12 பிப்ரவரி 2016

நான் சிரித்தால் தீபாவளி!

1)குமார்:ஏக்கா நீ சொல்ற ஜோக் எல்லாம் நல்லா இருக்கும் போல இருக்குதே.எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க.
நிஷா: அட நீ வேறப்பா இப்ப அவங்க சிரிக்கல்லன்னா திரும்பத்திரும்ப ஜோக் சொல்லுவேன் என்று சொன்னேனா...அதுதான் சிரிக்கின்றார்கள்!  
குமார்:அப்படியா ஹாஹாஹா ஹோஹோ ஹிஹிஹி

2)நிஷா:ஏன்பா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?
முஸம்மில்: அத ஏன் கா கேக்குற, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே ஓடி போய்ட்டாங்கக்கா!!

3)நிஷா:திருமணப்பந்தலில் இருக்கும் பணததை ஈ மொய்க்கும்.
ஏன் தெரியுமா..
குமார்:தெரியாதே ஏன்...?
நிஷா:அதுதான் மொய் பணமாச்சே

4)நிஷா:உங்களுக்கு நீச்சல் அடிக்கத்தெரியுமா?,
வருண்:தெரியுமே,ஆனால் சில இடங்களில் மட்டும் தான் நீந்துவேன்.
நிஷா:அப்படியா எங்கே?
வருண்:அதுவந்து...........முழங்கால் அ்ளவு தண்ணீர் இருக்கும் இடங்களில் மாத்திரம்

5)நிஷா : மகாகவி பாரதி தெரியுமா?
கில்லர்ஜி :தெரியுமே !
நிஷா : யார்னு சொல்லுங்க பார்க்கலாம்...?
கில்லர்ஜி :மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!

6)நிஷா: மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல!
அது என்ன?
குமார்: ...............?????
நிஷா: தெரியலையா? அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?

7)நிஷா:இவர் தான் மார்கெட் தச்சர்.
கில்லர்ஜி : தலைவரா..
நிஷா : மார்க்கெட்டிலே வேலை செய்யும் தச்சர் அவ்வளவுதான்

8)நிஷா:தும்பியாரே ஆந்திராவிலிரு்ந்து தமிழ் நாட்டுக்கு குதிரைகள் வரும் போது வரிக்குதிரையா மாறி விடுகின்றதே. தெரியுமா?
முஸம்மில்:எப்படிக்கா??
நிஷா:தமிழ் நாட்டு பார்டரில் வரி போட்டிருப்பாங்களே அதனால் இருக்கும்.

9)மூன்று ரோடு சந்திக்கும் இடத்தில் ஒரு ரோடு வழியாக காரும்,
அடுத்த ரோடு வழியாக பஸ்ஸூம், மூன்றாவது ரோடு வழியாக நம்ம மதுரைத்தமிழன் சாரும் வேகமாக வந்தால் அங்கே என்ன நடக்கும்?

10)பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! 
பீட் ரூட்ல என்ன போகும்?தெரிஞ்சா எனக்கு SMS பண்ணுங்க!

அட! இதை நீங்க வேறு எங்காவது படித்திருந்தால் என்னிடம் கேட்காதீர்கள். 
நானே என் பதிவு பலதை என்னுடையதுன்னு என தெரியாமலே வேறெங்கோ படித்து இருக்கின்றேன்!
இதுவும் 2010 ன் மீள் பதிவே!

பெயர்கள் ச்ச்ச்ச்சும்மா மாற்றினேன் யாரும் கோபித்துகொள்ளாதிங்கப்பா!

22 கருத்துகள்:

 1. ////நான் சிரித்தால் தீபாவளி! ////

  அப்பா நீங்க அழுதா தீபாவளி பட்டாசா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருக்கும் இருக்கும் அழுவது மதுரைத்தமிழனாயிருந்தால் பட்டாசாய் தான் இருக்கும்,

   நீக்கு
 2. காரும் பஸ்ஸும் என்னைப்பார்க்கும் போது யூடர்ன் அடித்து திரும்பிவிடும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லையே! கொஞ்சம் யோசித்து சரியாக பதில் சொல்லுங்க மதுரைத்தமிழன் சார்!

