் தான் இன்னும்  ஏன் இப்படி அனுமதித்தே என அவரை  தொல்லை செய்திட்டே இருக்கேனாம். பாவம் கில்லர்ஜி சார்!

2.நிஷா_ இந்த பூமியிலும் சரி  பூமி தாண்டிய அண்ட லோகங்களிலும் சரி இனிமேல் பசி என்னும் சொல்லே இருக்க கூடாது.. யாருக்கும் பசிக்கவே கூடாது. இளமையில் கொடுமை வறுமை என்றால் வறுமையில் கொடுமை பசிதானே. அதை மொத்தமாக இல்லாமல் போக செய்யும் படி எல்லோருக்கும் எல்லாமும்  உணவுப்பொருளிலாவது  முழுமையாகிடைக்க வேண்டும் கடவுளே! 

3.கடவுள்> மகளே! பூலோக மக்கள் அனைவரும் தினம் அதிகாலை எழுந்து உடல் களைக்க தோட்டத்தில் வேலை செய்து  தினம் தினம் தம் வியர்வையை நிலத்தில் சிந்தி விளையும் காய்கனிகளை புசிக்கின்றோம் என வாக்கு கொடுக்க சொல்லு மகளே நான்  நீ கேட்டதை இதோ ஒரு நொடியில் நிறைவேற்றி வைக்கின்றேன் என அவர் என்கிட்ட ஏட்டிக்கு போட்டியால்ல கேட்கின்றார்...

நிஷாவின் மனசாட்சி> ஐயகோ... நம்ம கில்லர்ஜி அண்ணாவின் நகச்சுத்தி.........!ஆப்ரேசன்... கோவிந்தாவா?  குமாரு உனக்கு இதெல்லாம் தேவையா.. உன்னை போய் கடவுளை   சந்தித்து கேளு என சொன்னால் நீ என்னத்துக்கு இந்த   ஆல்ப்ஸ்தென்றலை கூட்டிகிட்டு போனேன்னு குமாருக்கு திட்டுறது உங்களுக்கு கேட்குது தானேங்க பெரியவர்களே!!

4.நிஷா_ இந்த உலகத்தில் பணம் நோட்டு, குடிசை, பங்களா, நகை நட்டு எனஎதிலுமே ஏற்றத்தாழ்வு எதுவுமே இருக்க கூடாது கடவுளே! எல்லோருக்கும் எல்லாமும் சமமாய் இருக்கணும். எல்லோரும் ஒரே மாதிரி வீட்டில் ஒரே மாதிரி நகை  நட்டு சொத்து பத்து என வைத்து இருக்க வேண்டும்.  உதவி செய்யுங்களேன் கடவுளே!

5.கடவுள்> ரெம்ப சுலபம் என் மகளே சுலபம்..  நீங்கல்லாம்  உங்களிடம் இருக்கும் சொத்து,  நகையையெல்லாம்   வேண்டாம் என சொல்லி  குப்பை பையில் வைத்து கட்டி வீசி விடுங்கள்..  நான் அதையெல்லாம் தெருத்தெருவாய்  போய்  பொறுக்கி எடுத்து சரி சமமாய் உங்களுக்கே பிரித்து தருவேன்.  டீலா நோ டீலா மகளே!

நிஷாவின் மனசாட்சி> அட்ட்ட்ட்ட்டா என்னப்பா இது. இந்த கடவுள் ரெம்ப பொல்லாதவரா இருக்கின்றாரே.. அப்படின்னால் நம்ம சுவிஸ் வங்கியில் இருக்கும் பிளாக் மணில்லாம்  எடுத்து கொடுத்திருவாங்களா?.. நாங்க சுவிஸ்ல இருக்கோம்னு இனி பெரும்ம்ம்ம்ம்ம்ம்மையா சொல்லிக்கமுடியாதா?  சுவிஸும் மத்த நாடுகளும் ஒன்று போலாகிருமா?

நோ...வே --- சுவிஸ் வங்கில எல்லார் பிளாக் மணியும் இருக்கட்டும். அப்போது தான் எங்ஊருக்கு பெருமை. நாங்கல்லாம்  பெரியவுகளாக இருக்கலாம்ல... சுவிஸ்னால் சும்ம்ம்ம்மாவா? அதிரும்ல!


அப்படின்னால் கில்லர்ஜி ஆப்ரேசன் ?? 



நானா குமாரை என்னை சிபாரிச்சுக்கு கூட்டித்து போ தம்பின்னு கெஞ்சினேன்.. இழுத்திட்டு போனார்ல .. கில்லர்ஜிகிட்ட மாட்டிகிட்டு ஙே  என முழிக்கட்டும்.  


6.நிஷா_ கடவுளே கடவுளே கடவுளே  நீ தானே என்னையும் எல்லோரையும் படைத்தே.. படைத்த நீயே ஏன் கடவுளே மரணம் எனும் ஒன்றை யும் தந்து எங்களை பிரிக்கின்றாய்! மரணமே இல்லாத ஒரு வரம் தாருங்கள் கடவுளே!

7.கடவுள்> சரிம்மா நீ சொல்லும் படியே செய்து விடுவோம்!  இந்த உலகத்தில் இருக்கும் நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாகி எனக்கு என ஒரே ஒரு பெயரை வைத்து  கோயில், சர்ச், மசூதி என தனியாய் குடியமர்த்தாமல் நான் உங்க மனசுக்குள் மட்டும் குடியிருக்க இடம் தரணும். என்னை தவிர எவனுக்கும் அவன் சொன்னான் இவன் சொன்னான்னு என் அண்ணன் தம்பி வந்து சொன்னாலும் கேட்க கூடாது.  என்னம்மா நிஷா நான் சொல்வது உன் காதில் நல்லா கேட்குது தானே?

