18 மார்ச் 2024

மன்னாரின் முத்துக்குழிப்பும் முத்தரிப்புதுறையும்


உலகில் முத்துக்குளிக்கும் இடங்கள் மிகச் சிலவேயுள்ளன. இலங்கையின் மன்னார், மலபார் ஆகிய கடலோரங்களில் பரதவர்கள் இதில் தனியுரிமை பெற்றவர்களாக சிறந்து விளங்கியிருக்கிறார்கள். சங்க காலத்திற்கு முன்பிருந்தே மன்னார் வளைகுடாவில் எடுக்கப் பெற்ற முத்துக்கள் கிரேக்க, ரோமானிய நாடுகளில் மிகவும் புகழ்பெற்று விளங்கின. இலங்கையின் பல்வேறு கடற்கரை நகரங்களும் எ.கா பொற்கேணி, மறிச்சுக்கட்டி, சிலாவத்துறை முத்துக்குளித்துறையாக இருந்திருக்கின்றன.

கிமு 6 ஆம் நூற்றாண்டில் இலங்கை கடல்சார் வர்த்தக உறவுகளைக் கொண்டிருந்தது. மேலும் எங்களிடம் கடல்சார் வர்த்தகத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட புகழ்பெற்ற கடற்படைத் துறைமுகங்கள் இருந்தன, குறிப்பாக கடல்சார் 'பட்டுப்பாதை'க்காக கிரேக்க-ரோமன், சீனா, இந்தியா, பெர்சியா ஆகிய நாடுகளில் இருந்தவர்கள் தங்கள் வெளிநாட்டு வர்த்தகத்திற்காகப் பயன்படுத்தினார்கள். அதனால் இலங்கை புதிய பொருளாதார உறவுகளை ஏற்படுத்த முடிந்தது.

பழங்காலத்தில் மன்னார் முத்து மீன்பிடிக்கு பெயர் பெற்றது. விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் மசாலாப் பொருட்களுடன், முத்துக்கள் தென்னிந்தியா மற்றும் இலங்கையின் முக்கிய ஏற்றுமதி பொருட்களாக இருந்தன, ரோமானிய நீண்ட தூர வர்த்தகத்தின் உச்சக்கட்டத்தின் போது, ​​அதாவது பேரரசு முழுவதும். பண்டமாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ரோமானியர்கள் வெள்ளி மற்றும் தங்க நாணயங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க அளவுகளில் பணம் செலுத்தினர். கி.பி முதல் நூற்றாண்டில் வாழ்ந்த அநாமதேய எழுத்தாளரால் எழுதப்பட்ட இந்தியப் பெருங்கடல் துறைமுகங்கள் பற்றி கிரேக்க மொழியில் எழுதப்பட்ட கிரேக்க-ரோமன்
‘’Periplus of the Erythraean Sea’’ கையேட்டில் ”மன்னார்” குறிப்பிடப்பட்டுள்ளது.

எரித்திரியக் கடலின் பெரிப்ளூஸ் (Periplus of the Erythraean Sea) என்ற கையெழுத்து ஆவணம் (manuscript document) பண்டைய ரோமின் கடல் சார்ந்த வர்த்தகம் (Maritime Trade) (அதாவது, செங்கடல், ஏடன் வளைகுடா மற்றும் மேற்கு இந்தியப் பெருங்கடல்) குறித்த மிகவும் இன்றியமையாத ஒற்றைத் தகவல் மூலமாகும் (single most important source of information). இந்த ஆவணம் கிழக்கு ஆப்பிரிக்கா (eastern Africa), தென் அரேபியா (southern Arabia) மற்றும் இந்தியாவின் மேற்குக் கடற்கரையோரங்களில் பல்வேறு துறைமுகங்களில் வாங்குவதற்கும் விற்பதற்குமான ரோம எகிப்தின் (Roman Egypt) செங்கடல் துறைமுகத்திலிருந்து வந்தவர்களுக்கான ஒரு சிறிய கையேடு எனலாம்.

