10 டிசம்பர் 2015

சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? என்ன செய்யப்போகின்றோம்?

சென்னை சீரழிவுக்குக் காரணம் யார் தெரியுமா? - அதிர வைக்கும் உண்மைகள்!எனும் தலைப்பிலான கவர் ஸ்டோரி படித்த பின் தோன்றியது 


என்ன செய்யப்போகின்றோம்? 

அரசு தரும் நிவாரணத்தினை வாங்கி டாஸ்மார்க்கில் கொண்டு போய் மீள கொடுத்து நன்றாக வயிறு முட்ட குடித்து விட்டு மதி கெட்டு மறுபடியும் என்ன இலவசங்கள் தருவார்கள் என அரசியல் கட்சிகள் தரப்போகும் எலும்புத்துண்டுகளுக்காக எச்சில் வடிய நன்றியுள்ள நாய்களாய் மாறி காத்திருக்க போகின்றோம். 

நாய்க்கு ஐந்தறிவு தான்! மனிதருக்கோ? ஒரு அறிவும் கிடையாது! அதிலும் தமிழனுக்கு கிடையவே கிடையாது!தமிழன் என்றாலே ஏமாளி என அவன் மூஞ்சியில் ஒட்டி இருக்குமோ என்னமோ!? 

சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? 

குப்பை கூழம் பிளாஸ்டிக் என ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் இந்த பேரிட இழப்புக்கு முழுக்க முழுக்க காரணம் அரசு மற்றும் அதிகாரிகளின் அலட்சியப்போக்கு என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை! பிளாஸ்டிக் போட்டார்கள் குப்பை போட்டார்கள் வடிகான்களை அடைத்தார்கள் என ஆயிரம் சாக்குப்போக்கு சொன்னாலும் அவையெல்லாம் ஒரே நாளில் நடந்ததில்லை பல வருடங்களாக நடக்கும் ஒரு விடயத்தை வைத்து இதனால் அதனால் என சொல்லி விலகுதல் ஏற்புடையதல்ல. 

முதலில் டிசம்பர் முதல் வாரம் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி அறிவிப்பு செய்த பின்னும் நவம்பரிலிருந்து மழை பெய்து அந்த நீரே ஓடுவதற்கு சரியான வடிகான்கள் இல்லாத நிலையில்... தொடர்ந்தும் மழை பெய்தால் என்னாகும் என அறியவும் உணரவும் இதற்கென ஆராய்ச்சிப்படிப்பா படித்து வரவேண்டும்?

முதலாம் கிளாஸ் படிக்கும் பிள்ளையே சொல்லும்... இத்தனை நடந்தும் அணைகள் நிரம்பி வழிந்து கொண்டிருந்ததை கடைசி நிமிடம் வரை வேடிக்கை பார்த்து விட்டு.... கடைசி நிமிடத்தில் தான் உணர்ந்தார்கள் அல்லவா? 

இந்த நேரடி அனுபவத்தினை படித்து பாருங்கள். 

இராணுவம், காவல்துறை சேர்ந்து வாகனத்தில் வந்து அறிவிப்பு செய்த நேரம் நள்ளிரவு 11 மணிக்கும் மேலாம். எந்த ஊரில் இரவு ஒன்பது மணிக்கு பின் தெருவில் நடமாட்டம் இருக்கும். ஏற்கனவே பேரிடர் அனுபவம் பெற்றிருப்பவர்களுக்கு கூட இந்த மாதிரி அறிவிப்பால் பயன் இராது. அப்படி இருக்கும் போது சாக்குப்போக்காய் ஒரு அறிவிப்பு... 