நிஷாவின் மனசாட்சி> இது என்னப்பா இம்மாம் பெரிய குண்டை தூக்கி போடுறாரு இந்தக்கடவுள். நாமல்லாம்   நம்ம மனசாட்சி சொல்றதை கேட்கிற தில்லையே தவிர ஊரில இருக்க அத்தனை பேர் சொன்னதையும் கேட்டு தானே எதுன்னாலும்செய்வோம் இது நடக்குற விடயமா சொல்லுங்க. அதிலயும் ஒரே கடவுளாம் கடவுள். 

நிஷாக்க்க்க்கா! எங்கூர் தேவகோட்டை ஜமீன் நானாத் தாதாஜி  மீசைக்கார அண்ணாச்சிக்கு சீக்கிரம் குணமாக வரம் கேளுன்னால் நீ என்னா பண்ணிட்டிருக்கேக்கா?  
குமாரின் பல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் நற நற....!

8.நிஷா_ சரிங்க கடவுளே! உங்களுக்கும் இல்லை எனக்கும் இல்லை... இந்த அரசியல் வாதிங்களையும் சாமியார்களையும்  இந்த பூமியை விட்டு நாடு கடத்தி கூட்டிகிட்டு போயிருங்களேன்! நாங்க நிம்மதியா இருப்போம். இவங்க தான் தாங்க சொத்து சுகம் சம்பாதிக்கணும் என ஒன்னும் தெரியாத அப்பாவி மக்களை  மதம் எனும் பெயர சொல்லி தீவிரவாதிங்களை உருவாக்கி கொண்டே இருக்கின்றார்கள். நாங்கள் பாவம் தானே கடவுளே!

கடவுள்>  நிஷாம்மா நான் தூங்கிட்டிருக்கேன் என்னை  தொந்தரவு செய்யாதேம்மா! விடும்மா!

நிஷாவின் மனசாட்சி> ம்ம்ம்கூம் கடவுள் தூங்கிட்டிருக்காராமே!அப்ப இதுவும் க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்கயாவா! கில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லர்  ஜீஈஈஈஈ கிட்ட மாட்டிக்காதே நிஷா! எங்காச்சும் ஓட்ட்ட்ட்டீரு நிஷா!

9.நிஷா_  சுவாமியே சரணம்! அடுத்த வருட வலைப்பதிவர் மாநாட்டை  சுவிஸில்   ஆல்ப்ஸ்தென்றலின்  ஊரில் நம்ம  Hegas Catering, Fine Indian & Swiss Food Services  தலைமையில் வைக்க அருள் கூரும் சுவாமி. இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை தமிழ் வலைப்பதிவர்களும் நம்ம ஹோட்டலுக்கு வந்து சாப்பிட்டு போய் புதுக்கோட்டையில் நடந்த பதிவர் மா நாட்டை விட பெஸ்ட்டு பெஸ்ட்டு  ஆஹா ஓஹோன்னு மட்டும் எழுதணும் கடவுளே!  

கடவுள்> என்னம்மா இப்படி பண்ணுறியேம்மா! உனக்கு வேற வேலையே இல்லையாம்மா! சும்மா நங்கு நங்குன்னுட்டு  உன் கம்பெனிய பத்தி தான் எல்லா இடமும் பேசுவியாம்மா! போம்மா  போய் அடுப்படில ஏதாகிலும் வேலை இருந்தால் பாரும்மா!

நிஷாவின் மனசாட்சி>  நோ கடவுளே நான் ஒவ்வொரு ஞாயிறும் சர்ச்சுக்கு ஒழுங்கா வந்தேன்ல.. காணிக்கை போட்டேன்ல.. ஜெபிச்சேன்ல.. நீ எப்படி நான் கேட்டதை தரமாட்டேன்னு சொல்லுவே!  நம்ம  ஐயாக்கள் அண்ணாக்கள், தம்பிக்கள்,அக்காக்கள் தங்கைகள் எல்லாம் இதை வைத்தாவது சுவிஸுக்கு வந்திட்டு போகட்டும் என நினைச்சால் எனக்கே வேட்டு வைக்கிறியா கடவுளே.. இனி உனக்கு காணிக்கை கட்!

10.நிஷா_  கடைசி கடைசியா கேட்கின்றேன் கடவுளே!   என்னை  பெரிய்ய்ய்ய்யா ஆளுன்னு எல்லோர் கிட்டயும்  சொல்லி விளம்பரப்படுத்தும் எங்க குமாருக்காக கேட்கின்றேன் கடவுளே.. என் தும்பியையும் சீக்கிரமாக  வலைப்பூவில் பதிவு எழுதும் ஆர்வத்தினை கொடுத்து விடு கடவுளே! என்னை விட தும்பி நல்லா எழுதும் கடவுளே!

கடவுள்> ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா  உன் வேண்டுதல் சீக்கிரம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் மகளே! ஆனால் உன் தும்பி காதல் தோல்வி கவிதை மட்டும் எழுதவே கூடாது.  சொல்லிட்டேன்.. மீறி எழுதினால்.. கில்ல்ல்ல்ல்ல்ல்ல்லார் ஜி ??  

நிஷாவின் மனசாட்சி>  ஐயகோ! இது நடக்கும் காரியமாங்க! தும்பிக்கு அறூபது வயதாகி தலையெல்லாம் நரைச்சாலும் என்  மனைவியை புதிது புதிதாக்காதலிக்கிறேன் அக்கான்னு என் காதை அறுத்திட்டிருப்பானே! 

கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் தரமாட்டான்னு இதை தான் சொல்வார்களாம்!

