Live Science அமெரிக்க மக்களுக்கான பதிவாக இருந்தாலும் உலக மக்களின் அறியாமைக்கு விளக்கம் தருவதில் அவசியமானதை தமிழ் படுத்தி இருக்கின்றேன்.
நீண்ட பதிவு எனினும்
Corena வைரஸ் குறித்து பரவி வரும்போலிப்பரப்புரைகளுக்கு தெளிவான விளக்கத்தை தருவதனால் அனைவரும் வாசித்து உங்களுக்கிருக்கும் குழப்பங்களை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.
Corena வைரஸ் குறித்து பரவி வரும்போலிப்பரப்புரைகளுக்கு தெளிவான விளக்கத்தை தருவதனால் அனைவரும் வாசித்து உங்களுக்கிருக்கும் குழப்பங்களை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.
•
கொரோனா வைரஸ் உலகெங்கிலும் உள்ள மக்களை தொடர்ந்து பாதித்து வருவதால், இதை பற்றிய செய்தி கட்டுரைகள் மற்றும் சமூக ஊடக பதிவுகள் ஆன்லைனில் தொடர்ந்து பரவி வருகின்றன.
இவவாறு பரப்பப்படும் தகவல்களை ஆராய்ந்து உண்மை எது, புனைவு எதுவென பிரித்து. அறிய முடியாதிருப்பது துரதிர்ஷ்டவசமானது.
வதந்திகள் மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்படுவது ஆபத்தானது.
SARS-CoV-2 மற்றும் COVID-19 குறித்த தவறான பரப்புரைகளுக்கு அறிவியல் விளக்கங்களை live science தந்திருக்கின்றது. எனினும் முக்கியமானதை மட்டும் தமிழ் மொழியில் மாற்றி உள்ளேன்.
மேலும் விரிவாக லிங்க் ல் காணலாம்
1. முகமூடிகள் உங்களை வைரஸிலிருந்து பாதுகாக்கும்.
❌ தவறு : அறுவை சிகிச்சை முகமூடிகள் ( surgical masks ) உங்களை SARS-CoV-2 இலிருந்து பாதுகாக்க முடியாது,
ஏனெனில் அவை வைரஸ் துகள்களைத் தடுக்க வடிவமைக்கப்படவில்லை।
✔️ அறுவைசிகிச்சை முகமூடிகள் பாதிக்கப்பட்டவர்களின் வாயிலிருந்து வெளியேற்றப்படக்கூடிய சுவாசத் துளிகளால் தடுப்பதன் மூலம்நோய்த்தொற்றுடையவர்கள் மேலும் வைரஸ் பரவாமல் தடுக்க உதவும்.
👉🏼 சுகாதார வசதிகளுக்குள், " N95 respirators " என்று அழைக்கப்படும் சிறப்பு சுவாசக் கருவிகள் மருத்துவ ஊழியர்களிடையே வைரஸ் பரவுவதை வெகுவாகக் குறைப்பதாக கூறப்பட்டிருக்கின்றன.
👉🏼 முகமூடியின் விளிம்புகளைச் சுற்றி எந்த காற்றும் பதுங்க முடியாது என்பதை உறுதிப்படுத்த மூக்கு, கன்னங்கள் மற்றும் கன்னங்களைச் சுற்றி N95 சுவாசக் கருவிகளை சரியாகப் பொருத்த பயிற்சி தேவை.
👉🏼 ஒவ்வொரு தடவை பயன்பாட்டிற்கும் பின்பும் உபகரணங்களை சரிபார்த்துஅணியவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
2. ( ஃப்ளு ) காய்ச்சலைக் காட்டிலும் கோரேனோ வைரஸ் பாதிக்கும் வாய்ப்பு குறைவு.
❌ தவறு
👉🏼 ஒரு வைரஸ் எவ்வளவு எளிதில் பரவுகிறது என்பதை மதிப்பிடுவதற்கு, விஞ்ஞானிகள் அதன் "அடிப்படை இனப்பெருக்கம் எண்" அல்லது R0 (R-naught என உச்சரிக்கப்படுகிறது) கணக்கிடுகின்றனர்.
