"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திடல் வேண்டுமம்மா "
இன்றைய சூழலில் பெண்கள் பொறுமை இல்லை, புரிதல் இல்லை, விட்டுகொடுத்தல் இல்லை,அன்பில்லை.அடக்கமில்லை எல்லாமே தங்கள் இஷ்டப்படி நடக்க வேண்டும் எனும் போக்கு மொத்தத்தில் சுயநலத்தின் முழுவடிவமாய் தனக்கு மட்டும் தான் என நடந்து கொள்கி்றார்கள்!இல்லையில் தம் இயலாமையை நிறைத்து நிற்கின்றார்கள்.
முற்காலத்தில் படிப்பறியாது வீட்டுக்குள் இருக்கும் பெண்களிடம்இருந்த நற்குணங்கள் எல்லாம் மாயமாகிப் போனது.பாரதியின் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்.அச்சம், பயிர்ப்பு, நாணம், மடமென சொல்லப்பட்ட நாற் குணங்களும் தப்புத்தப்பாய் புரிந்து கொள்ளப்பட்டு இன்றைய எதிர்கால பெண்கள் சந்ததி எதைநோக்கி போகிறது என அவர்களுக்கேதெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது
எங்கே நிமிர்ந்த பார்வை,நேர்கொண்டநன்னடைவேண்டுமோ அங்கே மீறப்படுகிறது. எங்கே அச்சமும்,மடமும்,நாணமும் தேவையோஅங்கே அவையனைத்தும் காலில் மிதிபடுகின்றது! நிமிர்ந்து தைரியமாக நிற்க வேண்டிய இடத்தில் அவை வெளிப்பட்டு பெண் எனில் பேதைகளோ என எண்ணும் படி அவர்களின் மேதைத்தனம் மறுதலிக்கப்படுகின்றது.
பெண் சுதந்திரம்,பெண்கல்வி எனபதை தவறாக புரிந்து கொண்டு தன்னம்பிக்கை இல்லாதோராய் ஒடிந்து விழுவோராய் இக்கால பெண்கள் இருக்கிறார்கள்!புலியை முறத்தால் அடித்து விரட்டினாள் என நம் பெண்களை சொல்வார்கள்.இன்றைக்கு அப்படி யார் இருக்கின்றார்கள்?
அன்பும்,அறிவும், பொறுமையும் ஆளுகை செய்ய வேண்டியவளிடம் ஆணவமும்,பொறாமையும்,பெருமையுமே குடிகொண்டுள்ளது!
ஒரு பெண்ணால் முடியாதது எதுவுமே இல்லை. தாயின் கருவின்றி எவரும் வெளியே வருவதுமில்லை எனும் போது தன்னிடம் இருப்பது என்ன?தனக்கான தேவை என்ன வென்பதைபெண்ணே உணராதவளாயிருக்கிறாள்.
அன்பு எனும் அருமையான ஆயுதம் தங்களிடம் இருப்பதை புரிந்திடாமல் அதிகாரம் செய்து சாதிக்க முற்படும் போது குடும்பங்கள் உடைகின்றன்.வேற்றுமைகள் தோன்றுகின்றன.பெண் என்பவள் அன்பால் அக்குடும்பத்தினை கட்டியாள வேண்டுமே தவிர ஆணவத்தினால்அடக்கி ஆளநினைக்கக்கூடாது என்பதோடு
நம்பத்தகுந்தவளாக தான் இருப்பதோடு மட்டுமல்லதன்னை சார்ந்தோரையும் நம்புபவளாக தவறுகண்டுகண்டித்து மன்னிப்பவளாக் இருக்க வேண்டும்.சந்தேகப்படுபவளாக இருக்க கூடாது சந்தேகம் வாழ்க்கைக்கே கேடு என்பதை அவள் உணர வேண்டும். அதே நேரம் அனைத்தையும் நம்பும் வெகுளியாகவும் இருக்க கூடாது!
