14 ஜனவரி 2017

சுவிஸர்லாந்தும் அதன் நதிகளும்.

இயற்கை வளங்கள் ஏதுமின்றி தலை நிமிர்ந்து நிற்கும் வளம் செழித்த சுவிஸர்லாந்து! சுவிஸ் என்பது ஸ்விட் என்பது போல் அதன் பேரைக்கேட்டாலே இனிய நினைவுகள் மட்டும் தான் தோன்றும்.தேனிலவுத்தம்பதிகளின் கனவு தேசம்.சினிமாக்களின் டூயட் களம்.வடக்கே ஜேர்மனி,மேற்கே பிரான்ஸ், தெற்கே இத்தாலி, கிழக்கே ஆஸ்திரியா மற்றும் லிக்டன்ஸ்டைன் ஆகிய நாடுகளை எல்லைகளாக கொண்டு நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய தேசம்.ஓரிடத்தில் நின்று சுழண்டு சுற்றி பார்த்தாலும் மலையும் முகடுமாகத்தான் தெரியும். மூன்று மாதங்கள் மட்டும் கொண்ட கோடையில் பச்சைபோர்த்திடும் மரங்கள் அடுத்து வரும் மாதங்களில் பச்சைகளை உதிர்த்து மொட்டையாகி பட்ட மரமாய் கற்பாறைகளை மட்டுமே காட்சிக்குள் கொண்டு வரும்.
தூரத்தில் தெரியும் வெண்பனிச்சிகரங்களின் தொடர் சுவிஸுக்கும் ஐஸுக்குமான தொடர்பை நினைவு படுத்திக்கொண்டிருக்கும்.
கடலும் இல்லை கடல் போல் ஏரிகள் உண்டு. அவைகளை நம்பி  இந்த மலைகள்,கற்பாறைகளுக்குள்ளும்விவசாயம்உண்டு.சோளனும்,கோதுமையும், உருளையும், காய்கறிகளும் விதைக்கப்படத்தான் செய்கின்றது. இல்லைகள் அதிகம் எனினும் இருப்பதை விதைத்து சிகரம் தொடும் வித்தையை நாம் இந்த அரசிடமும் மக்களிடமும் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
நாகரீகம் எனும் போர்வையில் மரங்களை அழிக்காமல் பழங்கால கட்டிடங்களை சேதப்படுத்தாமல் இருப்பதை இன்னும் அழகாக்கி உலகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பி, உல்லாசப்பிரயாணிகளின் வருவாய் மூலம் நாட்டின் செல்வத்தை உயர்த்திடுவது எப்படி என்பதையும் கண் முன் காட்சிகளாக்கிடும் நிஜ மாந்தர்கள் வாழும் நாடும் இதுவே. நம் தமிழர்களை போல் உலகில் மிகதொன்மையான கலாச்சாரங்களையும் பழக்கவழக்கங்களையும் கொண்ட நாடு.
உலகத்தில் விலை உயர்ந்த குங்குமப்பூ இந்த பனிப்பிரதேசத்திலும் விளைகின்றதென்பது கொசுறுச்செய்தி.
இயற்கை வளங்கள் இல்லை என்றால் என்ன? எங்களிடம் இருப்பதே எமக்கு போதும் என மலைகளிலும் அடிவாரங்களிலும் இன்னும் கிராமத்து மண் வாசனையோடு எளிய,செல்வந்தர்களாக வாழ்வோர் இங்கே உண்டு. நம் நாட்டினை போன்றே குடும்ப பாராம்பரியமும் கட்டுப்பாடுகளும், உறவுகளும், உண்மையும் இங்குண்டு.