பாதிக்கப்பட்ட ஒரு நபரிடமிருந்து பரப்பும் வைரஸ் தொற்ற கூடிய நபர்களின் எண்ணிக்கையை R0 கணிக்கிறது,
தற்போது, COVID-19 நோயை ஏற்படுத்தும் SARS-CoV-2 க்கான R0 சுமார் 2.2 என மதிப்பிடப்பட்டுள்ளது, அதாவது ஒரு பாதிக்கப்பட்ட நபர் சராசரியாக 2.2 பேருக்கு தொற்று ஏற்படுத்துவார்
எனும் ஒப்பிடுகையில், காய்ச்சல்( Flu ) 1.3 இன் R0 ஐக் கொண்டுள்ளது.
••• ஒருவேளை, மிக முக்கியமாக, COVID-19 ஐத் தடுக்க எந்த தடுப்பூசியும் இல்லை என்றாலும், ( seasonal flu ) பருவகால காய்ச்சல் தடுப்பூசி இன்ஃப்ளூயன்ஸாவை ஒப்பீட்டளவில் நன்றாகத் தடுக்கிறது,
அதன் உருவாக்கம் புழக்கத்தில் இருக்கும் வைரஸ் மரபணுக்களுடன் சரியாக பொருந்தவில்லை என்றாலும் கூட!
3. வைரஸ் என்பது ஜலதோஷத்தின் பிறழ்ந்த வடிவமாகும்
❌ தவறு
✔️கொரோனா வைரஸ் என்பது பல்வேறு நோய்களை உள்ளடக்கிய வைரஸ்களின் பெரிய குடும்பமாகும்.
4. வைரஸ் ஒரு ஆய்வகத்தில் செய்யப்பட்டிருக்கலாம்.
❌ தவறு
✔️ வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டதாக எந்த ஆதாரமும் தெரிவிக்கவில்லை.
SARS-CoV-2 சமீபத்திய தசாப்தங்களில் பாதிப்பை தந்த இரண்டு கொரோனா வைரஸ்களை ஒத்திருக்கிறது,
SARS-CoV மற்றும் MERS-CoV, மற்றும் மூன்று வைரஸ்களும் வெளவால்களில் தோன்றியதாகத் தெரிகிறது.
SARS-CoV-2 இன் குணாதிசயங்கள் இயற்கையாக நிகழும் பிற கொரோனா வைரஸ்களுடன் ( நமக்குத் தெரிந்தவற்றுடன் ) பொருந்துகின்றன, அவை விலங்குகளிடமிருந்து மக்களிடம் தொற்றுகின்றன.
5. COVID-19 வைரஸ் தொற்றியோர் அனைவரும் மரணம் அடைவார்கள்.
❌ தவறு
🌻 அது உண்மை இல்லை. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 81% பேருக்கு COVID-19 லேசானபாதிப்பு இருப்பதாக பிப்ரவரி 18 ஆம் தேதி சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👉🏼 சுமார் 13.8% பேர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ( அவர்களுக்கு மூச்சுத் திணறல் அல்லது கூடுதல் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது,)
👉🏼 சுமார் 4.7% முக்கியமானவை
( சுவாசக் கோளாறு,உறுப்பு செயலிழப்பு, septic shock எதிர்கொள்கின்றனர் )
COVID-19 பாதிக்கப்பட்டவர்களில ..,!
👉🏼 🖤 சுமார் 2.3% பேர் மட்டுமே இறக்கின்றனர் என்று இதுவரையான தரவுகள் தெரிவிக்கின்றன.
வயதானவர்கள் அல்லது அடிப்படை சுகாதார பாதிப்பை, கடுமையான நோய் அல்லது சிக்கல்களைக் கொண்டிருப்பவர்களுக்கு ஆபத்து அதிகம் இருப்பதாகத் தெரிகிறது.
பயம் அடையத் தேவையில்லை என்றாலும், புதிய கொரோனா வைரஸிலிருந்து தங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்க மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6. செல்லப்பிராணிகளால் புதிய கொரோனா வைரஸை பரப்ப முடியும்.
❌ தவறு
✔️அநேகமாக மனிதர்களுக்கு அல்ல।
நாய்களுக்கு மக்களிடமிருந்து வைரஸ் தொற்றக்கூடும் என தென் சீனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.
சீனாவில் ஒரு நாய் அதன் உரிமையாளரிடமிருந்து "குறைந்த அளவிலான வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட்து.
