17 ஜனவரி 2016

இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா?இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா
இந்த மெளனம் இந்த மெளனம் இப்படியே உடையாதா
இந்த மயக்கம் இந்த மயக்கம் இப்படியே நீளாதா ஞாபகப் பறவை ஓடுகள் உடைந்து
வெளியே தாவிப் பறக்கிறதே
நீயும் நானும் ஒன்றாய்த் திரிந்த‌
நாட்கள் நெஞ்சில் மிதக்கிறதே
ஆயிரம் சொந்தம் உலகில் இருந்தும்
தனிமை என்னைத் துரத்தியதே
உன்னைக் காணும் நிமிடம் வரைக்கும்
உடலே பொம்மையாய்க் கிடக்கிறதே
இதயம் நொறுங்குகிறேன் இதையே விரும்புகிறேன்
இது போதும் பெண்ணே இறப்பேனே கண்ணே
ஓ ஆயிரம் காலம் வாழ்கிற‌ வாழ்க்கை
நிமிடத்தில் வாழ்ந்தேனோ
 கிழ‌க்கும் மேற்கும் வ‌ட‌க்கும் தெற்கும்
ம‌னித‌ன் வ‌குத்த‌ திசையாகும்
உன்முக‌ம் இருக்கும் திசையே எந்த‌ன்
க‌ண்க‌ள் பார்க்கும் திசையாகும்
 கோடையும் வாடையும் இலையுதிர் கால‌மும்
இய‌ற்கை வ‌குத்த‌ நெறியாகும்
உன்னுட‌ன் இருக்கும் கால‌த்தில் தானே
எந்த‌ன் நாட்க‌ள் உருவாகும்
உந்த‌ன் நிழ‌ல‌ருகே ஓய்வுக‌ள் எடுத்திடுவேன்
இது காத‌ல் இல்லை இது காம‌ம் இல்லை
ஓ தேக‌த்தைத் தாண்டிய‌ மோக‌த்தைத் தாண்டிய‌
உற‌வும் இதுதானோ
 


எங்க வீட்டை சுற்றி பனிமழையும், என் மனதில் கொட்டிக்கொண்டிருக்கும் பனிச்சாரலுக்காமாய் 
இந்த பாடல் வரிகள் தான்  ஒத்து வந்தது 
ஆனால் வீடியோ காட்சி? 

பாடல் வரிக்கும் காட்சிக்கும் சம்பந்தமே இல்லையேப்பா! 
அதனால்  இங்கே இணைக்கவில்லை. 
வரிகளை மட்டும் படித்தால் 

இது காத‌ல் இல்லை இது காம‌ம் இல்லை
ஓ தேக‌த்தைத் தாண்டிய‌ மோக‌த்தைத் தாண்டிய‌
உற‌வும் இதுதானோ

நல்ல நட்புக்கும்  பொருந்துவதாய் இருக்கும்  வரிகளை அதீத நெருக்கம் காட்டி  வரிகளில் இருக்கும் நோக்கத்தினை  திசை திருப்பி விட்டார்கள். 

31 கருத்துகள்:

 1. அழகிய புகைப்படங்கள் பொருத்தமான வரிகள்தான் இதைக்காணும் பொழுது தேவகோட்டையின் சித்திரை மாத குளிர் காலம் நினைவுகளில் மோதியது.... இதே மா3த்தான் அங்கும் இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேவகோட்ட்டையிலும் ஸ்னோ இருக்க்கின்றதா? எனக்கு புதிய செய்தி சார். நம்ம குமார் சொன்னதே இல்லை. வருகைக்கு நன்றி சார்.

   நீக்கு
 2. ஆத்தாடி...! எப்படி இருக்கு...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயங்கர குளிர் .. ஆனால் பழகிப்போனது.

   நீக்கு
 3. பயணம் : http://dindiguldhanabalan.blogspot.com/2016/01/Journey.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படித்தோம் பின்னூட்டமிட்டும் ரசித்தோம்.

   நீக்கு
 4. அடி ஆத்தி...
  அழகா... சூப்பரா இருக்குல்ல...
  குளிர்காலம்ன்னா இங்க அதிகம் தெரிவதில்லை...
  வாவ்... படங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம் ரெம்ப குளிரும் ஸ்னோவும். ஆனால் பார்க்கும் போது சந்தோஷம் தான்

   நீக்கு
 5. அழகான காட்சிகள் இந்த ஆண்டு இன்னும் பனிமழையைக்காணவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அபப்டியா ? எங்கே இருக்கின்றீர்கள்?

   நீக்கு
 6. எங்களுக்கு பாரிசில் இதுவரை மருந்துக்கும் பனிமழைப் பொழிவில்லை. வருமெனும் நம்பிக்கையும் போய் விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ! கடந்த வருடம் நல்லா கொட்டியது அல்லவா? கால நிலை மாறிக்கொண்டே இருக்கின்றது.ஸ்னோ இல்லா விட்டாலும் குளிர் அதிக்மாய் இருக்குமே!

   நீக்கு
 7. ஜில்!! சென்னைக் குளிரையே தாங்க முடியவில்லை! படங்களைப் பார்த்தால் கைகள் போர்வையைத் தேடுகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நான் அப்படித்தான் என்னுள் நினைப்பேன். டிசம்பரில் சென்னை குளிர் என சொன்னால் நம்ம ஊர் குளிரை என்ன என சொல்வார்கள்?