வெரி ஸாரி கில்ல்ல்ல்ல்ல்லர்ஜி.... பெட்டர் தென் நெக்ஸ்ட் ரைம்! நகச்சுத்திக்கு ஆப்ரேசனை விட நகத்தை  கழட்டி கொடுத்திட்டால் சரியாகிரும். நீங்க கவலையே படாதிங்க கில்லர்ஜி.... பூப்பறிக்க கோடரி தேவையே இல்லை  கில்லர்ஜி சார்!  நான் என்கையாலேயே பறித்து விடுவேன் சார். 

குமாரின் வாய்ஸ்! அட போக்கா நீயும் உன் மனசாட்சியும்...  நாலும் தெரிந்த மாதிரி பீத்திகிட்டியேன்னு  உன்னை எனக்கு சிபாரிசுக்கு வா என கூப்பிட்டால் இப்படியா சொதப்பி விடுவே!  உன்ன்ன்ன்ன்ன்ன்ன்னை!உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

கடவுளை நான் தேடிப்போய் சந்திக்க அவசியம் இல்லாதபடி அவர் என்னை சுத்தி அரணாய் பாதுகாத்து வருகின்றார் எனும் அசைக்கமுடியாத நம்பிக்கை என்னுள்! தேவைகளும், ஆசைகளும் இல்லாதபடியால் இல்லாதவைகள் குறித்த கவலைகள் என்னுள் இல்லை. 

அந்த நம்பிக்கைக்கு ஏற்ப இன்று வரை என் தேவைகள் குறைவானதும் இல்லை. எனக்கு எது தேவையே அவைகளை எனக்கென நிச்சயித்த நாளில் கொடுத்து அன்பான கணவர், அழகும் அறிவுமான இரு குழந்தைகள். ஏனையோர் ஆச்சரியமாய் பார்க்கும் படி நல்லதொரு தொழில் நிறுவனம் நிர்வாகம் அதன் வளர்ச்சி என என்னுள் என்னையும் தன்னையும் உயர்த்தும் இறைவனுக்கே அத்தனை புகழும். 

இருப்பினும் மிகச்சுவாரஷ்யமான பதிவொன்றினை தொடங்கி அதில் நானும் பங்கிடும் படியாய் வாய்ப்பினை தந்த  கில்லஜி சார், குமார் ஆகியோருக்கும் இதைப்படிப்போருக்கும், கருத்திட்டு ஊக்கம் தருவோருக்கும்  நன்றி1நன்றி!

 தொடர்ந்திட.... 
நானே இங்கே ரெம்ப புதியவள். எனக்கு இன்னும் கொஞ்ச காலம் வேண்டும், தெரியாதவர்களை இணைத்தால் அவர்கள் கோபித்து விடுவார்களோ என தயக்கமாக இருக்கின்றது.   இதுவரை  யாரெல்லாம் இணைக்கப்பட்டார்கள் எனவும் புரியவில்லை. இருப்பினும் நான் அறிந்த இருவரை இங்கே இணைக்கின்றேன் . மன்னிக்க.... 

பத்துப்பேரை கட்டாயம் பரிந்துரைக்க வேண்டும் எனில் ஒரு நாள் நேரம் கொடுங்கள். 

வரதட்சனைக்கெதிராக மிகத்தீவிரமாக குரல் கொடுப்பவரும் எழுதுபவரும் கடைப்பிடித்தவரும் அன்புதம்பியும் சேனைத்தளபதியுமானவர். 

இவருக்கு என்னை தெரியாது. இவரின் தோட்டம் பதிவுகள் மிக அத்தியாவசியமானவைகளாயும் எம் தேவைகளை பூர்த்திப்பதாயும் இருப்பதனால் இவரின் பதிவுகள் பிடிக்கும். 







56 கருத்துகள்:

  1. அக்கா...
    கலக்கிட்டீங்க...
    ரொம்ப அருமையா இருக்கு...
    பத்துப் பேரெல்லாம் தேவையில்லை... இது போதும்...
    குமாரு... குமாருன்னு குமாரை இழுத்து விட்டு வேடிக்கை பாத்துட்டீங்க போல.. இனிமே இவன் தொடர்பதிவுன்னு வந்தா நம்ம பக்கமே வரக்கூடாதுன்னு ஒரு நல்ல எண்ணம் போல...:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா! குமார் ரெம்ப நன்றி!
      நேற்றிரவு ஹோட்டலில் இருந்து வரும் போதே பதினொரு மணி. நீங்கள் வேற பத்து பேரை பரிந்துரைக்கணும் என சொன்னதில் பயந்து போய் இருக்கும் ஒன்றிரண்டு பேரையும் வேற யாராவது பிடித்து விடுவார்களோ என போட்ட பதிவுப்பா இது. உங்க பேரை இழுத்தது ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்ம்மா!

      நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எது எப்படியோ, கில்லர்ஜி மற்றும் ’பரிவை’ சே.குமார் புண்ணியத்தில் எனக்கு, நல்ல எழுத்து திறமை உள்ள ஒரு வலைப்பதிவர், சகோதரி ஆல்ப்ஸ் தென்றல் “நிஷா” அவர்களின் அறிமுகம் கிடைத்துள்ளது. வாழ்த்துக்கள்.

      ஒவ்வொரு பூக்களும் சொல்கின்றதே; வாழ்க்கை என்றால் போராட்டமே – என்றபடி உங்கள் பதிவிலுள்ள வேண்டுதல்கள் உங்கள் நம்பிக்கையைத் தெரிவிக்கின்றன. ஆண் – பெண் வித்தியாசம் இல்லாமல், எல்லோருக்கும், எல்லா உயிரினத்திற்கும் வாழ்க்கையே போராட்டம்தான். ‘இதுவும் கடந்து போகும்’ என்ற நம்பிக்கையில் வாழ்க்கையைத் தொடருவோம்.

      (எழுத்துப் பிழையை நீக்கி இருக்கிறேன்)

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! சூப்பர் ஐயா! எனக்கு ரெம்ப ரெம்ப பிடித்த பாடல் ஒவ்வொரு பூக்களுமே சொல்கின்றதே!