அதற்கு COVID-19 Virus உறுதிப்படுத்தப்பட்டது. எனினும்
பாதிக்கப்பட்ட பொமரேனியன் நோய்வாய்ப்பட்டிருக்கவில்லை அல்லது நோயின் அறிகுறிகளைக் காட்டவில்லை,
👉🏼 விலங்கு மனிதர்களைப் பாதிக்கக்கூடும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை।
👉🏼 இதேபோன்ற வைரஸான SARS-CoV க்கு 2003 ஆம் ஆண்டில் பரவிய போது
பல நாய்கள் மற்றும் பூனைகள் நேர்மறையானவை என்று சிட்டி பல்கலைக்கழகத்தின் ( City University ) விலங்கு சுகாதார நிபுணர் வனேசா பார்ஸ் போஸ்ட்டிடம் தெரிவித்தார்
"SARS உடனான முந்தைய அனுபவம் பூனைகள் மற்றும் நாய்கள் நோய்வாய்ப்படாது அல்லது மனிதர்களுக்கு வைரஸ் பரவாது என்று கூறுகிறது," என்று அவர் கூறினார"
❤️🙏 செல்ல நாய்கள் அல்லது பூனைகளிலிருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவியதற்கான எந்த ஆதாரமும் இல்லை।"
🙏 COVID-19 உடையவர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது வேறொருவர் தங்கள் துணை விலங்குகளை கவனித்துக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் ( CDC ) பரிந்துரைக்கிறது
⚠️ செல்லப்பிராணிகள் மற்ற நோய்களை மக்களுக்கு பரப்பக்கூடும் என்பதால், மக்கள் எப்போதுமே விலங்குகளுடன் பழகிய பின் கைகளை கழுவ வேண்டும்.
7. பூட்டுதல் அல்லது பள்ளிகளுக்கு விடுமுறை நடக்காது.
❌ தவறு
எந்த உத்தரவாதமும் இல்லை,
பள்ளி விடுமுறை என்பது பொது சுகாதார அதிகாரிகள் தொற்று நோய்களின் பரவலை மெதுவாக்கவோ அல்லது தடுக்கவோ பயன்படுத்தும் ஒரு பொதுவான கருவியாகும்.
உதாரணமாக, 2009 ஆம் ஆண்டின் பன்றிக் காய்ச்சல் தொற்றுநோய்களின் போது, யு.எஸ். இல் 1,300 பள்ளிகள் நோய் பரவுவதைக் குறைக்க மூடப்பட்டன என்று சுகாதார அரசியல், கொள்கை மற்றும் சட்டம் இதழின் 2017 ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில்,CDC வழிகாட்டுதல் 7 முதல் 14 நாட்களுக்குள் பள்ளிகளை மூடுமாறு பரிந்துரைத்தது.
கொரோனா வைரஸ் ஒரு வித்தியாசமான நோயாக இருக்கும்போது, வேறுபடடகாலம், பரவுதல் மற்றும் அறிகுறி தீவிரத்தன்மையை பொறுத்து பள்ளி மூடும் வாய்ப்புள்ளது.
8. குழந்தைகளை கொரோனா வைரஸ் பாதிக்காது
❌தவறு
👉🏼 குழந்தைகளை நிச்சயமாக COVID-19 பாதிக்கும் எனினும் ஆரம்ப அறிக்கைகளின் படி பெரியவர்களுடன் ஒப்புடும் போது தாக்கம் குறைவாகவே இருக்கின்றது
👉🏼 சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து பிப்ரவரியில் வெளியிடப்பட்ட ஆய்வில், COVID-19 னால் பாதிக்கப்படட
44,000 க்கும் மேற்பட்டோரில் 19 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 2.2% மட்டுமே.
இருப்பினும், மிக சமீபத்திய ஆய்வுகள் குழந்தைகள் பெரியவர்களைப் போலவே பாதிக்கப்படக்கூடும் என்று கூறுகின்றன.
👉🏼 மார்ச் 5 ஆம் தேதி ஒரு ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் Shenzhen நகரில் 1,500 க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து செய்த பகுப்பாய்வில் வயது வேறுபாடு இன்றி COVID-19 ன் பாதிப்பு சுமார் 7% முதல் 8% வரை இருந்தது.