நம்பத்தகுந்தவளாக தான் இருப்பதோடு மட்டுமல்லதன்னை சார்ந்தோரையும் நம்புபவளாக தவறுகண்டுகண்டித்து மன்னிப்பவளாக் இருக்க வேண்டும்.சந்தேகப்படுபவளாக இருக்க கூடாது சந்தேகம் வாழ்க்கைக்கே கேடு என்பதை அவள் உணர வேண்டும். அதே நேரம் அனைத்தையும் நம்பும் வெகுளியாகவும் இருக்க கூடாது!
பொதுவாகவே பெண்களிடம் கூரிய அறிவும்,கவனிக்கும் திறனும் ஆண்களை விட அதிகமாய் இருக்கும் போது தன்னுடன் பழகும் ஆண் எப்படிபட்டவன் என்பதை பல காலம் பழகித்தான் தெரிந்து கொள்ளலாம என்பதில்லை.ஒருசிலவார்த்தை,சில செயல்கள்,கண் பார்வை போகுமிடம் என ஒரு சில நொடிகளிலேயே ஒரு ஆண் நம்பதகுந்தவனா இல்லையா என முடிவெடுத்து விலகிச்செல்ல முடியும்.அக்கால பெண்களிடம் காணப்படும் இந்த அகக்கண் உணரும் தன்மை இக்கால பெண்களிடம் இல்லை!அத்தனை கூரிய சக்தியை கடவுள் பெண்ணீன் படைப்புடனே இணைத்தே படைத்திருக்கும் போது விளக்கினை தேடிப்போய் விழும் விட்டீல்களாய் இருக்கின்றார்களே?
அவள் அணியும் ஆடைகள் தான் அவள் மதிப்புக்குரியவள் என்பதை காட்டும்.அவன் புன்னகைதான் அவளுக்கு கிரீடம்.ஆனால் இப்போதெல்லாம் பாதி உடல் வெளியே தெரியும் படியாய் ஆடைகள் இருப்பதும்.அதுவே பலவிபரீதங்களுக்கு காரணமாய் இருப்பதும்றியாமலா இருக்கின்றார்கள்?அவள் அணியும் ஆடை அவள் மீதான மதிப்பை தருவதாய் இல்லையே! உடல் அழைகினை வெளிக்காட்டும் இறுக்கிபபிடித்த ஆடைகளும் முன்பின் உடலழகை வெளிக்காட்டும் படியாய் உடையமைப்புமாய் தன் கவரிச்சியினால் தன்னையே கேலிப்பொருளாக்குபவளாயும் தான் பெண் இருக்கின்றாள்!
இறைவன் படைப்பில் பெண் பலவீனமானவளாய்தான் படைக்கப்பட்டிருகிறாள்! எனினும் உலகில் இருக்கும் வலிகளை விட மிகபெரிய வலியாம் பிரசவ வலியை தாங்குமவள் சின்ன விடயங்களில் சோர்ந்து தடம் மாறுகின்றாள். அவளுக்கான மன் உடல் ரிதியான் பிரச்சனைகள்அனேகம்!தாய்மையெனும்நிறைவு அவளிடமிருப்பதால்
அவளுக்கான பணி உணர்ந்து அவள் செயல் பட வேண்டும்.
அவளுக்கான பணி உணர்ந்து அவள் செயல் பட வேண்டும்.
யாரானாலும் பெண்கள் தங்கள் குடும்ப விடயம், அந்தரங்கம் எல்லை மீறிப் பேசக்கூடவே கூடாது. அது போல் எடுத்தவுடன் தன் மனைவி தன் வீட்டுபெண்களை குறைவாய் சொல்லி அனுதாபம் தேட முயல்வோர். தன்மீது அனுதாபம் வேண்டி பழைய கதை சொல்ல முயலும் அந்நிய ஆண்களிடம் கவனமாகவே இருக்க வேண்டும் என்பதை விட அப்படிபட்டவர்களை ஆரம்பத்தில் இனம் கண்டு விலகி விட வேண்டும்.பாவம் பரிதாபம் பச்சாதாபம் பார்த்து தம் வாழ்க்கையை அழித்து கொள்ளல் கூடாது.
