24 மார்ச் 2020

Covid 19 அறியாத மக்க்ளுக்கு

கொரோனா வைரஸ் தற்பாதுகாப்பு குறித்து

அறியாத மக்க்ளுக்கு

நான்கைந்து இளையோர் தேகாரோக்கியம் கொண்டோர். முகமூடி கையுறை அணிந்து உலகம் கொள்ளை நோய் பரவுது  தடுக்கும் தற்பாதுகாப்பு என்ன? என தமக்குள்ள டிஸ்டன்ஸ் விட்டு தம் பகுதியில் ( கிராமத்து ) அறிவிக்கலாம்

தாம் வாழும் பகுதி காவல் துறை உதவியோடு செய்யலாம்

கோயில்களில் மணி அடித்து ஸ்பீக்கரில் கிராமம் தோறும் சொல்லுங்கோ

சர்ச் மணிகள் மக்களுக்கு। ஒலிக்கட்டும்

அவசர உணவு தேவைக்கு ஊர்ப்பெரிய மனிதர்கள்
வசதியானோர் ஏற்பாடு செய்யுங்கோ
உடன் பேசி ( சமைத்த உணவு)
தேயிலை, சீனி,  அரிசி கூட கொடுக்கலாம்
அந்தந்த பகுதி செல்வந்தர்கள்
வசதி இருப்போர். உதவினால் போதும்

இதெல்லாம் நாம் அனுபவியாதது இல்லை

இரண்டு வாரம் ஊரடங்கி கிடந்தால்போதும்।
கொரோனா  இதுவரை வந்தது போயிரும்

எங்களுக்கு இதன் தீவிரம் அப்போ புரியல
இப்ப வீட்டினுள் முடங்கி கிடக்கின்றோம்

எத்தனை வேண்டாத வதந்தி பரவுது

ஊருக்கு போக
முடியாதவங்க கொஞ்சம் பொறுத்திருங்க

நம்ம மருத்துவ ஊழியர்கள் வாரம், மாதம் என வைத்திய சாலையிl
எமக்காக குடும்பத்தை விட்டு இருப்பதை நினையுங்க

எல்லாம் எமக்காக தான்

நம்மிடமிருந்து மற்றவர்களையும் காக்க..

தொற்றிலிருந்து தப்பிக்க மட்டும் சொல்லிக் கொடுக்கக் கூடாது. தொற்றினால் எப்படி கையாள வேண்டும் எனும் விழிப்புணர்வும் வேண்டும். அதற்கு மாஸ்க் பற்றிய தெளிவு களப்பணியாளருக்கும் மக்களுக்கும் அவசியம்

#covid19_stop
#covid19
#coronavirus

Covid19 கண்முடித்தனம் வேண்டாம்

⛔️⭕️⛔️

என் நாடு
என் மொழி
பக்தி நம்பிக்கை விசுவாசம் இருக்கவேண்டும்
கண்முடித்தனம் வேண்டாம்

இலங்கை, இந்திய குறித்து உலக சுகாதார அமைப்பின் அன்றாட அப்டேட் பாருங்கோ
அதுக்கு மேல் அதன் கணிப்புக்களை விட்டு போட்டு உங்க நாட்டில்,அயலில் என்ன நடக்குது என பாருங்கோ
கவனமா இருங்கோ

இப்படித்தான் பத்து நாள் முன் சுவிஸ் பெஸ்ட்  என பாராட்டு பத்திரம் தந்தார்கள்

இன்று கோரேனோ தொற்று நோய் பரவும் விகிதம்  உலகில் சுவிஸ்  2 nd place இருக்குது

பார்த்து சூதனமா நடந்துக்கோங்க
அனாவசிய நம்பிக்கையும் பதடடமும் வேண்டாம்

#covid19
#coronavirus
#srilanka
#india

Covud19 முடியும் என்றால் முடியும்

1987 இந்தியன் ஆர்மி வந்த பின் தான் ஊருக்குள் சாமம் எமமில்லாமல் ஆர்மி நுழைய ஆரம்பித்தது

அவர்கள் மூலம் கிடைச்ச அனுபவத்தால் ஆர்மி இரவில்
ஊருக்குள் வருவான் எனில் களுவாஞ்சிக்குடி யிலிருந்து ஆர்மி அணிவகுப்பு தொடங்குமுன் அந்த யூரிலிடுந்து கோயில் மணி ஒலிக்கும்
களுவாஞ்சிக்குடிக்கும் எங்கள் ஊருக்கும் இடையில்  ஏழு எட்டு கிராமம்
சில நேரம் கடற்கரை பக்கம் பெடியள் மாரத்தான் முறையில் செய்தி சமிஞ்சை தருவாங்க

பெடியள் முன்பே சொல்லி  ippadi கோயில் மணி அடித்தால் வீட்டில் தனியா யாரும் இருக்க கூடாது

எல்லோரும் அங்கிருக்கும் பள்ளியில் கூடணும்

என் அம்மா இதுக்கு என
பால் மா, சீனி, தேயிலை , ரஸ்க்
வாங்கி வைத்து மூடடை கட்டி தலை நாட்டில் வைச்சிருப்பா

குட்டிஸ் நாங்க எங்கள் பள்ளி பையில் எங்களுக்கு ஒரு மது உடுப்பு பள்ளி பாடம் நோட்டு எடுத்து இரவில் வாசலில் வைச்சிட்டு படுப்போம்

இப்படி கிழமைக்கு நான்கு இரவு நடக்கும்

ஊருக்குள் வரும் ஆர்மி  வீட்டில் யாரும் இல்லாமல் சனம் ஆயிரக்கணக்கில் ஒரே இடமா கூடி இருப்பதை பார்த்து ரோந்து போவது போல் போவான்
( ஒவ்வொரு தடவையும் அரை மணி நேரத்துக்கு மேல் )
அவன் போனதும் வீட்டுக்கு போவம்

முதல் தடவை தெரியாமல் தனித்திருந்து இழப்பை சந்தித்தோம்
அதன் பின் எங்களுக்கு  நாங்கள்காவல்

தகவல் தொடர்பு அதிகம் இல்லாத காலத்தில்  இதனை முடியும் எனில் இக்காலத்தில் பத்து மடங்கு முடியும்

அப்போது ஒன்று கூடினோம்
இப்போது கூடவேண்டாம்
வீட்டில் இருங்கோ என சொல்லணும்
விழிப்புணர்வு கொடுங்கனும்

30  வருடம் முன் முடிந்தது
இப்போதும் முடியும் தானே?


_NishaBc

14 மார்ச் 2020

COVID -19 எச்சரிக்கை எனும் பெயரில் தேவையில்லாமல் பதடடம், பயம் தருகின்றோம்....?

கொரோனா வைரஸ் பற்றியும் 
அதன் பாதிப்புகள் குறித்து  
எழுதும் போதும் பகிரும் போதும் ,



🔥 எச்சரிக்கை எனும் பெயரில் தேவையில்லாமல் பதடடம், பயம் தருகின்றோம். 

🔥 கொரோனா வைரஸ் ஒன்றுமே இல்லை. தேவையில்லாமல் பெரிசு படுத்துகின்றார்கள் .

🔥 சீனாவும் அமெரிக்காவும் இணைந்த வர்த்தக வியாபாரத்தில்  ஊடகங்கள் பரப்பிவிடும் கட்டுக்கதை.

🔥 எயிட்ஸ், சார்ஸ், எபோலா, பன்றிக்காய்ச்சல் வந்த போதும் இப்படித்தான் பயம் காட்டினார்கள்.

அப்புறம் என்னாச்சு? 

🔥 உலகத்தில் தினமும் விபத்தில்,  நீரழிவு, இதய நோயால் இத்தனை பேர் இறக்கின்றார்கள் என கணக்கு போட்டு 
அவைகளோடு ஒப்பிடடால் கொரோனா வைரஸ் மரணவிகிதம் ஒன்றுமே இல்லை,
பத்தோடு பதினொன்றாக இதுவும் கடந்து போகும் என்கின்றார்கள்.

அவர்கள் நம்பிக்கையின் படி  இந்த புதிய corena வைரஸ் கடந்து போனால்  நல்லது தான். 

ஆனால்.......? 

புதிய Corena வைரஸ் உடன்  முன்னிருந்த நோய்களை ஒப்பிட்டு அரசின் விழிப்புணர்வு எச்சரிக்கைகளை மீறி, ஆலோசனைகளை அசடடை செய்து அரசு மற்றும் ஆய்வாளர்களின் கட்டுப்பாடு கணிப்பையும் மீறி வேகமாக பரவி செல்ல காரணமும் ஆகின்றார்கள்.

🔻 எப்போதும் ஒன்றோடு ஒன்று ஒப்பீடு செய்வது செய்யப்படும் நபர், பொருள், சம்பவத்தின் தனித்தன்மையை சாதக பாதகத்தை மழுங்கி போக வைத்து அதன். சிறப்பை உணர முடியாமல் செய்கின்றது.

🔻 ஆற்றுகை படுத்துகின்றோம், பயத்தை போக்குகின்றோம் என இயலாத ஒன்றை. சொல்லி அந்த நேர சமாளிப்பில் குறித்த விடயம் சார்ந்த கனத்தை நீர்த்து போக வைத்து அஜாக்கிரதை உணர்வையும் உருவாக்கி விடுகின்றோம்.

🔻 அப்ப அப்படி  ஆனதெனில் இப்பவும் அப்படியே ஆகும் எனும் நீக்குப்போக்கு சிந்தனை உருவாக்க நாம் காரணம் ஆகின்றோம்.

Corena வைரஸ் எடுத்து கொண்டால் இது ஒரு வகை தொற்று நோய்
 ( நோயை உருவாக்கும் பண்பு கொண்ட வைரசு, பக்டீரியா, பூஞ்சை, புரோட்டோசோவா, மற்றும் பல்கல ஒட்டுண்ணிகள் போன்ற உயிரினங்களின் காரணமாக ஏற்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டால், அந்நோய் தொற்றுநோய் என அழைக்கப்படுகிறது. இந்நோய்க்காரணிகள் (pathogen) விலங்குகளிலும், தாவரங்களிலும்  இருக்கலாம் ) 

தொற்றும் நோய் என்பது ஒரு மனிதனிடம் இருந்து மற்றவருக்கு தொற்றும் 

எத்தனை பெரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும் சமூகத்தில் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் இருந்தால் தான் தொற்று நோய் கொள்ளை நோயாக மாறாமல் தடுக்க முடியும். 

நாம்  சுத்தமாக இருந்தாலும்  நம் அருகில்  ஒருவர் தும்மிவிட்டாலோ இருமி விட்டாலோ. காற்றில் பரவும்  Corena  வைரஸ் எனும் கொள்ளை நோயிலிருந்து தப்ப   முழு சமூகத்தின் ஆதரவும்  பொறுப்புணர்வும் தேவைப்படுகிறது 

இன்றைய நிலையில் தொற்று நோயானது உலகில் கொள்ளை நோயாக மாறி இருக்கின்றது 

இதுவரை மனித இனம் காணாத புதிய வைரஸ் இதுவென ஆய்வுகள் கூறுகின்றன 

மனிதர்களுக்குள் இருக்கும்  சாதாரண கொரோனா வைரஸ்களுக்கும் இந்த புதிய கொரோனா வைரஸ்க்கும் ஒற்றுமை 10 -20 % மட்டுமே. 

