10 மார்ச் 2020

Corena வைரஸ் உயிர் கொல்லி நோய் அல்ல!

10.03.2020
20.00

Corena வைரஸ் உயிர் கொல்லி நோய் அல்ல எனும் தெளிவை Swiss  அரசு எமக்கு தந்திருக்கின்றது🌻 🙏🙏


கோரேனோ வைரஸ் குறித்த பதிவுகள்
தினசரி அப்டேட் பதடடத்தை தருவதால்  தாங்கள் எதையும் வாசிப்பது இல்லையாம்.
இதை சொல்வது பாமரனும் படியாதவனும் அல்ல!

சமூகத்துக்கு முன்மாதிரியாக தம்மை காட்டிக்கொள்ளும் நன்கு கற்று தேர்ந்த வல்லுநர்கள் தான்!

👉🏼 சம காலத்தில் உலகத்தை அசைக்கும் ஒரு விடயம்  குறித்து  அறிந்து கொள்வதில் என்ன பதடடம் வந்து விடுகின்றது?

தவறான பரப்புரைகள், தேவையற்ற விவாதங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்,  உலகம் எதிர்நோக்கும்  பேரிடரை குறித்து எந்த வித புரிதலும் இல்லாமல் எழுதுவதை பார்க்கும் போது இவர்களால் வழி நடத்தப்படும் எமது எதிர்கால சமூகம் குறித்து வருத்தமே எஞ்சுகிறது.🔥

அரசாங்கம்,சுகாதார துறை ஊடாக தரும்
தினசரி அப்டேட் எதற்கானது என புரியாத முடடாள் தனமான சிந்தனை🖤
அசட்டு தனம் என்பதா?
அறியாமை என்பதா?

🚫 corena  வைரஸ் வயதானவர்களுக்கு மட்டும் தான் வருமாம்.
🚫 இளையோரை ஒன்றும் செய்யாதாம்
🚫 20% வெப்பம் அதிகமுள்ள பிரதேசங்களில் பரவாது எனும் பதிவுகளும்  அவ்வாறான பதிவை எவ்வித ஆதாரமுமில்லாமல் பகிர்வோரும்  உலக சுகாதார அமைப்பும் ( WHO) மற்றும்
அந்தந்த நாடுகளின் சுகாதார அமைச்சின் இணைய தளங்களை தேடி படிக்காவிடடாலும்  அங்கிருந்து செய்திகளை மொழி பெயர்க்கும் எமது பதிவுகளை எனும் தொடரலாம் !

❓எயிட்ஸ், பன்றிக்காய்ச்சல்,சார்ஸ், எபோலாவுக்கும் இப்படித்தான் பரப்பினார்கள்.
அப்புறம் என்னாச்சு?
என விதண்டாவாதம் செய்து அதை பரப்புவோர் தாம்செய்வது இன்னதென்று அறிந்து தான் செய்கின்றார்கள்.
🖤 அப்படியானவர்கள் சுயமாய் சிந்திக்கும்  மக்கள் விழிப்புணர்வை தடுத்து அகக்கண்களை இருளாக்கி விடுகின்றார்கள்

🚫 வணக்கஸ்தலங்களில்  தடை என்றால் அட கடவுள் இல்லையா என மாற்று மதத்தினரை நோக்கி கேலி அரடடை ( இடுக்கண் வந்தால் நகுங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை) மட்டுமல்ல கவலையீனமும் எமது பெரும் குறை.

🚫 மக்கா, மதினா, பெத்லகேம் மட்டுமல்ல திருப்பதியிலும் தடை...!
எல்லா கடவுளும் இப்ப மனிதரை கண்டு பயந்து ஓடி ஒளிகின்றார்கள்!

கடவுள் இருந்தாலும் நேரில் வந்து jump  என தூக்கி போய் வேறொரு கிரகத்தில் எவரையும் முடியேத்த மாடடார்.இங்கே தான்  நோயும் அதை தவிர்க்கும் வழிகளும் காட்டுவார்.

அரசும், சுகாதாரத்துறையும் தரும் அறிவிப்புக்களை தினம் அவதானித்தால் கண்ட போலிப்பதிவுகளை நம்பி உளவியல் ரீதியில் பயப்படும், பதடடப்படும் அவசியம் இல்லையே?

✅ இது வரை இந்த நோயால் பாதிக்கப்படோர், இறப்பு வீதம், குணமாகும் வீதம் எல்லாம் கவனித்திருந்தால்......!

✅ Corena வைரஸ் உயிர்கொல்லி நோய் அல்ல  எனும் தெளிவு மக்களிடம் போதிய விழிப்புணர்வை தந்திருக்கணும்.

✅ இந்த விழிப்புணர்வு சுவிஸ் மக்களிடம் இருந்ததால் தான் நோய் கண்டு பிடிக்கப்படட நொடியிலிருந்து. அரசு சிறப்பு சடடம் போட்டு அறிவிக்கும் கட்டுப்பாடுகள், எச்சரிக்கைகள், ஆலோசனைகளை கடைபிடித்து பாதிப்பின் வீரியத்தை கட்டுப்படுத்தி கொள்கின்றார்கள்.

👍  Europa வின் அண்டை நாடுகளுடன் ஒப்பிடும் போது Swiss  நோய் பரம்பலை கட்டுப்படுத்தும் வீதம் கவனிப்புக்குரியது.

எந்த பரபரப்பும் இல்லை!
ஒளிவு மறைவும் இல்லை!

பொது மக்களும் இருமல், தடிமன், காய்ச்சல் எனில்  கடந்த நாடகளில்  யாருடன் தொடர்பு கொண்டோம், எங்கே பயணம் செய்தோம் என தம்மை தானே உணர்த்தி மருத்துவர்களுடன் ஒத்துழைத்து அரசின் அறிவிப்பையும் கடைப்பிடித்து தன்னையும் தன்னை சார்ந்தோரையும் பாதுகாக்கின்றாரகள்.

ஆம்...! 🙏

🌻 corena வைரஸ் உயிர் கொல்லி நோய் அல்ல எனும் தெளிவை Swiss  அரசு எமக்கு தந்திருக்கின்றது🌻

✅  எமது தற்பாதுகாப்பும், சுய கட்டுப்பாடும்
முன் எச்சரிக்கையும், விழிப்புணர்வும்
✅ உண்ணும் உணவு மூலம்
எமது உடலில் நாம் சேகரிக்கும் நோய் எதிர்ப்பு திறனும்
✅ உடல் நிலை மாற்றங்களை அவதானித்து தகுந்த மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்வதும் போதுமானது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

விமரிசனங்கள் இல்லாமல் இல்லை.

உங்களுக்கும் எங்களுக்குமான  அக்கறையில்  பகிரும்  உண்மை செய்திகளை விதண்டாவாதம் செய்து  
போலி செய்திகள் வீரியமெடுத்து பரவ இடம் கொடாதிருங்கள்.

❤️ நீங்களும் நம்புங்கள் ❤️
உங்கள் நம்பிக்கையை உங்களை நம்புவோருக்கும் கொண்டு சேருங்கள்.

எச்சரிக்கைகளை, முன் விழிப்புணர்வுகளை கடைப்பிடித்து உலகம் எதிர் நோக்கும் ஆபத்திலிருந்து  உங்களையம் உங்களை  சார்ந்தோரையும் காத்து கொள்ளுங்கள் 🙏
-Nisha

Face book; Corena வைரஸ் உயிர் கொல்லி நோய் அல்ல!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!