ஆனால் நிலையான காதல் மறைவதில்லை
விசாலமான மனதில் நிர்பந்தங்களின்றி உதயமானதே காதல், இரண்டான இதயங்கள் ஒன்றாகிடும் போது அன்பானது அங்கே முழுமை அடைகின்றது!
உண்மைக் காதல் இதமானது, நம் மனக்காயங்கள் தீர்க்கும் மருந்து, தாலாட்டும் தென்றல், உற்சாகத்தின் ஊற்று, இதமான போர்வை என நம்மையே நம்மில் உயிர்ப்பிக்கும் வித்தையை உணர்த்தும்!
இப்படி காதலிப்போருக்கு எல்லா நாளும் காதலர் தினம் தான்
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது
வேதம் நான்கிலும் மெய் பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே !
காதலும் இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படிப்பட்ட காதலுடன் தான் நாம் கடவுளை வேண்டுகின்றோமா?உள்ளம் உருகி வேண்டிடும் கடவுளில் மீதான காதலுக்கு ஈடிணை உண்டா? எத்துணை அற்புதமான காதல் இது,
இறைவனிடம் பக்தி கொண்டு தன் கண்ணையே கொடுத்த பக்தனின் பக்தியே காதலின் முழுமையை உணர செய்யும்போது இவ்வுலகின் போலித்தனமான அன்புக்கு காதலென எப்படி சொல்வேன்.
நிர்மலமான மனதுடன் எதிர்பார்ப்பில்லாமல் சுய நயலமற்றதான நேசிப்பை இவ்வுலக காதலுடன் ஒப்பிட்டு அனர்த்தமாய் சிந்திக்கும் மனநிலையை என்னவென்பேன்?
காதலில் கரைய மடி கொடுத்து
என் கற்பனைகள் உயிர்க்க
திடம் கொடுத்து
மண்ணான என்னை
பொன்னாக மாற்றும்
மெய் ஞானம் தேடி
கல்லான மனதை
கற்பூரமாக்கி
நான் பெற்ற ஞானம்
கண் தூங்கும் முன்னே
என் முன்னே வந்து
காணாத இன்பம்
நான் காண செய்த
காதலே உமக்கு நன்றி!
காதல் ஆணின் வாழ்க்கையில் ஓர் அதிகாரம் மட்டுமே;
ஆனால் பெண்ணின் வாழ்க்கையில் முழு வரலாறு-
எதிர்பார்ப்பில்லாத அன்பு முழுமையடைதலே காதலில் வெற்றி!
நான் உனக்கு இதை செய்தேனே ஏனக்கு நீ அதை கொடு எனும் எதிர்பார்ப்பின்றி எங்கெல்லாம் அன்பு செலுத்துகிறோமோ அங்கெல்லாம் நம் அன்பு காதலாகிறது.
நான் உன்னை நேசிக்கிறேன், நீ என்னை நேசிக்கிறாயா என கேட்டு செலுத்தும் எதிர்பாப்புடனான அன்பை காதலென்று எப்படி சொல்வேன்.?
தடைகள் தான், காதலுக்கு அதிக மதிப்பைத் தருகிறது
காதலோடு.....!
நான் சென்ற இடமெல்லாம் காதல்
நான் காண்பவை எல்லாம் காதல்
காணாத உங்களில் காதல்
கண்ட உங்கள் பதிவிலே காதல்
அன்பு செலுத்துவோர் மீது காதல்
அன்பு செலுத்தாதோர் மீதும் காதல்
இருப்போர் மேலே காதல்
இல்லாதோரிடம் அதிக காதல்
ஏழையை கண்டால் காதல்
எதிரியின் மீதும் காதல்
கற்றோரை கண்டால் காதல்
கல்லாதோர் மீது
இரக்கம் கொள்ளும் காதல்
உலக ஞானத்தின் மேலே காதல்
மெய்ஞானத்தின் மீதும் காதல்
நான் சென்ற இடமெல்லாம் காதல்
இன்று முதல்
காதலின் மேலும் காதல்!
எதிர்பார்த்து விதைப்பதைக் காதல் அறுவடை செய்யாது
மண்ணில் இந்தக்காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
எனக்கு வானத்தின் மேலே காதல்
வான் மேகத்தின் மேலே காத்ல்
மலைகளின் மேலே காதல்
பூக்கும் மலர்களின் மேலும் காதல்
உயிர்களின் மேலே காதல்
இந்த உலகத்தின் மேலே காதல்
இன்னும் கொஞ்சம் உலகத்தில் வாழக்காதல்
என் குடும்பத்தின் மேலே காதல்
முத்தமிழ்மன்றக்குடும்பத்தின் மேலும் காதல்
பணத்தின் மேலே காதல்
அது தரும் பகட்டின் மேலும் காதல்
படிப்பின் மேலே காதல்
அதனால் வரும் மகிமையின் மேலும் காதல்
என் கடமையின் மேலே காதல்
படைத்த கடவுளின் மேலும் காதல்
என் எழுத்துக்கள் மீதும் காதல்
இதைபடிக்கும் உங்கள் மேலும் காதல்
காதலின்றி நான் இந்த உலகத்திலேது?
இதயத்தைத் தவிர காதலுக்கு குடியிருக்க வேறிடம் இல்லை
காதலையும் காதலித்து உங்களையும் நீங்களே காதலித்து பாருங்கள்!
