03 ஜனவரி 2017

கடந்து வந்த வருடம்!

ஒருவருடம் கடந்து போனது, புதுவருடம் பிறந்தும் விட்டது. கடந்த வருடத்தைய கசப்புக்களை  நினைத்து பதிவுகளும், வாழ்த்துக்களுமாய் ஒரு வாரமாக படித்தும் பகிர்ந்தும் விருப்பு வாக்கிட்டும், பின்னூட்டமிட்டும், கிறிஸ்மஸ், புதுவருடத்தினை குடும்பத்தோடு குதூகலமாக கொண்டாடியும் காலமது மிக வேகமாக ஓடிசெல்வதாகவே படுகின்றது. 

இதோ  ஒருவருடம் போய் புதுவருடம் வந்து மூன்று நாளை கடந்த நிலையில் நாமும் ஏதேனும் பதிவு போட்டு நம் இருப்பை எல்லோருக்கும் தெரிவிக்க வேண்டுமே எனும்  உள்ளத்து உணர்வில் வருடத்து முதல் பதிவாக எதை எழுதலாம் என சிந்தித்து.. நாலு வரியில் கவிதை என எதையோ கிறுக்கி அதை டிராப்டில் போட்டு விட்டு... ........😕😕😕😕😕  

பேஸ்புக்கில் அஜீவன் அண்ணாவில் ப்ரோபைல்  வசனம் கண்டு ஒரு தத்துவமும் முத்தாக எழுதி  அதை தனிப்பதிவாக்கலாமா.. இல்லையா என சிந்தித்து..... அடப்போங்கப்பா.. நான் கம்பெனியில் ஒரு கல்யாண வீட்டுக்கான ஈவன்ஸ் ஆயத்தங்களுக்கு கூட இத்தனை சிந்திப்பதில்லையாக்கும்.❤❤ 

சரி அந்த தத்துவ முத்துத்தான் என்னவென உங்களுக்கும் சொல்லி பதிவை தொடர்கின்றேன். சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டு கிடப்பதை விட சுதந்திரமாய் உப்பாகி நீரோடு கரைவது மேல் எனும் வரிகள் சொல்லும் கருத்தை உள்வாங்கினால் புத்தர் போதிமரத்தினடியில் பெற்ற ஞானத்தினை விட அதீத ஞானம் பெறுவோம்.

முதலாவதாய் இரு, அல்லது முதலாவதாக இருப்பவனோடு இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் மத்தியில் சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டு கிடப்பதை விட சுதந்திரமாய் உப்பாகி நீரோடு கரைவது மேல் என நினைப்பவர்கள் மதிப்புக்குரியவர்கள். சாதிக்கப்பிறந்தவர்கள். என்றே தோன்றும். பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம் என எங்கோ ஓரிடத்தில் வாழ்ந்து மடியாமல் வாழும் காலத்தில் எதையோ சாதித்தோம் என நான்கு பேர் மனதில் நிலைக்கும் படி தவறு கண்டு தட்டி கேட்கவும் தன் கருத்தினை தயங்காது எடுத்துரைக்கவும், மறைந்திருந்து எழுதாமல் தம்மை இன்னார் என வெளிப்படுத்தி எழுதவும் தைரியம் வேண்டும். தன் கருத்தில் என்றும் மனம். தளராத விக்ரமாதித்தன் தான் அஜீவன் அண்ணா. சில பல விடயங்களில் எனக்கும் அவருக்கும் மாற்றுக்கருத்திருந்தாலும் நட்பில் குறை காணாதவர்.