COVID 19  வவ்வால்களிடம் காணப்படும் கொரோனா வைரஸ்களுடன் 80 முதல் 90 % ஒத்துப்போகிறது என்கின்றார்கள்

மூன்று மாதம் முன் சீனாவில் உருவான  புதிய கொள்ளை நோய்க்கு இது வரை மாற்று மருந்து இல்லை என ஆய்வுகள் சொல்கின்றன.  
 • உடலின் எதிர்க்கும் சக்தி என்பது இந்த நோய் தொற்றி மீண்டு வந்தவர்களுக்கு மீண்டும் தொற்றுகின்றதா என்பதை பொறுத்தும்அவர்களை கண்காணிப்பதன் மூலமே முடிவுக்கு வர முடியும். 

• 

கொள்ளைநோய் (epidemic), உலகம்பரவுநோய் (pandemic) 

உலகம் முழுவதும் சம காலத்தில் , மக்கள் தொகை அடர்த்தியை விட , வேகமாக, மனித னிடம் இருந்து மனிதனுக்கு பாவும் நோய் கொள்ளை நோய்களே!

உலக சுகாதார அமைப்பு ( WHO) கொள்ளைநோய் (epidemic) உலகம் முழுவதும் பரவும் நோயாக ( உலகம்பரவுநோய் pandemic ) அறிவிக்கின்றது எனில் அதன் நோக்கம் என்ன? 
✅ உலக நாடுகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து எடுத்து மக்களை எச்சரித்து பாதுகாக்க வேண்டும் என்பதனால் தான் COVID 19  உலக கொள்ளை நோயாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
( எயிட்ஸ், சார்ஸ், எபோலா, நீரழிவு. இதய நோய் அப்படி அறிவிக்கப்பட்டதா ?)

கடந்த மூன்று மாதங்களில் இந்த 
கொள்ளை நோயினால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதார ரீதியான இழப்புகளை ஈடு கடடவும் வீழ்ந்திருக்கும் பொருளாதாரத்தை மீட்டு எடுக்கவும் ஆகும் காலங்கள் குறித்து சிந்திக்காமல் மக்கள் உயிர் முக்கியம் என உலக நாடுகள் தம் மக்களை காக்க அவசரகால 
சட்டம் போட்டு அனைத்தையும் முடி நிர்வாகத்தை நிறுத்தி நோய் தொற்றுள்ள நாடுகளிடமிருந்து தம்மை விலக்கி , உலகத்திடமிருந்து தனிமைப்படுத்தி புதிய கோரினாவிலிருந்து  காப்பாற்ற போராடுகின்றது.

சீனா வின்  ஹுகங்  மாநிலத்தில் பரவிய தொற்று அந்த நாட்டினுள் இருக்கும் வரை வெளிப்படாத பல உண்மைகளை ஐரோப்பாவினுள்  இத்தாலியை பற்றி பிடித்து கொண்ட பின் உணர முடியும் போது தினமும் நடக்கும் நாட்டு, உலக நடப்புக்களை  கவனிக்காது யாரோ பரப்பும் வாட்ஸாப் மெசேஜ்களை நம்பி பகிர்கின்றோம். 

உங்கள் சிந்தனையின் படி 
சீன அமெரிக்க வர்த்தகம்.......? 
திடடமிடட சதி..? 
இருக்கட்டும்.

„ 
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு „

புத்தியை கூர் தீட்டுவோம்! 

கடந்து வரலாறும் எமது அனுபவமும், கூரியகவனிப்பும், ஆழ்ந்து ஆராய்தலும்  சில தெளிவுகளை தந்திருக்கின்றது.

✅ ஒப்பிடப்படும் அத்தனை நோய்களாலும் . எந்த நாடும்  ஸ்தம்பிக்கவில்லை ,
உலகளவில் இயக்கம் நிற்கவில்லை.

🚫 ஆனால் இந்த நூற்றாண்டில் மனித இனம் இதுவரை சந்தித்திராத பலம் பொருந்திய எதிரியாக புதிய கொரோனா வைரஸ் தொற்று  உலகத்தைஅசைத்திருக்கின்றது 
அதன் இயக்கத்தை நிறுத்தி இருக்கின்றது 

✅ சீன அமெரிக்க நாடுகள் தன் வர்த்தக ஆதாயத்துக்காக உலக ஊடகங்களை விலைக்கு வாங்கலாம் , எல்லா நாடுகளையும் விலை பேச முடியாது .
( இனி சீனா அனைத்தையும் நம்பிக்கைகளையும்  இழந்து மீண்டும் 0 இலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பது வேறு கதை ) 


Switzerland அவசர கால சட்டதின் கீழ் நாட்டை இராணுவத்தின் மூலம் நோய் பரவுவதை தடுக்கும் படியான நிர்ப்பந்தம் 
வந்திருக்கின்றது.

👉🏼 இரண்டு உலகப்போர் காலத்திலேயே எந்தப்பக்கமும் சாராமல் தான் போக்கில் தனித்து நின்ற சுவிஸுல்க்கு இவர்கள் வர்த்தக விளையாட்டில் உடன் பட என்ன காரணம் இருக்கும் என நினைக்கின்றிர்கள்? 

✅ யுரோப்பாவில் Euro வை மதிப்பு சரியாமல் காக்கும் நாடு, பங்கு சந்தை சரியாமல் ஸ்திரம் கடும் நிபுணத்துவம் கொண்ட நாடு. 

👉🏼 சுற்றுலாத்துறையை முழுதும் நம்பி இருக்கும் நாட்டில்  நாளுக்கு எத்தனை மில்லியன் நஷ்டம் ஏற்படுகின்றது? 

✅ சுவிஸ் யாரையும் நம்பாமல் இந்த பிரச்சனைக்கு மருந்து கண்டு பிடிக்க தானே முயற்சிக்கின்றது.

✅சுவிஸில் 1000  பேருக்கு தொற்றி அதில் ஏழு பேர் மட்டும் மரணம், அவர்களும் முன்னிருந்த நோய் தேகத்துடன் corena  வைரஸ் சேர்ந்து எதிர்த்து  போராட எதிர்ப்பு சக்தி இல்லாமல் இறந்தார்கள் 

✅ மீதி பேரின் உயிரைக்காக்க இந்த அரசு அவசரகால சடடம் வரை செல்கின்றது எனில் இதன் மூலமான பொருளாதார இழப்புகளை ஈடுசெய்ய எத்தனை வருடம் எடுக்கும் என நினைக்கின்றிர்கள்?

▪️ இத்தாலியில் தொற்றின் வேகத்தில் பத்து வீதம் மரணம் அடைகின்றார்கள் 

▪️ உலகின் இரண்டாவதும்  மிகப்பெரிய பொருளாதார, மனித வளம் நிறைந்த நாடு சீனா சரிந்து கிடக்கிறது .

▪️பல மத்திய கிழக்கு நாடுகளில் என்ன நடக்கின்றது?

▪️உறுதிப்படுத்த படாமல் எத்தனை நோயாளர்கள் மறைந்து இருக்கின்றார்கள் எனும் முழு விபரமும் தெரியாது 

▪️உலக நாடுகள் விமான போக்குவரத்து முதல் அனைத்து போக்குவரத்துகளையும் நிறுத்தி தன்னை தனிமைப்படுத்தும் நாடுகளின் எண்ணிக்கை தினமும் அதிகரிக்கின்றது. பள்ளிகள் அனைத்தும் மூடப்படுகின்றன 

ஐரோப்பா மற்றும் உலகளவில் நோய் தொற்று  ப்ளூ காய்சசாலை விட இரண்டு மடங்கு அதிகமான வேகத்துடன் Jump செய்யும் கிருமியாக புதிய கொரோனா வைரஸ் இருக்கிறது. 

ஒரு  COVID 19 நோய் தொற்றாளர்
இன்னும் மூன்று முதல் ஐந்து நோயாளர்களை 
உருவாக்குகின்றார்.

🖤இறப்பு வீதம் : 
( கிருமித் தொற்று, காய்சசல் , இருமல்  மூச்சுத்திணறல், நியூமோனியா, மரணம் ) 

நோய் தொற்று உறுதிசெய்யப்படுபவர்களில் எத்தனை மரணங்கள் நிகழ்கின்றன? 

ப்ளூ  காய்ச்சலில்  0.1% மரணங்கள்  எனில் புதிய கொரோனா தொற்றின் மரண வீதம் இத்தாலியில்  10 % ஆகவும் 
ஏனைய உலக நாடுகளில் 3.5- 5 %  ஆகவும் இருக்கின்றன.
✅ ஆயிரம் பேருக்கு வரும் ப்ளூ காய்ச்சலில் ஒருவர் இறக்கின்றார் , 
✅ உலக அளவில் COVID 19  தொற்றாளர்கள் 1000 க்கு 35- 50 பேர் இறக்கின்றனர். 
🔴 கடந்த சில நாடகளில் Italy   தினசரி 2000 புதிய தொற்றாளர்களையும் 200  பேர் மரணத்தையும் பதிவாக்கி Jump செய்கின்றது )

🙏 

உலகின் வளர்ச்சியடைந்த தேசம், மக்கள் கடடமைப்பு மிக்கதென கொண்டாடப்படட தேசத்தில்  இராணுவத்தை நிறுத்தி  நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் படியான  சூழலை உறவாக்கி  இருக்கின்றது எனில் .....? 

பேரிடர் காலத்தில் .......? 

அரசின் எச்சரிக்கைகள்,  விழிப்புணர்வுகள் யாருக்கானது? 

சமூகத்தில் அக்கறை உள்ள மனிதர்களாக நாம் என்ன செய்ய போகின்றோம்? 
எங்கள் கடமை என்ன?

சிந்தியுங்கள் 🙏

- Nisha

13 மார்ச் 2020

Covid 19 சுவிட்சர்லாந்தின் தற்போதைய நிலைமை என்ன? 13.03.2020

What’s the current situation in Switzerland?
13.03.2020
12.30

🚫  சுவிஸின் அனைத்து மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகள் 04.04.2020  வரை மூடப்படுகின்றன.
•  பிற பயிற்சி வகுப்புகளும் நடைபெறக்கூடாது.

🚫 புதிய அறிவிப்பின் படி 100 க்கும் மேற்பட்ட நபர்களுடன் பொது அல்லது தனியார் நிகழ்வுகள்
தடைசெய்யப்பட்டுள்ளன.

⚠️. மார்ச் 15  வரைக்கும் அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு சடடம் மாற்றப்பட்டு நாடு முழுவதும் அவசர கால சட்டம் ( Swiss-wide emergency measures )  அறிவிக்கப்படலாம் என்று Swiss மத்திய சுகாதார அலுவலகம் கூறிஇருக்கின்றது.

🔴 Shopping Center ( Ex: Migros )   கடைகள் திறக்கும் நேரம் மட்டுப்படுத்தப்படும் அல்லது குறைக்கப்படும் ( மூடப்படலாம் )

🔻 Corena  வைரஸ் பரவுதலை தடுக்க இராணுவ கண்காணிப்புக்குள் நாடு  கட்டுப்படுத்த படலாம்

உலகளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பத்து நாடுகளில் சுவிட்சர்லாந்து ஒன்றாகும்.

