08 ஏப்ரல் 2020

இது எச்சரிப்பின் காலமல்லோ-2 கிறிஸ்தவர் என்கின்றார்கள் , கிறிஸ்து அவர்களுக்குள் இல்லை...!

இது எச்சரிப்பின் காலமல்லோ? 

நாங்கள் கிறிஸ்தவர் என்கின்றார்கள் /  அவர்களுக்குள் கிறிஸ்து இல்லை...!

சமாதானம் தருவேன் வா என்கின்றார்கள் /  அவர்களுக்குள் சமாதானம் இல்லை 

வியாதிஸ்தர்களை குணப்படுத்துகின்றோம் என்கின்றார்கள்,அவர்கள் சொஸ்தமாக இல்லை 

தேவன் அன்பானவர் என்கின்றார்கள் / அவர்களுக்குள் அன்பில்லை 

விடுதலை தருவோம் என்கின்றார்கள் / அவர்களுக்குள் சமாதானம் இல்லை 

அவர்களிடம்  இல்லாத ஒன்றை எப்படி மற்றவர்களுக்கு தர முடியும்? 

மாயக்காரரே.... உங்களுக்கு ஐயோ’

நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள!

„ நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?”​—⁠மத்தேயு 7:1-5.

சுவிசேஷ காலம் முடிந்தது ..! 

தங்களை மகா பரிசுத்தவான்களென எண்ணி கொண்டிருக்கும் அனைத்துக்கும், அனைவருக்கும் இது எச்சரிப்பின் காலம் 

எதை,எப்போது, எவர் மூலம்  என்பதை இறைவன் என்பவர் தவிர  எவரும் அறிய மாடடார்கள் 
நீங்கள் அறியாத,எதிர்பாராத இடத்திலிருந்து தேவ கோபாக்கினி வெளிப்படும்.மறை பொருளாக இருக்கும் பல உவமைகள் வெளியரங்கமாகும்..

எல்லோரும் இறைவனால் படைக்கப்படடவர்கள். இறைவன் அனைவரையும் நன்கு அறிந்திருக்கிறார்.

ஒரு தாய் தான் பிள்ளைகள் அனைவரையும் நேசிப்பது போல் இறைவன் என்பவரும் எவரும் அழிந்து போகாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்,அனைவரும் என் பிள்ளைகள் என நேசிக்கின்றார் 

தன் பிள்ளைகள் பிழை செய்தாலும் அவர் மன்னிக்கின்றார். அவர் எவரையும் வெறுத்து ஒதுக்குவது இல்லை ( அப்படி எவரேனும் சொன்னால் அவர்களை ஒதுக்குங்கள்) 

அவர் இறைவன்......! 
அவர் கர்த்தர்.,,,,,! 
அவர் கர்த்தர.,,,,! 

கர்த்தர் என்றால்: 
( படைப்பாளர், பாதுகாப்பவர் இறைவன், சர்வவல்லவர், ஆண்டவன், ஈசன், கடவுள், சர்வ
வல்லமையுள்ள,எல்லாம் வல்ல, தடுக்க முடியாத,முழுமையான, கட்டுக்கடங்காத, வரம்பற்ற, கலப்பற்ற, தன்விருப்பப்படி ஆளுகிற,  தெய்வீகம் நிறைந்தவர் , யெகோவா, தெய்வம்,திரித்துவ மானவர், அழிவு இல்லாதவர், அனைத்தும் அறிந்தவர். )

கர்த்தர் எனும் வார்த்தை பைபிள் தமிழ் மொழி பெயர்ப்பில் வருவதால் அது கிறிஸ்தவருக்கு மட்டும் சொந்தமில்லை 

உங்களுக்கு மட்டும் பாரடீஸ், பரலோகம் ( இந்த பூமி )  நிரந்தரமில்லை 

பரம்பொருள் எனப்படும் ஒன்றை  தனித்துவ படுத்தும் உரிமை எவருக்கும் இல்லை.

               „எச்சரிக்கையாயிருங்கள்“

👇👇

எசேக்கியேல் 13
1. கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

2. மனுபுத்திரனே, தீர்க்கதரிசனம் சொல்லுகிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக நீ தீர்க்கதரிசனம் உரைத்து, தங்கள் இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களோடே நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

3. கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: தாங்கள் ஒன்றும் தரிசியாதிருந்தும், தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ!

4. இஸ்ரவேலே, உன் தீர்க்கதரிசிகள் வனாந்தரங்களிலுள்ள நரிகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.

5. நீங்கள் கர்த்தருடைய நாளிலே யுத்தத்தில் நிலைநிற்கும்படிக்கு, திறப்புகளில் ஏறினதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாருக்காகச் சுவரை அடைத்ததுமில்லை.

6. கர்த்தர் தங்களை அனுப்பாதிருந்தும், கர்த்தர் உரைத்தாரென்று சொல்லி, அவர்கள் அபத்தத்தையும் பொய்க்குறியையும் தரிசித்து, காரியத்தை நிர்வாகம்பண்ணலாமென்று நம்பிக்கையாயிருக்கிறார்கள்.

7. நான் உரைக்காதிருந்தும், நீங்கள் கர்த்தர் உரைத்தார் என்று சொல்லும்போது, அபத்தமான தரிசனையைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிறீர்கள் அல்லவா?

8. ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்; நீங்கள் அபத்தமானதைச் சொல்லி பொய்யானதைத் தரிசிக்கிறபடியினால், இதோ, நான் உங்களுக்கு விரோதமானவர் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

9. அபத்தமானதைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு என் கை விரோதமாயிருக்கும்; அவர்கள் என் ஜனத்தின் சங்கத்தில் இருப்பதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாரின் அட்டவணையில் எழுதப்படுவதுமில்லை; இஸ்ரவேல் தேசத்துக்குள் பிரவேசிப்பதுமில்லை; அப்பொழுது நான் கர்த்தராகியஆண்டவரென்று அறிந்துகொள்வீர்கள்.

10. சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம்போக்குகிறார்கள்;

தேவன் பொய் தீர்க்கதரிசிகளை எச்சரிப்பது மட்டுமன்றி, அவர்களுக்கானநியாயத்தீர்ப்பையும் அறிவித்திருக்கின்றார். 

இந்த நியாயத்தீர்ப்பை அறிந்தென்னவோ அவர்கள் இன்னமும் அக்கிரமத்துக்கு மேல் அக்கிரமம் செய்கின்றார்கள்! 

„ அக்கிரமம் செய்கிறவன் இன்னும் அக்கிரமம் செய்யட்டும்“

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!