17 டிசம்பர் 2018

சோலைவனம் பாலைவனம் ஆகின்றதா?

கஜா பேரிடர் இத்தனை பாதிப்புக்களை தந்தும் அரசும், மீடியாக்களும் அதை அண்டை மாநிலங்கள் உட்பட வெளி உலகமே தெரியாமல் மறைத்தொழித்தது ஏன் ?
இதன் பின்னனி என்ன?
டெல்டா மாவட்டங்களில் நடந்தது என்ன?
நடபப்து என்ன? 
எட்டுவழி சாலைக்காக எதிர்ப்பு போராட்டம் மட்டும் தானே நடந்தது என்கின்றீர்களா?

நகரம் தொழில் மயமாக்கப்படும் போது இதுவெல்லாம் சகஜம் என கடந்து சென்றீர்களா?
அதே நேரம் எமன் உங்கள் தலை மேல் வட்ட மிட்டு கடந்ததை உணர்ந்தீர்களா?
உங்கள் குழந்தைகள் குறித்தும் அவர்கள் எதிர்காலம் குறித்தும் எத்தனையோ திட்டங்கள் தீட்டும் நீங்கள் அவர்களுக்கான் ஆரோக்கியமான, வளமான சூழல் ஒன்றை உருவாக்கி தருவதே கல்வி செல்வத்தினை விடவும் அவர்கள் வாழ் நாட்களை நிம்மதியாக வாழவும், அதிகரிக்கவும் செய்யும் என அறிந்திருக்கின்றீர்களா?
பட்டமும், பதவியும், சொத்தும் , வைரமும், வைடூரியமும் சேமித்து கொடுப்பதே உங்கள் இலக்கென கொண்டு நாளைய சந்ததிக்காக அர்ப்பணிப்பதனாக் சொல்லி செல்லும் பாதை மாயை உலகை வழி காட்டி நிற்பதை குறித்தேனும் சிந்தித்திருக்கின்றீர்களா?
ஒரு பக்கம் பசுமைத்தேடல் எனும் விளம்பரம், அதற்காக பற்பல் யுக்திகளும் செலவுகளுமாக 
நானும் சமூக ஆர்வலர், இயற்கை விவசாயி என 
பதிவுகள் இட காட்டும் ஆர்வத்தினை 
அதே பசுமையை அழித்தொழிக்கப்படும் போது கண்டும் காணாது கடந்து போவது ஏன்?