ஒரு பெண் ஒரு ஆணை நம்பி பாசம்,நட்பு பாராட்டி விட்டால் அவ்வளவு சீக்கிரம் அந்த நட்பை அன்பை உதறிச்செல்லாத உறுதியுடையவளாய் இருந்தால் அவனிடம் இருக்கும் கெட்ட சுபாவங்கள் கூட நல்லதாக மாற வாய்ப்பிருக்கும். வாழ்வில் மன உறுதி, மனதிடம் நம்பிக்கை வேண்டும். அன்புக்கு அடங்கலாம், அதுவோ கழுத்தை இறுக்கும் கயிறாகாது அடக்கியாளாது பொஷிசிவ் தன்மை யாக்காது அன்னிய ஆடவருடனான பழக்கங்களுக்கு எல்லை கட்டாயம் வேண்டும்.
அதையும் மீ்றி நம்பிக்கை துரோகங்களானால் எதிர்த்து நிற்க தெரிய வேண்டும். பயந்து ஒளியகூடாது. சட்டங்கள் பெண்களுக்கு சாதகமாய் இருப்பதால் தனனைபோல் இன்னொரு பெண் பாதிக்கப்படகூடாது எனும் நல்லெண்னம் கொண்டு போராட முயல வேண்டும். தன் வாழ்க்கையில் நடந்தவைகள் இன்னொரு பெண்ணுக்கும் நேரிடாமல் காத்திட வேண்டும் எனும் பொது சிந்தையோடு அவள் செயல் இருக்க வேண்டும்.
35 வயதுக்கும் மேல் குழந்தைகள் வளர்ந்த பின் தனனை யாரும் புரிந்துக்கவிலலையே? மனம் விட்டு பேச யாருமில்லையே என்பதால் தான் அவள் மனம் அல்லல் அடைகிறது.வழி தடுமாறி அன்னிய ஆடவர் அன்பை நாட காரணம் ஆகின்றது. அந்த சூழலில் கணவன் அன்பும் வீட்டார் அரவணைப்பும் கிடைத்தாலே போதும். ஆனால் பெரும்பாலான வீட்டுஆண்கள் இதை உணர்வதே இல்லை என்பது தான் சோகமானது.
முற்காலத்தில்கூட்டுக்குடும்பமாயிருந்தார்கள்,ஆயிரம் சண்டைசச்சரவு இருந்தாலும் மனம்விட்டுப்பேச ஆளிருக்கும்.
இப்போதுஅப்படி இல்லையே??!!!
35 வயதிலிருந்து 40,45 வயது வரையான கால கட்டம் பெண்கள் தாண்டவேண்டிய கடுமையான காலம்.குழந்தை வளர்ப்பு,வீட்டுவேலை,வெளிவேலை,பள்ளிகாரியம், உடல் சோர்வு என வாட்டி எடுக்கும்.அந்த நேரம் அவளை புரிந்து தாங்கிட்டால் போதும்.அவளை ஜெயிக்க யாராலும் முடியாதே!அவளை உணரும் குடும்ப சூழலும் இன்றில்லாமல் தான் போகின்றது!
இப்போதுஅப்படி இல்லையே??!!!
35 வயதிலிருந்து 40,45 வயது வரையான கால கட்டம் பெண்கள் தாண்டவேண்டிய கடுமையான காலம்.குழந்தை வளர்ப்பு,வீட்டுவேலை,வெளிவேலை,பள்ளிகாரியம், உடல் சோர்வு என வாட்டி எடுக்கும்.அந்த நேரம் அவளை புரிந்து தாங்கிட்டால் போதும்.அவளை ஜெயிக்க யாராலும் முடியாதே!அவளை உணரும் குடும்ப சூழலும் இன்றில்லாமல் தான் போகின்றது!