வைரஸால் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் பெரியவர்களைப் போலவே தொற்றுநோய்களுக்கும் ஆளாக நேரிடும் என்று Nuture News தெரிவித்துள்ளது.
இருப்பினும், குழந்தைகள் பாதிக்கப்படும்போது, COVID-19 கடுமையான பாதிப்பை தரவில்லை.
9. உங்களுக்கு கொரோனா வைரஸ் இருந்தால், "உங்களுக்குத் தெரியும்"
❌ தவறு
இல்லை, நீங்கள் உணர மாட்டீர்கள். COVID-19 பரவலான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது,
👉🏼 அவற்றில் பல காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் போன்ற பிற சுவாச நோய்க ளாக தோன்றும்.
👉🏼 COVID-19 இன் பொதுவான அறிகுறிகளில் காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை அடங்கும்
👉🏼 அரிதான அறிகுறிகளில் தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி மற்றும் மூக்கு ஒழுகுதல் ஆகியவை அடங்கும்.
👉🏼சில சந்தர்ப்பங்களில், இந்த நோய் கடுமையான நிமோனியா போன்ற நோயாக முன்னேறக்கூடும்.
🖤 ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளையும் காடடாது.
🖤 பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் செல்லாதவர்கள் அல்லது சமீபத்தில் பயணம் செய்தவர்களுடன் தொடர்பு கொள்ளாதவர்களையும் வைரஸ் தொற்றலாம்
நீங்கள் பாதிக்கப்படட பிராந்தியத்தில் வாழ்ந்து, அதிக காய்ச்சல், பலவீனம், சோம்பல் அல்லது மூச்சுத் திணறல் போன்றவற்றை அனுபவிக்கத் தொடங்கினால், அல்லது நோயின் அடிப்படை நிலைமைகள் மற்றும் லேசான அறிகுறிகளைக் கொண்டிருந்தால், அருகிலுள்ள மருத்துவமனையில் மருத்துவ உதவியை நாட வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள். அங்கே நீங்கள் சோதிக்கப்படலாம்.
10.கொரோனா வைரஸ் (ஃப்ளு) காய்ச்சலை விட கடுமை குறைவானது.
✔️ இதுவரை அவதானிப்பில்.....!
கொரோனா வைரஸ் காய்ச்சலை ( ஃப்ளு ) விட மிகவும் ஆபத்தானது என்று தோன்றுகிறது.
இருப்பினும்,இந்த வைரஸின் இறப்பு விகிதத்தைச் சுற்றி இன்னும் நிறைய நிச்சயமற்ற தன்மை உள்ளது.
🔴 சமீபத்திய தரவுகளின் படி
வருடாந்தம் பரவும் ஃப்ளு காய்ச்சலோடு
ஒப்பிடுகையில், COVID-19 இறப்பு விகிதம் 20 மடங்கு அதிகமாக உள்ளது, அதாவது 2.3%, ஆனால் இது சரியான தரவுகளாகுமா என்பதில் நிச்சயம் இல்லை, STAT செய்தியின்படி, சீனாவில் பாதிப்புக்கள் எண்ணிக்கை துல்லியமாக ஆவணப்படுத்தப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்பதனால் மாறிக்கொண்டு இருக்கின்றது.
சீன CDC பிப்ரவரி 18 அன்று வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில்
இறப்பு விகிதம் பாதிக்கப்படும் நபரின் வயது, இருப்பிடம்போன்ற பல்வேறு காரணிகளால் மாறுபடுகிறது என்கின்றது.
👉🏼 CORENA வைரஸ் பாதிக்கப்படட நாடுகளிலிருந்தும் முக்கியமாக சீனாவிருந்து கடிதம், பார்சல் பெறுவதனாலும்.
👉🏼 உணவகம் சென்று சீனா உணவுகள் மூலம் வைரஸ் பரவும் வாய்ப்பில்லை என்கின்றது Live Science! 
•
இன்று காலை வரை எனக்கிருந்த பல கேள்விகளுக்கு தெளிவை தந்தது live science ன் அறிவியல் விளக்கம் 😍
Note:
CDC : the Centers for Disease Control and Prevention
- ஆல்ப்ஸ் தென்றல்
நிஷ
மேலும் விபரமாக அறிய: Click link
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!