தற்சார்பு வாழ்க்கை நோக்கிய வழி காடடல் -2
தற்சார்பு வாழ்க்கை நோக்கிய வழி காடடலில் தேவைக்கும் மேல் எதை உற்பத்தி செய்தாலும் அதுவும் வீண் விரயமே.
தனி மனிதர் தற்சார்பு முயற்சி வெற்றி பெற ஒரே நேரத்தில் பல்வேறு முயற்சிகள் தேவை அதுவே சமூகம் இணைந்து முயற்சிக்கும் போது இலகுவானதாகவும், அதிக பலன் தருவதாகவும் இருக்கும்
அவரவர் தேவைக்கும் மேல் உற்பத்தி செய்வது தவிர்க்க வேண்டும்.அனைவரும் ஒரே இலக்கில் ஒரே பயிர்களை விதைப்பதும் தவிர்க்க வேண்டும்.
எல்லோரும் தக்காளியும். கீரையும், வெண்டியும், மரவள்ளியம் நடடால் தற்சார்பு வாழ்க்கை நிறைவு பெறுமா?
இல்ல...!
ஒரு குடும்பம் இனி வரும் நெருக்கடிக்கு தயாராக்குவதாக எடுத்து கொள்வோம்.
வீடடை சுற்றி இருக்கும் நிலத்தில் மரவள்ளி நடடால் பசிக்கு உதவும்.அதுவே தினமும் உணவாக உண்ண முடியுமா?அலுத்து, சலித்து போகுமா இல்லையா?
அப்படி எனில் என்ன தான் செய்யணும்?
வீட்டுத்தோட்டம் செய்யும் ஒருவரிடம் கீரை, காய், பழம் இருக்கும் இது மட்டும் தற்சார்பு வாழ்வுக்கு
போதாது.பால் முடடை அரிசி போன்ற ஏனைய பொருட்க்களை பெற்றால் தான் நிறையுணவை அவன் பெறுவான்.சோப்பு சீப்பு போன்ற ஏனைய அத்தியாவசிய பொருள்களும் வேண்டும்.அதற்கு பணம் தேவை.
எனில்.......?
தன் தேவைக்கு மேல் கிடைக்கும் உற்பத்தியை பண்டமாற்று செய்யும் வாய்ப்பு இருந்தால் ( பணமாவோ பொருளாகவே பெற முடியும் போது தான் ) தற்சார்பு வாழ்க்கை முழுமை பெறும்!
கோழி வளர்க்கும் ஒருவர் முடடையும் இறைச்சியும் கொடுத்து அரசி பெறுவார்.
ஒரு கிராமத்தில் 5 பசுவும் மாடும் வைத்திருந்தால் அந்த கிராமத்தில் இருக்கும் 100 குழந்தைக்கு தினமும் பால் கிடைக்கும்( அங்கர் மா இல்லை எனும் கவலை இல்லாமல் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும் ) கீரை, காய், கனி, கிழங்குவகை நெல், முடடை, பால் இறைச்சி என எல்லாமே எமது தேவைக்கு ஏற்ற உற்பத்தி, தற்சார்பு வாழ்வுக்கு முக்கியம்.
அனைத்தும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றால் குறுகிய, நீண்டகால பயன் தரும் திடடமிடல், வழி காடடல் இருக்க வேண்டும்.
கிராமங்கள் தோறும் ஒன்றில் பத்து நூறென பெருக்கும் ஆர்வமும் நுண் திறனும் கொண்டவர்கள் இன்னமும் தமது ஆற்றலை பெளிப்படுத்தும் வாய்ப்பு இல்லாது இருக்கின்றார்கள்.உங்கள் ஊரிலே இவ்வாறானவர்களை தேர்ந்தெடுத்து ஒருங்கிணைப்பதன் மூலம் நிறைந்த பயனை பெறலாம்.