பெண் என்பவள் காற்று மாதிரி,சுழன்று அடித்தால் வீடும் நாடும் நாசம்.இனிய சாமரமாய் அவள் விசினால் வீடும் நாடும் வளம்பெறும். இதை அவள் உணர்ந்து தன் தேவை எதுவென் கேட்டு பெற முயலாத வரை அவள் கற்ற கல்வியும், அவளுக்காக சட்ட ஒதுக்கீடும் பயனற்றதாயே இருக்கும்.
ஒருபெண்ணின்அன்பு,தாயாய்,தங்கையாய்,தோழியாய், மனைவியாய், மகளாய் எந்த ரூபத்தில் வந்தாலும் அவள் அன்புக்கு அடங்காத ஆண் இந்த உலகில் இல்லைவே இல்லை எனும் போது தாய்மையோடு அன்பெனும் ஆயுதம் அவளிடம் உண்டு.சரியாத புரிதல் இருந்து விட்டால் எந்த ரூபத்திலாவது நல்ல பெண் அன்பை பெற்ற ஆண்மகள் வாழ்க்கையில்தோல்வியை சந்திக்கவே மாட்டான்.
பெண் என்பவள் யாருக்கும் அடிமையாக இல்லை.தன் குடும்ப நலன் வேண்டி அவளாகவே அடங்கிவாழ்ந்தாள் என உணர்ந்து இல்லறத்தினை நல்லறமாக்கி அன்புக்குஅடங்கி அன்பால்ஆளவேண்டும்!
சேனைத்தமிழ் உலாவில் ஒரு கேள்வி பதில் திரியில் இன்றைய சூழலில் பெண்கள் வீட்டிலும்(குடும்பத்திலும்) வீட்டிற்கு வெளியேயும் எப்படி நடந்துகொள்கிறார்கள்? எப்படி நடந்துகொள்ளவேண்டும்? என ஒரு கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது?
அங்கே இட்ட பதிலை கொஞ்சமாய் திருத்தி இங்கே பதிந்துள்ளேன்!
உங்கள் கருத்தினை சொல்லுங்கள் நட்பூக்களே!
அனைத்து ஆற்றலும் கொண்ட சக்தி...
பதிலளிநீக்குதங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன் சார்.
நீக்குஇந்தப் பதிவின் சில உண்மைகளுக்குச் எதிர்ப்புகள் வரலாம்!
பதிலளிநீக்குஈ மெயில் சப்ஸ்கிரிப்ஷன் வைக்கவும்.
அப்படியா? எப்போதும் உண்மைகள் கசக்கத்தானே செய்யும் ஐயா!
நீக்குஈமெயில் சப்ஸ்கிரிப்ஷன் பற்றி எனக்கு தெரியவில்லை ஐயா.. நான் இந்த பிளாக்குக்கே புதிது அல்லவா? எப்படி என சொன்னால் அப்படியே செய்கின்றேன் ஐயா!
என்னைப் பொருத்தவரையில் இன்றைய சூழலில் பெண்கள்! எப்படி இருக்கின்றார்கள் என்றால் அவர்கள் மிக ஸ்மார்ட்டாகத்தான் இருக்கிறார்கள் என்பேன்.
பதிலளிநீக்குநீங்கள் முப்பது பிளஸ்ஸில் இருப்பவராயிருந்தால் இப்படித்தான் தோன்றும் சார். ஸாமாடாக இருப்பதும் ஸ்லிம்மாக இருப்பதும் மட்டுமே வாழ்க்கைக்கு நிம்மதி தருவது இல்லையே!
நீக்கு
பதிலளிநீக்குமுடிந்தால் எழுதுக்களின் சைஸை கொஞ்சம் சிறிதாக்கவும் மேலும் எழுத்துக்களின் பின்னால் நீங்கள் செய்த ஷேடோவை எடுத்துவிடவும்
அப்படியே செய்தேன்!
