25 ஜனவரி 2016

சுவிஸ்ஸர்லாந்துக்கு வாறியளா? பகுதி -3 மொழிகளும்,கல்வியும்!

இந்த நாட்டின் மொத்தப்பரப்பளவு  41285 கிமீ² (136th) -15940 சது. மைல் ஆகவும் நீர் வளம் 4.2 வீதமாகவும் இருக்கின்றது!


நாட்டின் மொத்த மக்கள் தொகை  2014 ஆம் ஆண்டைய கணக்கெடுப்பின்படி 8,211,700 ஆக இருந்தது



மக்கள்தொகையின் 22% குடியேறிய வெளிநாட்டினரும் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களுமாக உள்ளனர்.இவர்களில் பெரும்பாலானோர் (60%) ஐரோப்பிய ஒன்றியத்தில் அல்லது EFTAநாடுகளில் இருந்து வந்தவர்கள்.



மொத்த வெளிநாட்டு மக்கள்தொகையில் 17.3% உள்ள மிகப்பெரிய தனிப்பட்ட வெளிநாட்டவர்கள் குழுவாக இத்தாலியர்கள் உள்ளனர்.



அவர்களுக்கு அடுத்துஜெர்மானியர்கள் (13,2%), செர்பியா மற்றும் மாண்டெனீக்ரோ (11,5%) மற்றும் போர்ச்சுகல் (11,3%) ஆகியவற்றிலிருந்து குடிபெயர்ந்தவர்களும் உள்ளனர்.



இலங்கையில் இருந்து குடியேறியவர்கள், அவர்களில் பெரும்பாலானோர் முன்பு வந்த தமிழ் அகதிகள், இவர்கள் ஆசியாவைச் சார்ந்தவர்களில் மிகப்பெரிய குழுவாக உள்ளனர்.



2000களில், உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் பல பிரச்சாரங்களில் அந்நியர்கள் குறித்த பயம் அதிகரித்து வருவது பற்றி தெரிவித்து இருப்பினும், நாட்டில் வெளிநாட்டு குடிமக்களின் அதிக விகிதாசாரமும், அதேபோன்று வெளிநாட்டினர் சிக்கலின்றி ஒருங்கிணைக்கப்படுவதும் சுவிட்சர்லாந்தின் திறந்த மனமுள்ள தன்மையைக் காட்டுகின்றன.



சுவிஸ்லாந்து நாட்டின் ஆட்சி மொழிகளாய் நான்கு மொழிகள் இருக்கின்றன! நாட்டின்,வடக்கு, கிழக்கும்மற்றும்மத்திய  பகுதியில் ஜேர்மன் மொழி பேசப்படுகின்றது,  ஜேர்மன் மொழி பேசப்படும் பகுதிகளிலும் சில இடங்களில் எழுத்து மொழி, பேச்சு மொழியாக சுவிஸ் ஜேர்மன், ஜேர்மன் ஜேர்மன் என இருவகை  வேறுபட்ட மொழிகளை பேச்சுக்கும் எழுத்துக்கும் பயன் படுத்துகின்றார்கள்.



அதாவது நாம்   தமிழ் மொழியை ஒவ்வொரு இடத்துக்கு ஏற்பபேச்சுத்தமிழையும், எழுதுவதற்கு இலக்கணத்தமிழையும் பயன்

படுத்துவது போல பேச்சு மொழி எழுத்து மொழி என இரு வேறுபட்ட உச்சரிப்புகள் கொண்டதாக சுவிஸ் ஜேர்மன் மொழியும் இருக்கின்றது.,


குழந்தைகள் தங்கள் முதல் மொழியாய்  சுவிஸ் ஜேர்மன் மொழியில் பேசவும், பாடசாலையில்  ஜேர்மனி ஜேர்மன் மொழியில் எழுதவும் பயிற்றுவிக்கப்படு

கின்றார்கள், அன்றாட பேச்சில் சுவிஸ் ஜேர்மன் மொழியையே பயன்படுத்துவார்கள்.

படம் இணையம் 
மக்கள், மொழி வீதங்கள் உதவி விக்கிமீடியா 
  1. வடக்கு, கிழக்கும்மற்றும்மத்திய  பகுதியில் ஜேர்மன் மொழி பேசுவோர்  65.3% 
  2. மேற்குப்பகுதியில்  பிரெஞ்சு (22.4%; 23.1%)
  3. தெற்குப்பகுதியில் இத்தாலியன் (8.4%; 6.1%)
  4. க்ரௌபண்டென் மண்டலத்தின் தென்கிழக்கில் வசிக்கும் சிறுபான்மையினரால் அவர்களுக்குள் (0.5%; 0.6%) பேசப்படும் ரோமானிய மொழி, 
ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் இத்தாலியன் மொழிகளுடன் பழமை வாய்ந்த மொழியான ரோமன்ஷ்,தேசிய மொழியாகவும்,ஆட்சி மொழியாகவும் இருக்கிறது.


