18 மார்ச் 2024

தமிழர்பொருண்மியம்இலங்கையில் இருந்து வெளி வரும் தமிழர் பொருண்மியம் வாரப்பத்திரிகையில் இலங்கையின் இயற்கை வளங்கள்,சுற்றுலா துறை மற்றும் பாதுகாக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்ட வேண்டிய தீவுகள் குறித்தும் தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் எழுதுகின்றேன். தமிழர் பொருண்மியம் யாழ்ப்பாணத்தின் காலை கதிர் பத்திரிகையை வெளியிட்டு வரும் கிரீன் மீடியா நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் பிரதம ஆசிரியராக மூத்த ஊடகவியலாளர் திரு பாரதி இராஜநாயகம் Bharati Rajanayagam அவர்கள் பணியாற்றுகிறார். Gnanam Kavini உதவி ஆசிரியராக பணியாற்றுகிறார்.இன்றைய உலகின் ஓட்டத்தில் இருந்து மாறுபட்ட படைப்புக்களோடு சமூகத்தின் அறிவு மற்றும் தற்சார்பு பொருளாதார மேம்பாட்டு தகவல்களோடு முன்னெடுக்கப்படும் பத்திரிகைக்கு நம் ஆதரவுகளை தருவோம்.
சந்தா விபரம் இணைப்பில் இருக்கின்றது .
நிர்வாகத்தினருக்கு நன்றி.
வாழ்த்துகளுடன்
- நிஷாந்தி

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!