வளங்கள் பறி போகக்கூடாது எனும் நல்லெண்ணத்தில் உண்மைகளை எழுதி வெளியிட்டதற்காக பொலிஸ் கஸ்டடியில் கொண்டு சென்று வதை பட்ட சமுகத்து ஆர்வலர்கள் மீதான உங்கள் அக்கறை என்ன?
நடப்பது என்ன? ஏன்? கேள்விகள் மட்டுமே உங்கள் முன் இருக்கின்றது. அதற்கான விடைகளை தேடுங்கள்.
நடந்தது என்ன என்பதை பார்ப்போம். இந்த வருடம் நடுப்பகுதியில் வந்த கட்டுரை ஒன்றை இங்கே பகிர்கின்றேன்.
டெல்டாவின் கடைமடை பகுதியில் அடுத்தடுத்த புதிய ongc கிணறுகள். தாங்குமா திருவாரூர்?
பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே, சுற்றிலும் லேசர் வளையங்கள் பாதுகாப்பில் இயங்கி கொண்டிருக்கும் கரையங்காடு ongc நிறுவனத்தின் எண்ணை கிணற்றிற்கு அருகே சுமார் 1000 மீட்டர்களுக்கும் குறைவான தூரத்தில் உள்ள விளாங்காடு கிராமத்தில் புதிய எண்ணை கிணறுகள் அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது ongc நிறுவனம்.
இடும்பாவனம்,கற்பகநாதர்குளம் துளசியாப்பட்டினம் பகுதியில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையின் இடது புறத்தில் இந்த பணிகள் மிக துரிதமாக நடைபெற்று வருகின்றது. கடந்த இரு வருடங்களாக சிரமைக்கப்படாத சாலைகள் அவசர அவசரமாக சரிசெய்யப்பட்டதை சில முகநூல் போராளிகள் எங்களுக்கு கிடைத்த வெற்றி என மார்தட்டி கொண்டார்கள் ஆனால் இப்பொழுதுதான் அதற்கான வெற்றி யாருக்கென்பது தெரிகிறது என்கிறார்கள் இப்பகுதி சமூக ஆர்வலர்கள்.
உலக புகழ்பெற்ற கற்பகநாதர்குளம்,இடும்பாவம் கோவில் பகுதிகளை சுற்றி பல எண்ணை கிணறுகள் அமைக்கப்படுவதால் அதன் தொன்மையும் அதன் இயற்கை மரபும் மாறிவிடுகிறது என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
இடும்பாவனம் பகுதியை சுற்றி பல கிணறுகள் அமைக்கப்படும் சூழல் தென்படுவதாகவும் இதுபோன்று கிணறுகள் அமைக்கப்படுவதற்கு முன் மக்களை ஏன் அந்த நிறுவனம் கருத்து கேட்கவில்லை என ஆதங்க படுகிறார் அப்பகுதி குமார் .
நெடுவாசல் கதிரமங்களம், பக்கத்து ஊர் கரையங்க்காடு தொண்டியக்காடு பகுதிகளில் மக்கள் தங்கள் எதிர்ப்பை அனுதினம் தெரிவித்து வரும் நிலையில். இடும்பாவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான விளாங்காட்டில் நிலங்களை விவசாயிகள் தாரை வார்த்தது ஏன் ? என கண்ணீர்மல்க கேள்வி எழுப்பினார். சிலர் வாழ பலரை கெடுப்பது சரியா ?
இது கடந்து போன நிஜங்கள்
கஜா எனும் பேரிடரின் பின் அரசும், மீடியாக்களும் நடந்து கொண்டிருக்கும் விதம் உண்மைதனை உணர்த்தவில்லையா?

அரசும் மீடியாவும் விளை நிலங்களையும், வளங்களையும் அழிக்க துணை செல்கின்றதா?
இயற்கையின் பேரிடரையும் தமக்கு சாதகமாக்கி கொண்ட அரசின் சூழ்ச்சி தனை புரிந்து கொள்ளாமல் எதிர்காலத்தில் இன்னொரு சோமாலியாவாக , சூடானாக தமிழ் நாட்டை அலங்கோலமாக்கும் திட்டமிடல்களை நீங்கள் புரிந்து கொள்ள சோமாலியா,சூடான் நாடுகளின் வரலாறுகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேற்குலக நாடுகளின் பேராசைக்கு பலியான ஆபிரிக்க நாடுகளின் வரிசையில் தமிழ் நாடும் சேரராமல் இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என சிந்தியுங்கள்.
தகவல்  நிஷாந்தன் 


வேதாரண்யம்,கோடியக்கரை பறவைகள் சரணாலய தோற்றம்.கஜா புயலுக்கு முன்னும் பின்னும்...இராமர் பாதம் .



புகைப்படம் நன்றி  Seen Mani

15 டிசம்பர் 2018

உலகத்தின் நீர்த்தேவைகள்

எதிர்காலத்தில்  மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாக உலகின் வெப்பமாதலும், தீவிரவாதமும் இருக்கின்றது. 

பூமி வெப்பமயமாகுதல் என்பது  பூமியில்  சுற்றுப்புiறம் மற்றூம் கடற்பகுதியில் ஏற்பட்டிருக்கும் வெப்ப நிலை உயர்வைக்கொண்டே கணக்கிடப்படுகின்றது. அவ்வகையில்  பல காரணங்களால் நாம் வாழும் பூமியானது நாளுக்கு நாள் வெப்பமாகிக்கொண்டே செல்கின்றது.