இணைய நட்பு என்றால் போலியானது,பொய் முகம் கொண்டதெனவும், பயனின்றி நேரத்தினை வீணாக்கும் இருப்பிடம் பேஸ்புக் எனவும், இதில் எழுதி நீ என்னத்தை சாதித்தாய்? இத்தனை நேரம் இதில் அமர்ந்திருப்பதனால் உனக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்? என கேலி கிண்டல் செய்வோரை கண்டு பரிதாபம் தான் தோன்றும்,அடிக்கடி நான் இனி வரமாட்டேன், இங்கிருந்து கிளம்புகின்றேன் என பதிவிடுபர்களையும் தன் பக்கத்தினை டிஆக்டிவேட் செய்வோரையும் கண்டால் அவர்கள் மீதான மதிப்பு சட்டென தாழ இறங்குகின்றது. அதது இருக்குமிடம் இருந்தால் நடப்பதெல்லாம் நல்லதாகவே அமையும், அதில் பேஸ்புக் நட்புக்களுக்கும் விதிவிலக்கு அல்ல. நல்லதை தெரிந்து நல்லதல்லாததை விட்டு விலகினால் எல்லாம் சௌக்கியமே!

சரியானதை தெரிந்தெடுக்க தெரியாமல், அமிர்தமானாலும் அளவோடு இருந்தால் தான் அது அமிர்தமாகும் என்பதையும் அறியாமல் கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்பது போல் இந்த எழுத்தினால் நாம் பெறும் உயிர்ப்பும்,உணர்வும், நட்பும், நன்மையும் அறியாமல் பிதற்றுவோரை கண்டு கொள்ளாது இனிவரும் காலங்களில் இன்னும் அதிகமாய் உள்ளத்து உணர்வுகளை எழுத்தாக்க வேண்டும் எனும் வைராக்கியத்தினை தந்து சென்ற 2016 ம் வருடம் என் வாழ்வின் பல நன்மைகளை விதைத்து சென்றிருக்கின்றது.

அப்படி என்னத்தை சாதித்தோம் என நினைத்து கொள்ளும் நேரங்களில் சட்டென ஏதோ ஒரு வகையில் எனை குறித்த பகிர்வுகள் என்னை பீனீக்ஸ் போல சிலிர்த்தெழ வைக்கும். அவ்வகையில் Geetha Mathi கீதாக்காவின் என்றாவது ஒரு நாள் ஆஸ்திரேலியப் புதர்க்காடுறை மாந்தர்களின் கதைகளாக எழுத்தாளர்   ஹென்றி லாஸன அவர்களில் கதைகளை மொழிபெயர்த்து வெளியிட்ட நூலின் நன்றியுரையில் என் பெயரை கண்டதும் உலகின் எங்கோ ஒரு மூலையில் நம் பெயரை சொல்ல எவரேனும் இருந்து கொண்டிருப்பார்கள் எனும் உண்மை புரிந்தது. அக்காவின் நினைவில் நான் இருந்ததும் என்றும் இருக்க வேண்டும் என்பதும் என் ஆசையும் தான்.

தமிழ் மன்றத்தில் நான் ஹேகா என என் கம்பெனி பெயரில் எழுதிக்கொண்டிருந்ததனால் கீதாக்காவுக்கு என் பெயர் ஹேகா ஆகிப்போனது. இன்னும் பலருக்கும் நான் இன்னும் ஹேகாவாகவே அதாவது ஹே.... காக்கா வாகவே இருக்கின்றேன். அப்படித்தானே மயூரன் ?


கீதாக்காவின் என்றாவது ஒரு நாள் நூல் அகநாழிகை பதிப்பகம் 182 பக்கங்களோடு அச்சாக்கினாலும் அவர் சென்னையில் வசிக்காத காரணத்தினால் வெளியிடு என எந்த விழாவுமில்லாமல் வெளி வந்ததனாலும் அவரிடம் இருக்கும் கூச்ச சுபாவத்தினாலும் அதிக விளம்பரமின்றி பேசப்படாமல் இருக்கிறது.. எத்துணை கல்வியில் மேம்பட்டிருந்தாலும், அறிவில் நிறைந்திருந்தாலும், இலக்கியங்களில் ஊறித் திளைந்திருந்தாலும், சாதாரண குடும்பப்பெண்மணியாக வீட்டுத்தலைவியாக பிள்ளைகளின் வளர்ப்பில், கல்வியில் பாதுகாப்பில் அதிக நேரம் செலவளிக்க வேண்டிய நிர்பந்தத்தினை ஒரு பெண்ணாய் நானும் அறிவேன். அவ்வகையில் கீதாக்காவுக்குள் மறைந்திருப்பதை வெளிக்கொண்டு வர இதுவரை தகுந்த களம் அமையாதிருபப்தை இட்டு எனக்குள் ஆழ்ந்த வருத்தம் உண்டு. பிள்ளைகளின் கற்றலின் பின்னனியில் அவரின் அர்ப்பணிப்பு இருப்பதனால் அவரால் அதிகமாய் இப்போதெல்லாம் எழுத முடிவதில்லை என நினைக்கின்றேன்.இத்தனைக்கும் அக்கா எழுத்து பாராம்பரியமிக்க குடும்பத்திலிருந்து வந்திருக்கின்றார். போட்டியும் பொறாமையும், பெருமையுமான இவ்வுலகில் நம்மை நிலை நாட்டவும் போராட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றோம்.