      மனிதா ! மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும் அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்.

      அத்தனை ஆழமான் வரிகள் கொண்ட பாடலை என் பதிவுக்குள் உதாரணமாக்கியதில் மகிழ்ச்சி ஐயா!

      உங்கள் கருத்துக்கள் தொடரட்டும் ஐயா..அன்பில் நிலைத்து நட்பை ஜெயிப்போம்.

      நீக்கு
  3. அருமை அக்கா வித்தியாசமான பதிவு தொடருங்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஹாசிம்! உங்களயும் அழைத்திருக்கின்றேன். நீங்கள் தொடர்வீர்கள் தானே?

      நீக்கு
  4. உங்கள் வலைத்தளத்தை தமிழ்மணம், தேன்கூடு, INDIBLOGGER ஆகிய திரட்டிகளில் இணைக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் மணத்தில் இணைக்க பதிவு செய்தேன், இரண்டு தொடக்கம் நான்கு நாட்களில் பதில் தருவதாக சொல்லி இருக்கின்றார்கள். அவர்கள் மெயில் வந்தபின் தான் இணைக்க முடியும்.

      தேன் கூட்டில் பதிவு செய்ய இயலவில்லை. பத்து தாவைக்கும் மேல் முயன்றேன், பதிவு செய்யவே ஏற்கவில்லை என சொல்கின்றது.

      INDIBLOGGER முயற்சி செய்கின்றேனையா! உங்கள் அன்புக்கும் வழிகாட்டலுக்கும் நன்றி!

      என்றும் இதே அன்பொடு தொடருங்கள்.

      நீக்கு
    2. எனது ப்ளாக்கிலும் இணைக்கலாம் http://tamil-bloglist.blogspot.in/ வருகை தாருங்கள்

      நீக்கு
    3. வந்தேன்!

      அழகாக இருக்கின்றது. என் தள இனைப்புக்காக நன்றிங்க!

      நீக்கு
  5. மனசாட்சியுடன் பேசுவதால் உங்களுக்கு கடவுள் தேவைப்பட மாட்டார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலும் நம் மனசாட்சியே கடவுள் தான் அல்லவா? சட்டென தட்டுவதும் குட்டுவதுமாய் இருக்கும். ஆனால் இந்த பதிவில் மனசாட்சியே குழம்பிபோய் தானே இருக்கின்றது!

      உங்கள் கருத்திடலுக்கு நன்றி

      நீக்கு
    2. மனசாட்சி தான் கடவுள்...

      நீக்கு
    3. ஆமாம் சார்! எந்த காரியம் செய்தாலும் அதன் சரி பிழை நியாயத்தீர்ப்புக்களை நம் மனசாட்சியே சொல்லி தண்டித்து விடுகின்றதே! அதையும் தாண்டி தவறிழைப்பவனாய் தான் மனிதன் இருக்கின்றான்!

      நீக்கு
  6. வணக்கம் முதற்க்கண் பதிவுக்கு நன்றி தங்களது கோரிக்கைகள் நன்று

    தங்களின் இரண்டாவது ஆசை நன்று பொதுநலமிக்க வரவேற்கத்தக்கது.

    நான்காவது கொஞ்சம் இடிக்கிறது காரணம் எல்லோரும் சமநிலை என்றால் யாருமே உழைக்க மாட்டார்கள் எனது வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க வா என்று கூப்பிட்டால் நான் உனக்கு வேலைக்காரனா ? என்று கேட்பார்கள் காரணம் அவருக்கு பணம் தேவையில்லை மேலும் எனது வீட்டு கக்கூஸ் கழுவ நீ வா என்பான் காரணம் இவனுக்கு ஆள் வேண்டும் இவ்வளவு பணமிருக்கும் நாமேன் இழிவான வேலை செய்யவேண்டும் என்ற சிந்தை அதேநேரம் இவனுக்கும் ஆள் கிடைக்காது காரணம் எல்லோரிடமும் பணம் இருக்கிறதே இந்த சூட்சுமம் அறிந்த திருவாளியத்தவன் காரணத்தோடுதான் ஏற்றத்தாழ்வான வாழ்வுகளை மானி(ட்)டர்களுக்கு பிரித்து வைக்கின்றான் அதை மானிடர்களின் மூலமே மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று பிரித்துப்பேசும் எண்ணங்களையும் கொடுக்கின்றான் அவ்வழியில் உருவான சைத்தான்கள்தான் இன்றைய அரசியல்வாதிகள்.

    எட்டாவதும் கொஞ்சம் இடிக்கிறது அரசியல்வாதிகளையும், சாமியார்களையும் நாட்டை விட்டு கடத்தச் சொல்கின்றீர்கள் அவர்கள் யார் ? எங்கிருந்து வந்தவர்கள் ? நாம் வளர்த்த செல்வங்கள்தானே ஆம் நாம் அனைவருமே நமது பிள்ளைகளை இனி அரசியல்வாதிகளாக போகக்கூடாது என்று சொல்லி சொல்லி வளர்க்க வேண்டும் ஆனால் மாட்டோம் காரணம் நாமே கட்சியை வைத்துதானே கஞ்சி குடிக்கின்றோம் நமக்கு ஓசி கிரைண்டர், மிக்ஸி வேண்டும் இல்லாவிட்டால் வாழவே முடியாதே..

    அடுத்த வருடம் அனைத்து பதிவர்களும் தங்களது செலவில் ‘’ஸ்விஸ்’’ வரப்போகிறோம் என்பதை நினைக்கும் போதே சந்தோஷமாக இருக்கிறது.

    ஸூப்பர் நல்ல நகைச்சுவையுடன் பதிவை தந்தமைக்கு நண்பர் குமார் சார்பாகவும், எனது சார்பாகவும் நன்றி.. நன்றி.. நன்றி..