அனைத்து சுவிஸ் மக்களும் மற்ற தேசிய மொழிகளில் ஒன்றை பள்ளிகளில் கற்பது கடமையாக்கப்பட்டுள்ளது என்பதனால் பெரும்பாலான சுவிஸ் மக்கள் குறைந்தபட்சம் இரட்டைமொழி அறிந்தவர்களாக உள்ளனர்.



ஆட்சி மொழிகள் நான்காய் இருப்பதனால் அந்தந்த மொழிகளுக்க்கு ஏற்ப சுவிஸ் நாட்டின் பெயரும் கீழே இருப்பது போல் சுருக்கமாக அழைக்கப்படுகின்றது!



English: Swiss,

German: Schweizer(in),
French: Suisse(sse),
Italian: svizzero/svizzera, or elvetico/elvetica,
Romansh: Svizzer/Svizra


சுவிஸ் நாட்டில் 26 மாநிலங்களாக பிரித்திருக்கின்றார்கள் . கல்வி, தொழில் நுட்ப விடயங்களில் மாநிலங்களுக்கு சுய அதிகாரம் உண்டு, ஒவ்வொரு மாநிலமும் தம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தொழில்வளர்ச்சி,  பாடசாலை க்கல்வி விடயத்தில் தமக்கென அதிகாரங்களை கொண்டுள்ளதால் மாநில ரிதியாகவும் கல்வி முறை வேறுபடுகின்றது.



உதாரணமாக  பிள்ளைகளின் ஆரம்பபள்ளிக்கான அனுமதி  தேசிய அளவில் ஆறுவயதாக இருந்தாலும் ஜேர்மன் மொழி பேசும் பிரதேசங்களில்  ஐந்து வயதிலும், இத்தாலி, பிரெஞ்சு மொழி பேசும் பிரதேசங்களில்  நான்கு வயதிலும் கிண்டர் கார்டன்  செல்ல அனுமதிக்கின்றார்கள்.



புலம்பெயர்ந்தோராயிருப்பின் இரண்டு வருடகல்வியும் சுவிஸ் குழந்தைகளுக்கு ஒருவருடங்களாகவும்  கிண்டர்கார்டன் அனுமதி நிர்ணயிக்கப்படுவதால் புலம்பெயர்ந்தோர் பிள்ளைகள் ஒருவருடம் முன்னரே அனுமதிக்கப்படுகின்றார்கள். மொழிதெரியாத பெற்றோராயிருப்பினும் பிள்ளை  தானாய் தன் கல்வித்தேவையை சமாளிக்கும் படியான வசதி வாய்ப்பை உருவாக்கிக்கொடுக்கின்றார்கள். பாடசாலைகளில் இன, நிற வேற்றுமைகள் கடுமையாக கண்காணிக்கப்பட்டு புகார்களுக்கு உடனடி நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றது,



ஆனாலும்  சுவிஸ் நாட்டு குழந்தைகளை விட எம்மைபோல் புலம்

பெயர்ந்தோரான போர்த்துக்கல், செக்கோஸ்லவியா, கோசோவா, செர்பியா போன்ற நாட்டு பிள்ளைகளால் தான் பெரும் பான்மை நிற  வேற்றுமை பிரச்சனை  எழுகின்றது எனலாம்,  எமது பிள்ளைகளை சாக்லேட் என கேலி செய்வதும்  அங்கிள் பன்ஸ் என கிண்டல் செய்வதும் அவர்களே! எனினும் கொடுக்கப்படும் புகார்கள் உடனடியாக கவனிக்கப்படுவதால்  ஆரமப் நிலையிலேயே இவைகளை களையெடுக்கப்பட்டு விடுகின்றது. அங்கொன்றுமிங்கொன்றுமாய் சில பிரச்சனைகள் இருக்கலாம், எனினும் அவைகள் பெரிது படுத்தப்படும் படியாகஇல்லை எனலாம்.

ஆரம்பப்பாடசாலை மாதிரி வகுப்பறை!


கிண்டர்கார்டன் முதல் ஆண்டு பத்து வரை பாடசாலைக்கல்விகட்டாயமாக்க

ப்பட்டுள்ளதுடன் இலவசமாகவும் வழங்கப்படுகின்றது .இலவசம் எனும்
போது பாடப்புத்தகங்களை கொடுத்து விட்டு நோட்டுப்புத்தகங்களை 
பெற்றோர் வாங்க வேண்டும் எனும் சுமைகள் கூட இல்லை, பாடசாலைக்கு
அத்தியாவசியமான பாடப்புத்தகங்கள் நோட்டுப்புத்தங்கள்  மாநகராச்சியே இலவசமாக வழங்கி விடுகின்றது .