▪️புதிய கொரோனா வைரஸ் தொற்று 1009 நபர்கள்  உறுதிப்படுத்தப்பட்டதாக சுவிஸ்  பொது சுகாதார மத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.( அதாவது கடந்த நான்கு நாளில் தினம் 200  புதிய நோயாளர்கள் உருவாக்கி உள்ளனர் )

▪️ சுவிஸில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுவிட்சர்லாந்தில் இதுவரை 7 பேர் இறந்துள்ளனர.

▪️வியாழக்கிழமை இறுதிக்குள் ஏழு இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

🔴 சுவிஸ் நாட்டினுள் சிறப்பு சடடத்தின் கீழ் பல கட்டுப்பாடுகள் விதித்திருந்தும் அத்தனையும் மீறி  நாளுக்கு 200 புதிய
நோயாளிகள் உறுதிப்படுத்தப்பட்டு  வைரஸ் Jump பண்ணி கொண்டு செல்கின்றது

🚫 சுவிஸில் Canton Tisino   மாநிலம் அதிக நோய் தொற்றை  பரப்புவதனால்  அந்த மாநிலம் தனிமைப்படுத்த பட்டு அவசரகால பிரகடனம்( 12.03.2020 )  செய்யப்பட்டிருக்கின்றது.

▪️Canton டிசினோ வில் அனைத்து பள்ளிகளையும் மூடும் படி  டிசினோ வெள்ளிக்கிழமை ( 13.03.2020 ) அறிவித்திருக்கின்றது.

🚫 CORENA  Virus பாதிப்பு குறித்த  தினசரி அப்டேட் நாளாந்தம்
உறுதிப்படுத்தப்படபோர், மரணித்தோர் குறித்த விபரங்களை தணிக்கை செய்து அவசியமான செய்திகள் மட்டுமே ஊடகங்களுக்கு தரப்படும் என பெடரல் கவுன்சிலின்(   சுவிஸ்  அரசின்    கூட்டாட்சி ) அதிகாரிகள் அறிவித்திருக்கின்றார்கள்.

✅ Swiss, Border அனைத்து உள் எல்லைகளிலும் ( ஷெங்கன் எல்லைக் கட்டுப்பாடுகள்) "நிலைமையைப் பொறுத்து" மீண்டும் மாற்றம்பெறும்.

🔻 இத்தாலியில்  தினசரி புதிய நோயாளர் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது  தொற்றுக்குள்ளாகுவோரில் 10 % இறப்பு என்பது சீன அரசு வெளியிடட   (??) தினசரி கணக்கீடுகளை  கடந்து செல்கின்றது.

▪️ இத்தாலியில் நோயாளிகள் எண்ணிக்கை  கடந்து செல்வதனால் இத்தாலி சுவிஸ் எல்லைகளில் கடும் கட்டுப்பாடு, உள் நுழைவு வரி இரட்டிப்பு மற்றும் பல பாதைகள் மூடி இருக்கின்றார்கள்.
• அங்கிருந்து வந்து செல்லும் ( Italien - Swiss ) தொழிலாளர்களும் மட்டுப்படுத்த படுகின்றார்கள்.

👉🏼 இத்தாலி தன் வயோதிகர்களை கை விட்டதென பொது மக்களால்
குற்றம் சாடடப்படுகின்றது.
👉🏼 மக்களை பாதுகாக்க தவறும்
அரசின் மீதான மக்கள் கோபம் அதிகமாகின்றன)
👉🏼ஜேர்மன் தான்  இத்தாலியினுள் வைரஸ் பரப்பியது என இத்தாலி அரசு குற்றம் சாட்டுகின்றது.

👇 Nisha 👇
உலகமே மிகப்பெரும் இருளுக்குள் நுழைந்து வெளி வரதயாராக்கப்படுகின்றது .

✅  Corena Virus  உயிர் கொல்லி நோய் அல்ல என்பதை  உணர்ந்து புரிந்து மனதினுள்  நான்கு பதிய வைத்து கொண்டு அரசின் அவசரகால அறிவிப்புக்களை  கடைப்பிடித்து உங்களை, எங்களை அனைவரையும் தற்காத்து கொள்ளுங்கள் .

🚫 தங்கள் கடந்த கால கணிப்புக்களை
• எயிட்ஸ், சார்ஸ் , எபோலா
• இந்திய இலங்கை மருத்துவர்கள்
• வெப்ப நிலை மாறினால்  மாற்றம்  வரும்
• 2 மீற்றர், 6 அடி  இடைவெளி எனும்
• ஆதாரமற்ற கணிப்புகள்,
• பொய்யான நம்பிக்கைகள்,
• வியாபார, அரசியல் ஆதாயம் கருதி வெளியிடப்படும் கருத்துக்களை எல்லாம் அசடடை செய்து கடந்து செல்லுங்கள் .

🚫 வீணான நம்பிக்கைகளை கொடுப்பது மக்கள் தற்பாதுகாப்பு உணர்வை தடுத்து நிலைமையை மோசமாக்குகின்றது.

✅ எந்த வித யூகங்களுள்க்கும் இடம் கொடுக்காமல், அரசின் அவசர சடடம் கட்டுப்பாடுகள், அன்றாட அவதானிப்புகள், கணிப்புக்களையும் கடந்து வைரஸ் தொற்றிய நபரின் இருமல், தும்மல் மூலம் வெளிவரும் கிருமித்துகள்கள்  3  மணிநேரம் வரை உயிருடன் மிதந்து ( ஏரோசால் )  கொண்டிருக்கின்றது என புது ஆய்வு சொல்கின்றது.

அதாவது காற்றில் மிதக்கும் தன்மைகாற்றில் உயிர் வாழும் தன்மைகொண்டது..
🔥 நோய் தொற்று இருக்கும் ஒருவர் தும்மினால் இருமினால் அதன் மூலம் வெளிப்படும் துகள்களின் பரவல் மூலம்  அவ்விடம் 3  மணி நேரம் நோய் தொற்றை பரப்பி கொண்டிருக்கும்.🔥



🙏✅ எனது பதிவுகளில் சுவிஸ் அரசின் அங்கீகரிக்கப்படட இணைய தளம்  ஊடகம் தரும் செய்திகளை தமிழில் மொழி மாற்றம் செய்து தருகின்றேன் செய்திகளின் நம்பக தன்மைக்கு அவரவர்  சுய புத்தியை விசாலமாக்கி இணைக்கும் தளங்கள்,  நாட்டு நடப்புக்களை உணர்ந்து புரிந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்

வதந்திகளை நம்ப வேண்டாம்.

நாமும் ஒத்துழைப்போம்🙏

அவசர கால சட்ட்தின் கீழ் நாடு வருமானால் நீங்கள் செய்ய வேண்டுவது என்ன?

தொடருங்கள்....

அறிகுறிகள், தற்காப்பு, சுயபாதுகாப்பு, அவதானிப்புக்கள்  எச்சரிக்கைகள் என
அனைவரும் அறிந்திருக்க வேண்டிய. அவசிய ஆலோசனைகள் குறித்து அறிய இங்கே செல்லுங்கள்:
Link: ist Nishanthi Prabakaran


- Nisha 🙏

News link : SFR 1

10 மார்ச் 2020

Corena வைரஸ் உயிர் கொல்லி நோய் அல்ல!

10.03.2020
20.00

Corena வைரஸ் உயிர் கொல்லி நோய் அல்ல எனும் தெளிவை Swiss  அரசு எமக்கு தந்திருக்கின்றது🌻 🙏🙏


கோரேனோ வைரஸ் குறித்த பதிவுகள்
தினசரி அப்டேட் பதடடத்தை தருவதால்  தாங்கள் எதையும் வாசிப்பது இல்லையாம்.
இதை சொல்வது பாமரனும் படியாதவனும் அல்ல!

சமூகத்துக்கு முன்மாதிரியாக தம்மை காட்டிக்கொள்ளும் நன்கு கற்று தேர்ந்த வல்லுநர்கள் தான்!

👉🏼 சம காலத்தில் உலகத்தை அசைக்கும் ஒரு விடயம்  குறித்து  அறிந்து கொள்வதில் என்ன பதடடம் வந்து விடுகின்றது?

தவறான பரப்புரைகள், தேவையற்ற விவாதங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்,  உலகம் எதிர்நோக்கும்  பேரிடரை குறித்து எந்த வித புரிதலும் இல்லாமல் எழுதுவதை பார்க்கும் போது இவர்களால் வழி நடத்தப்படும் எமது எதிர்கால சமூகம் குறித்து வருத்தமே எஞ்சுகிறது.🔥

அரசாங்கம்,சுகாதார துறை ஊடாக தரும்
தினசரி அப்டேட் எதற்கானது என புரியாத முடடாள் தனமான சிந்தனை🖤
அசட்டு தனம் என்பதா?
அறியாமை என்பதா?

🚫 corena  வைரஸ் வயதானவர்களுக்கு மட்டும் தான் வருமாம்.
🚫 இளையோரை ஒன்றும் செய்யாதாம்
🚫 20% வெப்பம் அதிகமுள்ள பிரதேசங்களில் பரவாது எனும் பதிவுகளும்  அவ்வாறான பதிவை எவ்வித ஆதாரமுமில்லாமல் பகிர்வோரும்  உலக சுகாதார அமைப்பும் ( WHO) மற்றும்
அந்தந்த நாடுகளின் சுகாதார அமைச்சின் இணைய தளங்களை தேடி படிக்காவிடடாலும்  அங்கிருந்து செய்திகளை மொழி பெயர்க்கும் எமது பதிவுகளை எனும் தொடரலாம் !

❓எயிட்ஸ், பன்றிக்காய்ச்சல்,சார்ஸ், எபோலாவுக்கும் இப்படித்தான் பரப்பினார்கள்.
அப்புறம் என்னாச்சு?
என விதண்டாவாதம் செய்து அதை பரப்புவோர் தாம்செய்வது இன்னதென்று அறிந்து தான் செய்கின்றார்கள்.
🖤 அப்படியானவர்கள் சுயமாய் சிந்திக்கும்  மக்கள் விழிப்புணர்வை தடுத்து அகக்கண்களை இருளாக்கி விடுகின்றார்கள்

🚫 வணக்கஸ்தலங்களில்  தடை என்றால் அட கடவுள் இல்லையா என மாற்று மதத்தினரை நோக்கி கேலி அரடடை ( இடுக்கண் வந்தால் நகுங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை) மட்டுமல்ல கவலையீனமும் எமது பெரும் குறை.

🚫 மக்கா, மதினா, பெத்லகேம் மட்டுமல்ல திருப்பதியிலும் தடை...!
எல்லா கடவுளும் இப்ப மனிதரை கண்டு பயந்து ஓடி ஒளிகின்றார்கள்!

கடவுள் இருந்தாலும் நேரில் வந்து jump  என தூக்கி போய் வேறொரு கிரகத்தில் எவரையும் முடியேத்த மாடடார்.இங்கே தான்  நோயும் அதை தவிர்க்கும் வழிகளும் காட்டுவார்.

அரசும், சுகாதாரத்துறையும் தரும் அறிவிப்புக்களை தினம் அவதானித்தால் கண்ட போலிப்பதிவுகளை நம்பி உளவியல் ரீதியில் பயப்படும், பதடடப்படும் அவசியம் இல்லையே?