மன்னார் வளைகுடா வழியாகக் கிழக்குக் கடற்கரைக்குச் செல்லும் பாதையில், இந்திய – இலங்கைக் கடற்கரைப் பகுதிகளில் இருந்த எபிடோரஸ் (Epidorus) (இலங்கையை ஒட்டி அமைந்திருந்த மன்னார் வளைகுடாவில்?)   முத்துக் குளித்தல் நடைபெற்றது பற்றிப் பெரிபுளூஸ் விரிவாக விவரித்துள்ளார். பெரிபுளூஸ் எழுதிய கடல் வழிகளில் பெர்சியன் வளைகுடா பற்றி விரிவாகக் குறிப்பிடவில்லை. என்றாலும்  இந்த வளைகுடாவின் முத்துக்குளித்தல் பற்றி மேலோட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.  “கொற்கையில் (Colechi) முத்துக்குளித்தல் நடைபற்றது. கொற்கை பாண்டிய அரசிற்குச் சொந்தமானது. இவர்கள் முதுக்குளித்தலை தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளைக் (Condemned Criminals) கொண்டு நடத்தினார்கள்” என்று பெரிபுளூஸ் பதிவு செய்துள்ளார். இவர் மொத்த மன்னார் வளைகுடாவையும் கொல்கை வளைகுடா (Colchic Gulf) என்று பதிவு செய்துள்ளார்.

16. முத்துக்குளிப்பு (Pearl hunting)
முத்தரிப்புத்துறை

உலகில் முத்துக்குளிக்கும் இடங்கள் மிகச் சிலவேயுள்ளன. இலங்கையின் மன்னார், மலபார் ஆகிய கடலோரங்களில் பரதவர்கள் இதில் தனியுரிமை பெற்றவர்களாக சிறந்து விளங்கியிருக்கிறார்கள். எங்கள் கடலில் வளமான முத்துக்கள் இருந்தன. நினைவெட்டாக் காலத்திலிருந்தே எங்கள் முன்னோர்கள் கண்டெடுத்த இயற்கைச் சொத்து அது. கொற்கையிலும், மன்னாரிலும், பூம்பட்டினத்திலுமாக வருடத்திற்கு ஒரு போகம் முக்குளித்தோம்.மேற்கிலிருந்து வீசியக் காற்று கொற்கைக்கும் கீழைக்காற்று மன்னாருக்குமாகமுத்தைக் கொட்டிக் கொடுத்த அந்த இயற்கையின் சொத்துக்கு எங்கள் முன்னோர்கள் அதிபதிகளாக இருந்தனர்.

முத்துக்குளித்தல்(Pearl hunting) அல்லது முத்தெடுத்தல் அல்லது முத்து வேட்டை என்பது கடலின் ஆழமான பகுதிகளில் வசிக்கும் முத்துச் சிப்பி மற்றும் நன்னீர் மட்டிகள் (freshwater pearl mussel)எனப்படும் மெல்லுடலிகளிலிருந்து முறையான மூழ்குதல் பயிற்சி மூலம் முத்தினை எடுத்து கடலின் மேற்பரப்பிற்குக் கொண்டு சேர்க்கும் முறையாகும்.முத்துச் சிப்பிகளுக்கு நான்கு வயதாக இருக்கும் போது பெறப்படுவனவற்றிலேயே அதிசிறந்த முத்துக்கள் காணப்படும். நல்ல தரமான அரிய வகையான மூன்று அல்லது நான்கு முத்துகளை பெறுவதற்கு கிட்டத்தட்ட ஒரு டன் சிப்பிகள் சேகரிக்கப்பட வேண்டும்.

’’பேருலகத்துமே எந்தோன்றி சீருடை விழுச் சிறப்பின், விளைந்து முதிர்ந்த விழு முத்தின், இலங்குவளையிருஞ்சேரிக் கட் கொண்டிக் குடிப்பாக்கத்தும், நற்கொற்கையோர்” என்கிற மதுரைக் காஞ்சி பாடலின் மூலம் வீரமிக்க பரதவர்கள் முத்துக்களையும் சிப்பிகளையும் கடலில் மூழ்கியெடுத்தார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.




பரவர்கள் சிப்பிகளைச் சேரிப்பதற்காக இடுப்பைச் சுற்றி பையொன்றைக் கட்டிக்கொள்வார்கள். நீரில் மூழ்கும் போது சரியான இடம் தென்பட்டதும் பரபரப்பாக முத்துக் களைச் சேகரித்து இடுப்பில் கட்டிச் சென்ற பை போன்ற வலையினுள் போடப்படும். அதேவேளை தோணியில் இருப்பவர் முத்துக் குளிப்பவர்களைக் கண்ணும் கருத்துமாகக் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள்.மேலே வந்தவர் தோணியில் இருப்பவரிடம் தான் சேகரித்த முத்துச் சிப்பிகளை ஒப்படைத்து விட்டு சிறிது ஓய்வு எடுத்தபின் மீண்டும் முத்துக் குளிக்கக் குதித்துவிடுவார். முத்துக் குளிக்கும் பணி முடிவுற்றதும் சிப்பிகளைக் கடற்கரையில் கொட்டி ஏலத்தில் விற்பனை செய்வார்கள். சில நாட்களின் பின்பு சிப்பிகளை ஒவ்வொன்றாகத் திறந்து நன்றாகக் கழுவி முத்துக்களை வெளியில் எடுப்பார்கள். இவ்வாறு சேகரிக்கப்படும் இயற்கை முத்துகள் விலை மதிப்பு மிக்க ஒன்பது இரத்தினங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகிறது.