    ஆகமொத்தம் நண்பர் குமார் அவர்கள் பல்லைக்கடித்தது போல் எனது நெகச்சுத்திக்கு சிகிச்சைக்கு போனது விரலையே எடுக்கும் நிலைக்கு அனுப்பி விடுவீர்கள் போலயே..... இப்படித்தெரிந்து இருந்தால் நானே விரலை கடித்து துப்பி விட்டு சுண்ணாம்பை வைத்து அடைச்சிருப்பேன்.
    ஐயோ...... ஐய்ய்ய்ய்ய்யோ... சொக்கா என் விரல் போச்சே....

    அன்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாடியோவ்! நீண்ட பின்னூட்டம்... குமார் என்னைத்தான் பெரிய்ய்ய்ய்ய பின்னூட்டம் போடும் அக்கா என சொல்வார்னால் நீங்க என்னை விட பெரிய்ய்ய்ய பின்னூட்டம் போட்டிருக்கிங்க சார்.

      ஆனாலும் சூப்பர் பின்னூட்டம்.

      அப்புறம் நான்காவது பின்னூட்டம்... அதெதுக்கு எல்லாரும் சமம் என்றால் அல்லாவரும் அவங்கவங்க வேலையை தாங்களே செய்துக்க வேண்டியது தானே?
      நம்ம கையும் காலும் நல்லா ஜம்ம்முன்னு இருக்கும் வரை நமக்கு நாமே எல்லா வேலைகளையும் செய்துக்கணும் சார்.

      கண்டதும் கற்க பண்டிதன் ஆவான் என நம்ம பெரியவங்க சும்மாவா சொல்லிட்டு போனாங்க!

      நாங்க இங்கெல்லாம் நாங்கள் தான் துணி துவைக்கின்றோம், அயன் செய்கின்றோம், எங்க வீட்டுக்கு பெயிண்ட் செய்கின்றோம், பாத்திரம் கழுவுகின்றோம்,அட டாய்லட் கூட நாங்கதான் எங்க வீட்டில் கிளின் செய்கின்றோம். பொது விசேசம் என வரும் போது ஆளுக்கு ஒரு வேலையை பிரித்து வைத்து கொண்டு வேலை செய்கின்றோம் . நம் அத்தியாவசிய தேவைகளை நமக்கு நாமே செய்து கொள்ள நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

      பணமும் பதவியும் நாம் நமக்குள் போட்டுகிட்டவைகள் தான். இந்த மாதிரி இததுக்கு இன்னார் என பிரிவுகள் வெளி நாடுகளில் இல்லை. நம் நாடுகளில் தானே உண்டு...!

      இங்கே பிரதமரும் ஒன்றுதான், பொது ஜனமும் ஒன்றுதான். கடவுட்டும் இல்லை பேனரும் இல்லை.. அதனால் எல்லாரும் சமம் எனும் மன நிலைக்கு வர வெள்ளைக்காரனாய் தான் பிறக்கணும் என இல்லை.
      பேதங்கள் , ஏற்றத்தாழ்வுகள் நம் மனதளவில் மறையணும் சார். னம் எதிர்கால சந்ததியை ஜாதிமதம், பண ஏற்றத்தாழ்வில்லாமல் வளர்க்கணும்சார். பிள்ளைகளுக்கு சின்ன வயதிலிருந்தே உனக்கானதை நீயே செய்துக்கணும் என சொல்லி வளர்க்கணும்.

      எந்தக்காலத்திலோ சொன்னதை இக்காலத்தில் பேசிட்டிருக்க கூடாது என்பதோடு..ஜாதி இர்ண்டொழிய வேறில்லை என முண்டாசுக்கவி சொல்லி சென்றதும் அக்காலத்தில் தானே...

      உங்கள் கருத்துக்கு எதிர் கருத்துக்காக மன்னிக்கணும்.

      அடுத்த கருத்துக்குரிட பின்னூட்ட்டம் இன்னும் கொஞ்ச நேரத்தில் ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டான்ன்ன்ன்ன்ன்ன்ன்!

      நீக்கு
    2. அரசியல் வாதிகளும், சாமியார்களும் நம் சகமனிதர்கள் தான் சார். ஆனால் நம்மோட விரல் என்பதற்காக நாம் அதில் வளரும் நகத்தினை நறுக்காமலா விடுகின்றோம். எதுவும் ஒரு எல்லைக்கு மேல் பாதிப்பாக செல்லும் போது சம்பந்தப்பட்டவைகளை அவ்விடத்திலிருந்து நீக்குதல் தான் சிறப்பு. நம் உடலில் அங்கமாய் இருக்கின்றது என்பதற்காக உடலுக்கு வலி தருவதை எப்படி வெட்டி நீக்கி விடுகின்றோமோ அப்படித்தான் அரசியல் வாதிகளையும் சாமியார்களையும் செய்ய வேண்டும்.. அதான் கடவுளோடு சைத்தான்னு ஒருத்தனும் இருக்கான் என நீங்களே ஒப்புகிட்டிங்கல்ல.. நாம நம் கடவுள் சுபாவம் கொண்டு அவர்களை மாற்ற முயன்றாலும் சைத்தான் குணம் கொஞ்சமாவது அவர்களிடம் இருக்கும்.. மாறி விடும் என நினைத்து கவனியாது விட்டு விடும் நகசுத்துக்கு எப்படி விர்லை எடுக்க வேண்டிய சூழல் வருமோ அப்படித்தான் செப்டிக் ஆகி மொத்தமாய் இழப்பதை விட சம்பந்தப்பட்டவைகளை மட்டும் அவ்விடமிருந்து அகற்றுதல் தான் சிறப்பு. மன்னிப்பும், மருந்தும் பொறுமையும், அவர்கள் தனமைப்பட்ட பின் செய்துக்கலாம். அதற்கும் முன் அவர்களுள் இருக்கும் விஷம் மேன்மேலும் எங்கும் பரவாமால் காப்பது தான் முக்கியம் சார்.

