நீயும் நானும் நாமாகும் போது
தீதும் நன்றும் தானாயுணர்வோம்
தாயும் சேயும் நாமானாலும்
காலம் போடும் கோலம் வேறே
காதல் கொண்ட மனமது துள்ளும்
காண்பதுவெல்லாம் அவளென சொல்லும்
உணர்வுகளெல்லாம் அவளாகி போகும்
தேகமோ தவித்து உண்ர்வதை கொல்லும்
சகலமும் நீயென சரணாக செய்தே
கவிதைகள் எல்லாம் சரமாய் பறக்கும்.
காதலும், காமமும் மனமதை வெல்லும்,
சடுதியில் ஒரு நாள் நிதர்சனம் புரியும்.
கானல் நீரா இதுவென புரிபடுமுன்னே
கனவாய் அனைத்தும் கலைந்தே போகும்.
நீயும் நானும் நாமாகி இருப்போம்.
அருமையான கவிதை அக்கா....
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
சடுதியில் ஒரு நாள் நிதர்சனம் புரியும்.
பதிலளிநீக்குகானல் நீரா இதுவென புரிபடுமுன்னே
கனவாய் அனைத்தும் கலைந்தே போகும்.
நீயும் நாமும் நாமாகி இருப்போம்.
துவங்கியது தொடர்ந்தது
மிகக் குறிப்பாய்
முடித்தவிதம் வெகு வெகு அருமை
அடுத்த கவிதையை ஆவலுடன் எதிர்பார்த்து...
ஆஹா! அருமை அருமை...
பதிலளிநீக்குஎன்ன கவிதை இது?
பதிலளிநீக்குநச்சென அடிக்கிறது.
நச்சா காதல்?
உணர்வுகளின் உச்சமில்லையா?