09 மார்ச் 2020

#Covid-19 தற்போதைய சர்வதேச நிலைமை

#Covid-19
தற்போதைய சர்வதேச நிலைமை
09.03.2020 / 12.00

சுவிட்சர்லாந்தில்  312 கொரோனா வைரஸ் நோயாளர்கள்உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
▪️அவற்றில் 2 பேர் இறந்துள்ளனர்.

இத்தாலியில் 7,375 கொரோனா வைரஸ் நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்
▪️அவற்றில் 366 பேர் இறந்துள்ளனர்.

• சீனாவில் தொடக்கி 100 க்கும் மேற்பட்ட நாடுகளும் புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதை உறுதிப்படுத்தியுள்ளன.

• உலகளவில், புதிய கொரோனா வைரஸால் 110,000 க்கும் அதிகமானவர்கள்பாதிக்கபட்டிருப்பதாக  பதிவாகியுள்ளன.
▪️உலகளவில் 3825 பேர் இறந்துள்ளனர் 
▪️சீனாவிற்கு வெளியே 706 பேர் இறந்துள்ளனர்.

🌻 மொத்தத்தில், 61,000 க்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

👉🏼 பெரும்பாலான மக்களுக்கு, நோய் லேசானது. இருப்பினும், வயதானவர்கள் கடுமையாக நோய்வாய்ப்படுகின்றார்கள்.

🔻 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களும்
            • உயர் இரத்த அழுத்தம்
            • நீரிழிவு நோய்
            • இருதய நோய்கள்
            • நாள்பட்ட சுவாச நோய்கள்
            • நோயெதிர்ப்பு சக்திகளை பலவீனப்படுத்தும் நோய்கள் மற்றும் சிகிச்சைகள்
            • புற்றுநோய்
போன்றவற்றால்  பாதிக்கப்படோரும்
மிகவும்  அவதானமாக இருக்க வேண்டும்

சுகாதார அமைச்சு  மற்றும்  அரசின் ஆலோசனைகள் அறிவுறுத்தல்களை அனைவரும் கடைப்பிடிப்பதன் மூலம் நம்மை நாமும் மற்றவர்களையும் ஓரளவுக்கு Covid-19 தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க முடியும்.

🔻பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
🔻அவர்கள் தங்கள் குடியிருப்பில் தங்க வேண்டும்,
🔻மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
🔻சுகாதார அதிகாரிகள் நெருங்கிய உறவினர்களுக்கு  அறிவிக்கிறார்கள்.


Link  #Covid-19 தற்போதைய சர்வதேச நிலைமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!