      எங்க ஊரிலும் அரசியல் வாதிகள் உண்டு சார். ஆனால் அவர்கள் நாட்டு மேன்மைக்காக தான் சிந்திப்பார்கள். அவர்கள எங்க கூட எப்பவும் இருக்கட்டும் .

      உங்க கனவு நிறைவேறினால் தானே ஆப்ரேசன்..எப்படின்னல சுவிஸு வலைப்பதிவர் மா நாடு... நடக்காதே! ஆனால் நீங்க ன் நிஷா ஹோட்டலில் சாப்பிட்டு ஆஹா ஓஹோ சொல்லலாம்ல சார்.

      இந்தப்பதிவில் ஒரு விரல் தானே போச்சு. மத்த விரல்கள் எல்லாம் இருக்கில்லை அடுத்த கையால கூட தட்டச்சலாம் சார். கவலையே படாதிங்க!

      நீக்கு
    3. நமது வேலைகளை நாமே செய்ய வேண்டும் என்பதில் என்றுமே எனக்கு மாற்றுக்கருத்து இல்லை நமது வீட்டு டாய்லெட் கழுவதில் தவறென்ன ? சிலருக்கு அதுவே வேலையாக இருக்கின்றார்களே....

      இதை நான் எதிர் கருத்தாக நினைக்கவே இல்லை கருத்துகளை பரிமாறிக்கொள்ளும் பொழுதே அறிவு விரிவடைகிறது

      நான் ஸ்வில் வந்து இருக்கிறேன் ஆனால் ? தங்களது ஹோட்டலுக்கு வரவில்லை காரணம் எந்த இடத்தில் இருக்கிறது என்று தெரியாதே...

      எப்படியோ விரலை வெட்டி எடுத்து விடுவது என்று கங்கணம் கட்டி விட்டீர்கள்...

      நீக்கு
    4. ஹாஹா! சும்மா இருக்கும் நகத்தை சுத்தியாக்கி அதுக்கு 30 அழகான நர்சுங்கள் சுத்தி நின்று வேடிக்கை பார்க்கணும் என நீங்க மட்டும் ஆசைப்படலாமோ சார்?

      கில்லர்ஜி சார் என் தொடருக்கு ஏன் இன்னும் இலக்கம் தரவில்லை? குமார்ஜி சார் .. கவனிக்கவும்!

      நீக்கு
    5. வணக்கம் இலக்கம் இலக்கு மாறி போய் விட்டது ஏன் சிலர் தலைப்பைக்கூட மாற்றி விட்டார்கள்

      நீக்கு
    6. ஓரு இலக்கம் இலக்கு மாறினால் அடுத்த இலக்கை நோக்கி போக வேண்டியது தான் சார். அடுத்து ஒன்றை கொழுத்தி போடுங்கள். தொடர்ந்து வெடிக்கட்டும்

      நீக்கு
  7. அப்பாடா, பத்து என்(ண்)றதுக்குள்ளே நானும் வந்திட்டேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாங்க பத்தில் ஒன்றாய் மூன்றாம் இடத்தில் உங்களை இணைத்தாகி விட்டது. தொடருங்கள் சார்.

      இப்படித்தான் தானாய் வந்து மாட்டிப்பார்கள் என நான் வலையை விரித்து வைத்து வேட்டிச்சியாய் காத்திருக்கின்றேன் எனும் உண்மையை யாருக்கும் சொல்லி விடாதீர்கள் சார்!

      நீக்கு
    2. //அப்பாடா, பத்து என்(ண்)றதுக்குள்ளே நானும் வந்திட்டேன்...//

      //உறுப்பினர்கள் (17) மேலும் »
      மதுரைத்தமிழன்(Madurai Tamil Guy வை.கோபாலகிருஷ்ணன் s suresh DindigulDhanabalan.blogspot.com Venkat Nagaraj அ. முஹம்மது நிஜாமுத்தீன். thamizh elango t venkat s சம்ஸ் haseem கீதமஞ்சரி பரிவை சே.குமார் முஸம்மில் Thulasidharan thillaiakathu selva kumar Killergee தேவகோட்டை //

      பின் தொடர்வோரில் 10-ஆவதாய் நான் இணைந்ததைக் குறிப்பிட்டேன்.

      நீக்கு
    3. ஒ! நன்றிங்க.!

      நீக்கு
  8. தங்களின் வேண்டுகோள்கள் பொதுநலன் காரணியாகவும் சுவையாகவும் உள்ளன. நகைச்சுவையும் குறும்பும் இழையோடி இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிங்க..தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

      நீக்கு
    2. //
      3. நிஜாம் பக்கம் //

      ஆகா.................................................
      என்னையும் கோர்த்து விட்டுட்டீங்களா?
      ம்! முயற்சிக்கிறேன், இறை நாட்டம்!

      நீக்கு
    3. சீக்கிரம் முயற்சி செய்யுங்கள். அல்லது போனால் அடுத்த தொடரும் ஆரம்பித்து சிக்கலில் சிக்கி விடுவீர்கள்!

      நீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. பதில்கள்
    1. உங்கள்” வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சார்.