✅ இது வரை இந்த நோயால் பாதிக்கப்படோர், இறப்பு வீதம், குணமாகும் வீதம் எல்லாம் கவனித்திருந்தால்......!

✅ Corena வைரஸ் உயிர்கொல்லி நோய் அல்ல  எனும் தெளிவு மக்களிடம் போதிய விழிப்புணர்வை தந்திருக்கணும்.

✅ இந்த விழிப்புணர்வு சுவிஸ் மக்களிடம் இருந்ததால் தான் நோய் கண்டு பிடிக்கப்படட நொடியிலிருந்து. அரசு சிறப்பு சடடம் போட்டு அறிவிக்கும் கட்டுப்பாடுகள், எச்சரிக்கைகள், ஆலோசனைகளை கடைபிடித்து பாதிப்பின் வீரியத்தை கட்டுப்படுத்தி கொள்கின்றார்கள்.

👍  Europa வின் அண்டை நாடுகளுடன் ஒப்பிடும் போது Swiss  நோய் பரம்பலை கட்டுப்படுத்தும் வீதம் கவனிப்புக்குரியது.

எந்த பரபரப்பும் இல்லை!
ஒளிவு மறைவும் இல்லை!

பொது மக்களும் இருமல், தடிமன், காய்ச்சல் எனில்  கடந்த நாடகளில்  யாருடன் தொடர்பு கொண்டோம், எங்கே பயணம் செய்தோம் என தம்மை தானே உணர்த்தி மருத்துவர்களுடன் ஒத்துழைத்து அரசின் அறிவிப்பையும் கடைப்பிடித்து தன்னையும் தன்னை சார்ந்தோரையும் பாதுகாக்கின்றாரகள்.

ஆம்...! 🙏

🌻 corena வைரஸ் உயிர் கொல்லி நோய் அல்ல எனும் தெளிவை Swiss  அரசு எமக்கு தந்திருக்கின்றது🌻

✅  எமது தற்பாதுகாப்பும், சுய கட்டுப்பாடும்
முன் எச்சரிக்கையும், விழிப்புணர்வும்
✅ உண்ணும் உணவு மூலம்
எமது உடலில் நாம் சேகரிக்கும் நோய் எதிர்ப்பு திறனும்
✅ உடல் நிலை மாற்றங்களை அவதானித்து தகுந்த மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்வதும் போதுமானது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

விமரிசனங்கள் இல்லாமல் இல்லை.

உங்களுக்கும் எங்களுக்குமான  அக்கறையில்  பகிரும்  உண்மை செய்திகளை விதண்டாவாதம் செய்து  
போலி செய்திகள் வீரியமெடுத்து பரவ இடம் கொடாதிருங்கள்.

❤️ நீங்களும் நம்புங்கள் ❤️
உங்கள் நம்பிக்கையை உங்களை நம்புவோருக்கும் கொண்டு சேருங்கள்.

எச்சரிக்கைகளை, முன் விழிப்புணர்வுகளை கடைப்பிடித்து உலகம் எதிர் நோக்கும் ஆபத்திலிருந்து  உங்களையம் உங்களை  சார்ந்தோரையும் காத்து கொள்ளுங்கள் 🙏
-Nisha

Face book; Corena வைரஸ் உயிர் கொல்லி நோய் அல்ல!

Covid 19 இத்தாலி நாட்டின் "இருண்ட நேரம்"

09.03.2020
Time: 23.00

இத்தாலி நாட்டின் "இருண்ட நேரம்"
Coronavirus: Death toll jumps again in Italy's 'darkest hour

▪️இத்தாலியின் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 463 ஆக உயர்ந்துள்ளது।
07.93.2020 : 257    jump 109 death
08.03.2020 : 366   jump 97 death
09.03.2020 : 463

• இத்தாலியில் 08.03.2020  ஞாயிற்றுக்கிழமை 7,375 ஆக இருந்த நோயாளர்கள்  எண்ணிக்கை
ஒரே நாளில்  1795 பேர் உறுதிப்படுத்தப்படடு  9,172 ஆக அதிகரித்துள்ளது,

🔻 இத்தாலி , சீனாவிற்கு அடுத்தபடியாக மிக மோசமான பாதிப்புக்களை எதிர் கொள்கின்றது.
🔻20 இத்தாலிய பிராந்தியங்களிலும்பாதிப்புகள்உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
👉🏼  திங்களன்று, இத்தாலி சிறைகளில் ஏற்பட்ட கலவரங்களில் ஆறு கைதிகள் இறந்தனர்.




🔻 வைரஸ் மேலும் பரவுவதை தடுக்க வடக்கு இத்தாலியில் வாழும்  16 மில்லியன் மக்கள் இப்போது. தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.
🔻அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும்
🔻அவர்கள் பயணம் செய்யஅனுமதி பெற வேண்டும்.
🔻மீறினால் சிறைத்தண்டனை, அபராதம் என அவசரகால சடட  விதிகளின் கீழ் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.

- ஆல்ப்ஸ் தென்றல்
நிஷா

Link:  Coronavirus: Death toll jumps again in Italy's 'darkest hour

09 மார்ச் 2020

#Covid-19 தற்போதைய சர்வதேச நிலைமை

#Covid-19
தற்போதைய சர்வதேச நிலைமை
09.03.2020 / 12.00

சுவிட்சர்லாந்தில்  312 கொரோனா வைரஸ் நோயாளர்கள்உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
▪️அவற்றில் 2 பேர் இறந்துள்ளனர்.

இத்தாலியில் 7,375 கொரோனா வைரஸ் நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்
▪️அவற்றில் 366 பேர் இறந்துள்ளனர்.

• சீனாவில் தொடக்கி 100 க்கும் மேற்பட்ட நாடுகளும் புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதை உறுதிப்படுத்தியுள்ளன.

• உலகளவில், புதிய கொரோனா வைரஸால் 110,000 க்கும் அதிகமானவர்கள்பாதிக்கபட்டிருப்பதாக  பதிவாகியுள்ளன.
▪️உலகளவில் 3825 பேர் இறந்துள்ளனர் 
▪️சீனாவிற்கு வெளியே 706 பேர் இறந்துள்ளனர்.

🌻 மொத்தத்தில், 61,000 க்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

👉🏼 பெரும்பாலான மக்களுக்கு, நோய் லேசானது. இருப்பினும், வயதானவர்கள் கடுமையாக நோய்வாய்ப்படுகின்றார்கள்.

🔻 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களும்
            • உயர் இரத்த அழுத்தம்
            • நீரிழிவு நோய்
            • இருதய நோய்கள்
            • நாள்பட்ட சுவாச நோய்கள்
            • நோயெதிர்ப்பு சக்திகளை பலவீனப்படுத்தும் நோய்கள் மற்றும் சிகிச்சைகள்
            • புற்றுநோய்
போன்றவற்றால்  பாதிக்கப்படோரும்
மிகவும்  அவதானமாக இருக்க வேண்டும்

சுகாதார அமைச்சு  மற்றும்  அரசின் ஆலோசனைகள் அறிவுறுத்தல்களை அனைவரும் கடைப்பிடிப்பதன் மூலம் நம்மை நாமும் மற்றவர்களையும் ஓரளவுக்கு Covid-19 தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க முடியும்.

🔻பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
🔻அவர்கள் தங்கள் குடியிருப்பில் தங்க வேண்டும்,
🔻மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
🔻சுகாதார அதிகாரிகள் நெருங்கிய உறவினர்களுக்கு  அறிவிக்கிறார்கள்.


Link  #Covid-19 தற்போதைய சர்வதேச நிலைமை

08 மார்ச் 2020

சுவிஸ் தற்போதைய சூழ்நிலையை சமாளிக்க மேலும் பரிந்துரைகள்!


7.3. 2020  / 06:45:
Corena virus அவசரகால உதவி, தொழில் மற்றும்  பொதுப்போக்குவரத்துக்களுக்கான பரிந்துரைகள்! ( Notfallstationen, Arbeit und öffentlicher Verkehr )

🚫 ரயில், டிராம் மற்றும் பஸ் பயன்பாடு:( Benutzen von Zug, Tram und Bus )
•  உச்ச நேரங்களில் பயணம் தவிர்க்க வேண்டும்
•  ஓய்வு பயணங்கள் குறைக்கப்பட வேண்டும்.
•  போக்குவரத்து, ரயில் நிலையங்கள் மற்றும் நிறுத்தங்களிலும் தங்கள் தூரத்தை ( போதுமான இடைவெளி )  வைத்திருக்க வேண்டும்.
• சுவாச நோயின் அறிகுறிகளைக் கொண்ட எவரும் பொது போக்குவரத்தைத் தவிர்க்க வேண்டும்.

🚫  முதியோர் ஓய்வூதிய இல்லங்கள்: ( Besuche in Altersheimen )
• ஓய்வுபெறும்  முதியோர் இல்லங்களுக்கு  வருகை வரும் நாட்களில் தவிர்க்கப்பட உள்ளது.
•  உறவினர்கள் தொடர்பான கேள்விகள் அந்தந்தஇல்ல பொறுப்பாளர்களுடன்
 விவாதிக்கப்பட வேண்டும்.
•  சுவாச நோயின் அறிகுறிகளைக் கொண்ட எவரும் வயதானவர்களுடன் தொடர்பு கொள்வதைத் முற்றிலும்தவிர்க்க வேண்டும்.

🚫 டெலிவேர்க் மற்றும் மருத்துவ சான்றிதழ்: ( Telearbeit und Arztzeugnis )
• சாத்தியமான இடங்களில்,குறைக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை
• போதுமான இடைவெளி யில்  வாடிக்கையாளர் தொடர்புகளை ஏற்படுத்தி
• வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமான வடிவத்தில் தகவல் பரிமாற்றம்

சுகாதார அமைப்பின் அதிக சுமை தவிர்ப்பதற்காக, :  
👉🏼 நோய்வாய்ப்பட்டவர்களுக்கான
 மருத்துவ சான்றிதழ்கள் ஐந்தாம் நாளில் மட்டுமே ஊழியர்களிடமிருந்து கோரப்பட வேண்டும்.

🚫 அவசரகாலத்தில்  ( Notfallstationen )
‼️ 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், அவர்கள் வீட்டிலேயே தங்களைக் குணப்படுத்திக் கொள்ள வேண்டும்,
🚫 அவசரபிரிவு, அல்லது மருத்துவர் அலுவலகத்திற்குச் செல்லக்கூடாது. மருத்துவரின் வருகை, குறிப்பாக வார இறுதியில், மிகவும் மோசமான சூழ்நிலையில் மட்டுமே செய்யப்பட வேண்டும்.

சுவிஸ் கூட்டாட்சி  அரசின் சிறப்பு சடடத்தின் கீழ் BAG ( Bundesamt für Gesundheit ) மற்றும் Kanton வெளியிடும் அறிக்கைகளின் தரவுகள் தமிழின் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.
- ஆல்ப்ஸ் தென்றல்
நிஷா

👇👇👇

Mehr Details
Link: சுவிஸ் தற்போதைய சூழ்நிலையை சமாளிக்க மேலும் பரிந்துரைகள்!