   நீக்கு
 3. எல்லாமே நல்லா ரசித்தேன் அதிலும் 2, 4, 6 ஸூப்பர்
  ஆமா நான் எப்ப உங்களிடம் பேசினேன் ? அதான் குழப்பாக இருக்கூகூகூகூகூகூகூகூகூகூகூகூ

  பதிலளிநீக்கு
 4. நீங்க அப்பவே அப்படியா ?என் போன்றோருக்கு நல்லதே, உங்க மீள் பதிவு :)

  பதிலளிநீக்கு
 5. ஆனாலும் என்னை மட்டும் திட்டம் போட்டே கவுத்தி இருக்கீங்க எனக்கா தெரியாது செல்லம்மா புருசனை.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா! அது இப்போது தான் புரிந்ததா கில்லர்ஜீ சார்? இந்த டாபிக்க்குக்கு நீங்க தான் சரி என தோன்றியது! கோபித்து விடாதீர்கள்!

   நீக்கு
 6. மதுரைத் தமிழன் சார் மட்டுமே நடப்பார்...
  பீட் ரூட்ல மனுசன் போவான்....

  எங்களை வச்சி காமெடி கிமெடி பண்ணலையேன்னு இனிமே நாங்க உங்ககிட்ட கேட்க முடியாது போங்க...

  பதிலளிநீக்கு
 7. முதல் ஜோக்குக்கே சிரித்துவிட்டேன்மா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்ப மீதி ஜோக்குக்கு?

   நீக்கு
  2. அழுதிருப்பாங்களோ?

   நீக்கு
  3. திரும்ப திரும்ப ஜோக் சொன்னா

   ஹிஹிஹிஹி

   சும்மா ,,, அனைத்தும் அருமை சகோ,,,

   மதுரைத் தமிழனைக் கலாய்ப்பது சூப்பரா இல்லாமல் போகுமா?,,

   நீக்கு
  4. ஆஹா!மதுரைத்தமிழனை கலாய்த்தால் அது சூப்பரா இருக்குமா? எனக்கு இது வரை தெரியாதே மா!

   நீக்கு
 8. அருமை சகோதரியாரே
  ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 9. கில்லர்ஜியை வாரியதில் ரொம்ப சந்தோஷம்....ஹிஹிஹி...

  மதுரைத்தமிழன் மெதுவாகத்தான் நடந்து வருவார்...அவரை விட காரும் பஸ்ஸும் வேகமாக ..ஒண்ணும் நடக்காது....இல்லைனா பஸ்ஸும் காரும் மோதுவதற்குள் நம்ம மதுரைத்தமிழன், தமிழ் படத்துல ஹீரோ பாய்ந்து தடுப்பது போல் பாய்ந்துத் தடுப்பார்....வீர் சக்கரா அவார்டு தில்லில மோடி கையால வாங்குவாரு...அதப் பத்தி ஒரு பதிவு போடுவாரு..ஹிஹிஹிஹி

  அனைத்தையும் ரசித்தோம்..சகோ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யாருப்பா இது நான் இல்லாத நேரத்தில என்னை கலாய்ப்பது?

   நீக்கு
 10. ஹா.... ஹா... ஹா... எல்லாவற்றையும் ரசித்தேன். கடைசி இரண்டுக்கும் பதில் யோசித்து மண்டை காய்ந்து போச்சு! ஐயாம் வெயிட்டிங்!

  பதிலளிநீக்கு
 11. பதிவுலக நண்பர்களை வைத்து இப்படியொரு கலாய்ப்பா.. அருமை. ரசித்தேன் நிஷா.

  பதிலளிநீக்கு
 12. படித்த நினவு இல்லை
  அனைத்தும் புதியதாகவும்
  இரசிக்கும்படியாகவும்....
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
  (சிறப்புப் பதிவினைத் தேடி வந்தேன்
  நாளை போடலாம் என எடுத்துவைத்துவிட்டீர்கள்
  என நினைக்கிறேன் )

  பதிலளிநீக்கு
 13. ரகளையாக இருக்கிறது உங்கள் பதிவு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!