பரவர்கள் மற்றும் அவர்களின் பாரம்பரீய மீனவ மரபினரின் தொழிலை சில வகைகளாக பிரிக்கலாம். அவை, துணி விற்போர், கலம் செலுத்துவோர், முத்துச்சிப்பிகள் குளிப்போர், சங்குகள் குளிப்போர், துணிகள் கட்டுக்கட்டுவோர், ஆமைகளைப் பிடிப்போர், கடற்பன்றிகளைப் பிடிப்போர், சுறா மற்றும் பிறமீன்களைப் பிடிப்போர், பல்லக்குச் சுமப்போர், தலைமைக்காரர்களின் குற்றேவலர், நண்டுகள் பிடிப்போர், என பல தொழில்களையும் கடலை மையமிட்டு செய்து வந்தவர்கள் பாரம்பரீய மீனவர்கள்.ஆனால் பாரம்பரீய மீன் பிடிச்சமூகங்களின் பிரதான தொழிலாக எக்காலத்திலும் இருந்திருக்கக் கூடிய மீன்பிடி, உப்பு விளைவித்தல் போன்ற தொழிலுக்கு இருந்த முக்கியத்துவத்தை விட, அவர்கள் தொழிலின் ஒரு பகுதியாக இருந்து கடலில் மூழ்கி எடுத்து வந்த முத்துக்கு இருந்த முக்கியத்துவம் வேறு எதற்கும் இல்லை.

செல்வாக்குமிக்கோரின் கழுத்துக்களை அலங்கரிக்கும் அணிகலனாக மட்டுமல்லாமல் கிரேக்கர்களையும், உரோமானியர்களையும், அராபியர்களையும், போர்ச்சுக்கீசியரையும், பின்னர் டச்சுக்காரர்களையும் இறுதியாக வெள்ளையர்களையும் என அவர்களின் ஏக போக சுரண்டல் சந்தையில் முத்து ஒரு பிரதான பொருளாக இருந்ததாலுமே முத்து பேசப்பட்டது.

தென்னிந்தியாவைத் தவிற இந்தியக் கடலோரங்களில் வேறு எங்கும் இயற்கை கடல் முத்து எடுக்கப்படவில்லை. இந்தியக் கடலோரங்களில் பரவாலாக சங்குக்குளித்தல் நடைபெற்றதே தவிற முத்துகுளித்தல் நடைபெறவில்லை. முத்து வளம் இந்திய தீபகற்பத்தின் வேறெந்த கடல் பகுதிகளிலும் இருந்தமைக்கான சான்றுகளும் இல்லை. முத்துக்குளித்தல் நடைபெற்ற ஒரே இடம் தமிழக கடலோரங்களிலும் இலங்கையின் மன்னார் கடலோரத்திலும்தான் என்பது அரியக்கிடைக்கிற செய்தி.

பெர்ஷியா, இந்தோனேஷியா, ஜப்பான், போன்ற இடங்களில் முத்துக்குளிப்பு நடந்திருந்தாலும் இவைகளுக்கு பன்னெடுங்காலத்திற்கு முன்பே தமிழகத்தின் கொற்கை கடலோரத்திலும் சிறிலங்காவின் மன்னார் குடாவிலும் முத்தெடுத்ததற்கான சான்றுகள் உள்ளன. தமிழக முத்துக்கள் ஆதிகாலம் தொட்டே எடுக்கப்பட்டு வருவதாக கால்டுவெல் பிஷப்பும், எம். அருணாச்சலம் என்ற மூத்த ஆய்வாளரும் கணிக்கிறார்கள்

பெரிப்ளூஸ் என்கிற நூலில் கொற்கையில் முத்துக்குளித்தலில் பாண்டியர்களுக்காக அவரின் கைதிகள் ஈடுபட்டதாக குறிப்பிடுகிறார். சந்திரகுப்த மௌரியரின் அரசவையில் கிரேக்க தூதுவராக இருந்த மெகஸ்தனிஸ் இலங்கையில் முத்துக்குளித்தல் நடந்ததையும் இந்தியாவைக் காட்டிலும் தங்கம், முத்துக்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடாக இலங்கை இருந்ததையும் குறிப்பிடுகிறார்.