8.3.2020 Switzerlant! In தற்போதைய நிலைமை என்ன?

8.3.2020
Current situation in Switzerlant

கொரோனா வைரஸ்
▪️ சுவிட்சர்லாந்து  இரண்டாவது மரணத்தை பதிவு செய்தது

8.3.2020:
• சுவிட்சர்லாந்து, Basel-Landschaft மண்டலத்தைச் சேர்ந்த 76 வயது நபர் கொரோனா வைரஸ் காரணமாக மரணித்துள்ளார்.

8.3.2020, காலை 12 மணி:
• கொரோனா வைரஸுடன் நோய்த்தொற்றுகள்  281 நபர்களுக்கு  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுவிஸில் பின் வரும் மாநிலங்களில் இருந்து  வரும்  அறிக்கைகள்:
Aargau, Appenzell Ausserrhoden, Basel Land, Basel Stadt, Bern, Fribourg, Geneva, Graubünden, Jura, Lucerne, Neuchâtel, Schwyz, Solothurn, St. Gallen, Ticino, Thurgau, Vaud, Valais, Zug, Zurich and from the Principality of Liechtenstein.

 • CORENA வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கலாம் என 4000  க்கும் மேற்பட்ட  சந்தேக நபர்கள் இது வரை  சோதிக்கப்பட்டனர் (அனைத்து ஆய்வகங்களும் இணைந்து):

•  ஏராளமான மக்கள் தங்குமிடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
• அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும், மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்த பட்டிருக்கின்றார்கள்.

• வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.

 • பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை பொது சுகாதார அதிகாரிகள் தொடர்பு கொண்டுள்ளனர்.

•  பொது மக்கள் முதியோர் இல்லம் செல்வதை தவிர்க்கும் படி வேண்டுகோள் வைக்கப்பட்டிருக்கின்றது.

• கோரேனோ வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும்  சுவிஸ் அரசின் சிறப்பு  சடடத்தின்  அவசர கால ஆலோசனைகளில் சுத்தம், சுகாதாரம் சம்பந்தமான அறிவுறுத்தல்கள் தொடர்கின்றன.

சுவிஸில் இத்தாலி மிலான்  சென்று வந்த
முதல் கோரேனோ நோயாளி 25.2.2020  கண்டுபிடிக்க படடதிலிருந்து இது வரை
            5.3.2020: 100 / 1 death
            6.3.2020: 181
            7.3.2020 : 228
            8.3.2020:  281 / 1 death

👉🏼 சுவிஸ் அரசின் உத்தியோக பூர்வ இணைப்பில் சென்று ( நான்கு மொழிகள் ) மேலதிக விபரங்கள் அறியலாம்

- ஆல்ப்ஸ் தென்றல்
நிஷா

👇👇👇
Confirmed in Switzerland

5.3.2020:
Switzerland recorded its first death attributed to the coronavirus; a 74-year-old woman from the canton of Vaud. The FOPH is in contact with the Vaud cantonal authorities. ( coronavirus have been confirmed:  100 persons )

6.3.2020, 2 pm:
Infections with the new coronavirus have been confirmed: 181 persons

More Details:  👇👇
Link : Current situation in Switzerlant

🔴 COVID-19: பெண்களை விட அதிகமான ஆண்கள் பாதிக்கப்படுகின்றனர்!



Swiss பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள
▪️பெண்களை விட அதிகமானஆண்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன.
▪️தற்போது 30 -39 வயதுடையோர் ( பெரும்பாலோனோர்) நோய் தொற்றுக்குள்ளாகி இருக்கின்றார்கள் 
▪️அதன்பிறகு 50 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் உள்ளனர்.

👉🏼 Kanton Waadt
▪️ நோயாளர்  எண்ணிக்கை ஒரு நாளுக்குள் 9 முதல் 20 ஆக உயர்ந்தது.
 ✅ அதே நேரத்தில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 முதல் 9 ஆக உயர்ந்துள்ளது.

7.3.2020 / 15:30:
சுவிஸ் கூட்டாட்சி  அரசின் சிறப்பு சடடத்தின் கீழ் BAG ( Bundesamt für Gesundheit ) மற்றும் Kanton வெளியிடும் அறிக்கைகளின் தரவுகள் தமிழின் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.

- ஆல்ப்ஸ் தென்றல்
நிஷா
👇👇👇
Mehr Details

07 மார்ச் 2020

கொரோனா வைரஸ் புனைகதைகளும் அறிவியல் விளக்கமும் ( live science )


Live Science அமெரிக்க மக்களுக்கான பதிவாக இருந்தாலும் உலக மக்களின் அறியாமைக்கு விளக்கம் தருவதில் அவசியமானதை தமிழ் படுத்தி இருக்கின்றேன்.

நீண்ட பதிவு எனினும்
Corena வைரஸ்  குறித்து பரவி வரும்போலிப்பரப்புரைகளுக்கு தெளிவான விளக்கத்தை தருவதனால் அனைவரும் வாசித்து உங்களுக்கிருக்கும் குழப்பங்களை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் உலகெங்கிலும் உள்ள மக்களை தொடர்ந்து பாதித்து வருவதால், இதை  பற்றிய செய்தி கட்டுரைகள் மற்றும் சமூக ஊடக பதிவுகள் ஆன்லைனில் தொடர்ந்து பரவி வருகின்றன. 

இவவாறு பரப்பப்படும்  தகவல்களை ஆராய்ந்து உண்மை எது, புனைவு எதுவென பிரித்து. அறிய முடியாதிருப்பது துரதிர்ஷ்டவசமானது. 

வதந்திகள் மற்றும் தவறான தகவல்கள்  பரப்பப்படுவது ஆபத்தானது.

SARS-CoV-2 மற்றும் COVID-19 குறித்த தவறான பரப்புரைகளுக்கு அறிவியல்  விளக்கங்களை live science தந்திருக்கின்றது. எனினும் முக்கியமானதை மட்டும் தமிழ் மொழியில் மாற்றி உள்ளேன். 
மேலும் விரிவாக  லிங்க் ல் காணலாம் 

1. முகமூடிகள் உங்களை வைரஸிலிருந்து பாதுகாக்கும். 
❌  தவறு : அறுவை சிகிச்சை  முகமூடிகள் ( surgical masks  ) உங்களை SARS-CoV-2 இலிருந்து பாதுகாக்க முடியாது, 
ஏனெனில் அவை வைரஸ் துகள்களைத் தடுக்க வடிவமைக்கப்படவில்லை।

 ✔️ அறுவைசிகிச்சை முகமூடிகள் பாதிக்கப்பட்டவர்களின் வாயிலிருந்து வெளியேற்றப்படக்கூடிய சுவாசத் துளிகளால் தடுப்பதன் மூலம்நோய்த்தொற்றுடையவர்கள் மேலும் வைரஸ் பரவாமல் தடுக்க உதவும்.

 👉🏼 சுகாதார வசதிகளுக்குள், " N95 respirators " என்று அழைக்கப்படும் சிறப்பு சுவாசக் கருவிகள் மருத்துவ ஊழியர்களிடையே வைரஸ் பரவுவதை வெகுவாகக் குறைப்பதாக கூறப்பட்டிருக்கின்றன.

👉🏼 முகமூடியின் விளிம்புகளைச் சுற்றி எந்த காற்றும் பதுங்க முடியாது என்பதை உறுதிப்படுத்த மூக்கு, கன்னங்கள் மற்றும் கன்னங்களைச் சுற்றி N95 சுவாசக் கருவிகளை சரியாகப் பொருத்த பயிற்சி தேவை.
👉🏼 ஒவ்வொரு தடவை பயன்பாட்டிற்கும் பின்பும்  உபகரணங்களை சரிபார்த்துஅணியவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

2. ( ஃப்ளு )  காய்ச்சலைக் காட்டிலும் கோரேனோ வைரஸ் பாதிக்கும் வாய்ப்பு குறைவு. 
❌ தவறு 

👉🏼 ஒரு வைரஸ் எவ்வளவு எளிதில் பரவுகிறது என்பதை மதிப்பிடுவதற்கு, விஞ்ஞானிகள் அதன் "அடிப்படை இனப்பெருக்கம் எண்" அல்லது R0 (R-naught என உச்சரிக்கப்படுகிறது) கணக்கிடுகின்றனர். 
பாதிக்கப்பட்ட ஒரு நபரிடமிருந்து பரப்பும் வைரஸ் தொற்ற கூடிய நபர்களின் எண்ணிக்கையை R0 கணிக்கிறது, 

தற்போது, ​​COVID-19 நோயை ஏற்படுத்தும் SARS-CoV-2 க்கான R0 சுமார் 2.2 என மதிப்பிடப்பட்டுள்ளது, அதாவது ஒரு பாதிக்கப்பட்ட நபர் சராசரியாக 2.2 பேருக்கு தொற்று ஏற்படுத்துவார் 
எனும் ஒப்பிடுகையில், காய்ச்சல்( Flu )  1.3 இன் R0 ஐக் கொண்டுள்ளது.

••• ஒருவேளை, மிக முக்கியமாக, COVID-19 ஐத் தடுக்க எந்த தடுப்பூசியும் இல்லை என்றாலும், (  seasonal flu ) பருவகால காய்ச்சல் தடுப்பூசி இன்ஃப்ளூயன்ஸாவை ஒப்பீட்டளவில் நன்றாகத் தடுக்கிறது, 

அதன் உருவாக்கம் புழக்கத்தில் இருக்கும் வைரஸ் மரபணுக்களுடன்  சரியாக பொருந்தவில்லை என்றாலும் கூட!

3. வைரஸ் என்பது ஜலதோஷத்தின் பிறழ்ந்த வடிவமாகும்
❌ தவறு

✔️கொரோனா வைரஸ் என்பது பல்வேறு நோய்களை உள்ளடக்கிய வைரஸ்களின் பெரிய குடும்பமாகும்.

4. வைரஸ் ஒரு ஆய்வகத்தில் செய்யப்பட்டிருக்கலாம்.
❌ தவறு

✔️ வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டதாக எந்த ஆதாரமும் தெரிவிக்கவில்லை. 
SARS-CoV-2 சமீபத்திய தசாப்தங்களில் பாதிப்பை தந்த  இரண்டு கொரோனா வைரஸ்களை ஒத்திருக்கிறது, 
SARS-CoV மற்றும் MERS-CoV, மற்றும் மூன்று வைரஸ்களும் வெளவால்களில் தோன்றியதாகத் தெரிகிறது. 

SARS-CoV-2 இன் குணாதிசயங்கள் இயற்கையாக நிகழும் பிற கொரோனா வைரஸ்களுடன் ( நமக்குத் தெரிந்தவற்றுடன் ) பொருந்துகின்றன, அவை விலங்குகளிடமிருந்து மக்களிடம் தொற்றுகின்றன.

5. COVID-19  வைரஸ் தொற்றியோர்  அனைவரும் மரணம் அடைவார்கள். 
❌ தவறு

🌻 அது உண்மை இல்லை. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 81% பேருக்கு COVID-19 லேசானபாதிப்பு  இருப்பதாக பிப்ரவரி 18 ஆம் தேதி சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

👉🏼 சுமார் 13.8% பேர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ( அவர்களுக்கு மூச்சுத் திணறல் அல்லது கூடுதல் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது,) 

👉🏼 சுமார் 4.7% முக்கியமானவை 
( சுவாசக் கோளாறு,உறுப்பு செயலிழப்பு, septic shock எதிர்கொள்கின்றனர் ) 

COVID-19 பாதிக்கப்பட்டவர்களில ..,! 
👉🏼 🖤 சுமார் 2.3% பேர் மட்டுமே இறக்கின்றனர் என்று இதுவரையான தரவுகள் தெரிவிக்கின்றன.

