29 பிப்ரவரி 2016

மகாபாரதப்போரில் கர்ணனை குறித்த என் புரிதல் சரியா?தவறா?

என் உணர்வும்,உயிர்ப்பும் தமக்கு வந்தால் மட்டுமே வலிக்குமா? எனும் பதிவில் பிரச்சனை நேரம் நம்மை விட்டு செல்லும் நட்பூக்கள்,உறவுகள் குறித்த என் புரிதலை எழுதி இருந்தேன்! 

அதில் கர்ணனை உதாரணமாக்கி கீழே இருக்கும் வாக்கியத்தை இட்டிருந்தேன்! 
மகாபாரதப்போரில் துரியோதனன் செய்தது தவறென தெரிந்தும், தன் உயிரே போகும் என அறிந்தும் தன் தாயின் வேண்டுதலை மீறியும், நட்புக்கு ஆபத்து எனும் போது தன் சகோதர்களை எதிர்த்து உயிர் துறந்தானாம்!

இக்காலத்தில்  கர்ணனைப்போல் செஞ்சோற்றுக்கடனுக்காக உயிர் துறக்க கூட வேண்டாம்,நான்கு வார்த்தை ஆறுதலாய் பேசலாமே?

மகாபாரதத்தில் அப்படி எந்த சம்பவமும்  நடந்ததாய்  இல்லையே என்பது போல் ஒரு மெயில் தரும் தகவல்!

மகாபாரதப்போரில் கர்ணனை குறித்த என் புரிதல்  சரியா? தவறா?

மகாபாரதம் நூலை  நீண்ட காலம் முன்னால் நான் படித்திருக்கின்றேன். பாண்டவர்களுக்கும் , கௌரவர்களுக்கும் போர் தொடங்கிட முன்னர் கண்ணன் மூலம் கர்ணன் யார் என அறிந்த குந்தி தேவியார் கர்ணனை பாண்டவர் பக்கம் சேரும் படி கேட்பதும்  கூட படித்த நினைவே!

துரியோதனனின் பல காரியங்களை கர்ணன் விரும்பாதிருந்தும் தவறென சுட்டிக்கட்டியும் இருப்பதாய் தான் படித்தேன். 

துகளக்  வாரமலரில் தொடராக கூட படித்த நினைவு.

விக்கிமீடியாவில் என் கருத்தை சரியா என ஆராய்ந்தேன் !  

மேலே இட்ட என் கருத்துக்கான விளக்கம் வீக்கிமீடியாவில்  இருந்தே>>>>>>>

துரியோதனன் செய்வது தவறென  தெரிந்தும்  விளக்கம் 

கர்ணன் துரியோதனனுக்கு விசுவாசமுள்ள மற்றும் உண்மையான நண்பனாகப் பேசப்படுகின்றார். பிரபலமற்ற சூதாட்ட விளையாட்டிற்கு துரியோதனன் மனமகிழ்கையில், அவர் அதைத் தொடங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். கர்ணன் ஷகுனியை விரும்பவில்லை, மேலும் தொடர்ந்து துரியோதனனுக்கு அவரது எதிரிகளை வீழ்த்த வஞ்சகம் மற்றும் சூழ்ச்சியைப் பயன்படுத்துவதற்குப் பதில் போர்வீரம் மற்றும் திறனைப் பயன்படுத்துமாறு அறிவுரைத்தார். அரக்கு மாளிகையில் பாண்டவர்களைக் கொல்லும் முயற்சியில் தோல்வி ஏற்பட்ட போது, கர்ணன் துரியோதனை அவரது மனத்தளர்விற்காகக் கடிந்துகொள்கின்றார். கோழைத்தனத்தின் வழிகள் தோல்வியில்தான் முடியும் என்று கூறி, வீரத்தின் மூலம் வேண்டியதைப் பெறலாம் எனவே போராளியாக மாற அவரை வற்புறுத்துகின்றார்.