தன் கட்சிக்கு ஒரு பாதிப்பு எனில் தெருவில் செல்லும் பேருந்தை நிறுத்தி தீவைத்து கொழுத்த ஆயிரம் பேரை கூட்ட முடிந்தவர்களால் தன் மக்களுக்கு ஆபத்து எனும் போது செயல்பட முடியாமல் போனதேன்? ரயிலை நிறுத்தி, பேருந்தை எரித்து மரங்களை வெட்டி நாட்டை சுடுகாடாக்க ஒரே நொடியில் விரலசைவில் பல்லாயிரம் பேரை கூட்டி செயல் படுத்த முடிந்தவர்களால் அப்பாவிமக்களை வற்புறுத்தி அவசரகால பிரகடனம் செய்தாவது குறித்த நேரத்தில் மேடான பகுதிக்கு வர வேண்டும் என கட்டளை பிறப்பித்திருக்க முடியாதா? 

முடியாது என எவரேனும் சொன்னால் சொல்பவர்களுக்கு அறிவே இல்லை எனத்தான் நான் சொல்வேன்! ஒரு மணி நேரம் போதுமே! உடைமை போனாலும் உயிரிழப்புகள் குறைந்திருக்குமே! 

மழையால் மட்டும் வெள்ளப்பாதிப்பு இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்... அணைகள் திறக்கப்ட்டதால் தான் இத்தனை அழிவும் என்பதும் நிஜமே!அணையை திறந்து தான் விட்டீர்கள்.. கன மழை பெய்து அணை நிரம்பும் போது அடையாறு நதி கடலில் சேரும்மிடத்தில் ஆழமாக்கப்பட்டு விரிவாக்கபட்டு முகத்துவாரம் வெட்டப்படணுமாம். இம்முறை முகத்துவாரம் வெட்டப்படவில்லையாம். ஏன் முகத்துவாரம் வெட்டவில்லை. இதை செயல் படுத்த வேண்டியவர் யார்? 

அரசு தான் செய்யவில்ல எனில் வெள்ளம் வரும் போது நடைமுறை இதுவென பொதுமக்களேனும் கூடி பேசி முகத்துவாரம் வெட்டி நதி நீர் கடலில் போய் கலக்க வழி செய்திருக்கலாமே! 

அரசு செய்யட்டும் என மக்களும் பதவி மட்டும் தான் முக்கியம் என அந்த நேரத்துக்கு குழைக் கும்புடு போட்டு வரும் அரசியல் வாதிகளும், லஞ்ச லாவண்யங்களில் புரையோடிய அதிகாரிகளும்.... அத்தனை பேரும் தான் இத்தனை இழப்புக்கும் காரணம். 

அணை நீர் பெருக்கெடுத்து வரும் போது பாலங்கள் உடைகின்றது. அந்த நொடியிலாவது வரும் ஆபத்தினை உணர்ந்து கையில் கிடைத்ததை எடுத்து கொண்டு ஓடி இருக்கலாமே! விடியோ எடுப்பதும் அதை பகிர்வதுமா முக்கியம். வேடிக்கை பார்ப்பதும் அனைத்திலும் அசட்டையாய் இருப்பதும் தான் அனைத்து இழப்புகளுக்கும் காரணம்! 

இனிமேல் அம்மா என்றால் ஆகுமா? ஐயா என்றால் ஆகுமா? இந்த இழப்பிலிருந்து மீண்டு வரவேனும் அரசு ஓடோடி வந்ததா என்றால் அது தானும் இல்லை.ஆற அமர போட்டி கொடுக்கின்றார்களாம். 

சென்னை மக்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்பி விட்டார்கள். எஙகள் தங்கத்தலைவி இராணுவ வேகத்தில் செயல்பட்டு மக்களை தாலாட்டினார் என போட்டி கொடுக்க முன் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டார்களோ? 

அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் உதவிக்கு செல்லும் போதும் போருக்கு செல்வது போல் முன்னும் பின்னும் படையணி சூழ போட்டோக்கிராபரும் வீடியோகிராபருமாய் முழங்கால அளவு நீரில் நின்று மாடல் செய்த விதம் கண்டு சத்தியமாய் சிரித்தேன். இது தானா மீட்புப்பணி செய்யும் அழகென எனக்குள் கேள்வி எழுந்ததென்னமே நிஜம். 