வயதானவர்கள் அல்லது அடிப்படை சுகாதார பாதிப்பை,  கடுமையான நோய் அல்லது சிக்கல்களைக் கொண்டிருப்பவர்களுக்கு ஆபத்து அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. 

பயம் அடையத் தேவையில்லை என்றாலும், புதிய கொரோனா வைரஸிலிருந்து தங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்க மக்கள்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6. செல்லப்பிராணிகளால் புதிய கொரோனா வைரஸை பரப்ப முடியும்.
❌ தவறு 

✔️அநேகமாக மனிதர்களுக்கு அல்ல।
நாய்களுக்கு  மக்களிடமிருந்து வைரஸ் தொற்றக்கூடும் என தென் சீனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.

சீனாவில் ஒரு நாய் அதன் உரிமையாளரிடமிருந்து "குறைந்த அளவிலான  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட்து.

அதற்கு  COVID-19 Virus உறுதிப்படுத்தப்பட்டது. எனினும் 
பாதிக்கப்பட்ட பொமரேனியன் நோய்வாய்ப்பட்டிருக்கவில்லை அல்லது நோயின் அறிகுறிகளைக் காட்டவில்லை, 

 👉🏼 விலங்கு மனிதர்களைப் பாதிக்கக்கூடும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை।

👉🏼  இதேபோன்ற வைரஸான SARS-CoV க்கு 2003 ஆம் ஆண்டில் பரவிய போது 
 பல நாய்கள் மற்றும் பூனைகள் நேர்மறையானவை என்று சிட்டி பல்கலைக்கழகத்தின்  ( City University ) விலங்கு சுகாதார நிபுணர் வனேசா பார்ஸ் போஸ்ட்டிடம் தெரிவித்தார்

"SARS உடனான முந்தைய அனுபவம் பூனைகள் மற்றும் நாய்கள் நோய்வாய்ப்படாது அல்லது மனிதர்களுக்கு வைரஸ் பரவாது என்று கூறுகிறது," என்று அவர் கூறினார"

❤️🙏 செல்ல நாய்கள் அல்லது பூனைகளிலிருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவியதற்கான எந்த ஆதாரமும் இல்லை।"

🙏  COVID-19 உடையவர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது வேறொருவர் தங்கள் துணை விலங்குகளை கவனித்துக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் ( CDC ) பரிந்துரைக்கிறது

⚠️ செல்லப்பிராணிகள் மற்ற நோய்களை மக்களுக்கு பரப்பக்கூடும் என்பதால், மக்கள் எப்போதுமே விலங்குகளுடன் பழகிய பின் கைகளை கழுவ வேண்டும்.

7. பூட்டுதல் அல்லது பள்ளிகளுக்கு விடுமுறை நடக்காது. 
❌ தவறு 

எந்த உத்தரவாதமும் இல்லை,
பள்ளி விடுமுறை  என்பது பொது சுகாதார அதிகாரிகள் தொற்று நோய்களின் பரவலை மெதுவாக்கவோ அல்லது தடுக்கவோ பயன்படுத்தும் ஒரு பொதுவான கருவியாகும். 

உதாரணமாக, 2009 ஆம் ஆண்டின் பன்றிக் காய்ச்சல் தொற்றுநோய்களின் போது, ​​யு.எஸ். இல் 1,300 பள்ளிகள் நோய் பரவுவதைக் குறைக்க மூடப்பட்டன என்று சுகாதார அரசியல், கொள்கை மற்றும் சட்டம் இதழின் 2017 ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த நேரத்தில்,CDC  வழிகாட்டுதல் 7 முதல் 14 நாட்களுக்குள் பள்ளிகளை மூடுமாறு பரிந்துரைத்தது.

கொரோனா வைரஸ் ஒரு வித்தியாசமான நோயாக இருக்கும்போது, ​​ வேறுபடடகாலம், பரவுதல் மற்றும் அறிகுறி தீவிரத்தன்மையை பொறுத்து பள்ளி மூடும்  வாய்ப்புள்ளது.

8. குழந்தைகளை கொரோனா வைரஸ் பாதிக்காது 
❌தவறு 

👉🏼 குழந்தைகளை நிச்சயமாக COVID-19 பாதிக்கும் எனினும் ஆரம்ப அறிக்கைகளின் படி பெரியவர்களுடன் ஒப்புடும் போது தாக்கம் குறைவாகவே இருக்கின்றது 

👉🏼 சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து பிப்ரவரியில் வெளியிடப்பட்ட ஆய்வில், COVID-19 னால் பாதிக்கப்படட 
44,000 க்கும் மேற்பட்டோரில் 19 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 2.2% மட்டுமே. 

இருப்பினும், மிக சமீபத்திய ஆய்வுகள் குழந்தைகள் பெரியவர்களைப் போலவே பாதிக்கப்படக்கூடும் என்று கூறுகின்றன. 

👉🏼 மார்ச் 5 ஆம் தேதி ஒரு ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் Shenzhen  நகரில் 1,500 க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து செய்த பகுப்பாய்வில் வயது வேறுபாடு இன்றி  COVID-19  ன் பாதிப்பு சுமார் 7% முதல் 8% வரை  இருந்தது. 

வைரஸால் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் பெரியவர்களைப் போலவே தொற்றுநோய்களுக்கும் ஆளாக நேரிடும் என்று Nuture News தெரிவித்துள்ளது. 

இருப்பினும், குழந்தைகள் பாதிக்கப்படும்போது, ​​COVID-19   கடுமையான பாதிப்பை தரவில்லை.

9. உங்களுக்கு கொரோனா வைரஸ் இருந்தால், "உங்களுக்குத் தெரியும்"
❌ தவறு 

இல்லை, நீங்கள் உணர மாட்டீர்கள். COVID-19 பரவலான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது, 

👉🏼 அவற்றில் பல காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் போன்ற பிற சுவாச நோய்க ளாக தோன்றும். 
👉🏼 COVID-19 இன் பொதுவான அறிகுறிகளில் காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை அடங்கும்
 👉🏼 அரிதான அறிகுறிகளில் தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி மற்றும் மூக்கு ஒழுகுதல் ஆகியவை அடங்கும். 
👉🏼சில சந்தர்ப்பங்களில், இந்த நோய் கடுமையான நிமோனியா போன்ற நோயாக முன்னேறக்கூடும்.

🖤 ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளையும் காடடாது.

🖤 பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் செல்லாதவர்கள் அல்லது சமீபத்தில் பயணம் செய்தவர்களுடன் தொடர்பு கொள்ளாதவர்களையும் வைரஸ் தொற்றலாம் 

நீங்கள் பாதிக்கப்படட பிராந்தியத்தில்  வாழ்ந்து, அதிக காய்ச்சல், பலவீனம், சோம்பல் அல்லது மூச்சுத் திணறல் போன்றவற்றை அனுபவிக்கத் தொடங்கினால், அல்லது நோயின் அடிப்படை நிலைமைகள் மற்றும் லேசான அறிகுறிகளைக் கொண்டிருந்தால், அருகிலுள்ள மருத்துவமனையில் மருத்துவ உதவியை நாட வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள். அங்கே  நீங்கள் சோதிக்கப்படலாம்.

10.கொரோனா வைரஸ் (ஃப்ளு) காய்ச்சலை விட கடுமை குறைவானது. 

✔️ இதுவரை அவதானிப்பில்.....! 
கொரோனா வைரஸ் காய்ச்சலை ( ஃப்ளு ) விட மிகவும் ஆபத்தானது என்று தோன்றுகிறது. 

இருப்பினும்,இந்த வைரஸின் இறப்பு விகிதத்தைச் சுற்றி இன்னும் நிறைய நிச்சயமற்ற தன்மை உள்ளது. 

🔴 சமீபத்திய தரவுகளின் படி
வருடாந்தம் பரவும் ஃப்ளு காய்ச்சலோடு 
ஒப்பிடுகையில், COVID-19 இறப்பு விகிதம் 20 மடங்கு அதிகமாக உள்ளது, அதாவது 2.3%, ஆனால் இது சரியான தரவுகளாகுமா என்பதில் நிச்சயம் இல்லை, STAT செய்தியின்படி, சீனாவில் பாதிப்புக்கள்  எண்ணிக்கை துல்லியமாக ஆவணப்படுத்தப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்பதனால் மாறிக்கொண்டு இருக்கின்றது. 

சீன CDC பிப்ரவரி 18 அன்று வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் 
இறப்பு விகிதம் பாதிக்கப்படும் நபரின் வயது, இருப்பிடம்போன்ற பல்வேறு காரணிகளால் மாறுபடுகிறது என்கின்றது.

👉🏼 CORENA வைரஸ் பாதிக்கப்படட நாடுகளிலிருந்தும் முக்கியமாக சீனாவிருந்து கடிதம், பார்சல் பெறுவதனாலும். 

👉🏼 உணவகம் சென்று சீனா உணவுகள் மூலம் வைரஸ் பரவும் வாய்ப்பில்லை என்கின்றது Live Science! 
•
இன்று காலை வரை எனக்கிருந்த பல கேள்விகளுக்கு தெளிவை தந்தது live science  ன் அறிவியல் விளக்கம் 😍

Note:   
CDC : the Centers for Disease Control and Prevention 

- ஆல்ப்ஸ் தென்றல் 
நிஷ

மேலும் விபரமாக அறிய: Click link




03 மார்ச் 2020

கோவிட்_19 ( கொரோனா வைரஸ் )

கொரோனா வைரஸ்: உலகம் முழுவதும் உள்ள நகரங்களுக்கு வேகமாக பரவுகின்றன.
அவதானமாக  இருங்கள்!

கொரோனா வைரஸ் தென் துருவத்தைத் தவிர ஒவ்வொரு கண்டத்திலும் பரவியுள்ளது. இந்த வைரஸ் சீனாவில் தோன்றியது. ஆனால் இந்த வைரஸ் சீனாவில் பரவியதை விட வேகமாக சீனாவுக்கு வெளியே பரவுகிறது. இதுபோன்ற நிலைமை உலகில் ஏற்படுவது இதுவே முதல் முறையாகும்.

கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிக மக்கள் நெருக்கமாக வசிக்கும் மற்றும் குழுமி வேலை செய்யும் நகரங்களில் உள்ள மக்களுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரு நகரங்களுக்கு  இது ஒரு பெரிய சவால். உலகெங்கிலும் உள்ள நகராட்சிகள் எவ்வாறு சமாளிக்கப் போகின்றன என விழி பிதுங்கி நிற்கின்றன.

வைரஸ் பரவுவதற்கான முக்கிய வழிகளில் பொது போக்குவரத்து ஒன்றாகும்.

இருமல் அல்லது தும்மும்போது, ​​ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் வைரஸ் பரவுகின்றன.

பொது போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு வைரஸ் ஆறு மடங்கு அதிகமாக பரவ வாய்ப்புள்ளது.