பெர்ஷியன் கடல்பகுதிகளில் நடந்த முத்துக்குளித்தல் தொடர்பான குறிப்புகளும் உள்ளன. பெர்ஷியன் கடல் பகுதியில் கிடைத்த முத்துக்கள் ஆர்ம்ஸ் (Ormus) என்றும் தமிழக, மன்னாரிலும் கிடைத்த முத்துக்கள் ‘’கீழை முத்துக்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த கீழை முத்துக்கள் பெர்ஷிய முத்துக்களை விட கிரேக்கத்திலும், ரோமாபுரியிலும் புகழ்பெற்றிருந்ததாகவும் தெரிகிறது


முத்தின் வகைகள்
  1. ஆணி
  2. கனதாரி
  3. மக்கை
  4. மடக்கு
  5. குறவில்
  6. களிப்பு
  7. பீசல்
  8. குறல்
  9. தூள்
  10. ஓட்டு முத்து

மன்னார் வளைகுடாவினது முத்துப்படுக்கைகள் (முத்துச்சிப்பிக்கள் காணப்படுகின்ற இடங்கள்) தொடர்பாக கி.பி. 6ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலுள்;ள வரலாற்றுப் பதிவுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. போக் 1888 என்பவரின் கருத்தின்படி ஒல்லாந்தரால் 1661, 1667, 1746, 1748, 1749, 1753, 1754, 1768ம் ஆண்டுகளில் இங்கு முத்துக்குளிப்பு இடம் பெற்றுள்ளது. கௌடில்யரின் கருத்துப்படி கி.மு 3ம் நூற்றாண்டுகளில் இங்கிருந்து பெறப்பட்ட முத்துக்கள் இந்தியாவில் கொடிகட்டிப் பறந்த மகரப் பேரரசுப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஏனைய நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டன என்று அறிய முடிகிறது.13ம் நூற்றாண்டில் காயல் பட்டினம் சிறந்த பொருளாதார சிறப்புடன் விளங்கியுள்ளது. மன்னாரில் பெறப்பட்ட முத்துக்கள் இங்கு கொண்டு செல்லப்பட்டு ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

( முத்துக்களை பார்வையிட பாண்டியபதிகள் வந்திருக்கும்
1730 - புகைப்படம் கையால் வரைந்தது. அப்போது கேமரா கிடையாது.)


1925 ஆண்டுகளில் வரையப்பட்ட மற்றும் புகைப்பட கருவிகள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் இப்பதிவில் இணைக்கப்பட்டு உள்ளது.

வெனிசிய அறிஞர் மார்க்கோ)போலோ சொல்கிறார் 14ம் நூற்றாண்டில் மலையாளக் கரையில் உள்ள யூர்பட்டினம் சிறந்து விளங்கியது. இங்கு அதிகமாக மன்னார் முத்துக்கள் விற்கப்பட்டுள்ளதாக இவர் கூறியுள்ளார். 1294ஆம் ஆண்டு மார்க்கோ போலோ மன்னார் வளைகுடாவுக்கும் வந்துள்ளதுடன்,
அறுவடைக்காலத்தில் அங்கு கிட்டத்தட்ட 500 கப்பல்களும் படகுகளும் சுழியோடிகள் மற்றும் வர்த்தகர்களுடன் முத்துக்களைத் தேடி வந்திருந்தாக குறிப்புக்கள் கூறுகின்றன.