நீக்குஒட்டு மொத்த பெண்களின் எண்ணத்தை சொன்னது பதிவு! அருமை!
பதிலளிநீக்குபெண்களின் எண்ணம்?
நீக்குவணக்கம் மிகவும் சிறந்த இக்கால சூழ்நிலைக்கு அவசியமானதொரு நல்ல கட்டுரை வாழ்த்துகள் இதனைக்குறித்து நானும் சில விடயங்களை எழுத நினைக்கிறேன் விரைவில் தருவேன் நன்றி.
பதிலளிநீக்குவிரைவில் தாருங்கள் படிக்க காத்திருக்கின்றேன். கருத்துரைக்கு நன்றிங்க கில்லர் ஜி சார்.
நீக்குவெளிப்படையான ஆழமான அலசல்
பதிலளிநீக்குசிந்திக்கவைத்துப் போகிறது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நன்றி ஐயா! தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஉலகின் ஆக்க சக்கதியும் அழிக்கும் சக்தியும் பெண்ணே...நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்!
நீக்குதொடர்ந்து வாருங்கள்.
இன்றைய பெண்கள் எப்படி இருக்கின்றார்கள் அன்றய பெண்கள் எப்படி இருந்தார்கள் இன்றய பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என அனைத்தையும் உள்ளடக்கியதாக அமைந்த உங்கள் கட்டுரை மிக மிக அருமை. அதிக பயனுள்ள ஒவ்வொரு விளக்கங்களும் நீங்கள் ஒரு பெண் என்பதை மறந்து நீங்கள் மாமேதை என்பதை உணர்த்தி நிற்கிறது.
பதிலளிநீக்குநாகரீகம் என்ற பெயரில் இன்றய பெண்கள் சீரழிவதையும் அழகாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள் அன்பாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள் பல மங்கையர்கள் இதைப் படிக்க வேண்டும் பயன் பெற வேண்டும்.
இன்றைய சூழலில் பெண்கள் பொறுமை இல்லை,புரிதல்இல்லை,விட்டுகொடுத்தல் இல்லை,அன்பில்லை.அடக்கமில்லை எல்லாமே தங்கள் இஷ்டப்படி நடக்க வேண்டும் எனும் போக்கு மொத்தத்தில் சுயநலத்தின் முழுவடிவமாய் தனக்கு மட்டும் தான் என நடந்து கொள்கி்றார்கள்!
இல்லையில் தம் இயலாமையை நிறைத்து மறைத்து நிற்கின்றார்கள்.
அருமையான ஒரு விளக்கம் சொல்லியுள்ளீர்கள் தன் கணவனை பிள்ளைகளை குடும்பத்தை ஒரு பெண் என்பவள் அன்பால் கட்டியாள வேண்டுமே தவிர ஆணவத்தினால் அடக்க ஆள நினைக்கக்கூடாது. அன்பு எனும் அருமையான ஆயுதம் தங்களிடம் இருப்பதை புரிந்திடாமல் அதிகாரம் செய்து சாதிக்க முற்படும் போது குடும்பங்கள் உடைகின்றன வேற்றுமைகள் தோன்றுகின்றன உண்மை உண்மையான விளக்கம் அதிகாரம் செய்ய நினைத்து சில நேரங்களில் பல பெண்கள் தோற்றே போகிறார்கள் இந்த விடயத்தில் .
