படம் நன்றி இணையம்
வா வா என்ற போது வராதே ஒளிந்து கொண்டாய்
போய் வா என்ற போதும் திடமாய் பொழிந்தே தீர்த்தாய்
போதும் போதும் என்றோம், பொங்கிப்புலம்பித்தீர்த்தாய்
வான்மகள் உன் சீற்றம் கண்டு பூமகளே கலங்கி நின்றாள்!
போகும் வழியெல்லாம் உனதெனும் உரிமையினால்
மடை திறந்தவளாய் தடைகளை தகர்த்தெறிந்தாய்!
சென்ற வழிகளிலெல்லாம் தடுமாற்றம் தள்ளாட்டும்,
தடம் புரண்ட தேராட்டமாய சைந்தே தவிக்க வைத்தாய்!
அகங்களில் கலக்கங்கள் அடைசலாய் நிறைத்திடவே
ஏளியவர், ஏழைகள்,பணம் கொண்ட செல்வந்தர்
பேதங்கள் மறைய,பசியெனும் கொடியோன் முன்
அனைவரும் சமமென உணரச்செய்தாய்!
பாலுக்கும் பருப்புக்கும் பாலகன் உணவுக்கும்
பதறித்தவித்தே பல கை ஏந்த வைத்தாய்
தண்ணீரால் எம்மை தனிமைச்சிறையிலிட்டாய்
தாகம் தாகம் என்றே நீருக்காய் தவிக்க வைத்தாய்!
சொந்தங்கள், பந்தங்கள் படை சூழ் வாழ்விலே
கவலை எமக்கில்லை கடனும் இனியில்லை
பத்திரமாய் நாமிருக்கின்றோமெனும் பகற்கனவுக்கும்
இடியாய் இறங்கி வந்தே அடி மேல் அடி அடித்தாய்!
இரத்தத்தில் ஊறிய உறவெனும் பந்தம்
உள்ளத்தால் உரிமையாய் பதறியே துடித்திட
பிரமைகள் மறைந்தே உணர்வுகள் எரிந்திட
மன்னிப்பின் மகிமையை மகத்துவமாக்கிட்டாய்!
வெள்ளமாய் வந்தே கசடுகள் களைந்து சென்றாய்!
வெல்லமாய் இனித்த தீயோரை இனம் காட்டினாய்!
நல்லோர் யாரென்றே நலமாய் புரிய வைத்தாய்!
நாளைய தேவையதை நச்சென உணர்த்தி சென்றாய்!
தன்னலம் கருதாத தன்னார்வத்தொண்டர்களின்
எழுச்சிப்படையெடுப்பில் இளையோரை இனம் காட்டினாய்!
அகமதில் இகழ்ந்தவர்கள் மனக்குன்றில் உயர வைத்தே
நாளைய தலைவர்களை நயமாய் எடுத்துரைத்தாய்!
பணம் பொருள், நகை நட்டு, வீடு வாசல், பாத்திரம் பண்டமெனும்
பகட்டான வாழ்க்கையெல்லாம், பட்டென பறந்தோட
மந்தம் பிடித்தாட்டும் மதமும் மறைந்து போக
மனிதம் தளைத்ததனால் மனங்களை குளிர செய்தாய் !
மதங்களை மறைத்து,மனிதம் ஒளிர்ந்திடவே
மனங்கள் இணைந்ததால் சடுதியில் மாற்றங்கள்
இது தான் நிஜமெனும் உண்மை தனை உணர்த்தி
கனவுகளை கலைத்து, நிதர்சனம் புரிய வைத்தாய்!
அருமை மீண்டும் பேரிடரை கண் முன் விவரித்தீர்கள் அழகிய வேதனையாய்..... கனவே கலைந்தது...
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜீ சார்!
நீக்குஅருமையான கவிதை அக்கா....
பதிலளிநீக்குவேதனையையும் வலியையும் அழகாய் படம்பிடித்திருக்கும் கவிதை....
வாழ்த்துக்கள் அக்கா.
நன்றிப்பா குமார்!
நீக்குவேட்கையோடு பாய்ந்த வெள்ளத்தினை காட்சி படுத்திய கவிதை சிறப்பு! நன்றி!
பதிலளிநீக்குநன்றி ஐயா!
நீக்குபேரிடர் பற்றிய கவிதை நன்று. மக்களின் இன்னல்களையும், உதவும் நல்லுள்ளத்தையும் படம் பிடித்துக் காட்டிய கவிதை.
பதிலளிநீக்குநன்றி ஐயா!
நீக்குஅருமையான கவிதை.
பதிலளிநீக்குநிகழ்வுகளை நேரில் கொண்டு வந்து காண்பித்தது வரிகள்.
தொடர் வருகைக்கு நன்றி செல்வகுமார்
நீக்குஅருமை. இயற்கையை மனிதன் ஒரு போதும் வெல்ல முடியாது என்பதற்கான சான்று. வேறுபாடுகளை மறந்து மனிதம் சிலிர்த்தெழுந்த நேரம். அதை மனிதனுக்கு உணர்த்திய மாமழை.