இக்காலத்தில் நிவாரணம் வழங்கும் பலர் தம் சுற்று வடடாரம் கடந்து 20 - 30 கிமி பயணிப்பதை விட அவர்களின் ஒட்டு மொத்தமனித ஆற்றலை தாம் வாழும் பிரதேசத்தை தற்சார்பு வாழ்க்கை நோக்கிய இலக்கில் செலுத்தி மாதிரி கிராமங்களை உருவாக்குவார்கள் என்றால் அவர்களை பின் தொடர்ந்து பலர் தம்மை தாமே
உணர்ந்து.உருவாக்கி கொள்வார்கள்..! உரமாகுவார்கள். கிராமங்கள் செழித்து உயிர்க்கும் போது நகரங்கள் பிழைக்கும்!
நினைவில் கொள்ளுங்கள்....!
தற்சார்பு வாழ்க்கை என்பது பறப்பதற்கு வழி காடடாது!
உயிர் பிழைப்பதற்கு நிச்சயம் வழி காட்டும்!
( பிழைத்த பின் பறக்கவும் வலிமை தரும் 😀)
பணப்புழக்கம் குறைந்தாலும் பண்டமாற்று தொடர்ந்து நடந்தால் தான் தற்சார்பு வாழ்க்கை வெற்றி பெறும் என்பதனால் மக்களுக்கு இதை உணர்த்தி உண்மையில் ஆர்வம் காட்டுவோர், சமூகம், எதிர்காலம் என சிந்திப்போர் விடாமுயற்சியும், ஆர்வமும் இருப்போரை இணைத்து கொள்ளுங்கள்.
கிராமங்கள் தோறும் ஆற்றலும்,ஆர்வமும் உள்ளவர்களை இணைந்து சமூக குழுக்களையும் மற்றும் Facebook, what's app குழுக்களையும் உருவாக்குங்கள்।
இந்த அமைப்புகள் மூலமாகவே விதைகளையும், விளைபொருள்களையும் பண்டமாற்று செய்யும் வாய்ப்புகளை உருவாக்கி கொள்ளுங்கள்
1. வீட்டு தோட்டம்
***************
1️⃣ சோளம் விதைக்கையில… சொல்லிப்புட்டு விதை’னு சொல்வாங்க!
எதை எதை எப்போது எங்கே எவ்வாறு விதைத்தால் பலன் அதிகம் என தகுந்த ஆலோசனைகளை பெற்று நிலத்தில் அன்றாட தேவையான காய்கறி, கீரைவகை, சிறியவகை மரங்களான எலுமிச்சை, கொய்யா, மாதுளை,கறிவேப்பிலை,வாழை, மா, பப்பாசி,போன்றவையும் நட ஊக்கப்படுத்துங்கள்
அதே போல் ஒரே நேரம் அனைத்து விதையும் நடாமல் விதைக்கும் காலம், அறுவடை காலங்கள், கணக்கிட்டு தேவையான அளவு வருடம் முழுதும் பயன் தருவது போல் கால இடைவெளி வீட்டு நட வேண்டும்.
ஒரு கிராமத்தில் 100 குடும்பம் இருக்கும் எனில் எல்லோரும் சம காலத்தில் கீரை, தக்காளி,வெண்டி பயிரிடுதல் தவறானது. எல்லோரும் மரவள்ளி நடுகை செய்வதும் பயனின்றி போகும். எல்லோர் வீட்டு தோட்டமும் ஒரே நேரம் கீரை, தக்காளி விளையும் எனில் என்ன நடக்கும் என யோசித்து பாருங்கள். சலித்து போகும்
எங்கள் ஆற்றல் விரயமாகி போகும்.
✅ இன்னார் இதை என நெறிப்படுத்தி காலத்தை பயனுடையதாக்க வேண்டும்
அதனால் தோட்டம் போடும் முன் காலத்துக்கு தக்க ஊடு பயிர், பல பயிர், இரடடைபயிர் குறித்தும் தெளிவாக அறிந்து
நீர்ப்பாசன வசதி குறித்தும் முன் கூட்டி திடடமிட்டு கொள்ளுங்கள்.