அப்படியும் செய்து விட்டு... எம் தலைவன் உங்களுக்காக அதை செய்தான், இதை செய்தான் இனியும் உங்களுக்கு பாதுகாவலன் யார், என பெண்கள் புடை சூழ போட்டோஷாப் திருவிளையாடல்கள் வேறு...!

மோடி வெள்ளத்தினை பார்க்க போனேன் என போட்டோ ஷாப் செய்தார் என பி.பிசி ஒரு அசைபடம் வெளியிட்டு கிண்டல் செய்யும் படியும் அரசு மெத்தனம், வேகம் காட்டவில்லை, நூறு வருடங்களில் இல்லாத வரலாறு காணாத அழிவு. சென்னை வெள்ளம் என வெளி நாடுகளே தலைப்பிட்டு செய்தி இடும் படித்தானே அரசின் செயல் இருந்தது. 

ஆனாலும் நான் பெருமைப்படுகின்றேன். எம் எதிர்கால சந்ததியை நினைத்து....ஹாட்ஸ் அப் என் சந்ததியே! கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் சுய நலவாதிகளாக இருக்கின்றார்களே என எம் இளைய தலைமுறையை திட்டிய ஒவ்வொருவரும் வெட்கித்தலை குனியுங்கள். சுய நலமாய் சிந்தித்ததான சொன்ன இளைஞர் படையணிதான் பொங்கி பெருகி பதறித்துடித்து புறப்பட்டது.

மதம்,ஜாதி,இனம், மொழி மறந்து பேதமை மறந்து எம் மக்கள் எனும் தேசிய உணர்வோடு பசி தூக்கம் மறந்து செயலாற்றினார்கள். என் எதிர்கால சந்ததி சுயநலமானதென இனியும் சொல்வோமா...? 

இனியும் என்ன செய்ய போகின்றீர்கள்? 

மதவாதம் பூசி வரும் அரசியல் வியாதிகளை ஓடோட விரட்டுங்கள். முகப்பூச்சு போட்டு வேடிக்கை காட்டுவோரை உணருங்கள்! 

நிச்சயம் இனி செயல் படும் நேரம் தான் தமிழ் மக்களே! 
தூங்கியது போதும் விழித்தெழுங்கள்! 
ஏமாந்ததும் போதும் எழுச்சி பெறுங்கள்!

28 கருத்துகள்:

 1. சரியான கருத்துக்களை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் அக்கா... இனி வரும் காலம் இளைஞர்களின் காலம் ஆகட்டும்...
  எந்த அரசு உதவாத அரசோ அதை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்...
  சென்னைப் பேரிடர் இனி எந்த மாவட்டத்திலும் நடக்காத வண்ணம் நடவடிக்கைகள் எடுத்து தண்ணீர் எல்லாம் ஆறு , கடல் , குளங்களில் கலக்கும் வகை செய்ய வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புரிதலுக்கு நன்றி குமார்.

   தொடருங்கள்.

   நீக்கு
 2. மிக சரியான கருத்து நிஷா. ஆனால் இந்த முறை மக்கள் திருந்த வாய்ப்புள்ளது. ஏன் என்றால் அவர்கள் இந்த முறை அனுபவித்த கொடுமை மறக்க முடியாதது. ஏரியை திறந்து இரவோடு இரவாக திறந்து விட்டார்கள் என்பது மறைக்க முடியாத உண்மை. முடிந்தால் புலவர் மகுடேஸ்வரன் பதிவையும் விகடனில் படியுங்கள், அடையார் பற்றி விரிவான அலசல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயம் படிகின்றேன்பா1

   மாற்றம் வந்தால் மகிழ்ச்சியே! தீடிரென பொங்கி எழுந்த சுனாமியோ, பூமி அதிர்வோ தாக்கி இத்தனை இழப்ப்ழ் வந்திருந்தாலும் மனம் சமாதானப்டைந்திருக்கும். ஏற்கனவே அறிவிக்கப்ட்ட ஒரு விடயம் அடச்சையான போக்கால் இப்படி ஆனதே என்பது தான் வருத்தம் தரும் விடயம்.

   தொடருந்து வாருங்கள்
   நனறி.