      நீக்கு
  11. நன்றாக நகைச்சுவையாக எழுதியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரெம்ப நன்றிங்க.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
  12. வித்தியாசமான முறையில் உங்களின் ஆசைகளை சொல்லி அதற்கு கடவுள் மனசாட்சியின் பதில்களும் தந்து அசத்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்! , பதிவர் திரட்டி, தமிழ்திரட்டி, மற்றும் முகநூல் குருப் களில் சேர்ந்து உங்கள் பதிவுகளை இணைத்தால் வாசகர்கள் கூடுவார்கள். நீங்களும் பல தளங்களுக்கு இயன்றவரையில் சென்று கருத்து பரிமாறிக் கொள்ளுங்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆலோசனைக்கு நன்றி ஐயா! தமிழ் மணத்தில் பதிவு செய்துள்ளேன்,குமாரின் வழி நடத்துதலில் பேஸ்புக்கில் சில குருபகளில் இணைத்துள்ளேன். இணையம் புதிதல்ல. ஆனால் புதிவுல்கில் என் பதிவும் அனுப்மும் புதியவை என்பதால் சிறுது காலமெடுக்கும் என நம்புகின்றேன் ஐயா. தங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி.

      நீக்கு
  13. கடவுளைக் கண்டும் கடவுளுடன் உங்கள் மனசாட்சி பேசியதும் அருமையாகவும் சுவாரசியமாகவும் உள்ளது கண்டது கற்பனைக் கனவாக இருந்தாலும் உங்கள் மனசாட்சி பேசியது அனைத்தும் உண்மைதான் ஏற்றுக்கொள்கிறேன் சிறப்பாக நகைச்சுவைகள் கலந்து கலக்கிட்டிங்க அப்படியே செல்லுங்கள் சிறப்பான ஆரம்பங்கள்

    உங்கள் தம்பியும் தும்பியுமான அடியேனுக்கு உங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி இல்லை என்று நான் நினைக்கிறேன் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை இருந்தாலும் எனது வேலைகளுக்கும் இந்த எழுத்து இலக்கியப் பயணத்திற்கும் ரொம்ப தூரம் அடியேனை மன்னிக்கவும் தொடருங்கள் மகிழ்ச்சியாக இணைந்திருப்போம்
    மாறா அன்புடன் முஸம்மில்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டூ லேட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்!
      தும்பிசார் ரெம்ப லேட்ட்டூ! ஆரம்பங்கள் சிறப்பாக இருப்பவதற்கு தாங்களும் காரணம் தானே சார், உங்கள் ஆர்வமூட்டல்கள் தான் எனக்குள் விதையாகின்றன! நன்றிப்பா!

      நீக்கு
  14. நிஷா சகோ....உங்கள் முதல் ஆசை மனதை நெகிழ்த்திவிட்டது. ஆனால் நாங்கள் அனுதாபப்படவில்லை. இத்தனை இடர்களிலும் தாங்கள் இவ்வளவு சாதித்திருக்கின்றீர்களே என்று பெருமப்பட்டுத் தங்களை ஒரு முன்னோடியாகப் பலரும் கொள்ளலாம் என்பதே...நெகிழ்த்திவிட்டது என்று சொல்லுவது. ஏனென்றால் அனுதாபம் என்பது ஒருவரை ஊக்க்ப்படுத்தாது. கருணை இருக்கவேண்டும் ஆனால் அனுதாபம் வந்தால் தைரியம் போய்விடும்...அதான் வாழ்த்துகள் சகோ மேலும் மேலும் தாங்கள் பல சாதனைகள் புரியய்....

    இப்போது தங்களின் ஆசைகள்...பல ஹஹாஹ் ரகங்கள் இழையோட ...சூப்பர். ஆனால் கவலைப் படாதீர்கள் உங்கள் ஆசைகளையும் எல்லோரது ஆசைகளையும் கில்லர்ஜி ஏற்றுக் கொண்டு இந்தியாவை வல்லரசாகக் கொண்டு செல்ல முயற்சிசெய்துகொண்டிருக்கின்றாரே..அதற்குத்தானே எல்லோரது ஆசைகளயும் கேட்டுக் கொண்டார்...அதைத்தான் நாங்கள் எங்கள் பதிவில் சொல்லிவிட்டோம்...ஹஹஹ...

    அருமையான பதிவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரெம்ப ரெம்ப நன்றிங்க..

      என் விபத்தினால் நான் இழந்தவைகளை நினைத்து கலங்கினாலும் அதுவே எனக்குள் திடப்படுதலை கொடுத்து உயர்த்தியும் இருக்கின்றது என்பேன். எப்போதும் எவரின் பரிதாபத்தினையும் எதிர்பார்ப்பதில்லை. உந்து சக்தியாய் ,உற்சாக மூட்டியாய் தானிருக்கின்றேன்.

      ஆசைகளை பட்டியலிடும்படி குமார் சொன்னதும் உடனே நினைவில் வந்ததை சொன்னேன். இன்னும் ரெண்டு நாள் பொறுத்திருந்தால் இன்னும் நிரம்ப ஆசைகள் தோன்றி இருந்திருக்கும்ல! ஹாஹா!

      உங்கள் வருகைக்கும் பின்னூட்டகருத்துக்கும் நன்றி. என்றும் தொடருங்கள்.

      நீக்கு
  15. வணக்கம் !

    கேள்வியும் விடையும் நீங்களே ! பிறகு எதற்க்குக் கடவுள் ம்ம்ம்ம் அவர் சொல்லவேண்டியதையும் நீங்க சொல்றீங்க இடைக்கிடை மனச்சாட்சி வேற உண்மைய போட்டு உடைக்குது ,ம்ம்ம்ம் அத்தனை ஆசைகளும் அருமை நிறைவேறினால் சுகமே ! ஆமா கில்லர் ஜி இன் நகச்சுத்தி ஆப்பரேசன் நடக்குமா நடக்காதா !
    அவ்வ்வ்வவ்வ்வ்

    பதிலளிநீக்கு
  16. விபத்தினால் தாங்கள் பட்ட வலி மறைந்து ஆசைகள் நிறைவேறி ...ஆண்டவனாய்ப் போற்றும் மருத்துவர் ஆக இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் !