மொறோக்கோ யாத்திரிகர் இபுனு பதூதா, தான் இலங்கையில் கரை இறங்கிய போது ஆரியச் சக்கரவர்த்தியின் கட்டுப்பாட்டில் இருந்த முத்துச் சலாபத்திற்கு அண்மையில் உள்ள ‘பட்டாள’ நகரில் மரத்தால் செய்யப்பட்ட அடுக்கு மாளிகையில் தான் தங்கியதாகவும், அண்மையில் முத்துக்கள் குவிக்கப்பட்டிருந்ததையும் அதை அதிகாரிகள் தரம் பிரித்ததையும் , கண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் முத்துக்குளிப்புப் பகுதி இலங்கைத் தீவின் வட மேற்கில் உள்ள நீர்கொழும்பு முதல் மன்னார் வரையிலான கரையோரப் பகுதியை அண்டிய மன்னார்க் குடாப் பகுதியாகும். இப்பகுதி நீண்ட காலமாகத் தமிழ் அரசான யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. அத்துடன், இலங்கையின் முத்துக்குளிப்புத் தொழிலில் இலங்கையின் வடபகுதியைச் சேர்ந்த கரையோரப் பகுதி மக்களுடன் பெருமளவிலான தமிழ்நாட்டுக் கரையோரப் பகுதி மக்களும் ஈடுபட்டிருந்தனர். தமிழகத்தின் பாண்டிநாட்டுக் கரையோரப் பகுதிகள் பண்டைக்காலம் தொட்டே முத்துக்குளிப்புக்குப் பெயர் போனவை.


பண்டைய தமிழகத்தில் குறிப்பாக முத்து வளமிக்க கீழைக்கடலோரத்தில் தூத்துக்குடி, இராமநாதபுரம், நாகப்பட்டினம், தென் ஆற்காட்டின் கரையோயங்களில் முத்து எடுக்கப்பட்டது. இத்தொழில் பரதவர் எனப்படும் சமூகத்தினர் ஈடுபட்டு வந்துள்ளனர். இப்பகுதியில் கிடைத்த முத்து கீழை முத்து என பெயர் பெற்றதாக வரலாறு தெரிவிக்கிறது. இலங்கையில் உள்நாட்டுப் போர்களின் காரணமாக இத்தொழில் நிறுத்தி வைக்கப்பட்டது.

முத்தரிப்பு துறையில் முத்து குளிப்பில் ஈடுபட்டவர்கள் பரவ சமூகத்தை சேர்ந்தவர் இவர்கள் முள்ளிக்குளத்தில் இருந்து போசாலைவரை கடற்கரை அண்டிய பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்
மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த முள்ளிக்குளம்,வங்காலை , தாழ்வுபாடு போசாலை, சிலாவத்துறை,போன்ற பிரதேசங்களில் உள்ள பரவ சமூகத்தினர் குறிப்பிட்ட சிலர் கடலுடன் தொடர்புபட்ட அட்டை பிடித்தல்,சங்கு குளித்தல் போன்ற நிகழ்வுகளில் இன்றும் ஈடுபட்டிருப்பதையும் அறியக் கூடியதாக உள்ளது.

கடலுக்கு அடியில் முத்துச் சிப்பிகள் விளையும் இடம் "பார்" எனப்பட்டது. முத்துக் குளிக்கும் பார்கள் மன்னாரில் மேற்குக் கரைகளில் அதிகம் இருந்து உள்ளன. முத்துக்குளிப்புப் பகுதியில் 19 பார்கள் வரை இருந்ததாகத் தெரிகிறது. அவை அவற்றுக்கு அண்மையில் உள்ள இடங்களின் பெயர்களால் அழைக்கப்பட்டன.

  • கொண்டச்சிப் பார்
  • சிலாபம் பார்
  • காரைதீவுப் பார்
  • பெரிய காரைப் பார்
  • செவ்வல் பார்
  • மோதரகம் பார்
  • அரிப்புப் பார்

மன்னார்பிரசேத்தில் வருடாவருடம் சித்திரை, வைகாசி மாதங்களில் முத்துக் குளித்தல் நடைபெற்றுள்ளது. இதற்குரிய ஆயத்தங்கள் பெப்ரவரி மாதம் முதல் செய்யப்படுவது வழக்கம். இதில்; இத்தொழிலுடன் தொடர்புபட்ட அடிப்படைவசதிகளான மருத்துவ வசதிகள், வாடிகள், ஓய்வு விடுதிகள், களஞ்சிய அறையமைப்பு,கடைகள் இங்கு நடை பெறும் முத்துக்குளிக்கும் அழகிய கைத்தொழிலைப் பார்வையிட உள்ளுர், வெளியூர் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த பெண்கள், சிறுவர்கள், ஆண்கள் போன்றோர் குடும்பம் குடும்பமாக வருகை தந்து பார்வையிட்டுவந்துள்ளனார்