கீதாக்கா தன் முதல் நூலாக தன் சொந்த எழுத்தினை வெளியிட்டிருக்கலாம் எனும் ஆதங்கமும் எனக்குள் உண்டு. தமிழ் மன்றத்தில் அவரின் சொந்த கதைகள், நாவல்கள், தொடர்கள், கவிதைகள் கொட்டிக்கிடப்பதை நான் நன்கறிவேன் எனும் போது அவைகளை தொகுத்து பதிவாக்கி முதல் நூலாக வெளியிடாமல் மிகவும் சிரமப்பட்டு மொழிபெயர்த்து நூலாக்கி இருக்கின்றார். மொழிபெயர்ப்பு நூல் என்பது அத்தனை இலகுவானதல்ல என்பதை என்னுடைய சங்ககால பூக்கள் எனும் குறிஞ்சுப்பாட்டில் பூக்களை குறித்த பகிர்வுக்கான் தேடலின் போது ஜேர்மன், ஆங்கில தளங்களில் பூக்களின் தாவரவியல் பெயரை மட்டும் வைத்து விபரம் தேடி மொழி பெயர்க்க ஆன சிரமத்தினை நான் நன்குணர்ந்திருக்கின்றேன். அவ்வகையில் அக்காவின் நூல் இன்னும் பேசப்பட வேண்டும். அவுஸ்ரேலிய புகழ் பெற்ற எழுத்தாளரின் கதைகளோடு நூறாண்டுகள் முந்தைய சரித்திர சம்பவங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும் கதைகளை நாம் அனைவரும் படித்தறிய வேண்டும்.

அக்காவின் என்றாவது ஒரு நாள் அக நாழிகை பதிப்பக நூல் சில நூறுகளில் தான் வெளி வந்திருக்கின்றது. அவரை அறிந்த தமிழ் மன்ற, முத்தமிழ் மன்ற வலையுலக உறவுகள் ஆளுக்கொரு புத்தகம் ஆர்டர் செய்து வாங்கி அவரை ஊக்கப்படுத்தினால் தான் அவர் மேன் மேலும் தம் திறமைகளை அச்சில் கொண்டு சேர்க்க முடியும். அக்காவுடன் தொடர்பு கொண்டு நூலை பெறும் வழிகளை கேளுங்கள் நட்பூக்களே! இனி வரும் நாட்களில் அவரின் நூல்கள் மேன் மேலும் வெளிவர அனைவரும் உந்து சக்தியாக இருங்கள்.

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈 🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈 🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

நான் வலையுலகம் வந்து ஒருவருடம் தான் கடந்து போனதா என உணர முடியாமல் வலையுலக ஜம்பவான்கள் மட்டுமல்ல பல எழுத்தாளர்களின் , இலக்கிய ஆர்வலர்களின் நட்பை பெறவும் களம் அமைத்து தன் எழுத்தில் எங்கேனும் ஓரிடத்தில் என் பெயரை நிலைக்க செய்யும் வார்த்தைகளின் வசந்த ஊஞ்சலாடும் அன்பு மனசு குமார் தன் கடந்த வருட நினைவுப் பதிவில் என்னையும் நினைவு கூர்ந்திருந்தது கண்டு கோடி கோடி பணம் கொட்டினாலும் இந்த அன்புக்கு ஈடாகுமா என கேட்க தோன்றியது.