   நீக்கு
  2. ஒரு சிறு யோசனை. பின்னூட்டம் இடுபவர்கள் பொதுவாக ஒவ்வொரு நாளும் பல வலைத்தளங்கள் செல்லும் நிலையில் மீண்டும் வந்து இங்கு பார்க்க நேரம் இருக்காது என்பதால் பின்தொடரும் ஆப்ஷனைக் க்ளிக் செய்துவிட்டு தங்கள் இன்பாக்சுக்கு வரும் மெயில்கள் மூலமாக தொடருவார்கள். நீங்கள் பதில் அளிக்கும்போது அவாவர்கள் பெயர் சொல்லிக் குறிப்பிட்டால்தான் இன்பாக்ஸில் படிப்பவர்களுக்கு தங்களுக்கு வழங்கப்பட்ட பதில் பின்னூட்டம் இது என்று புரியும். இல்லா விட்டால் எது யாருக்கான பதில் என்று தெரியாமல் விட்டு விடுவோம்!

   இது ஒன்றும் பெரிய விஷயமில்லைதான். இருந்தாலும் சொல்லத் தோன்றியது.

   :)))

   நீக்கு
  3. இதை நானும் அறிவேன் ஐயா! பின்னூட்டமிடதும் பின் தொடர்தலை கிளிக் செய்து தொடர்கின்றேன் ஐயா. நன்றி

   நீக்கு
 8. இதுதான் உங்க ஊர் ஸ்னோவா?!!!

  ஸ்னோ எனக்கு ரொம்பப் பிடிக்கும்ங்க. ஒரு சிலர் ஸ்னோ வந்தாலே ட்ரைவ் பண்ணப் பயப்படுவாங்க, ஸ்னோவைப் பார்த்தாலே "டிப்ரெஸ்" ஆயிடுவாங்க. ஆனால் எனக்கு உலகமே சுத்தமாக இருப்பதுபோல் உணருவேன். சுவாசிக்கிற காற்றுகூட நன்றாக சுத்தமாக இருக்கும். :)

  அப்புறம் உங்க கவிதையை விமர்சிக்கிற அளவுக்கு எனக்கு ஞானம் கிடையாது. அதனால் விமர்சிக்காமல் நழுவிடுறேன். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் எங்க ஊரு ஸ்னோ தான். ஸ்னோவில் ரைவிங்க செய்வது தான் சேல்ன்ஞ் தெரியுமா வருண்! சில நேரம்... வண்டிக்குள் இருக்கும் போதே சக்கரம் வழுக்கி கார் சுத்தும் பாருங்கள்.கை தேர்ந்த சாரதியாயிருந்தால் தான் தப்புவோம். ஸ்னோ கொட்டினால் பிரச்சனை இல்லை அதை வழித்த பின் வரும் கண்ணாடி போன்ற தரை தான் ஆபத்து. ஆனால் இங்கே ஸ்னோ எனில் முன்னாலேயே அதை கரைக்க்கும் உப்பை கொட்டுவதோடு... வழித்துக்கொண்டு செல்லும் வாகனங்களையும் தயார் செய்தி விடுவார்கள்.

   அட தப்பிச்சிட்டிங்க சார். பிழைத்துப்போங்க.. தங்கபச்சன் என்றேனும் சுவிஸ் வந்தால் அவரை நாலு கேள்வி நறுக்குனு கேட்காம விட மாட்டேனாக்கும்.

   நீக்கு
  2. ஸ்னோ வின் வெண்மை மனசை குளிர் வித்து காற்றை சுத்தப்படுத்தும் என்பது நிஜமே!

   நீக்கு
 9. ஆஹா! படங்கள் அழகோ அழகு!! அருமை....பனி மழைப் பொழிவு மிகவும் பிடிக்கும்! இங்கு சிம்லா மணாலியில் பார்த்ததுண்டு சுற்றுலா செல்லும் போது. அதை அங்கிருந்து அனுபவிக்கவும் ஆசை உண்டு. ம்ம்

  வரிகளும் அருமை..
  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கேள்வி பட்டிருக்க்கேன். காஷ்மீர் பக்கமும் இங்கே போலிருக்க்குமாம். நன்றி கீதா.

   நீக்கு
 10. நல்ல பாட்டு.
  நல்ல படங்கள்..
  பார்க்கத்தூண்டும் இடங்கள்..
  சுற்றிப்பனிமலை இப்படி இருந்தால்
  இதயத்தில்
  எப்ப்டி அனலடிக்கும்..

  ஆல்ப்ஸ்..மலைக்காற்றே
  பொறாமையாய் இருக்கிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதயத்தில் அனலடிக்குதா சார் ரெம்ப பொறாமைப்படாதீர்கள் சார்! நான் குட்டையாகி விடுவேனாம். நன்றி செல்வா

   நீக்கு
 11. ஆத்தாடி ...எம்புட்டு ஆசை.....எல்லாம் நிறைவேறிட வாழ்த்துக்கள்!!!

  பதிலளிநீக்கு
 12. உறைபனிக் காட்சிகளும் உருக வைத்த கவிதைகளும் சிறப்பு! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம் நன்றி சார். கவிதை இல்லை சினிமாப்பாடல் சார். நான் எழுதவும் இல்லையே.

   நீக்கு
 13. உறைபனியைப் பார்த்தாலே பல் 'டைப்'படிக்குதே,நீங்க எப்படி கவிதை எழுதுவீங்களோ :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிதையும் எழுதுவோம் தவழ்ந்து விளையாடவும்ம் செய்வோம்ல.ஆனால் எனக்கு ரெம்ப பிடிக்கும்

   நீக்கு
 14. சூப்பராக உள்ளது உடனே வந்து நானும் இந்த வெள்ளை மழையில் நனைய ஆசையாக உள்ளது ம்ம் வேண்டாம் இந்தப் பழம் புளிக்கும்

  பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!