மனதில் பட்டாம் பூச்சி பறப்பதையும், கவலைகள் பறந்தோடுவதையும்
தினம் தினம் புதிதாய் பிறந்த உணர்வையும் அடைவீர்கள்!
கவிதையும் விடயங்களும் அருமை வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி சார்!
நீக்குகாதல் பற்றிய உங்கள் பதிவுக்கு வந்தனங்கள்...
பதிலளிநீக்குகாதலிக்காத பிறவிகள் யாருமில்லை.மறைப்பவர்கள் இருந்தாலும் காதல் மறைவதில்லை..எல்லாவற்றையும் காதலிக்கலாம்..ஆயினும் காதலிக்கப்படுவது கூடுதல் சிறப்பு..
உலகில் எல்லாமூலையிலும் கடவுள் போலவே காதலும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது..
நீரின் அடியில் விடும் மூச்சுபோல் அது மேல்வந்தே தீர்கிறது..
உள்ளங்களின் காதல் ஒருபோதும் சாவதில்லை..
அதுசரி...
எல்லாவற்றையும் காதலிக்கும் நீங்கள் கூட அதைச்சொல்ல தேர்ந்தெடுத்த நாளும் கூட காத்கலுக்கு உகந்ததுதான்...உங்கள் காதல் நீடூழி வாழ வாழ்த்துகள்...
உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி!
நீக்குகாதலை காதலோடு காதலியுங்கள்! ஆனால் கல்யாணம் மட்டும் பண்ணிக் கொள்ளாதீர்கள்
பதிலளிநீக்குஅப்படியா?
நீக்குஹலோ நேற்று ஒரு காதல் பதிவு போட்டிருந்தீர்கள் படிக்க முயன்ற போது அதை ஏதோ ஒரு காக்கா தூக்கிட்டு போயிடுச்சு போல இருக்கே? இப்ப அதை காணோம்
பதிலளிநீக்குஜஸ்ட் மிஸ்ஸிங்க். டெலீட் ஆகி விட்டது,டிராப்டில் இருக்கும் என நம்பி தேடினால் டிராப்டில் சேவ் ஆகவில்லை,எல்லாம் போச்!
நீக்குகாதலைப் பற்றிச் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குநீண்ட நாட்களாய்
வளர்த்த / வளர்ந்த காதல்
முடிந்ததே
கல்யாணத்தில்!
ஒ!
நீக்குகவிதையும் கருத்தும் அருமை!அந்த காட்சி தொழில்நுட்பம் இன்னும் அருமை அதை வலையில் சேர்க்கும் வழிமுறை சொல்லுங்க எனக்கும்[[[
பதிலளிநீக்குபுரியவில்லையே! படங்கள் இணைக்கும் முறையில் இணைத்தேன்.
நீக்குஉங்கள் எழுத்தில் காதலைச் சொல்லி உங்களையும் எழுத்தையும் காதலிக்கச் செய்த அக்காவுக்கு வாழ்த்துகள் அருமையான படைப்பு காதல் வாழ்க
பதிலளிநீக்குநன்றி ஹாசிம்!
நீக்குகாதலின் அருமையை அருமையாக சொல்லி இன்றைய தினத்துக்கு பெருமை சேர்த்துவிட்டீர்கள். பதிவுக்கு நன்றி !
பதிலளிநீக்குகாதலின் மகத்துவத்தை அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள்...அழகான பதிவு...
பதிலளிநீக்குகாதல் பற்றி சிறப்பான பகிர்வு... அதுவும் எனக்கு எல்லாவற்றின் மீதும் காதல் என்ற கவிதை வரிகளோடு...
பதிலளிநீக்குஆமா இதென்ன...
//காதல் ஆணின் வாழ்க்கையில் ஓர் அதிகாரம் மட்டுமே;
ஆனால் பெண்ணின் வாழ்க்கையில் முழு வரலாறு//
இதையெல்லாம் ஏத்துக்கவே முடியாது... அதிகாரமும் கிடையாது... ஆணவமும் கிடையாது... உண்மையான காதல் என்றால் அது இருபாலருக்கும் வரலாறுதான்...
இன்னைக்கு பெண்கள் ரீச்சார்ஜ் பண்ணவும் ஜாலியாச் சுற்றவும் காதலை ஒரு ஆயுதமாக்கி ரொம்ப நாளாச்சுக்கா... நீங்க இன்னும் உங்க காதல் வருடங்களிலேயே இருக்கீங்கன்னு நினைக்கிறேன்....
அருமையான கட்டுரை அக்கா....
இதற்கு பின்னான பதிவு ஒண்ணு இருக்கோ... அது திறக்கவில்லையே ஏன்...?
ஆஹா! காதல் காதல் காதல் மிக நன்றாக இருக்கிறதே..உங்கள் பதிவின் மேலும் காதல் வந்தது எனக்கு :)
பதிலளிநீக்குஅனுபவஸ்தர்களுக்கு.புரியும்ட . காதலிக்காத மன்னாங்கட்டிக்களுக்கு எப்படி புரியும்.....????
பதிலளிநீக்குஅருமை அக்கா. காதல் காதல் காதல் கலக்கல் காதல் கவிதை...
பதிலளிநீக்குவணக்கம்...காதல் என்றும் அழிவதில்லை...காதல் இல்லையெனில் உயிர்களும் இல்லை....காதலான பதிவு வாழ்த்துகள்...
பதிலளிநீக்கு