   நீக்கு
 3. அரசாங்கத்தின் அலட்சியம் அரசியல் வியாதிகளின் கையாலாகாத தனம் இந்த அழிவுக்கு காரணம் என்பதுதான் உண்மை இதை அறியாத அப்பாவி தமிழ் மக்கள் மீண்டும் அவர்களுக்கு கொடி பிடிப்பார்கள் பாருங்கள் அரசியல் வாதிகழுக்கு விளக்குப்பிடிக்கும் சில சில்லறைகள் இருக்கும் வரை இந்த இலவசத்தை விரும்பும் மக்களும் திருந்த மாட்டார்கள் நாடும் உருப்படாது

  தேவையான நேரத்தில் பெறுமதியான கருத்துக்களை அள்ளித்தெளிக்கும் என் அருமை சகோதரி நிஷா அக்கா உங்களுக்கு நான் என்றும் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன் உங்கள் இந்தக் கட்டுரை இன்னும் பல மக்களுக்கு தமிழ் மக்கள் கண்ணுக்கு முன் கொண்டு செல்ல வேண்டும் இதைப் படித்தாவது திருந்த வேண்டும் இந்த மழை இவர்களுக்கு பாடம் கற்றுத்தர வில்லை என்றால் இனியும் இவர்கள் திருந்த மாட்டார்கள் மீண்டும் பழய குருடி கதவ திறடி என்ற போர்வையில் குடித்து விட்டு கும்மாளம் அடிப்பார்கள் என்றுதான் நான் சொல்லுவேன்.

  அரசு தரும் நிவாரணத்தினை வாங்கி டாஸ்மார்க்கில் கொண்டு போய் மீள கொடுத்து நன்றாக வயிறு முட்ட குடித்து விட்டு மதி கெட்டு மறுபடியும் என்ன இலவசங்கள் தருவார்கள் என அரசியல் கட்சிகள் தரப்போகும் எலும்புத்துண்டுகளுக்காக எச்சில் வடிய நன்றியுள்ள நாய்களாய் மாறி காத்திருக்க போகின்றோம்.

  நாய்க்கு ஐந்தறிவு தான்! மனிதருக்கோ? ஒரு அறிவும் கிடையாது! அதிலும் தமிழனுக்கு கிடையவே கிடையாது!தமிழன் என்றாலே ஏமாளி என அவன் மூஞ்சியில் ஒட்டி இருக்குமோ என்னமோ!?

  சிந்திக்க வேண்டிய விடயங்களை அருமையாக சொல்லியுள்ளீர்கள் அன்புத் தமிழர்களே அரசியல் வியாதிகளை நம்பி இலவசத்தை நம்பி மீண்டும் மீண்டும் ஏமாறாதீர்கள் விழித்தெழுங்கள் வெற்றி பெறுங்கள்
  நன்றி அக்கா நன்றியுடன் முஸம்மில்
  நிஷா அக்கா :,,:

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் புரிதலுடனாக கருத்திடலுக்கு நன்றிப்பா..

   தொடர்ந்து வாருங்கள்.

   நீக்கு
 4. வணக்கம்

  தங்கள் கருத்து சரியே,ஆனால் இயற்கையை நாம் என்ன செய்ய முடியும். பல கருத்துக்கள் இருக்கின்றன. அரசு மட்டும் என்ன செய்யும். எந்த அரசு வந்தாலும்,,,,,,,
  நாம் நம்மை மாற்றிக்கொள்ளனும்.
  நீர்நிலைகளை சரி செய்ய வேண்டும்.
  தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த மாதிரி நாம் சொல்லிக்கொள்வது தான் மேன்மேலும் தவறுகளும் இழப்புகளும் நடக்க காரணமாகின்றது.