பசுவும்,பாலும் தான் இவர்கள் விசேஷம் எனினும் காலச்சக்கரத்தின் சுழற்சியையும் வளர்ச்சியையும் எடுத்து சொல்லும் கடிகாரங்களின் கண்டு பிடிப்பும், அதன் மதிப்பும் கூட வானுயர்ந்தது தான்.
பசுவின்பாலைமட்டும்வைத்துக்கொண்டே.சாக்லெட்டையும்,சீஸையும் உற்பத்தி செய்து சுவிஸ் சாக்லேட் எனில் ஆல்ப்ஸ் உச்சியளவு உயர்ந்து நிற்கும் சுவிஸ் நாட்டில் நதிகள் குறித்து ஒரு பார்வை.
நான்கு பக்கமும் நாடுகள்.கடலில்லை ஆனாலும் எல்லைகளாக இருக்கும் நான்கு நாடுகளையும் அடுத்திருக்கும் கடலோடு கலக்க ஆயிரக்கணக்கான் கிலோ மீற்றர்கள் பயணம் செய்யும் நதிகள்மத்தியதரைக் கடல், வடகடல், அட்ரியாடி கடல், கருங்கடலுடன்தொடர்பு படுத்தப்பட்டு நாட்டுக்குள் எங்கும் பாய்ந்து பரந்து இருக்கும் நதிகள், ஆறுகள், குளங்களை இணைத்து செல்லும் வாய்க்கால்களுமாக நதி நீர் இணைப்புக்கு நல்லதொரு முன்னுதாரணமாக் நம் முன் நிற்கும் நாடு இது.41,285 சதுர கிமீ பரப்பில் 8 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சிறிய நாடு தான். ஆனால் இந்த நாடு கற்றுத்தரும் பாடம் அசாத்தியமானது.

இப்பதிவுடன் இணைத்திருக்கும் படத்தினை பெரிது படுத்தி நீல வர்ணத்தில் அடையாளம் காட்டப்பட்டிருக்கும் நதிகளையும், அவை செல்லும் பாதைகளையும் பாருங்கள்.

மேற்பரப்பில் ஜேர்மன், பிரான்ஸ் தேசம். வலது பக்கம் ஜேர்மன், ஆஸ்திரியா,இத்தாலி, இடது பக்கம் பிரான்ஸ் கீழ்ப்பரப்பில் பிரான்ஸ், இத்தாலி என நான்கு நாடுகள் சூழ்ந்திருப்பதையும் காணலாம்.
இன்னும் வரும்.

7 கருத்துகள்:

 1. ஸ்விஸ் பற்றித் தெரிந்து கொண்டேன். நதிநீர் வளம் இருக்கும் நாடு என்பதில் மகிழ்ச்சி. தமிழ்நாட்டின் நிலை அண்டை மாநிலங்களில் சென்று கையேந்தும் நிலை நினைவுக்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
 2. இருப்பதை வைத்து நிறைவு அடையும் தேசம் - நம்மிடம் இருப்பதை எல்லாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்....

  உங்கள் மூலம் ஸ்விஸ் தேசம் பற்றியும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு. தொடர்கிறேன்....

  பதிலளிநீக்கு
 3. அருமை சகோதரியாரே
  நண்பர் ஸ்ரீஅவர்களின் உள்ளத்து உணர்வுதான் எனக்கும்

  பதிலளிநீக்கு
 4. ஸ்விஸ் நாட்டைப் பற்றி அறிந்தமைக்கு மிக்க நன்றி சகோ. நல்ல வளம் மிக்க நாடு என்பதைவிட இருக்கும் வளங்களை எப்படிக் கருத்துடன் கையாள்கின்றார்கள் என்பதை அறிய முடிகிறது...நம் நாட்டைக் குறித்த ஆதங்கமும் கூடவே வரத்தான் செய்கிறது!

  கீதா: நிஷா ஸ்விஸ் பற்றி நாங்கள் அறிய நேர்ந்தது எப்போது என்றால் என் மகனுக்கு முதலில் கால்நடைத் துறையில் மேற்படிப்பு படிக்கவே ஆர்வம். அதற்காக ஸ்விஸில் உள்ள வாய்ப்புகளைத் தேடியபோது அந்த நாட்டைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. ஏற்கனவே ஸ்விஸ் சீஸ், சாக்கலேட்ஸ் எல்லாம் உலகத் தரத்துடன் புகழ்பெற்றவை ஆயிற்றே!! அதுகற்றுத் தரும் பாடங்களும்தான்....ஊழல் குறைந்த நாடு என்பதும் தெரியும்..நானும் மகனும் ஏற்கனவே ஸ்விஸ் நாட்டைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் இருந்தவர்கள் அதைப் பற்றி வாசித்ததும் ஆவல் கூடியது. இப்போது மேலதிகத் தகவல்கள் அதுவும் அங்கு வாழ்ந்துவரும் உங்களிடமிருந்து உங்கள் அனுபவத்துடன் வாசிக்க ஆவல் மேலிடுகிறது. தொடருங்கள் நிஷா...தொடர்கிறோம்....

  பதிலளிநீக்கு
 5. அருமை தொடர்கிறேன்...
  From Cell

  பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!