05 ஏப்ரல் 2020

COVID -19 கொரோனா வைரஸ் நோயின் அறிகுறிகள்?

05.04.2020 

▶️ கொரோனா வைரஸ் நோயின் அறிகுறிகள்

எல்லோரும் ஒரே அறிகுறிகளை உணர்வதில்லை 

#COVID-19, அறிகுறிகள் ஒவ்வொரு மனிதருக்கும் இடையில் மாறுபாடு கொண்டதாக இருக்கின்றது 

இருமல் ( பெரும் பாலும் வறட்டு இருமல் )
தொண்டை வலி / வரட்சி 
மூச்சு திணறல்
அதிக உடல் வெப்பநிலை / காய்ச்சல்
தசை வலி ( மிகவும் அரிதாக ) 

தலைவலி
இரைப்பை குடல் அறிகுறிகள்
வெண்படலம் 
தலை குளிர்தல் 
வாசனை  நுகர்வு மற்றும் / சுவை உணர்வு இழப்பு
நிமோனியா போன்ற சிக்கல்கள் 

இந்த அறிகுறிகளைக் கொண்ட அனைவருக்கும் புதிய கொரோனா வைரஸுக்கு சோதனை செய்யப்படாது. இருப்பினும், மேலே உள்ள அறிகுறிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை நீங்கள் அனுபவித்தால், உங்களுக்கு புதிய கொரோனா வைரஸ் தொற்றி இருக்கும்  வாய்ப்பு உள்ளது. இவ்வாறான அறிகுறிகளை உணர்ந்தால் நீங்கள் குறைந்தது பத்து நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.

சுய தனிமை குறித்த வழிமுறைகளையம்  ஆலோசனைகளையும்  கவனமாகப் பின்பற்றுங்கள்.

▶️ நோய் தீவிரமாவதை எவ்வாறு உணரலாம்? 

COVID-19,  கொரோனா வைரஸ் நோய் முன்னேறும் முறை பரவலாக மாறுபடும். சிலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருக்கலாம் அல்லது அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை கவனிக்க முடியாது. 

குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே இது மிகவும் அரிதானது என்றாலும், அனைத்து வயதிலும் மக்கள் தீவிரமாக நோய்வாய்ப்படலாம். 

வயதானோரையம், புற நோய்ப் பாதிப்பு இருப்போரையும்  கடுமையாக பாதிக்கின்றது எனினும் ஆரோக்கியமான எவ்வித புற நோய் பாதிப்புகளும் இல்லாதவர்களுக்கும்  எவ்வித அறிகுறிகளும் வெளிப்படாமல்   சோதனையில் Covid 19  பாசிட்டிவ் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள் 

எந்த அறிகுறிகளையும் காட்டாமல் நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள், அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது, எனவே இவர்களும்  கொரோனா வைரஸை தாம் உணராமல் மற்றவர்களுக்கு அனுப்ப முடியும்.

பாதிக்கப்பட்டவர்களில் ஆரோக்கியமான மற்றும் 65 வயதிற்குட்பட்டவர்களில். பெரும்பான்மையானவர்கள் லேசான அறிகுறிகளையம், மிதமான வலிகளையும்  உணர்கின்றார்கள்.

அதிக ஆபத்தில் உள்ளவர்கள் கடுமையான நோயை அனுபவிக்கும் வாய்ப்பு அதிகம். 

நோய் கடுமையாகும்  சந்தர்ப்பங்களில், ஆரம்ப  அறிகுறிகள் லேசானவையாக இருந்து  ஐந்து முதல் பத்து நாட்களுக்குப் பிறகு மோசமடைகின்றன. சில நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் மற்றும் நிமோனியா உருவாகலாம். 

ஒரு சிறிய எண்ணிக்கையிலான நோய் தோற்றாளர்களுக்கு சுவாசம் தடைப்பட்டு  தீவிர சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு மோசமடைகின்றன பாதிக்கப்படட  நபருக்கு மருத்துவமனை சிகிச்சை மற்றும்நுரையீரலின் செயல்பாட்டை சீராக்குவதற்கு செயற்கை சுவாசம் ( வென்றிலேற்றார் )  அவசியமாகின்றது, 

கொரோனா தொற்று நோய் பொதுவாக ஒன்று முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும். பெரும்பாலோர் சரியான நேரத்தில் தீவிர சிகிச்சை அளித்ததன் காரணமாக நோயிலிருந்து தப்பித்து சில வாரங்களுக்குள் குணமடைவார்கள்.

கொரோனா வைரஸ் பாசிடிவ் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமாக்குவோர் ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் கண்காணிக்கப்பட்டு குணமடைத்ததாக உறுதி படுத்த படுவார்கள் 

இவ்வாறு குணமடைந்தவர்கள தொற்றுநோயிலிருந்து புதுப்பிக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாக இருக்கலாம்  என்று நம்பப்படுகிறது.

தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, நோய்தொற்றுக்கு உள்ளானோரில் 
1-2% பேர் இறக்கின்றனர்.


▶️  நோய்க்கு சிகிச்சையளிக்க முடியுமா?

இந்த நேரத்தில் கொரோனா வைரஸால் ஏற்படும் நோய்க்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. அறிகுறிகளை எளிதாக்குவதற்கு சிகிச்சை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகளை நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் சிகிச்சையளிக்க முடியாது, ஏனெனில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பாக்டீரியாக்களுக்கு எதிராக மட்டுமே செயல்படுகின்றன, வைரஸ்களுக்கு எதிராக அல்ல.




படம் ; 
சுவிஸ்ஸில் நோய் தொற்றிய ஆண்கள் பெண்கள், வயது, காலம் குறித்த கணிப்பீடு 

ஆதாரம்:
https://covid-19-schweiz.bagapps.ch/de-1.html

https://covid-19-schweiz.bagapps.ch/de-2.html

https://www.bag.admin.ch/bag/en/home/krankheiten/ausbrueche-epidemien-pandemien/aktuelle-ausbrueche-epidemien/novel-cov/krankheit-symptome-behandlung-ursprung.html

Nisha





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!