குந்தியை தன் தாயென அறிந்தும் அவர் வேண்டுதலை மீறினார் என  நான் சொன்னதன் காரணம் 

குந்தி கர்ணனை பாண்டவர்களுடன் சேர்ந்து அரசனாகும் படி கூறினார். கர்ணன் அதை மறுத்து குந்தியிடம், அவர் தன்னை பல வருடங்களுக்கு முன்னர் கௌந்தேயன் என்று அழைக்கத் தயாராக இருந்தாரா என்று கேட்டார். மேலும் அவர் களத்தில் தோன்றியவுடன் காட்சியும் கோலமும் மாறியிருக்கின்றன என்றும் கூறினார். ஆனால் இப்போது அவரிடம் மாற்றத்தை ஏற்படுத்துவது காலதாமதமானது ஆகும். மேலும் அவர் துரியோதனின் நண்பனாகவே இருக்க விரும்புவதாகவும், அவர் அவரது நட்புக்கு துரோகம் இழைக்க முடியாது என்பதையும் கூறினார்.

மகாபாரதப்போரில் பாண்டவர்களுக்கு எதிராய் தானே போரிட்டான், துரியோதனன் அதாவது கௌரவர் பக்கம் நின்று துரியோதனன் பக்கம் போரிட்டார் எனும் போது தன் சகோதரர்களுக்கு எதிராய்  அவர்கள் தன் சகோதரர்கள் என தெரிந்தும் நட்புக்கும் செஞ்சோற்றுக்கடனுக்குமாய் அவன் தன்னை அர்ப்பணித்தான் தானே?

கர்ணன் அந்த சிறந்த வாய்ப்பை மறுக்கின்றார், ஏனெனில் அவர் கடந்தகாலத்தில் துரியோதனன் மீதான வைத்திருந்த விசுவாசம் மேலும், அதே போன்று மரபு வழியில் பாண்டவர்களுடன் பிணைப்பு இருந்தாலும் அவர் துரியோதனின் பக்கம் இருக்க நிர்பந்திக்கப்பட்டிருந்தார். 

துரியோதனனுக்கு தனது நன்றிக்கடனை செலுத்த, கர்ணன் இந்திரப்பிரஸ்தாவின் மகுடத்தை துரியோதனனுக்கு அளிக்கலாம். இந்த கர்ணனின் எண்ணம் தர்மத்துக்கு எதிராக இருந்தது. அவர் மேலும் கிருஷ்ணரிடம், நீண்ட காலமாக பாண்டவர்களுடன் உண்மையின் பக்கம் இருக்கிறீர்கள், தோல்வி என்பது அவருக்கு நிச்சயம் என்பதை நினைவூட்டினார். கிருஷ்ணர் வருத்தமடைந்தார், ஆனால் கர்ணனின் விசுவாசத்தைப் பாராட்டினார், அவரது முடிவை ஏற்றுக்கொண்டார்!

விக்கிமீடியாவில் இருக்கும் கர்ணன் (மகாபாரதம்)  தகவல்கள் சரியா? தவறா?

17 கருத்துகள்:

  1. ///தகவல்கள் சரியா? தவறா?///

    நான் தவறு என்று சொன்னால் சரியான பதிலாக இருக்குமா அல்லது சரி என்று சொன்னால் தவறாக இருக்குமா எனக்கு இப்போது எப்படி சொல்லுவது என்பதில் பெரும் குழப்பமாக இருக்கிறது. அதனால் யாரவடு சரியான பதில் சொல்லும் போது படித்து புரிந்து கொள்கிறேன்....ஹீஹீஹீ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு ஜால்ரா தேவையில்லை.விக்கிமீடியாவில் இருக்கும் தகவல்கள் சரியானதா என்பதும்,மகாபாரதத்தில் கர்ணனைக்குறித்த தகவல்களில் நான் அறிந்தவை குறித்த புரிதலின் உண்மைத்தன்மையும் தெரிந்தால் போதும் சார்!

      நீக்கு

    2. விக்கிபீடியாவில் இருப்பது அனைத்தும் உண்மையல்ல

      நீக்கு
    3. அது எனக்கும் தெரியும்!ஆனால் மகாபாரதம் எனும் கதை நிஜமோ கற்பனையோ நான் குறிப்பிட்ட சம்பவம் கர்ணன் வாழ்க்கையில் நடந்ததாய் எழுதப்பட்டிருக்கின்றதா இல்லையா என தெளிவு படுத்துங்கள்!