பிரித்தானியர் வருமானத்திற்கு முத்து பாரிய பங்களிப்பைச் செய்தமையால் அத்தொழிலைக் கண்காணிப்பதற்காகவும், வரி அறவிடுவதற்காகவும் பிரித்தானிய பிரதமரின் மகன் ஆளுனர் ப்ரெட்றிக் நோத் அவர்களால் ‘டொரிக்’ எனப்படும் 3மாடிக் கட்டிடம் சிலாபத்துறை அரிப்பு வீதியில் களிமண் ஓடைக்கு மேற்காகவும், வீதிக்கு தெற்கிலும் கடற்கரைப்பக்கமாக அமைக்கப்பட்டது. இக்கட்டிடம் அமைக்கும் போது கடல் தூரத்தில் இருந்ததாக அறிய முடிகின்றது. இன்று இக்கட்டிடம் கடல் அலையால் மோதப்பட்டுக் கொண்டு அழிவின் விளிம்பில் உள்ளது.இக்கட்டிடத்தை இப்பிரதேச மக்கள் அல்லிராணிக் கோட்டை எனவும் அழைக்கின்றனர். இக்கட்டிடத்தின் சாயல் கிரேக்க கட்டிட அமைப்பில் உள்ளது.

காலனித்துவக் காலப்பகுதியின்போது 16ஆம் நூற்றண்டு தொடக்கம் அரசாங்கத்துக்குச் சொந்தமான முத்துப்படுக்கைகள் சுழியோடிகளுக்கும் வாத்தகர்களுக்கும் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. முத்து அகழ்வுத்தொழில் 67 வருடங்களாக வெற்றிகரமாக இருந்துவந்தபோதிலும் 1881ஆம் ஆண்டளவில் விநியோகிப்பதற்கு சிப்பி கள் இல்லாமல் போனதை அரசாங்கம் அவதானித்திருந்தது. 1924ஆம் ஆண்டளவில் முத்து அகழ்வுத்தொழிலை ஒழுங்குபடுத்துகின்ற சட்டமொன்றை அமுலுக்கு கொண்டுவந்தது. இருப்பினும் அங்கு முத்துச் சிப்பிகள் எதுவுமே இல்லாதபோது அச்சட்டம் மிகவும் தாமதமானதாகவே வந்திருந்தது.

தொடர்ச்சியான முத்துக்குளித்த லால், முத்துப் படுகைகள் அழிந்து போயின.
1960ல் சிலாபத்துறையில் நோர்த் ஸ்டார், கனேடியன் ஆகிய படகுகள் மூலம் இலங்கை அரசு முத்துக்குளித்தலில் ஈடுபட்டது. இதுவே, மன்னார்ப்பிரதேச இறுதி முத்துக்குளிப்பாகும். 1961-க்கு பிறகு, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் முத்துக்குளித்தல் நடைபெறவில்லை.

ஆனால், சங்கு குளித்தல் இன்று வரை தொடர்கிறது. சங்கு குளிப்போர், ‘டர்பினெல்லா பைரம்’ எனப்படும், `பால் சங்கை’ குறி வைத்துதான் கடலுக்குள் செல்கின்றனர். இவ்வகை சங்குகள், இந்து மற்றும் புத்த மதத்தில் புனிதத்துவம் வாய்ந்தவையாக கருதப்படு கின்றன. சங்கு குளிப்போர், கடலில் 20 மீட்டர் ஆழம் வரை மூச்சுப்பிடித்து நீந்திச்சென்று சங்கு குளிப்பர். பால் சங்குகளை உயிரோடு கடலுக்கு அடியில் இருந்து எடுத்து வருவர். அதன் சதையை மாமிசமாக பயன் படுத்திவிட்டு, சங்கை விற்பனை செய்வர். பாதுகாப்பான சங்கு குளித்தலுக்கு வகை செய்யும் விதிமுறைகளை மீன்வளத்துறை வகுக்க வேண்டும்.

⚫️ மன்னாரில் முத்து தொழில் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்ன?
நிலையான நடைமுறைகள் இன்றி அதிகப்படியான முத்து அறுவடையானது மன்னாரில் முத்து தொழில் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

🟠இயற்கைச் சுற்றாடலை சாதாரணமாக மிக அதிகமாகவே மனிதன் பயன்படுத்துகிறான். விலங்கினங்களும் தாவரங்களும் வளரவும் பெருகவும் வேண்டும். ஆயினும்; சிலவேளைகளில் இத்தகைய விலங்கினங்களும் தாவரங்களும் பெருகவும் வளரவும் சந்தர்ப்பமளிக்கப்படாமல் மனிதனால் பிடிக்கப்பட்டு அல்லது அறுவடை செய்யப்பட்டு விடுகின்றன. இவ்வாறு தொடர்ந்து நடைபெறும்போது, அடுத்த தடவை பிடிப்பதற்கோ அல்லது அறுவடை செய்யவோ போதுமானளவுக்கு அவை கிடைக்காதுபோகின்றன. அத்துடன் அவை இனப்பெருக்கம் செய்ய முடியாத நிலை ஏற்படும் .இவ்வாறு முத்துகள் தொடர்பான முகாமைத்துவம் இல்லாமையால் இன்று மன்னாரில் முத்துக்களும் முத்து குளிப்பும் அழிவடைந்துவிட்டது.