சுவிஸ் நாட்டில் வதிவிட உரிமையுள்ள எல்லா குடிமகனும் வரி செலுத்தவேண்டுமென்பதனால் மக்கள் செலுத்தும் வரி மீண்டும்மக்களுக்கே பயன் தரும் வகையில் பயன்படுத்தப்படுகின்றது .வேலைக்கு செல்லும் பெற்றோராயிருந்தால் பிள்ளைகளுக்காக மதிய உணவு, வீட்டுப்பாட உதவிகள் கூட மதிய நேர உணவு இடைவேளையில்  கவனிக்கப்பட ஒழுங்குகள் செய்யப்பட்டு மிகக்குறைந்த தொகை அதற்காக பெற்றோரிடம் அறவிடப்படுகின்றது..



புலம்பெயர்ந்தோருடைய பிள்ளைகளுக்கு  தேசிய மொழிகளுக்கான் பயிற்சி விசேஷமாக கவனிக்கப்பட்டு அவர்களுக்கு என தனியேஆசிரியர்கள் அமர்த்தப்பட்டு   பாடங்களும் நடத்தப்படுகின்றது., ஒவ்வொரு மாநிலங்களிலும்  பேசப்படும் மொழி  முதலாம் வகுப்பிலிருந்து முதல் மொழியும் மூன்றாம் வகுப்பிலிருந்து  தேசிய மொழியிலிருந்து இரண்டாவது மொழியும் அதனுடன் ஆங்கிலக்கல்வியும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் சுவிஸ் பாடசாலைகளில் கல்வி கற்கும் சிறுவர்கள்  பத்தாம் வகுப்பு முடிக்கும் போது  மும் மொழியில்  எழுத வாசிக்கவும், ஓரளவு  பேசவும் கூடியவர்களாக இருக்கின்றார்கள்,


ஆரம்பப்பாடசாலை மாதிரி வகுப்பறை!


கடந்த வருடம் வரை ஐந்தாம் வகுப்பிலிருந்து கற்பிக்கப்பட்ட ஆங்கில மொழிப்பாடம் இவ்வருடம் முதல் மூன்றாம் வகுப்பிலிருந்தே கற்பிகப்படுவதால்   ஜேர்மன்   மொழி பேசும்  மாநிலத்தில் வாழும் சிறுவர்கள் ஜேர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் என மூம்மொழிகளை மூன்றாம் வகுப்பிலிருந்தே கற்கின்றார்கள்..



இதற்கிடையில் புலம்பெயர்ந்த தமிழர்களாகிய நாங்கள் எம் தமிழை மறக்காதிருக்க  தமிழ் மொழியையும் கற்பிப்பதனாலும்  தமிழ் மொழி கற்றலும்  தேர்ச்சி அறிக்கையும்  அனைத்து பாடசாலைகளிலும் அங்கீகரிக்கப்பட்டு பிள்ளையின்   திறன் மதிப்பிடப்படுவதனாலும் தாய் மொழியில் கற்பிப்பதை வரவேற்கின்றார்கள். சுவிஸ் மொழியில்  கற்க சிரமப்படும்  சிறுவர் தாய் மொழியில்  சிறப்பாய் தேற்றினால் அவைகளும் புள்ளிகளாக்கப்படுகின்றது. .



எனவே எமது பிள்ளைகள் நான்கு மொழித்திறன்கொண்டவர்களாய் வளர்வதும் அதற்கு அவர்கள் படும் சிரமங்களும்   நாமறிவோம்.



சுவிஸ் பாடசாலைகளில்  பாராட்டத்தக்க விடயம் என்ன தெரியுமா.? 

சிறுவர்கள் தினம் புத்தக மூட்டை சுமக்கும் சுமை கூலிகளாய் இல்லை என்பதே!


சுவிஸ் கல்வி தனிப்பாடப்புத்தகங்களையும் பரிட்சைகளையும் மட்டும் வைத்து மதிப்பீடப்படுவதிலை என்பது இதன் இன்னொரு சிறப்பம்சம்!



அது எப்படி என்பதை அடுத்த தொடரில் காணலாம்



தொடர்வோம். 

16 கருத்துகள்:

  1. வருகிறேன் என் மனைவியுடன்!