இதனால்தான் தென் கொரியா, இத்தாலி மற்றும் ஈரானில் உள்ள அதிகாரிகள் அனைத்து பேருந்துகள் மற்றும் ரயில்களிலும்,ரயில் நிலையங்களிலும்  கிருமிநாசினி தெளிக்கும் செயல்முறையைத் தொடங்கினர்.

அதிக எண்ணிக்கையிலான மக்களை ஈர்க்கும் அரங்கங்கள் போன்ற இடங்கள் இந்த வைரஸ்கள் பரவுவதற்கு வழிவகுக்கும், மேலும் கொரோனா வைரஸ் காரணமாக சில விளையாட்டு நிகழ்சிகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன.

சீனாவின் ஷாங்காயில் நடக்கவிருந்த  'ஃபார்முலா வன்' பந்தயத்தை ஒத்திவைக்க வேண்டியிருந்தது.

சிக்ஸ் ஏசியன் லீக் போட்டியை  ஈரான் தள்ளி வைத்துள்ளது.

இத்தாலிய அணிகள் கலந்து கொள்ளவிருந்த  கால்பந்து மற்றும் ரக்பி போட்டிகளை ஐரோப்பாவின் பல நாடுகள்  ரத்து செய்ய முடிவு செய்துள்ளன.

கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் மிகப்பெரிய விளையாட்டு டோக்கியோ ஒலிம்பிக்காக இருக்கலாம். இது ஜூலை 24 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரசால்  விளையாட்டுகள்  மட்டுமே பாதிக்கப்படவில்லை. மத விழாக்கள் மற்றும் புனித யாத்திரைகளுக்கும் இது ஒரு சவாலாகியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வரும் யாத்ரீகர்களுக்கு மக்காவை தடை செய்ய சவூதி அரேபியாவும் முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான முனைப்பாக சிறப்புத் திட்டங்களை ஏற்படுத்தி பல பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

ஜப்பான், ஈரான், தாய்லாந்து மற்றும் ஈராக்கில் உள்ள பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் மூடப்பட்டுள்ளன.

இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா பள்ளிகளை மூட முடிவு செய்யவில்லை. ஆனால் இங்கிலாந்தில் நான்கு பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டு கிருமி நாசினி தெளிப்பு செய்யப்பட்டன. இத்தாலிக்கு விஜயம் செய்த குழந்தைகள் அந்த பள்ளிகளில் இருப்பதால் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவிய நாடுகளுக்கு யாராவது சமீபத்தில் சென்றிருந்தால், அப்படியான பெற்றோர்களை வீட்டிலேயே இருக்கவும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதைத் தவிர்க்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகெங்கிsலும் உள்ள பல வணிக மற்றும் முக்கியமான தொழில்நுட்ப மையங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

சான் டியாகோ மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஏற்கனவே அவசரகால நிலையை அறிவித்துள்ளன. ஊழியர்கள் தங்கள் நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களை வரவேற்க கைகுலுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பேஸ்புக் மார்ச் மாதம் திட்டமிடப்பட்டுள்ள   அதன் ஆண்டு வர்த்தக மாநாட்டை ரத்து செய்துள்ளது.

சான் டியாகோவில் நடைபெறவிருக்கும் உலகின் மிகப் பெரிய இணைய பாதுகாப்பு மாநாட்டிலிருந்து விலகிச் செல்ல பல உலக முன்னணி ஆதரவாளர்கள் மற்றும் கண்காட்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

உடல் வெப்பநிலை உயர்ந்தால் அல்லது சுவாசக் கோளாறால் அவதிப்பட்டால் வீட்டிலிருந்து வேலை செய்வது நல்லது என்று அமெரிக்காவின் தொற்று நோய் கட்டுப்பாட்டு மையம் கூறுகிறது.

பொது விழிப்புணர்வு

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு கைகளை நன்கு கழுவுவது முக்கியம் என்பதையும் பொதுமக்களுக்குக் அதைக் கற்பிப்பது முக்கியம் என்றும்  அமெரிக்க சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைவரும் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
- கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்
- இருமல் அல்லது தும்மும்போது வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ளுங்கள்.
- சுவாச பிரச்சினைகள் உள்ளவர்கள் தொடர்பைத் தவிர்க்க வேண்டும்
- காட்டு விலங்குகள் அல்லது வீட்டு விலங்குகளை பாதுகாப்பற்ற முறையில் தொடாதீர்கள்

மருத்துவமனைகள் :
புதிய கொரோனா வைரஸுக்கு எதிராக இதுவரை எந்த மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், வளர்ந்து வரும் நோய் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரே வழி மட்டுமே மருத்துவமனையில் உண்டு.

அத்தகைய நோயாளிகளுடன் பணிபுரியும் மருத்துவமனை ஊழியர்கள் பாதுகாப்பு ஆடைகளை அணிந்து, நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வைரஸ் மிகவும் மோசமாக பரவிய ஒரு நாட்டிலிருந்து வருபவர்களை  தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று இங்கிலாந்தின் அதிகாரிகள் கட்டளை விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொடங்கிய வுஹான் நகரம் தனிமைப்படுத்தப்பட்டதைப் போலவே, பல இத்தாலிய நகரங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால் இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவினால், இதைவிட பாதுகாப்பு கொடுக்க வேறெந்த வழியும் இல்லாதிருப்பதாக  நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தங்கள் தேகரோக்கியத்துக்கு தாங்களே பொறுப்பாக கவனிக்க வேண்டிய ஒரு நிலை மக்களுக்கு  ஏற்பட்டுள்ளது.

குறிப்பு : மக்களை காப்பாற்ற விரும்பிவோர் இந்த தகவலை பகிருங்கள். அவர்களில் ஒருவர்தான் நீங்கள் என்பதை மறவாதீர்கள். அவர்களால் நீங்கள்  பாதிக்கப்படலாம்.

- ஜீவன்
நன்றி Jeevan Prasad

கோவிட்_19  ( கொரோனா வைரஸ் )



கொரோனா வைரஸ் (Coronavirus_in_Swiss )

#Coronavirus_in_Swiss

கொரோனா வைரஸ் காய்ச்சல் மிகவும் தீவிரமானது மற்றும் ஆபத்தானது என்று  பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சின் அவசர அறிவிப்பு!

தற்பாதுகாப்பு முறை 
••••••••••••••••••••••••
• தொண்டை எப்போதும் ஈரப்பதமாக இருக்கும் படி  கவனமாக இருங்கள்.
• தொண்டை வறண்டு போக விடாதீர்கள்।
தொண்டை வறண்டு இருப்பதாக உணர்ந்தால், உடனே  நீர் பருகுங்கள். நிரம்ப நீர் குடியுங்கள்
குடிநீர் எப்போதும் உடன் வைத்திருங்கள்.

• வயதுக்கு ஏற்ப  பெரியவர்கள் 50-80 சிசி
குழந்தைககள் 30-50 சிசி   வெதுவெதுப்பான நீரையம் தினமும்  குடிக்கவும்.

❌ எண்ணெயில் வறுத்த,பொறித்த அல்லது காரமான உணவைத் தவிர்த்து கொள்ளுங்கள்.
வைட்டமின் சி  கொண்ட பழங்கள் காய்கறிகளை அதிகம் உணவில் சேருங்கள்.

❌ மார்ச் 2020 இறுதி வரை, நெரிசலான இடங்களுக்குச் செல்ல வேண்டாம்.

 ❤️ குழந்தைகள் கவனம் ❤️
உடலில் நோய் எதிர்ப்பு திறன் குறைந்த  குழந்தைகள், வயதானவர்கள் இலகுவாக
பாதிக்கப்படுகின்றனர.

அனைவரும்....!
💚 ரயில் அல்லது பொதுப்போக்குவரத்தில் தேவைக்கேற்ப முகமூடி அணிந்து கொள்ளுங்கள்( பயணங்களை தவிர்க்கலாம்)

 🔴 அறிகுறிகள் 🔴
காய்ச்சல், இருமல், மூச்சுப் பிரச்சினைகளுக்கான அறிகுறி தென்பட்டாலோ உடனடியாக மருத்துவரை நாடவும்.

🚫  இந்த அறிகுறிகள் இருந்தால் வெளியில் செல்வதை கடடாயம்
தவிர்த்துக்கொள்ளுங்கள்.
வீட்டினுள் இருந்து வைத்தியரை தொடர்பு கொள்ளுங்கள். ( வைத்திய சோதனை உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும், எப்போதும் வந்து போகும் வைரஸாக இருந்தால் தகுந்த ஆண்டிபயாடிக் மருந்துகளை டாக்டர் பரிந்துரைப்பார், அது
 நல்லது. இதனால் வருடம் தோறும் வரும் வைரஸ் உடன் Coronavirus இணைந்து கொள்வதை தடுக்க முடியும் )

🖤 முக்கிய அறிவுறுத்தல் 🖤
• கை குலுக்குவதை தவிர்த்துக்கொள்ளவும். ( 🙏 வணக்கம் சொல்வோம்)
• அடிக்கடி கைகளை சோப் போட்டு கழுவிக் கொள்ளவும்.
•  வெளியில்  சென்று வீட்டுக்குள் சென்ற உடன் கைகளை கழுவி  desinfektion handgel ( கிருமி நாசினி ) தடவி
சுத்தமாக்கி கொள்ளவும்.
• தும்மும் போதும் இருமும் போதும்
 ஒரு தடவை மட்டும் உபயோகிக்க கூடிய Tembo பேப்பர் கைக்குட்டைகளை உபயோகித்த பின்உடனே குப்பையில் சேர்க்கவும்.
• பேப்பர்கைக்குட்டை இல்லாதவிடத்து கைகளால் பொத்தி தும்மவும்,

😍 பயந்து விடாதீர்கள் 😍

மருந்து, மாத்திரை கண்டு பிடிக்க பட இல்லையே தவிர குணமாக்க முடியாத நோயாக இது இல்லை.

வேகமாக பரவுகின்றது, உடலில் நோய் எதிர்ப்பு திறன் குறைந்தோரை தாக்குகின்றது என்றாலும் சீனாவில் இந்த வைரசால் பாதிக்க படட 18  பேரில் 10  பேருக்கு நோய் குணமாகி வீட்டுக்கும் அனுப்பி இருக்கின்றார்கள் 🌻

போதுமான நோய் எதிர்ப்பு சக்தியை சேமித்து வைத்து கொண்டோரால் இந்த வைரஸை  வெல்ல முடியும் ❤️

எமது  முன் எச்சரிக்கை முயற்சிகள் வைரஸ் பரவும் வேகத்தை மட்டுப்படுத்தும்!

பயம், பதற்றம் வேண்டாம்!

குழந்தைகளை வெளிய விட வேண்டாம்.
கூடடமாக விளையாட வேண்டாம்.

காய்ச்சல் இருமல் இருந்தால் வீட்டில் இருந்து பயந்து மறைத்து ஒளியாமல் உங்கள் குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

அடுத்து வரும் பத்து நாட்களுக்கான உணவுப்பொருட்களை வாங்கி வைத்து கொள்வது  நல்லது.
மாதகடைசி  என்பதால் அநேகமானோருக்கு சம்பளம் வந்திருக்கும்.

மொத்தமாக பில் கட்டி முடிக்காமல் இந்த மாதம் பிந்தி கட்டுவதா சொல்லி விடடேனும் அத்தியாவசிய உணவு பொருட்க்களை வாங்கி வையுங்கள்.