‘’Periplus of the Erythraean Sea’’ ( The Periplus of the Erythraean Sea or Periplus of the Red Sea) கடல்சார்ந்த எகிப்தியர் பற்றிய ( கிரேக்க-ரோமன் ) படைப்பாகும். இது நம்மிடம் வந்த பழங்கால இலக்கியங்கள் அனைத்திலும் கருப்பொருளாக தனித்துவமானது. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பிரதி 1816 முதல் ஹைடெல்பெர்க் பல்கலைக்கழக நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள

PERIPLUS OF THE ERYTHREAN SEA.. pdf

A periplus என்பது பாய்மரப் பயணம் மற்றும் வணிக, அரசியல் மற்றும் இனவியல் விவரங்களைப் பதிவுசெய்த துறைமுகங்கள் பற்றிய பதிவு புத்தகமாகும். வரைபடங்கள் பொதுவான பயன்பாட்டில் இருந்த ஒரு காலத்தில், இது ஒரு கலவையான அட்லஸ் மற்றும் பயணிகளின் கையேடாக செயல்பட்டது. இது செங்கடலின் கடற்கரையில் உள்ள Berenice Troglodytica ரோமானிய எகிப்திய துறைமுகங்களிலிருந்து Horn of Africa ( கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள தீபகற்பம்) பாரசீக வளைகுடா, அரேபிய கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல், பாகிஸ்தானின் நவீனகால சிந்து பகுதி உட்பட இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள நிலங்களைப் பற்றி வழிசெலுத்தல் மற்றும் வர்த்தக வாய்ப்புகளை, பண்டைய ஹெலனிக் உலக நுண்ணறிவுகளை ( கிட்டத்தட்ட ) துல்லியமான விவரிக்கிறது.

  • தமிழக வரலாற்றை பொறுத்தவரை இதில் தமிழகத்தின் துறைமுகங்கள் பற்றிய விரிவான குறிப்புகள் உள்ளன.
  • இதை பெரிப்ளசு, டொலமி காலங்களில் பயன்படுத்தியுள்ளனர்.
  • இதை வைத்து ரோம், சங்க காலத் தமிழகம் போன்றவற்றின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஆராயலாம்.

புவியியலாளரும், வானியலாளரும், சோதிடருமான தாலமி (Ptolemy) என்னும் குளோடியஸ் தொலெமாயெஸ் (Claudius Ptolemaeus) “Geographia” என்னும் தன் நூலில் பெர்சிய வளைகுடாவின் (Persian Gulf) டைலோஸ் தீவில் (பஹ்ரைன்) (Island of Tylos (Bahrain) நினைவிற்கு எட்டாத காலந்தொட்டு (from time immemorial) விறுவிறுப்பாக நடைபெற்ற முத்துக் குளித்தல் (Pearl Fishery) பற்றி விவரித்துள்ளார். தாலமி கொற்கையை Kolkhoi என்று அழைத்துள்ளார். இந்தப் பட்டணத்தைப் பேரங்காடி (Emporium) என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கி.பி. 1838 ஆம் ஆண்டு கொற்கை கால்டுவெல்லால் மீண்டும் அடையாளம் காணப்பட்டது. இவர் தாமிரபரபரணிக் கழிமுகத்தில் அமைந்திருந்த இப்பகுதியை அகழ்வாய்வு செய்தார். ஏரல் என்னும் ஊரின் அருகே அழிவின் விளிம்பில் அமைந்திருந்த இந்தத் தளமே (Site) கொற்கை என்று கண்டறிந்தார். இராமாயணம் குறிப்பிடும் பாண்டிய கவாடமும் கலித்தொகை குறிப்பிடும் கபாடபுரமும் இதுவென்று கூறுவார் சிலர்.

