25 ஏப்ரல் 2020

கொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி।- 5

சமூகம் நெருக்கடியை சந்திக்கும் போது அவர்கள் தனியே இல்லை, நாங்க கூட இருக்கின்றம் என உணர்த்த எங்கட கைக்குள் களமும் காலமும் நேரமும் இருக்கும் வரை தான் நான் இங்கே என் ஆலோசனைகள் பகிர்வேன்

கை தூக்கி விட என்னால் முடிந்த அனைத்தும் செய்வேன்

காலம் கடந்து, சூழல் சுழலுக்குள் சுழல ஆரம்பித்த பின் ஐயோ அம்மா பசிக்குது, பட்டினி
என்றழுதாள்  கண்ணை மூடி போய் கொண்டிருப்பேன்

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்” 
( குறள் விளக்கம் தேடி புரிந்துக்கோங்கோ )

இத்துணுண்டு எறும்புக்கு கூட மாரி காலத்துக்கு தனக்கான உணவை சேமிக்கணும் என தெரியுது।

மனிதர்கள் என்னவென்றால் அதிகம் உழைத்தால் சமுர்த்தி தடை செய்வார்களாம்
அரசும் தனியாரும் நிவாரணம் தர மாடடார்களாம்😡

ஏலேய் மெத்த படித்த மானிடா!
அகப்பையில் இருந்தால் தான் சட்டியில் வரும்..!

உங்களுக்கு இலவசம் தர அரசுகள் உலகவங்கியிடமும் அமெரிக்காவிடம்,சீனாவிடமும் வாங்கிய கடனுக்கு  அடிமையாகி।  நாடே திவாலாகி போனது.

அவர்களே இனி ததிங்கிணத்தோம் ஆட போகினம்! இனி எங்கிருந்து இலவசம் தட்டுவார்கள் என நம்புறீங்க?

கடந்த காலம் பேசி
நிகழ்கால லாபம் பார்த்து
எதிர்காலத்துக்கு கல்லறை கட்டுவது தான் உங்கட விருப்பம் எண்டால்....?

நிஷா 😴😴😴
🙇‍♂️🙇🏻🙇‍♀️🙇‍♀️🙇🏻🙇‍♂️

Link:கொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி। -3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!