எல்லோரும் நலம் தானே?
நான் முதல்வரானால் எனும் தலைப்பில் கவிதைபோட்டி ஒன்றுக்காக மார்ச் மாதம் எழுதிய எனது பதிவை இங்கும் பகிர்கின்றேன்.
நாளெல்லாம் பாடுபடும் நல்லவர்கள் சொல்கேட்பேன்
நாய் போல் வாலைக்குலைக்கும் வஞ்சகர்க்கஞ்சேன்
நாளை நமதாகவே கற்றோர் கரமிணைவேன்
கல்லாதோர் வாழிவியலை வரமாய் எடுத்தாள்வேன்!
வாலிபர் வளம் தனையே வசமாயாக்கிடுவேன்
காயம்தனை துடைக்கும் கரமும் நானாவேன்
காணும் இடமெல்லாம் காட்சிப் பொருளாகேன்- எனை
தேடும் போதினிலே கண்முன்னே வருவேன்!
ஜாதீ,மதம்தனையே தீயில் பொசிக்கிடுவேன்
மதுவால் மதமாகும் இழிநிலை அகற்றிடுவேன்
பசியெனும் கொடியவனை இல்லாதொ ழித்திடுவேன்
யாவரும் ஒன்றே என சட்டம் இயற்றிடுவேன்!
கல்வியின் மேன்மைதனை அகமுணர்த்தி விடும்
அடியேனாய் நானிருந்தே கற்றலை எளிதாக்குவேன்!
இலவசமெனும் அரக்க இயலாமைதனை நிறுத்தி
இல்லாமை ஒழித்திடவே உழைக்கும் வழிகாட்டுவேன்!
நாளை நாளையென நாளைக் கடத்தாது .
நானல்லஎவரோ என எவரிலும் நாமம் சுமத்தாது
தேக்கம் தருவோரை தூரமாய் நிறுத்தி - சொல்
வாக்கை நிறைவேற்றிட பாங்காய் பணி புரிவேன்!
பேரிடர் வரும் நேரம் பிரிந்தே நிற்காது
யாரிடம் செல்வோமென தவிக்க வைக்காது- கால்
வாரிடும் துஷ்டரையும் தூணிவாய்ய் துரத்திடுவேன்
மனமேவிடும் புதலவனாக உனக்கென நானிருப்பேன்!
நல்ல கவிதை அக்கா...
பதிலளிநீக்குசேவை செய்யத்துணிந்த உங்களின் கற்பனைக்கு வாழ்த்துக்கள்.புறா நீண்டதூரம் பறக்கட்டும்.
பதிலளிநீக்குநல்லதோர் கவிதை. இப்படி ஒரு தலைவரைத் தான் எதிர்பார்த்திருக்கிறது நம் தேசம்.....
பதிலளிநீக்குவெகுநாட்களாக ஆளைக் காணோமே என்று பார்த்தேன். இப்போதுதான் தெரிகிறது தேர்தல் பிரசாரத்துக்கு சென்று வந்த விவரம்.
பதிலளிநீக்கு//பேரிடர் வரும் நேரம் பிரிந்தே நிற்காது
யாரிடம் செல்வோமென தவிக்க வைக்காது- கால்
வாரிடும் துஷ்டரையும் தூணிவாய்ய் துரத்திடுவேன்
மனமேவிடும் புதலவனாக உனக்கென நானிருப்பேன்!//
இந்த வாக்குறுதிக்காகவே நீங்கள்தான் அடுத்த முதல்வர். என் ஒட்டு உங்களுக்குத்தான்.
எண்ணங்கள் உயர்வாய் இருக்கின்றது பலிக்கட்டும் வாழ்த்துகள்
பதிலளிநீக்குஇந்த கவிதையில் உள்ளபடி நீங்கள் நடந்தால் நீங்கள் தமிழகத்தில் முதல்வராக தகுதி இல்லாதவராக ஆகிவிடுவீர்கள்
பதிலளிநீக்கு,உங்கள் போன்ற முதல்வரைத்தான் எதிர்பார்க்கிறோம்..நடை அருமை
பதிலளிநீக்குநீங்களே முதல்வராக மனம் நிறைந்த வாழ்த்துகள்...மா
பதிலளிநீக்குதங்களைப் போன்ற முதல்வர்கள்தான் காலத்தின் கட்டாயம்
பதிலளிநீக்குஅருமை
அருமையான கவிதை சகோ. இப்படிப்பட்ட ஒரு தலைமையைத்தான் நாடு விரும்புகின்றது. ஆனால் இப்படி எல்லாம் இருந்துவிட்டால் எங்கள் தமிழ்நாட்டின் தலைமைப் பதவி கிடைக்காதாக்கும். ஹிஹிஹி
பதிலளிநீக்கு