      நீக்கு
  2. வாழ்வில் சில உன்னதங்கள்
    போற்றப்படவேண்டியவை
    சில குறைபாடுகள் இருப்பினும்...

    அந்த வகையில் தவறுகள்
    நடப்பது தெரிந்தும்
    தடுக்கும் சக்தி இருந்தும்
    வேடிக்கை பார்த்த பீஷ்மனும்
    இதில் சேர்த்தியே

    இப்படிப்பட்ட முரண்பட்ட
    கதாபாத்திரங்களே
    மகாபாரதத்தின் சிறப்பு

    இன்னும் சரியாகச் சொன்னால்
    நாமும் அன்றாட வாழ்வில்
    அப்படித்தானே இருக்கிறோம்..

    நல்ல மகனாகவும்
    நல்ல கணவனாகவும்
    நல்ல அப்பாவாகவும் இருக்க
    நாம் அன்றாடம் செய்து கொள்ளும்
    சமரசம் அல்லது பார் விளையாட்டுக் கூட...

    பதிலளிநீக்கு
  3. அன்பின் நிஷா அவர்களுக்கு, ..ஒரு தொடர்பதிவுக்கு அழைக்கிறேன் ..
    தாங்களும் தங்களுக்கு பிடித்த பதிவுகளை பதிந்து..வலைப்பதிவு உலகை வளர்க்க வீண்டுகிறேன்.

    http://naanselva.blogspot.com/2016/02/blog-post_29.html

    பதிலளிநீக்கு
  4. சங்ககாலம் தொடங்கி நிகழ்காலம் வரை கட்டுக்கதைகளில் உண்மையும் உண்டு, உண்மைச் சம்பவங்களில் பொய்யும் புணைவும் உண்டு.

    பதிலளிநீக்கு
  5. சில விஷயங்கள் புரியாதவை..... மஹாபாரதத்தில் பல கதைகளும்!

    பதிலளிநீக்கு
  6. கிருஷ்ணரை கேட்டு சொல்கிறேன்...

    பதிலளிநீக்கு
  7. இந்திய இதிகாசங்கள், அதன் நாயகர்களைக்கொண்டு மட்டுமே அறிய/அழைக்கப் படுவதில்லை.

    அது வெறும் இராமரின் இராமாயணம் / மகாபாரதம் இல்லை. 'வால்மீகி'இராமாயணம். 'வியாச' பாரதம், 'வில்லி' பாரதம் எனப் பல.

    எனவே.........



    இதிகாசம் கிடக்கட்டும் புடலங்கா ஒரு பக்கம். நட்பா இல்லையா சரியா தவறா எனில், நண்பர்கள் செய்தால் சரி. போதுமா?

    http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2016/02/1-3-2-1.html

    பதிலளிநீக்கு
  8. தங்கள் பார்வைக்கு : பொருந்தக்கூடும் எனத் தோன்றியதால்.

    http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2012/08/straight-wry.html

    பதிலளிநீக்கு
  9. விக்கியில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்ற நிலையில், அவற்றை ஆராய்ந்து பார்த்து சரி செய்ய நாட்களாகலாம். விக்கியை முழுஅளவில் நம்ப முடியாது.