பதிலளிநீக்குநிரம்ப நன்றி ஐயா
நீக்குஉண்மை அருமையான வரிகள் பாடம் போட்ட கவிதை வாழ்த்துகள் அக்கா
பதிலளிநீக்குசந்தோஷம் ஹாசிம் தொடர்ந்து வாருங்கள்
நீக்குமதங்களை மறைத்து,மனிதம் ஒளிர்ந்திடவே
பதிலளிநீக்குமனங்கள் இணைந்ததால் சடுதியில் மாற்றங்கள்
இது தான் நிஜமெனும் உண்மை தனை உணர்த்தி
கனவுகளை கலைத்து, நிதர்சனம் புரிய வைத்தாய்!
உண்மை
அருமை
ம்ம் நன்றி ஐயா!
நீக்குNisha
பதிலளிநீக்குவா வா என்ற போது வராதே ஒளிந்து கொண்டாய்
போய் வா என்ற போதும் திடமாய் பொழிந்தே தீர்த்தாய்
போதும் போதும் என்றோம், பொங்கிப்புலம்பித்தீர்த்தாய்
வான்மகள் உன் சீற்றம் கண்டு பூமகளே கலங்கி நின்றாள்!
போகும் வழியெல்லாம் உனதெனும் உரிமையினால்
மடை திறந்தவளாய் தடைகளை தகர்த்தெறிந்தாய்!
சென்ற வழிகளிலெல்லாம் தடுமாற்றம் தள்ளாட்டும்,
தடம் புரண்ட தேராட்டமாய சைந்தே தவிக்க வைத்தாய்!
அகங்களில் கலக்கங்கள் அடைசலாய் நிறைத்திடவே
ஏளியவர், ஏழைகள்,பணம் கொண்ட செல்வந்தர்
பேதங்கள் மறைய,பசியெனும் கொடியோன் முன்
அனைவரும் சமமென உணரச்செய்தாய்!
பாலுக்கும் பருப்புக்கும் பாலகன் உணவுக்கும்
பதறித்தவித்தே பல கை ஏந்த வைத்தாய்
தண்ணீரால் எம்மை தனிமைச்சிறையிலிட்டாய்
தாகம் தாகம் என்றே நீருக்காய் தவிக்க வைத்தாய்!
சொந்தங்கள், பந்தங்கள் படை சூழ் வாழ்விலே
கவலை எமக்கில்லை கடனும் இனியில்லை
பத்திரமாய் நாமிருக்கின்றோமெனும் பகற்கனவுக்கும்
இடியாய் இறங்கி வந்தே அடி மேல் அடி அடித்தாய்!
இரத்தத்தில் ஊறிய உறவெனும் பந்தம்
உள்ளத்தால் உரிமையாய் பதறியே துடித்திட
பிரமைகள் மறைந்தே உணர்வுகள் எரிந்திட
மன்னிப்பின் மகிமையை மகத்துவமாக்கிட்டாய்!
வெள்ளமாய் வந்தே கசடுகள் களைந்து சென்றாய்!
வெல்லமாய் இனித்த தீயோரை இனம் காட்டினாய்!
நல்லோர் யாரென்றே நலமாய் புரிய வைத்தாய்!
நாளைய தேவையதை நச்சென உணர்த்தி சென்றாய்!
தன்னலம் கருதாத தன்னார்வத்தொண்டர்களின்
எழுச்சிப்படையெடுப்பில் இளையோரை இனம் காட்டினாய்!
அகமதில் இகழ்ந்தவர்கள் மனக்குன்றில் உயர வைத்தே
நாளைய தலைவர்களை நயமாய் எடுத்துரைத்தாய்!
பணம் பொருள், நகை நட்டு, வீடு வாசல், பாத்திரம் பண்டமெனும்
பகட்டான வாழ்க்கையெல்லாம், பட்டென பறந்தோட
மந்தம் பிடித்தாட்டும் மதமும் மறைந்து போக
மனிதம் தளைத்ததனால் மனங்களை குளிர செய்தாய் !
மதங்களை மறைத்து,மனிதம் ஒளிர்ந்திடவே
மனங்கள் இணைந்ததால் சடுதியில் மாற்றங்கள்
இது தான் நிஜமெனும் உண்மை தனை உணர்த்தி
கனவுகளை கலைத்து, நிதர்சனம் புரிய வைத்தாய்!
http://alpsnisha.blogspot.ch/2016/01/blog-post_5.html
நேற்றே திறந்து பார்த்தேன் என்னால் படிக்கவும் கருத்திடவும் முடியாமல் போனதற்கு மனம் வருந்துகிறேன்
நாற்பது வரிகளில் நீங்கள் சொன்னவைகள் அத்தனையும் உண்மை உண்மை உண்மை அழகாய் சொல்லியுள்ளீர்கள் அருமையாகச்சொல்லியுள்ளீர்கள் உண்மையை உரக்கச்சொல்லியுள்ளீர்கள்
இரத்தத்தில் ஊறிய உறவெனும் பந்தம்
உள்ளத்தால் உரிமையாய் பதறியே துடித்திட
பிரமைகள் மறைந்தே உணர்வுகள் எரிந்திட
மன்னிப்பின் மகிமையை மகத்துவமாக்கிட்டாய்!