   இயற்கையை நாம் எதுவும் செய்ய முடியாது. ஆனால் இயற்கை தானாய் தீடிரென பொங்குவதில்லை. இயற்கையைகூட தன் நுண்ணுணர்வால் ஆரய்ந்தறியும் வல்லமை யும் தொழில் நுட்ப வளர்ச்சியும் கண்டுபிடிப்புக்களுமாய் நாம் வளர்ந்த பின்னும் இப்படி சொல்லி நம்மை நாம் தான் ஏமாற்றணும். அரசு என்ன செய்யும் என கேட்டால் நான் என்ன சொல்வது. அரசு நினைத்திருந்தால் தகுந்த முன்ண்டெச்சரிக்கை செய்து உயிர் இழப்புக்களை நிச்சயம் தவிர்த்திருக்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை!

   தங்கள் கருத்திடலுக்கு நன்றி.. தொடர்ந்து வாருங்கள்.

   நீக்கு
 5. வணக்கம்
  சரியான விளக்கம் ஆதங்கம் புரிகிறது.
  தாங்கள் சொல்வது உண்மைதான். அரசும் அரச அதிகாரிகளும்தான் காரணம்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ரூபன்
   தங்கள் புரிதலில் மகிழ்ச்சி.
   தொடர்ந்து வாருங்கள்.

   நீக்கு
 6. அருமை மிகவும் அருமையாக சாடியுள்ளீர்கள் சரியான வகையில் கோபமான வார்த்தைகள் இதற்கெல்லாம் காரணவாதிகள் யார் என்பதை எனது அறிவுக்கு எட்டிய வகையில் // இயற்கையின் நியதி // என்ற தலைப்பில் உள்ள எனது புதிய படிவை நேரமிருந்தால் பாருங்கள்.

  இனியெனும் திருந்த வேண்டும் அரசியல்வாதிகள் அல்ல நாம்தான்..

  பதிலளிநீக்கு
 7. இனியேனும் திருந்த வேண்டும் நம் மக்கள்......

  நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 8. குப்பை கூழம் பிளாஸ்டிக் என ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் இந்த பேரிட இழப்புக்கு முழுக்க முழுக்க காரணம் அரசு மற்றும் அதிகாரிகளின் அலட்சியப்போக்கு என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை! பிளாஸ்டிக் போட்டார்கள் குப்பை போட்டார்கள் வடிகான்களை அடைத்தார்கள் என ஆயிரம் சாக்குப்போக்கு சொன்னாலும் அவையெல்லாம் ஒரே நாளில் நடந்ததில்லை பல வருடங்களாக நடக்கும் ஒரு விடயத்தை வைத்து இதனால் அதனால் என சொல்லி விலகுதல் ஏற்புடையதல்ல. // உண்மை உண்மை..

  வெள்ளம் வரும் முன் முகத்துவாரத்தை வெட்டுவது என்பது மக்களால் நடக்காத ஒன்று சகோதரி. ஏனென்றால் கொட்டும் மழை ஒரு பக்கம். மறுபுறம் இவை எல்லாம் தூர்வாரப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு இருக்கும் நீர் நிலைகளை இணைத்து குறிப்பாக பக்கின்காம் கால்வாய் இன்று சரிவர இருந்திருந்தால் இந்த வெள்ளம் அதன் வழி கடலை அடைந்திருக்கும் மட்டுமல்ல பல கிமீட்டர் தூரம் அடைப்பில்லாமல் சென்றிருக்கும் இரு வழி ஒன்று மரக்காணம் வரை மற்றோன்று ஆந்திரா விஜயவாடா வரை. இனியேனும் எல்லோரும் திருந்தினால் நல்லது...இந்த பக்கின்காம் கால்வாய் சுனாமியின் போது ஆந்திராவில் தமிழ்நாட்டை ஒட்டிய பகுதியில் பல கிராமங்களைக் காத்திருக்கின்றது. அதை நாளை அது பேசும்...