    பதிலளிநீக்கு
  2. பேச்சுமொழியும் எழுத்துமொழியும் வேறுபட்டிருப்பது அறிந்து வியப்பு. நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதில் அரசின் அக்கறை பாராட்டுக்குரியது. கல்வித்திட்டம் கிட்டத்தட்ட ஆஸியைப் போன்றே இருக்கும் என்று உங்கள் முன்னோட்டம் மூலம் அறிகிறேன். தொடர்ந்துவந்து அறிந்துகொள்கிறேன் நிஷா.

    பதிலளிநீக்கு
  3. படிப்படியான விளக்கம் அருமை...

    பதிலளிநீக்கு
  4. அடுத்த தொடருக்கான ஆவலுடன்...

    பதிலளிநீக்கு
  5. தகவல்கள் சிறப்பு! தொடர்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  6. விரிவான விளக்கங்கள் அருமை தொடர்கிறேன்
    தலைப்புதான் மண்டையைக் காய்க்கிறது விசா கொடுத்தால் கண்டிப்பாக வருவோம் விமான டிக்கெட் யாரிடமாவது ஓசி வாங்கி கொள்வோம்.
    கைச்செலவுக்குகூட அந்த ஊரில் தமிழர்கள் யாராவது தருவார்கள்
    சாப்பாடு பிரச்சினையும் இல்லை உங்களது ஹோட்டலில் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  7. எவ்வளோ அருமையாக தொகுத்து இருக்கீங்க.. கில்லர்ஜி அண்ணா சொன்ன மாதிரி வந்தா தங்கவும், சாப்பாட்டு பிரச்சனையும் இல்லை.. உங்க ஹோட்டல் இருக்கே..மீ எஸ்கேப்.

    பதிலளிநீக்கு
  8. விளக்கம் அருமையாக இருக்கு.தொடர்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  9. பள்ளிகளைப் பற்றி சிறப்பான தகவல்கள். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. சிறப்பான தகவல்கள்.... தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. நாட்டு மக்களை அரசு நன்கு கவனிப்பது போல் இருக்கிறதே. பல மொழித் திறன் அருமை. கல்வி மிகவும் சிறப்பாக இருக்கின்றது. நம் நாட்டில் கல்வி இப்படி அமைந்துவிட்டால் எல்லா குழந்தைகளும் கல்வியறிவு பெற்று எவ்வளவு இன்புறுவார்கள்!

    ஏற்கானவே பலதகவல்கள் அறிவோம் என்றாலும் தாங்கள் இப்போது அழகாகத் தொகுத்துத் தருவதுஅருமை. தொடர்கின்றோம்..

    கீதா: நானும் மகனும் அடிக்கடிப் பேசுவது ஸ்விஸுக்குச் செல்ல வேண்டும் என்று...பார்ப்போம்...

    பதிலளிநீக்கு
  12. பள்ளிகள் குறித்த விவரம் அருமையாக தொகுத்திருக்கீங்க அக்கா...
    நிறத்தை வைத்து சாக்லெட், அங்கிள் பன் என பிள்ளைகள் பேசுவதையும் அதை உடனே நடவடிக்கைகள் மூலம் தடுத்துவிடுவது குறித்தும் மிக ஆழமாக பேசியிருக்கிறீர்கள் அக்கா.... ரொம்ப அருமை.
    தொடருங்கள்... தொடர்கிறோம்...

    பதிலளிநீக்கு
  13. சுவிற்சர்லாந்து பற்றிய பதிவு அருமை.
    தகவல் ஒன்று.

    புதியதிட்டம் மூலம் 2014/2015 ம் ஆண்டுக்காண கல்வியாண்டு முதல் ஜேர்மன்மொழி பேசும் மாநிலங்களிலும் 4வயது முதல் கிண்டர் கார்டன் செல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  14. நல்ல விளக்கம், தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. பெரும்பாலான நாடுகளில் அவர்களின் மொழியின் மதிப்பை தெரிந்தே வைத்திருக்கிறார்கள். நாம தான் இப்படி இருக்கோம் என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது அக்கா:( பதிவு மிக பயனுள்ளதாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  16. சுவிஸ் பற்றி அறிய வேண்டிய அரிய தகவல்கள் மிக்க நன்றி அக்கா படிக்கும் போதும் மகிழ்ச்சியாக உள்ளது

    எனக்கு சுவிஸ் நாட்டைப் பிடிப்பதற்கு ஒரே ஒரு காரணம் ஆல்ப்ஸ் மலைதான் இன்னும் ஆசை குறைய வில்லை ஒரு நாள் சென்று வரவேண்டும் என்ற எண்ணம் என்னில் உண்டு இன்னும் தொடருங்கள் படிக்கிறோனம்
    நன்றியுடன் நண்பன்

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!