    ஆனால் மகாபாரதம் பற்றி எப்படி வேண்டுமானாலும் ஆராய அதுவே இடமளிக்கிறது. கர்ணன் நட்புக்கு இலக்கணம் என்பதில் ஐயமில்லை. அதே டமயம் குந்திக்கு அவன் அளித்த வாக்கு (ஒரு குறிப்பிட்ட அஸ்திரத்தை ஒருமுறைதான் ஏவுவேன்) என்பதும், நண்பனைக் கலக்காமல் தனது கவச குண்டலங்களை தானம் செய்ததும் துரியோதனனின் தோல்விக்கு முக்கிய காரணங்கள். பீஷ்மர், துரோணர் உட்பட சிலர் கௌரவர்களுடனேயே இருந்தும் கூட கர்ணனுக்கு அவர்கள் பெரும்பாலான சமயம் எதிர் நிலையிலேயே இருந்தார்கள். நல்லதை துரியோதனனுக்கு அவன் போதித்தது பற்றி தெரியவில்லை. சூதாட்டத்தில் வென்ற பாஞ்சாலியைப் பற்றி மிகக் கேவலமாகப் பேசுபவன் கர்ணன். மகாபாரதத்தின் நன்மை, தீமை, தர்மம், அதர்மம் பற்றி பாரபட்சமில்லாமல் எழுதி இரண்டு வகை தர்க்கத்துக்கும் சுதந்திரமாக இடம் அளிக்கிறார் வியாசர். எழுதுபவரே அந்தக் காவியத்தில் ஒரு பாத்திரமாக வருவதும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  10. ராமாயணமும், மகாபாரதமும் இந்தியாவின் தொன்மைக் கதைகளின் தொகுப்பு. ஒவ்வொருமொழியிலும் ஒவ்வொருமாதிரியான கதைகளின் தொகுப்புகள். இதற்க முடிந்த முடிவான கதை என்று ஒன்று கிடையாது. எனவே இதில் ஒருமொழியில் இருப்பதை எடுத்து வைத்துக்கொண்டு மற்றொரு மொழியில் இல்லையே எனும் குழப்பம் தொடர்வது இயல்பே. உதாரணமாக சீதையும் ராமனும் திருமணத்திற்கு முன்னரே சந்தித்து, “கண்ட அளவிலேயே” காதல்கொண்டதாக -தமிழ்வழி- கம்பன் எழுதிய வரிகள் புகழ்பெற்றவை (அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்) ஆனால் இப்படி வால்மீகி எழுதவில்லை. இதுபோலும் மகாபாரத மாற்றங்களைப் பாரதிவரை செய்தே எழுதியிருக்கிறார்கள். ஆனால், பாரதக் கதைகளில் என்மனம் கவர்நத பாத்திரம் கர்ணன்தான். இதை எனது கட்டுரையின் விளக்கத்திற்காகப் பயன்படுத்தியிருப்போன் பார்க்க- http://valarumkavithai.blogspot.com/2012/03/blog-post_10.html

    பதிலளிநீக்கு
  11. சும்மா எதையாவது எழுதி ”ஒப்பேத்தும்“ வலையுலகில் இப்படியும் சிந்தித்து எழுதும் உங்கள் பதிவை இன்றைய தன்பதிவில் அறிமுகம் செய்த நண்பர் கவிஞர் மீ.செ.அவர்களுக்கு நன்றியும் உங்களுக்கு என் த.ம.வாக்கு + வாழ்த்தும் சகோதரி.

    பதிலளிநீக்கு
  12. நான் படித்தவரை இது உண்மைதான்மா...ஆனா கதைகளில் உண்மையை உணர முடியாதும்மா...

    பதிலளிநீக்கு
  13. நீங்கள் சொல்லியிருக்கும் சம்பவங்களையும் அறிவோம். வாசித்திருக்கின்றோம். ஆனால் பாருங்கள் சகோ ஒவ்வொரு வெர்ஷனும் ஒவ்வொன்றாய் இருக்கின்றன. இவற்றில் எது உண்மை பொய் என்று யாருக்கும் அறுதியிட்டுக் கூற இயலாது. அது தங்களுக்கும் தெரியும். மகாபாரதக் கதைகள் பல புரியாதவை. எனவே நாம் நல்லதை அதாவது அவற்றிலிருந்து பெறும் நீதியை, நல்ல கருத்துகளை மட்டும் எடுத்துக் கொண்டு செல்வோம். சரிதானே சகோ?!!! நல்ல சிந்தனைப் பதிவு.

    பதிலளிநீக்கு
  14. எது நமக்கு சரியாக இருக்கின்றதோ அதை பின்பற்றுவோம் எது தவறோ அதை விட்டுவிடுவதே நல்லது! இதில் விக்கிமீடியா சொல்வது எல்லாம் உண்மையும் அல்ல!

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!