ஒரு பக்கம் அதிக வெப்பமயமாவதனால் ஆட்டிக், அண்டாட்டிக் பிரதேச பனிப்பிரதேசங்களும், மலைகளும்  உருகி  கடல் நீர் மட்டத்தினை உயர்த்தி நிலமட்டம் தாழ்ந்து  வெள்ளப்பெருக்கு  முதல் நீர் சூழ்ந்த பேர்டர்களை உருவாக்க இன்னொரு பகுதியில்  கடும் வரட்சியும், பஞ்சமுமான நேரெதிர் சூழ் நிலையை காணக்கூடியதாக இருக்கின்றது. பூமித்தகடானது தன் குளிர்ச்சியை இழந்து வெப்ப நிலையில் அதிகரிக்கும் போது  கஜா புயல் போன்ற  இயற்கைப்பேரிடர்களின் அழிவுகள்  அதிகரிக்கின்றன.

தொழிற்புரட்சி எனும் பெயரிலும் நகரமயமாக்கல் எனும் பெயரிலும் கிராமங்கள் அழிக்கப்பட்டு  இயல்பான இயற்கையோடு இணைந்து வாழும் மக்களின்  வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு   விவசாய நிலங்களும் அழிக்கப்பட்டு காங்கிரிட் கூடாரங்களாக்கி பூமியை எலும்புக்கூடாக்கும் பணிகள் வேகமாக முன்னெடுக்கபப்டுகின்றன.

அடுத்த பத்தாண்டுகளுக்குள் முழு உலகமுமே மாபெரும்   நல்ல நீருக்காக  தவிக்க போவதாக அனைத்து நாடுகளும் மக்களை எச்சரிக்க ஆரம்பித்டிருக்கின்றன. நீரை சேமியுங்கள் வீண் விரயம் செய்ய வேண்டாம்  எனும் பிரச்சாரங்கள் தொடர்ந்தாலும் மக்கள் அதைக்குறித்து அக்கறை இல்லாதவர்களாகவே வாழ்கின்றார்கள்.

உலகளாவிய  ரிதியில் நீர்ப்பங்கீட்டுக்காக  பல மோதல்களும், வழக்குகளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. 

மூன்றாம் உலகப் போர் என்று ஒன்று வந்தால் அது கண்டிப்பாகத் தண்ணீருக்காகத்தான் வரும் என்று உலக வல்லுனர்கள்   கூறுகின்றனர்.

நாடுகளுக்கிடையில் மட்டுமல்லாது நாட்டு மக்களுக்குள்ளும் விரோதங்களை உருவாக்கி மா பெரும் அழிவுகளை  பஞ்சங்களை  அனுபவிக்கும் சூழலையும் உருவாக்குகின்றது.  
  
ஐ.நாவின் கணக்கெடுப்பின் படி உலகத்தில் 1.1 பில்லியன் மக்கள் தங்கள் அத்தியாவசியத்தேவைகளுக்கான நீரும், 2.6 பில்லியன் மக்கள் தங்களை சுத்தமாக வைத்திருக்க தேவையான நீரும் இல்லாமல் தவிக்கின்றார்கள். 

உலகத்தில்  பல பாகங்களிலும் 5000 குழந்தைகள்  நீரின்றி ஆரோக்கிய க்குறைபாட்டால் இறக்கின்றார்கள். இத்தரவுகள் பதிவு செய்யப்பட்ட விபரங்கள் மட்டுமே... பதிவு செய்யப்படாமல் இன்னும் பல்லாயிரம் மக்கள் அரசுகளின் மெத்தனத்தினால் மூடி மறைக்கப்படலாம்.  

பூமியைசுற்றி சுமார் 1.4 பில்லியன் கன மீட்டர் தூரம் நீர் இருக்கின்றது. அதில் பயன் படுத்தக்கூடிய நல்ல நீர் வளம் என்பது  2.5 சதவீதம் வரை உள்ளது. நன்னீர் சுமார் 70 சதவீதம் polar caps  அல்லது மலைகளின் மீது நிரந்தர பனிக்கட்டி வடிவில் உறைந்திருக்கின்றது. மீதமுள்ள 30 சதவீதத்தில் 97 சத வீத நீர் நிலத்தடி நீராக சேமிக்கபப்ட்டு மனிதர்களின் அத்தியாவசியத்தேவைகளுக்கு பயன் பட  எஞ்சிய  3 வீத நீர் தான்  ஆறுகள், குளங்கள் மூலம் கிடைக்கின்றது.  