இலங்கை மற்றும் கிரேக்க-ரோமன் கடல்சார் வர்த்தக உறவுகள் (இலக்கிய ஆதாரங்கள் மற்றும் தொல்பொருள் சான்றுகளின்படி)

இலங்கைக்கும் கிரேக்க-ரோமானுக்கும் இடையிலான வர்த்தக உறவு என்ன?.
இந்த நூலக ஆய்வைப் பயன்படுத்தி தரமான ஆராய்ச்சி முறையின் கீழ் நடத்தப்பட்டது. இந்த மூன்று மூலங்களிலிருந்தும் இலக்கிய ஆதாரங்கள், குறிப்பாக வெளிநாட்டு நூல்கள் இலங்கை மற்றும் கிரேக்க-ரோமன் வர்த்தகம் பற்றிய பல பதிவுகளைக் கொண்டுள்ளன. அந்த ஆசிரியர்களில் சிலர் காஸ்மோஸ், பிளினி, டோலமி மற்றும் ஸ்ட்ராபோ. மாந்தை, கொடவாயா போன்ற துறைமுகங்களிலிருந்தும் அனுராதபுரம், பொலன்னறுவை போன்ற இராச்சியங்களிலிருந்தும் சில தொல்பொருள் சான்றுகள் கிடைத்துள்ளன.

இலங்கைக்கும் கிரேக்க-ரோமானுக்கும் இடையிலான வர்த்தக உறவுக்கான முக்கிய தொல்பொருள் சான்றுகள் ரோமன் மற்றும் இந்தோ-ரோமன் நாணயங்கள் ஆகும். இந்த ஆராய்ச்சியை மேற்கொள்வதில் சில இந்திய காரணிகளும் முக்கியமானவையாக இருந்தன, ஏனெனில் இலங்கை வர்த்தகம் இந்திய வர்த்தகத்துடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தது. இந்த ஆய்வின் மூலம் இலங்கையில் உள்ளக போக்குவரத்து அமைப்பு இருந்ததையும், ரோமானிய வர்த்தகம் இலங்கையில் பல இடங்களில் பரவியுள்ளது என்பதையும், சில சமயங்களில் இந்தியாவும் பாரசீகமும் இலங்கைக்கும் கிரேக்க ரோமானிய வர்த்தகத்துக்கும் இடையில் இடைத்தரகர்களாக செயல்பட்டதையும் நாம் கண்டறிந்த முக்கிய அம்சம் , இலங்கை பண்டைய வர்த்தக அமைப்பில் ஒரு மையமாக இருந்தது மற்றும் கி.பி ஐந்தாம் நூற்றாண்டில், இலங்கை இந்து சமுத்திரத்தின் முக்கிய வர்த்தக மையங்களில் ஒன்றாக இருந்தது.

44] இலங்கையின் பண்டைய கிரேக்க பெயர் 'டப்ரோபேன்'. [1,26,31,30,40,43,45,52,53,57] 'Taprobane' தவிர சில கிரேக்க ஆசிரியர்கள் இலங்கைக்கு 'Palaisimoundou', 'Salike' மற்றும் 'Sieladiba' பெயர்களைப் பயன்படுத்தினர்.

[57] எளிமையாக, Taprobane என்றால் 'செப்புக் கரை' என்று பொருள்படும், இது 'தம்பபன்னி'க்கு ஒத்த சொல்லைக் கொடுக்கிறது. ...

[52] 'Periplus Maris Erythraei' புத்தகத்தின் அறியப்படாத ஆசிரியர், தானே ஒரு வியாபாரி, இலங்கையின் முத்துக்கள், ரத்தினங்கள், மஸ்லின்கள் மற்றும் ஆமை ஓடுகள் போன்ற வளமான வர்த்தகத்தை விவரித்தார். [30,32] ரத்தினங்களில், ரூப் மற்றும் சிலோன் சபையர் ஆகியவை ரோமானியப் பேரரசின் காலத்தில் பிரபலமான மற்றும் மதிப்புமிக்க கற்களாக இருந்தன. Cosmos இன் கூற்றுப்படி, கிரேக்கர்கள் தவிர இலங்கை ரோமுடனும் வர்த்தக உறவைக் கொண்டிருந்தது. ...

ஆதாரங்களை பேஸ்புக் பதிவில் இருக்கும் இணைப்பில் காணலாம். படங்கள் இணையத்திலிருந்து எடுத்தேன் .

பேஸ் புக் :நிஷாந்தி பிரபாகரன்

தொகுப்பு : ஆல்ப்ஸ் தென்றல் நிஷா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!