“எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்”
உலகம் பேரிடர்களை சந்திக்கும் காலங்களில் எல்லாம் மக்கள் தம் அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்கான நெருக்கடியை எதிர்கொள்கின்றார்கள்!
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி கொண்டிருக்கும் இக்காலத்தில் மக்கள் வாழ்வாதாரம் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது!
உலக நாடுகள் தனிமை படுத்த பட்டுள்ள நிலையில் இனி வரும் நாட்களில் பலவகை பஞ்சங்கள் ஏற்பட்டு, பட்டினிச் சாவு அதிகரிக்கும் ஆபத்து உள்ளதாக, ஐ.நாவின் உலக உணவு திட்ட இயக்குனரகம் எச்சரித்துள்ளது।
குறைந்த மற்றும் நடுத்தர வளர்ச்சியடைந்த நாடுகளில் 265 மில்லியன் மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்கள் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்பதை சமீபத்திய ஆய்வுகளும் கணிப்புகளும் குறிப்பிடுகின்றன।
இலங்கை அரசு இனி வரும் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்ள வீட்டுத்தோட்டம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கின்றது!
எங்கள் தேசத்தில் கொட்டி கிடங்கும் இயற்கை வளங்களை திடடமிட்டு பயன் படுத்தினால் நாங்களும் எங்கள் மக்களும் வர இருக்கும் ஆபத்துக்களை எதிர் கொண்டு பிழைக்க முடியும்।
தற்சார்பு வாழ்க்கை, வீட்டு தோட்டம், விவசாய செய்திகள், துணுக்குகள், ஆலோசனைகள், அனுபவங்களை பகிர்ந்தும் அதற்கான செயல் பாடுகளை முன்னெடுத்து செல்ல ஆர்வம் காட்டுவோரை ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு இக்குழு ஆரம்பிக்க பட்டுள்ளது।
இலங்கை விவசாய அதிகாரிகள், விவசாயம் சார்ந்த வல்லுநர்கள், அனுபவசாலிகள் இணைந்து பங்களிப்பை தருகின்றார்கள்!
நாமும் நம்மை சார்ந்தோரும் கொரோனாவிலிருந்தும்
அதன் விளைவாக உருவாக்கப்போகும் பசி பட்டினியிலிருந்தும் பாதுகாக்கப்பட ஒன்று பட்டு செயல் படுவோம்!
காலத்தே பயிர் செய்ய வேண்டிய அவசியத்தை எங்கள் நண்பர்கள் உறவுகளுக்கும் உணர்த்துவோம்!
குழுவை லைக் செய்வதன் மூலம் பலர் பயன் பெறுவார்கள்!
Like Page லிங்க்:
கொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி। - 2
https://www.facebook.com/100000786292216/posts/2845317392171109/?d=n
கொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி। - 2
https://www.facebook.com/100000786292216/posts/2845317392171109/?d=n
நன்றி🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!