வெள்ளமாய் வந்தே கசடுகள் களைந்து சென்றாய்!
வெல்லமாய் இனித்த தீயோரை இனம் காட்டினாய்!
நல்லோர் யாரென்றே நலமாய் புரிய வைத்தாய்!
நாளைய தேவையதை நச்சென உணர்த்தி சென்றாய்!
தன்னலம் கருதாத தன்னார்வத்தொண்டர்களின்
எழுச்சிப்படையெடுப்பில் இளையோரை இனம் காட்டினாய்!
அகமதில் இகழ்ந்தவர்கள் மனக்குன்றில் உயர வைத்தே
நாளைய தலைவர்களை நயமாய் எடுத்துரைத்தாய்!
இந்த வரிகள் இன்னும் என்னைக் கவர்ந்தது சூப்பர்
அருமையான கவிதை ஒன்றைத் தந்த எங்கள் பாசமிகு நிஷா அக்கா உங்களுக்கு எமது உள்ளம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்
மாறா அன்புடன் நண்பன்
என்னமோ அப்படியே மாறி வந்திருச்சு போல.. நன்றிப்பா.
நீக்குநேற்றே திறந்து பார்த்தேன் என்னால் படிக்கவும் கருத்திடவும் முடியாமல் போனதற்கு மனம் வருந்துகிறேன்
பதிலளிநீக்குநாற்பது வரிகளில் நீங்கள் சொன்னவைகள் அத்தனையும் உண்மை உண்மை உண்மை அழகாய் சொல்லியுள்ளீர்கள் அருமையாகச்சொல்லியுள்ளீர்கள் உண்மையை உரக்கச்சொல்லியுள்ளீர்கள்
இரத்தத்தில் ஊறிய உறவெனும் பந்தம்
உள்ளத்தால் உரிமையாய் பதறியே துடித்திட
பிரமைகள் மறைந்தே உணர்வுகள் எரிந்திட
மன்னிப்பின் மகிமையை மகத்துவமாக்கிட்டாய்!
வெள்ளமாய் வந்தே கசடுகள் களைந்து சென்றாய்!
வெல்லமாய் இனித்த தீயோரை இனம் காட்டினாய்!
நல்லோர் யாரென்றே நலமாய் புரிய வைத்தாய்!
நாளைய தேவையதை நச்சென உணர்த்தி சென்றாய்!
தன்னலம் கருதாத தன்னார்வத்தொண்டர்களின்
எழுச்சிப்படையெடுப்பில் இளையோரை இனம் காட்டினாய்!
அகமதில் இகழ்ந்தவர்கள் மனக்குன்றில் உயர வைத்தே
நாளைய தலைவர்களை நயமாய் எடுத்துரைத்தாய்!
இந்த வரிகள் இன்னும் என்னைக் கவர்ந்தது சூப்பர்
அருமையான கவிதை ஒன்றைத் தந்த எங்கள் பாசமிகு நிஷா அக்கா உங்களுக்கு எமது உள்ளம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்
மாறா அன்புடன் நண்பன்
உங்கள் நீண்ட கருத்துக்கு நன்றி கண்ணா
நீக்குமதங்களை மறைத்து,மனிதம் ஒளிர்ந்திடவே
பதிலளிநீக்குமனங்கள் இணைந்ததால் சடுதியில் மாற்றங்கள்
இது தான் நிஜமெனும் உண்மை தனை உணர்த்தி
கனவுகளை கலைத்து, நிதர்சனம் புரிய வைத்தாய்!
மிக்க நன்றி வலிப்போக்கன் ஐயா
நீக்குஅருமையான கவிதை வரிகளில் நிதர்சனம் ஒளிர்கிறது
பதிலளிநீக்குநல்லது ஐயா நன்றி!
நீக்கு#மந்தம் பிடித்தாட்டும் மதமும் மறைந்து போக
பதிலளிநீக்குமனிதம் தளைத்ததனால் மனங்களை குளிர செய்தாய் !#
இன்றைக்கு தேவை இதுதான்,ரசித்தேன் !
தொடர்ந்து வாருங்கள் சார்!
நீக்குநிதர்சனமான கவிதை பல சொல்லிய வரிகள்!! அருமை சகோ! உண்மை..இயற்கைக்கு மிஞ்சியது எது?!! இம்முறை மனிதனின் தவறுதான் என்றாலும் மனிதம் தழைத்த தருணங்களை மறந்திடமுடியுமா!!!??
பதிலளிநீக்குமிக்க நன்றிங்க துளசி சார்!
நீக்கு