இந்தப் பதிவில் நான் பல படிப்பினைகள் பெற்று விட்டேன்! ஒரு பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய அன்பு அவள் எதிர் பார்க்கும் நேரம் நாம் கொடுத்தால் அதை விட அவளுக்கு வேறன்ன சந்தோசம் இருக்கப்போகிறது என்று நீங்கள் எழுதிய அனைத்தும் அருமையாக உள்ளது
பெண் என்பவள் காற்று மாதிரி என்று சொன்ன விதம் அதன் விழைவு எப்படி இருக்கும் சாந்தம் சீற்றம் என சொன்னது பெண் என்பவள் யாருக்கும் அடிமையாக இல்லை தன் குடும்ப நலன் வேண்டி அவளாகவே அடங்கிவாழ்ந்தாள் என்றும் இல்லறத்தினை நல்லறமாக்கி அன்புக்கு அடங்கி அன்பால் ஆளவேண்டும் என்றும் நீங்கள் முடித்த விதம் மிகவும் சிறப்பு
ஒவ்வொரு வரி வரியாக பிரித்தெடுத்து கருத்துக்களை நான் தரவேண்டும் அப்படி அருமையான பயனுள்ள ஒரு கட்டுரை தந்த உங்களுக்கு நலிவற்ற நலமும் குறைவற்ற செல்வமும் பெற்று சந்தோசமாய் வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்
நன்றியுடன் நண்பன்
அம்மாடியோவ்! எம்மாம் பெரிய்ய்ய்ய்ய்ய்ய் பின்னூட்டம். நன்றிங்கோ தும்பி சார். உங்க ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி!
நீக்கு//எங்கே நிமிர்ந்த பார்வை,நேர்கொண்டநன்னடைவேண்டுமோ அங்கே மீறப்படுகிறது. எங்கே அச்சமும்,மடமும்,நாணமும் தேவையோஅங்கே அவையனைத்தும் காலில் மிதிபடுகின்றது! நிமிர்ந்து தைரியமாக நிற்க வேண்டிய இடத்தில் அவை வெளிப்பட்டு பெண் எனில் பேதைகளோ என எண்ணும் படி அவர்களின் மேதைத்தனம் மறுதலிக்கப்படுகின்றது. //
பதிலளிநீக்குஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் மேலே எடுத்துப் போட்டிருக்கும் பாரா... எல்லாப் பாராவையும் குறிப்பிட வேண்டும்... அவ்வளவு அருமை...
கூட்டுக் குடும்பம் எவ்வளவு முக்கியம் என்பதை 35-40 வயதில் தணித்திருக்கும் பெண்கள் உணர வேண்டும்.
பெண்களின் ஆணவம், உடை, சோர்ந்து போகும் மனநிலை என விரிவாகப் பேசி விரிந்து செல்கிறது கட்டுரை....
என்னக்கா... குமார் ரொம்ப நீளமான பதிவாப் போடுறீங்கன்னு சொல்லிக்கிட்டு மூணு பதிவை ஒண்ணாச் சேர்த்துப் போட்டிருக்கீங்க...
அருமை... தொடர்ந்து கலக்குங்க...
குமார் உங்களுக்குமா...ஹஹஹ் எங்களுக்கு அடிக்கடி வரும்...நீளமான பதிவு என்று...ஹஹஹஹஹ் பல சமயங்களில் சிறியதாக எழுத முடியவில்லை....குமார்...முயற்சி செய்கின்றோம்...
நீக்குஅருமையான பல நிகழ்வுகளை யதார்த்தங்களை எடுத்து முன் வைத்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குரெம்ப நன்றிங்க! உங்கள் ஆதரவினை தொடர்ந்து தாருங்கள்.
பதிலளிநீக்குபெண்மையின் மகத்துவம் பற்றிய...
பதிலளிநீக்குஆழமான கட்டுரை
பெண்மையை நேசிப்பவர்கள் வாசிக்கவேண்டியது
உள்ளதை உள்ளபடி சொல்லி இருப்பதற்கு என் பாராட்டுகள். கில்லர்ஜி கொடுத்த சுட்டியிலிருந்து வந்தேன். :)
பதிலளிநீக்குஉங்கள் கருத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். பெண்கள் அன்பால் அடக்கி ஆளாமல் கோபத்தாலும் அதிகாரத்திலுமே அடக்கி ஆள நினைக்கிறார்கள். அப்படியே செய்தும் வருகிறார்கள். பிறர் சொன்னாலும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். :(
பதிலளிநீக்கு