இதுவும் கடந்து போகும்.

Coronavirus மேலதிக விபரங்களை
 நான்கு மொழிகளில்  ( English, German, Italy, French ) உடனுக்குடன் அறிய சுவிஸ் அரசின் அதிகார பூர்வ தகவல் அப்டேட் ஆகும் பக்க லிங்க் First Comment ல் இணைக்கின்றேன்.
 🙏ஆல்ப்ஸ் தென்றல் Nisha

கொரோனா வைரஸ் ( Coronavirus_in_Swiss)

https://www.bag.admin.ch

கோரோனோ வைரசும் இத்தாலியும்..

# Coronavirus_in_Europa...! 

கோரோனோ வைரசும் இத்தாலியும்..

இத்தாலியின் லொம்பார்டியா பகுதியில் கொடோனோ நகரில் சென்ற வெள்ளிக்கிழமை முதலாவது கோரோனா வைரஸ் தாக்க இழப்பு ஏற்படும் வரை ஐரோப்பியர்களில் பலரும் இந்த அபாயம் குறித்து பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அரசுகள் ஒரளவு முன்னெச்சிக்கை நடடிக்கைகளை மேற்கொண்டே இருந்தன.விமான நிலையங்களில் நீலக் கதிர் பரிசோதனையை ஏற்கனவே இத்தாலி ஆரம்பிதிருந்தது. ஆனாலும் அது எவ்வாறு இத்தாலிக்குள் பரவியது என்பது குறித்த தெளிவு இல்லை. அதனைக் கண்டறியும் சாத்தியமும் இல்லை.

கொரோனா வைரஸ் வடக்கு இத்தாலி முழுவதும் பரவத் தொடங்கும் வரை இது ஒரு ஆசியப் பிரச்சனையாகவே பொதுவில் பார்க்கபட்டது. லோம்பார்டியா மற்றும் வெனெட்டோ பிராந்தியங்களில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்த போதிலேயே இது தொடர்பில் எல்லோரும் பரபரக்கத் தொடங்கினர்.

இத்தாலியில் இது வேகமாகப் பரவத் தொடங்க, இத்தாலிய அரசும் மருத்துவத்துறையும் விரைந்து செய்ற்பட்டன. பாதிப்புக்குள்ளான பிரதேசங்களில் உள்ள பதினொரு நகரங்கள் முடக்கபட்டதும், பாடசாலைகளை மூடியது, பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்த்துக் கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும், இந்த வைரஸ் தாக்கத்தின் பரவு வேகத்தைக் கட்டுப்படுத்தியது. ஆயினும், இத்தாலியின் பெரு மக்கள் பரம்பலில் இது அவ்வளவு சாத்தியமானதல்ல என்பதை வைரஸ் தொற்றின் பரவு பரம்பலும், வேகமும் உணர்த்தியது..

இது இவ்வாறிருக்க; இத்தாலியின் அண்டைநாடுகளுக்கும் இத்தாலியிலிருந்து இந்த வைரஸ் தொற்றுப் பரவத் தொடங்க, ஐரோப்பிய நாடுகள் அனைத்துதம் விழிப்படைந்தன. இத்தாலியிலியிருந்து சுவிஸ், ஆஸ்திரியா, ஸ்பானியா, ஆகிய நாடுகளுக்கும் இந்த வைரஸ் தற்போது பரவியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரியா இத்தாலியுடனாக புகையிரதப் போக்குவரத்தினை இடைநிறுத்தியுள்ளதைத் தொடர்ந்து, னைய நாடுகளிலும் அதனைச் செய்ய வேண்டும், இத்தாலியின் எல்லைகளை மூட வேண்டும் என்ற யோசனைகள் முன் வைக்கப்பட்டன.

ஆனால் அது அவ்வளவு சாத்தியமான விடயம் அல்ல. உதாரணமாக, சுவிற்சர்லாந்தின் வலதுசாரி அரசியல்வாதிகள், சுவிஸின் இத்தாலிய எல்லையை மூட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். ஆனால் அந்த நடவடிக்கையின் பின்னாலுள்ள சிரமங்களை அவர்கள் புரியாதுள்ளனர் என்ற எதிர்வாதங்கள் எழுந்தன.

அதன் முக்கிய காரணம், இத்தாலியில் இருந்து, எல்லை தாண்டிய தொழிலாளர்களாக, தினசரி சுமார் தினசரி 70,000 பேர் வரையில் வந்து செல்கிறார்கள். தென் மாநிலமான திச்சினோவின் வணிக நிலையங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என பல இடங்களிலும் இப் பணியாளர்கள் தொழில் புரிகின்றனர்.

இவற்றுள் அத்தியாவசிய சேவைப் பணியாளர்கள் பலரும் உள்ளார்கள். குறிப்பாக சுகாதாரத் துறையில் சுமார் 4000 க்கும் அதிகமானவர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் குறைந்தது 120 மருத்துவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மருத்துவத் தாதிகளும் அடங்குவர். எல்லையை மூடுவதால் இவர்கள் சேவை இழக்க நேரிடும்.

ஆனால் வௌிநாட்டவர்களது வருகையை மட்டுப்படுத்த வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்திவரும் வலதுசாரிக்கட்சிகள் இச் சந்தர்ப்பத்தில் தங்கள் குரலை மேலும் உயர்த்துகின்றன. அரசியல் நோக்கம் கொண்ட இந்த வாதம், மக்களின் சுதந்திர இயங்குதலுக்கு எதிரான செயல் என எதிர் தரப்பு வாதங்கள் வைக்கப்படுகின்றன.

ஐரோப்பாவில் கோரோனா வைரஸ் தாக்கத்தின் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்நாடுகள் பலவற்றிலும், நடைபெறவிருந்த பல்வேறு நிகழ்வுகள் கண்ணகாட்சிகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டு வருகின்றன.

நிறைவாக கோரோனா வைரஸ் தாக்கம் அச்சங் கொள்ள வேண்டியதுதானா ? என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும். ஆனால் நாம் அனைவரும் அவதானமாக இருக்கக் கடமைப்பட்டுள்ளோம். உரிய தற்காப்பு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியவர்களாக உள்ளோம். குறிப்பாக வயதானவர்கள், மற்றும் நோயாளிகள் குறித்த அக்கறையும் பரிவும், கவனிப்பும் அவசியமானவை.

இந்த வைரஸ் தாக்கம் தொடங்கிய சீனாவின் யுகான் நகரிலிலேயே, வைரஸ் தாக்கதிலிருந்து விடுபட்டு வீடுதிரும்பியவர்கள் பலர் இருக்கின்றார்கள். சமூக வலைத்தளங்களில் வைரஸ் தாக்கம் குறித்துப் பரப்பப்படும் போலியான, ஊர்ஜிதமற்ற தகவல்களை , மீளவும் பகிராதிருக்க வேண்டும். ஒவ்வொரு நாடுகளினதும், சுகாதாரத்துறையின் அறிவிப்புக்களை மட்டுமே கருத்திற் கொள்ள வேண்டும்.

மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்தினால், பொருட்களுக்கான பரிமாற்றங்களிலும் சிரமங்கள் எழுந்துள்ளன. பல இடங்களிலும் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் பெருமளவிலான பொருட்களை சேகரித்து வைப்பதனாலும் இந்தச் சிரமங்கள் ஏற்படுகின்றன. இது தவிர  தொழிலகங்கள், உணவகங்கள், போக்குவரத்து என்பவற்றில் ஏற்படும் முடக்கங்கள், பெரும் பொருளாதார வீழ்ச்சியினை, இத்தாலிக்கு மட்டுமல்லாது, எதிர்வரும் நாட்களில் அனைத்து நாடுகளுக்கும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்டுகிறது.

Thank you
Copyiert

Face book copy



கோவிட்_19 சுற்றுச்சூழலுக்கு ஆசீர்வாதம்!

#கோவிட்_19 

சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியம் குறித்து எச்சரிக்கின்றது,
விழிப்புணர்வை தந்திருக்கின்றது.

கோவிட் -19..!!! 
வேடிக்கையானது அல்ல! 
பாதிக்க படடவர்களுக்கு சோகமானது தான்! 

ஆனால்!!!
உண்மையில் சுற்றுச்சூழலுக்கு ஆசீர்வாதம்!  
நாம் வாழும் கிரகம் மீண்டும் சுவாசிக்க முடியும் என்பதை உணர்த்தி நிற்கின்றது  கோவிட் -19 !!!!

• சீனாவில் காற்றின் தரம் 90% அதிகரித்துள்ளது, 
• CO2  உமிழ்வுகள் குறைந்து காற்றும் வளிமண்டலமும்  தெளிவாகி உள்ளது 
( வாகன தொழிற்சாலை புகைகள் இல்லை ) 

• வனவிலங்கு வர்த்தகம் இல்லை, 
• ஆயிரக்கணக்கான அபாயகரமான உயிரிழப்புகள் இல்லை 

• கண்டதையும் தின்பதை நிறுத்தி சுய கட்டுப்பாடும், சுய பாதுகாப்பும் முக்கியம் என உணர்ந்தார்கள்.

• உலகப் பொருளாதாரத்திற்கு கொரோனா வைரஸ் பெரும் நெருக்கடியை  உருவாக்கி விட்டிருக்கின்றது என்றாலும் பணத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்து மாற்று மருந்து இல்லாமல் காப்புரிமை பெற்ற ஆய்வக வைரஸ் தரும் பாதிப்புக்களை உலகம் உணர்ந்து கொண்டது.

• தாம் விதைப்பதை தானே அறுப்போம் என புரிந்து கண்டதும் கண்டு பிடிக்க மனித உயிர்களை சோதனை செய்யும் ஆய்வுகள் இனியேனும் கட்டுப்படும் .

                நமக்குள் தாக்கம் இருக்கிறதா?
சுய பாதுகாப்பும், சுய கட்டுப்பாடும், விவேகத்துடனும்  நடந்து கொண்டால் போதும்!

பயப்பட, பதடடப்பட வேண்டியதில்லை.

தீமையில்  நன்மைகளையும் தேடுவோம் 🌻🙏

இந்தியா, தெலுங்கானாவில் கொரோனா வைரஸ்!

#கோவிட்_19_india
02.03.2020

கொரோனா வைரஸ் பாசிட்டிவ் 

• இந்தியா, தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான முதல் நபராக பெங்களூரில்  பணிபுரியும் 24 வயதான மென்பொருள் பொறியாளரார் அடையாளம் காணப்பட்டுள்ளார.

இந்த நபர் கடந்த மாதத்தில் நிறுவன கூட்டத்திற்காக துபாய் மற்றும்  ஹாங்காங் சென்றிருந்தார்.

பெங்களூரு , ஹைதராபாத் பஸ்ஸில் பயணம் செய்த  24 வயதான  பெங்களூரைச் சேர்ந்த  இந்த நபருக்கு  #கோவிட்_19  வைரஸ்  தாக்கம் உறுதிப்படுத்த பட்டு தனிமை படுத்த பட்டுள்ளார்.

அவர் பயணித்த பேருந்தில்  சக பயணிகள் உட்பட அவர் உரையாடிய பலரும்  ( 80 பேர் ) இப்போது கண்காணிப்பில்

    
 
 Internet photos