கடந்த கால கறைகளைகளெல்லாம்
களனியாற்றில் கலந்தோடி
கசந்து விட்ட கண்ணீர்க் கசடுகளை நீங்கிடுமா?
காலம் செய்த கோலம் கண்டு
இயற்கையவள் இடிமுழங்க
இதயங்களோ படபடக்க
இனியெங்கே செல்வோம் எனும்
ஏக்கங்கள் அதிகரிக்க
அனைத்தையும் இழப்பதற்கு
முடிவென்பதேயில்லையா?
இலங்கையனாய் பிறந்ததனால்
இயற்கை கூட வஞ்சித்திட
இதயங்களும் இறுகி விட
இழப்புக்கள் இறப்புக்களாய்
எதிர்காலம் சூனியமாய்
தொடர்கின்றது அகதி வாழ்க்கை!
ஏறிச்செல்லும் நீரின் மட்டம்
ஏழைப்பணக்காரர் பார்ப்பதுண்டா?
இன பேதம் பிரித்தெடுத்தா
இயற்கையவள் பொங்குகின்றாள ?
இனி வரும் கால மாற்றம்
இதயங்களை திறந்திடுமா?
இன பேதம் இல்லையெனும்
உணர்வுகள் உயிர்ப்பெறுமா?
இது வரை இரத்தம் ஆறாய் ஓடிய சிறு நாட்டில் இரத்தக்கறைகளை கழுவவோ என்னமோ
வெயிலும் மழையுமாய் ஆவேசத்தோடு அரவணைத்துகொண்டு வெள்ளம் பெருக்கெடுக்க... மூன்று
இலட்சத்துக்கும் அதிகமானோ அதிகளாகி தன் இடங்களை விட்டு இடம் பெயர்ந்து கோடிக்காணக்கான பொருட்சேதங்களுடன் உயிர் வாழ போராடிக்கொண்டிருக்கின்றார்கள்!?
இலங்கையில் வரும் இழப்புக்கள்,பாதிப்புகள் இனமதபேதமின்றி அனைத்து மக்களையுமே பாதிக்கும் எனும் நிஜம் புரியாதோராய் அன்று நாங்கள் அழுதபோது எள்ளி நகையாடினீர்களே? இன்று நீங்கள் அனுபவியுங்கள் எனச்சொல்லி அன்றவர்கள் செய்\த தவறினையே இன்று செய்யும் என் இன மக்களின் செயல் பாடுகள் கண்டு என்ன சொல்வது?
இலங்கை தேசத்துக்காய்
இறைவா நீ வர வேண்டும்
*************************
ஓ..வருத்தமான பதிவு...அழிக்கும் இயற்கை ஒருவழி வைக்காமல் இருக்காது..தேடாததும்...மறுப்பதும் நாமே...கவலைப்படவேண்டாம்...சரியாகும்...உங்கள் போன்றோர் பிரார்த்தனைகளால்
பதிலளிநீக்குஇயற்கை சீற்றம் கண்டால் யாரே எதிர்த்து நிற்க முடியும்? இலங்கை நண்பர்களுக்கு ஆறுதலும், பிரார்த்தனைகளும்.
பதிலளிநீக்குஎத்தனை இழப்பு.... விரைவில் இலங்கையில் நிலை சரியாகட்டும்......
பதிலளிநீக்குவேதனைகள் விரைவில் தீரும் கவலை வேண்டாம்.
பதிலளிநீக்குஇயற்கை சீற்றத்தை நாம் எதிர்த்திட முடியுமா? தாமதமாக வந்துள்ளோம். இப்போது நிலைமை எப்படி உள்ளது அங்கு? பிரார்த்தனைகள்
பதிலளிநீக்குநல்லதே நடக்க பிரார்த்திப்போம் !
பதிலளிநீக்கு