நாலு தக்காளி கண்டு என்றாலும்
நீர் வேண்டும்.கீரை பாத்தி நீரினுள் வேண்டும்
2️⃣ மரவள்ளி, உருளைக்கிழங்கு போன்றவைகளும் ஊருக்குள் இருக்கும் விளை நிலங்களில் நட ஆற்றல் உள்ளோரை ஊக்கப்படுத்துங்கள்.
3️⃣ பாரம்பரிய நெல்ரகங்கள் அல்லது தானியவகைகளை வளருங்கள்.
🙏 வீட்டுதோட்டம் உங்களது எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ள இருக்கும் ஒரே வாய்ப்பு என்பதால் செயற்கை உரங்களை தவிர்த்து கிராம மற்றும் ஊர் பாரம்பரியங்களை பின்பற்றுங்கள்.
•
2. விவசாயத்திற்கு தேவையான நாட்டுமாடு, பால் தரும் பசுமாடு ( ஜெரசி வேண்டாம் ) ஆடு, கோழி போன்ற கால்நடைகளை வளருங்கள் இதன் கழிவுகளை விவசாயத்திற்கு பயன்படுததுவதன் மூலம்
✅ இயற்கை உரம் கிடைக்கும்.
ஆரோக்கியம் மேம்படும்.
✅ முடடை, பால்,இறைச்சி போன்ற தேவைகளும் நிறைவாகும்
உங்களுக்கு தேவையானவற்றை போக மற்ற விளைபொருள்களை விற்று பொருள் ஈட்டிக் கொள்ளுங்கள்।.
4. மழை நீர் சேமிப்பு தற்சார்பு வாழ்வுக்கு அத்தியாவசியமானது.
5. தற்சார்பு வாழ்க்கை நோக்கிய திடடமிடலில் மிக முக்கியமானது மின்சாரம்
இலங்கை போன்ற வெப்பப்பிரதேசங்கள் சூரிய சக்தியில் மின்சாரம் பெறும் வழிகளை குறித்தும் ஆராய்ந்து செயல் படுத்துவீர்கள் என்றால் தற்சார்பில் முழுமையடைந்த வெற்றி பெற்ற மாதிரி கிராமம் ஒன்றை உருவாக்கி இருப்பீர்கள்
☀️ புலம் பெயர்ந்து வாழும் எங்கள்உதவி என்பது அவரவர் சொந்த கிராமத்தை இவ்வாறான மாதிரி கிராமங்களாக மாற்றும் இலக்கில் இருக்க வேண்டும்.
☀️ இங்கே எழுதும் ஆர்வமிருக்கும் சிலர் இணைந்து இவ்வாறான கிராமம் ஒன்றை முன் மாதிரியாக உருவாக்கி வழி காடட வேண்டும்.
🙋🏻♀️ மாதிரி தற்சார்பு கிராமம் ஒன்றை உருவாக்கும் முயற்சிக்கு என்னால் முடிந்த வரை உதவ நான் தயாராக இருக்கின்றேன்
ஏந்திப்பிழைக்க அல்ல ,
எழுந்து நிமிர்ந்து ஜெயிக்க வழி காட்டுவோம்
இந்த ஆலோசனை கிராமங்களுக்கானது
என்பதனால் எப்போதும் போல் வியாபார ரீதியில் தோட்டம் செய்யும் விவசாயிகளை பாதிக்காது இருக்க அவர்கள் விளைச்சல்கள் நிலம் இல்லாத நகர வாசிகளுக்கும்
வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி
செய்ய, மதிப்பு கூட்டி விற்கும் வாய்ப்புக்கள் குறித்தும் ஆலோசித்து செயல் படுத்த வேண்டும்.
Nisha 🙏
https://www.facebook.com/100000786292216/posts/2839779066058275/?d=n
நல்ல ஆலோசனை...காந்தி வலியுறுத்திய கிராமீயப் பொருளாதாரம் போல...
பதிலளிநீக்கு