08 மார்ச் 2020

சுவிஸ் தற்போதைய சூழ்நிலையை சமாளிக்க மேலும் பரிந்துரைகள்!


7.3. 2020  / 06:45:
Corena virus அவசரகால உதவி, தொழில் மற்றும்  பொதுப்போக்குவரத்துக்களுக்கான பரிந்துரைகள்! ( Notfallstationen, Arbeit und öffentlicher Verkehr )

🚫 ரயில், டிராம் மற்றும் பஸ் பயன்பாடு:( Benutzen von Zug, Tram und Bus )
•  உச்ச நேரங்களில் பயணம் தவிர்க்க வேண்டும்
•  ஓய்வு பயணங்கள் குறைக்கப்பட வேண்டும்.
•  போக்குவரத்து, ரயில் நிலையங்கள் மற்றும் நிறுத்தங்களிலும் தங்கள் தூரத்தை ( போதுமான இடைவெளி )  வைத்திருக்க வேண்டும்.
• சுவாச நோயின் அறிகுறிகளைக் கொண்ட எவரும் பொது போக்குவரத்தைத் தவிர்க்க வேண்டும்.

🚫  முதியோர் ஓய்வூதிய இல்லங்கள்: ( Besuche in Altersheimen )
• ஓய்வுபெறும்  முதியோர் இல்லங்களுக்கு  வருகை வரும் நாட்களில் தவிர்க்கப்பட உள்ளது.
•  உறவினர்கள் தொடர்பான கேள்விகள் அந்தந்தஇல்ல பொறுப்பாளர்களுடன்
 விவாதிக்கப்பட வேண்டும்.
•  சுவாச நோயின் அறிகுறிகளைக் கொண்ட எவரும் வயதானவர்களுடன் தொடர்பு கொள்வதைத் முற்றிலும்தவிர்க்க வேண்டும்.

🚫 டெலிவேர்க் மற்றும் மருத்துவ சான்றிதழ்: ( Telearbeit und Arztzeugnis )
• சாத்தியமான இடங்களில்,குறைக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை
• போதுமான இடைவெளி யில்  வாடிக்கையாளர் தொடர்புகளை ஏற்படுத்தி
• வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமான வடிவத்தில் தகவல் பரிமாற்றம்

சுகாதார அமைப்பின் அதிக சுமை தவிர்ப்பதற்காக, :  
👉🏼 நோய்வாய்ப்பட்டவர்களுக்கான
 மருத்துவ சான்றிதழ்கள் ஐந்தாம் நாளில் மட்டுமே ஊழியர்களிடமிருந்து கோரப்பட வேண்டும்.

🚫 அவசரகாலத்தில்  ( Notfallstationen )
‼️ 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், அவர்கள் வீட்டிலேயே தங்களைக் குணப்படுத்திக் கொள்ள வேண்டும்,
🚫 அவசரபிரிவு, அல்லது மருத்துவர் அலுவலகத்திற்குச் செல்லக்கூடாது. மருத்துவரின் வருகை, குறிப்பாக வார இறுதியில், மிகவும் மோசமான சூழ்நிலையில் மட்டுமே செய்யப்பட வேண்டும்.

சுவிஸ் கூட்டாட்சி  அரசின் சிறப்பு சடடத்தின் கீழ் BAG ( Bundesamt für Gesundheit ) மற்றும் Kanton வெளியிடும் அறிக்கைகளின் தரவுகள் தமிழின் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.
- ஆல்ப்ஸ் தென்றல்
நிஷா

👇👇👇

Mehr Details
Link: சுவிஸ் தற்போதைய சூழ்நிலையை சமாளிக்க மேலும் பரிந்துரைகள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!