    பதிலளிநீக்கு
  17. பதின்மூன்றாவது வயதில் நடந்த விபத்து பற்றியறிந்து வருத்தமேற்பட்டது. ஆனால் அதனால் மனமுடைந்துவிடாமல் தொடர்ந்து போராடி நல்ல நிலைமைக்கு வந்திருப்பதற்குப் பாராட்டுகிறேன் நிஷா! தொடரில் என்னை அழைத்திருப்பதற்கு நன்றி. அவசியம் கல்ந்து கொள்கிறேன். ஆனால் இப்போது படு பிஸி என்பதால் எழுத அவகாசம் வேண்டும். சரியா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! கலையரசி அக்கா! இந்தப்பக்கம் வந்ததுக்கு ரெம்ப நன்றி. உங்களால் முடியும் போது எழுதுங்கள்.

      தொடர்ந்தும் உங்கள் அன்பையும் ஆதரவையும் தாருங்கள்.

      நீக்கு
  18. வணக்கம் நிஷா!
    இன்று தான் உங்கள் தளம் வருகிறேன் என்று நினைக்கிறேன். முதல் ஆசையில் சொல்லியிருந்த விபத்தை அறிந்து வருந்தினாலும், கடவுள் நல்ல நிலைமைக்கு உங்களைக் கொண்டுவந்திருக்கிறார் என்று மகிழ்ச்சி. நானும் உங்களைப் போல் தான், கடவுள் பார்த்துக் கொள்வார் என்றும் ஏன் அனுமதித்தார் என்றும், இப்படியும் அப்படியும் நினைத்துக் கொண்டிருப்பேன் :))
    அருமையான ஆசைகளும் பதிவும். குமார் சகோவையும் கில்லர்ஜி சகோவையும் மனசாட்சியையும் வைத்து வித்தியாசமாய்க் கலக்கிவிட்டீர்கள்.

    உங்கள் தளத்தில் இணைந்து விட்டேன், தொடர்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கமா வாங்க. உங்கள் வரவு நல்வரவாகுக!

      ஆஹா என்னை போல தான் உங்களுக்கும் கடவுள் நம்பிக்கை உண்டா? அதென்னமோ எனக்குள் என்ன நடந்தாலும் அது இன்ப்மோ துன்பமோ கடவுள் அனுமதித்து தான் நடைபெறுகின்றது, அதனால் அதை ஏற்று தான் ஆகணும் எனும் நம்பிக்கை.

      தொடர்வதற்கும் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.

      நீக்கு
  19. பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் நன்றிங்க! தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
    2. யாருங்க நீங்க? உங்கள் பெயரை தொடர்ந்து வந்தேன். நிரம்ப தளங்களின் இணைப்பாக காட்டுகின்றதே.. எனினும் வருகைக்கு நன்றிங்க..

      நீக்கு
    3. நன்றி சகோதரி எனக்கு ப்ளாக் வாசிப்பதில் ஆர்வம்
      எழுதுவதில் சகோதரியை போல ஆர்வம் இல்லாத காரணத்தால் வலைப்பூ தளங்களை இணைக்கும் ப்ளாக் ஒன்றும் லோக்கல் classifieds தளம் ஒன்றும் இன்னும் youtube வீடியோ ஷேரிங் தளங்கள் சிலவும் நடத்தி வருகின்றேன் அவ்ளோதான் உங்களை போல எழுத்தால் நண்பர்களை மகிழ்விக்கும் அளவிற்கு முயற்சி இல்லாதவன்

      நீக்கு
    4. சகோதரி தங்கள் தளத்தினை நானே எனது tamil blog list இல் இணைத்து விட்டேன் உங்கள் தளத்தினை இணைப்பதனால் எனது தளமும் பிரபலமாகட்டுமே

      நீக்கு
    5. நான் இணைய தளங்களில் தினம் தினம் எழுதிகொண்டிருக்கின்றேனே! முத்தமிழ் மன்றம்,தமிழ் மன்றம் போன்ற தளங்களில் சிலவருடங்கள்முன்னால் எழுதினேன். இப்போது சேனைத்தமிழ் உலாவில் எழுதுகின்றேன். தனி வலைப்பூ என இது தான் முதல் அனுபவம். நான் முதலில் என்னை குறித்து இங்கே எழுத வேண்டும் போல இருகின்றது! நேரம் தான் பிரச்சனை. ஏனெனின் என்பணி அப்படிபட்டது. ஆல் ஈவண்ட்ஸ் ஒழுங்கமைப்பாளர் என்பதால் ஒவ்வொரு பார்ட்டிக்கும் நான் பல நாட்களை செலவு செய்து ஆயத்தப்படுத்த வேண்டும். அதனால் என்னால் வலைப்பூவுக்கு என தனி நேரம் ஒதுக்க முடியவில்லை.

      அது தான் என் பெரிய பிரச்சனை!

      நீக்கு
    6. அடடா! உங்கள் பெயர் என்னங்க சார்?
      திருச்செந்தூர் கிளாஸிபிரெண்ட்ஸ்??/

      என் தல இன்ஞும் பிரபல்யமாகவே இல்லையே.. நானே இங்கே இப்போது தான் நுழைந்துள்ளேன். எந்த திரட்டிகளிலும் இன்னும் இணைக்க வில்லை. என் பக்கமே இன்னும் சரியாக செட் செய்ய வில்லை.ஆனாலும் உங்கள் திரட்டியில் என் தளத்தினை இணைத்தமைக்கு நன்றிங்க சார்.

      தொடருங்கள் தொடர்வோம்.

      நீக்கு
    7. எனது பெயர் ஜெயகாந்தன் எனது தளத்தின் பெயர் TIRUCHENDURCLASSIFIEDS www.tiruchendurclassifieds.in
      திருச்செந்தூர் வியாபார விளம்பர தளம்

      நீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!