  உங்கள் பழைய பதிவுகளை நாங்கள் படித்துவிட்டோமே. கருத்தும் இட்டோமே வரவில்லையா பார்க்கின்றோம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முகத்துவாரம் வெட்டுவது குறித்த தங்கள் பதிலுக்கு எதிர்கருத்து தந்தேன் என மன்னிக்கவும். ஆனால் பொது மக்களால் இயலாதது என்பதை நான் ஏற்க மாட்டேன். சென்னையை விட நீர் நிலைகள் அதிகமாக ஊரில் வார்ந்த நாங்கள்... நதி, குளம் கடல் என பெரும்பான்மை இடத்தினை எடுத்துக்கொள்ள வெறும் இரண்டு கிலோமீற்றருக்குள் குடிமனைகளை அமைத்து.. ஒவ்வொரு வெள்ளக்காலத்திலும் நதியும், குளமும் ஒன்றானால் ஊரே வெள்ளக்காடாகிடாமல் இருக்க ஊரிணைந்து பொதுமக்கள் தான் நதியும் குளமும் இணையும் இடத்தில் கடல் வரை முகத்துவாரம் வெட்டுவார்கள். நாங்கள் அக்காலத்தில் எதற்கும் அரசை எதிர்பார்ப்பதில்லை. ஊரில் மக்கள் தொலை நான்காயிரமோ ஐந்தாயிரமோ நான் அறியேன். ஆனால் ஊரில் நல்லது கெட்டது எனில் ஊர் மக்கள் தான் ஒன்று படுவோம்.முகத்துவாரம் பொதுமக்களால் வெட்ட முடியாது போனால் என்ன. வெட்ட வேண்டும் என அதற்காக் துறையிடம் கேள்வி எழுப்புவதற்கென்னப்பா? கொட்டு மழையோ ... வெள்ளமோ இனியேனும் உணர்ந்தால் சரிதான். வரு முன் காப்போம். வந்த பின் நோவதால் பயன் என்ன?

   நீக்கு
 9. அருமையான கருத்துகள்! நெத்தியடி!

  பதிலளிநீக்கு
 10. இனியாவது மக்கள் சில மயக்கங்களிளிருந்தும், மாயைகளிலிருந்தும் விடுபட வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமாக் ஐயா! மாற வேண்டும் என்பதில் மட்டும் நாம் மாறுபடப்போவதில்லை.

   நீக்கு
 11. சிறந்த கருத்துகளை கொண்ட கட்டுரை.

  மக்களா பார்த்து திருந்தால் விட்டால் இயற்கையை வெல்லவே முடியாது.

  அரசாங்கத்தையோ, அதிகாரிகளையோ திருத்த முடியாது. ஏன் என்றால் அது மிகப்பெரிய அமைப்பு.

  மக்கள் முதலில் திருந்த வேண்டும், அடுத்த தலைமுறைக்கு தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணம் இல்லாமல் வளர்க்க வேண்டும், பள்ளிகளில் நல்ல போதனைகள் வேண்டும்.

  பட்ட கஷ்டங்களிலிருந்து மக்கள் பாடம் கற்க வேண்டும், தன்னையும் காத்து தன் சுற்றுபுறத்தையும் காக்க வேண்டும்.

  பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் உயர வழி காண அரசாங்கம் முன்வர வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அண்ணா!தொடர்ந்து வாருங்கள் அண்ணா!

   நீக்கு
 12. ஆழமாக அலசப்பட்ட அருமையான கட்டுரை
  மக்களின் மனங்களும் மனோபாவங்களும்
  தூர்வாரப்பட வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா1 உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி!

   நீக்கு
 13. அருமையான பதிவு. இனியாவது மக்கள் மாறவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமாக மாறத்தான் வேண்டும். ஆனால் எப்படி மாறிடுவீர்கள் எனும் சாபம் நம்மை தொடர்வது போல் உள்ளதே!

   நீக்கு
 14. மதவாதம் பூசி வரும் அரசியல் வியாதிகளை ஓடோட விரட்டுவோம் முகப்பூச்சு போட்டு வேடிக்கை காட்டுவோரை உணர்வோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வலிப்போக்கன் சார்!
   தங்கள் வருகைக்கு நன்றி!

   நீக்கு
 15. அடுத்த பதிவினை எதிர்பார்த்து
  வந்து போகிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போது தான் போட்டேன் ஐயா!நன்றி ஐயா!

   நீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!