தற்காலத்தில் தண்ணீரின் முக்கியத்தேவைகளை இருவகையாக பிரிக்கலாம்

1.குடிநீர், ஆரோக்கியம், சுகாதாரம் மற்றும்  அத்தியாவசிய, அடிப்படை  விவசாயத்தேவைகளுக்கானது. 
2. தொழில் துறை சம்பந்தமான பயன் பாடுகள். கண்டுபிடிப்ப்புக்கள், சோதனைகள் இன்ன பிற அவசியமானவை,அனாவசியத்தேவைகள் என இருவகையில் பிரிக்கலாம். 

மனிதர்களின் குறைந்தபட்ச ஆரோக்கியத்துக்காக  ஒரு நாளைக்கு ஒருவருக்கு கிட்டத்தட்ட ஐந்து லீட்டர்  குடி நீரும்   அவனின் அடிப்படை சுத்தப்படுத்தல் சுகாதார தேவைகளுக்கு 20 லீற்றர் நீரும்  தேவைப்படுகின்றது. அஃதே விவசாயம் மற்றும் அத்தியாவசியத்தேவைகளுக்காக  அதாவது மனிதத்தேவைகளுக்காக  உலகின் மொத்த நீரின்  93 சத வீதம் அவசியமாகின்றது.

மனிதன் உண்ணும் ஒரு ஆப்பிள் பழத்தினை விளைவிக்க 70 லீற்றர்  நீரும் காலை எழுந்ததும் புத்துணர்ச்சி தரும் காப்பியை  பருக .. அதாவது ஒரு கிலோ காப்பிக்கொட்டையை விளைவிக்க  21,000 லீற்றர் நீரும் அவசியமாகின்றது.

ஒரு கிலோ சர்க்கரைக்குரிய கரும்பையோ, அரிசியையோ விளைவிக்க 5000 லீற்றர் நீரும், சிறு தானியங்களை உற்பத்தி செய்ய  200 தொடக்கம் 300 லீற்றர் நீரும் அவசியமாகின்றது. 

மனிதன்  அணிய பருத்திச்செடியில் ஒரு சட்டை தயாரிக்க  2,700 லீற்றர் நீர் தேவைப்படுகின்றது.

ஒரு லீற்றர் பயோ டீசல் தயாரிக்கவோ 9000 லீற்றர்  நீர்  பயன் படுத்தப்படுகின்றது ..

இதனிடையே அதிக விளைச்சல் விரும்பி இரசாயன உரங்களை  தொடர்ந்து நிலத்தில் கொட்டி விளை நிலத்தினையும் மலடாக்கும் அரும் பெரும் பணி இன்னொரு புறம் அமோகமாக நடந்தேறிக்கொண்டுள்ளது. 

புதிய எரிபொருட்களின் பயன் பாடு,   சுற்றுச்சூழல் பராமரிப்பு, நகரமயமாக்கல் கொள்கை, தொழில் புரட்சி, இயற்கை வளங்கள் அழிப்பு, மோசமான கால நிலை, வரட்சி,பூமி வெப்பமயமாதல்  என ஆயிரம் காரணங்கள் இருக்கட்டும்.

மழைகாலத்திலேனும்  நிலத்தடி நீரை   சேமிக்க என்ன நடவடிக்கை எடுக்க போகின்றோம் ⁉️⁉️

இது தான்  இன்று  நம்  முன்  இருக்கும் கேள்வி.

இணையத்தில் கிடைத்த ஆய்வுகட்டுரைகளிலிருந்தும் சில தரவுகளை பெற்றேன்.
நிஷாந்தி பிரபாகரன்