பேஸ்புக்கிலும் , வலையுலகிலும் தம் முகம் மறைந்து சுயம் தொலைந்த்த எழுத்தாளர்களாய் பலர் இருக்க குமாரின் நட்பினால் என் எழுத்தும் வாசிப்பும் விரிவடைந்தது என்பேன். கூடவே சேனைத்தமிழ் உலாவில் எனக்கு கிடைத்த தம்பிகளின் அன்பு ஊக்கமூட்டல், அக்காவெனும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் அழைப்புக்கள் அனைத்துமே என்னை மெருகேற்றிக்கொண்டே இருக்கின்றது..

பேஸ்புக்கில் அறிமுகமாக சில தடவைகள் சில வார்த்தைகள் மட்டும் உரையாடிபிருந்த தோழி Abirami Umashankar அபிராமி கருத்திலும் என் எழுத்துக்கள் பட்டிருப்பதை அவரின் வியக்கவைத்த பதிவர்கள் தொகுப்பில் கண்டுணர்ந்த போது மெய் சிலிர்த்ததென்பேன். குறைகளை மட்டும் குடம் குடமாய் அள்ளி தலையில் ஊற்ற தேடும் இவ்வுலகில் நிறையுணர்ந்து நிறைமதியாக பாராட்டிய அபிராமியும் கடந்த மாதமிருந்து நம் வலையுலக நட்பானார். அருமையான பாடகியும் எழுத்தாளருமாய் அன்பால் உருவான் சிற்பமோ இவர் என எண்ண வைக்கும் படி அம்மாவுக்கும் பெண்ணுக்குமான உறவில் என்னை அசத்தும் ரியல நாயகி இவரே. என் க(வி)தைகள் எனும் பெயரில் நம்முடன் இணைந்திருக்கின்றார். அவரையும் ஊக்கப்படுத்தி இன்னும் அதிகம் எழுத வையுங்கள்.


கடந்த வருடம் எனக்கு நல்ல வருடமாகவே கடந்திருக்கின்றது . மலேசியாவில் இருக்கும் ருபனின் எழுத்துப்படைப்புக்கள் ரூபன் மூலம் திருச்சியிலிருந்து வெளிவரும் இனிய நந்தவனம் செப்டம்பர் இதழை சுவிஸ் சிறப்பிதழாக வெளியிட்டு அதில் என் நேர்காணலை யும் கேட்டு பிரசுரித்திருந்தார்கள்.அதனூடாக சுவிஸிலிருக்கும் சில பல இலக்கிய ஆர்வலர் மத்தியில் நான் பேசுபொருளாகி இருக்கின்றேன். இனிய நந்தவன சிறப்பிதழை படித்து பலர் பாராட்டி இருந்தார்கள்.

பேஸ்புக்கில் நேரம் வீணாகின்றது, பயன் இல்லை. வெற்று அரட்டை தான் என கூச்சல்களுக்கிடையில் சரித்திர கதைகளை படிக்கவென நித்யாகுமார், தமிழ்வாசி பிரகாஷ், தினேஷ்குமார் என சிறு குழு ஆரோக்கியமானதாக உருவாகி திரு கணேஷ்பாலா சாரும் அப்பப்போ தான் படித்தவைகளை கருத்திட்டு வரலாற்றின் இன்னொரு பக்கத்தினை பலர் ஆர்வமாக படிக்கவும் விமர்சிக்கவும் தொடங்கியதும் வாசிக்கும் ஆர்வத்தினை மேம்படுத்தியதும் ஆரோக்கியமான் விவாதங்கள் விமர்சனங்களுக்கும் அமைவாகியது என்பேன்.

வலையுலக ஜம்பவான்கள் புதுக்கோட்டை டீமின் 2015 ஆவது ஆண்டில் வலைபுலக திருவிழா என்னை வலைப்பதிவராக்க தூண்டியது எனில் அவர்களின் நட்பை பெறயும் முத்து நிலவன் ஐயாவின் அறிமுகம் பெறவும் என்னைக்குறித்தும் என் எழுத்துக்குறித்தும் பலருக்கு அறிமுகப்படுத்திய வகையில் நான் ஒன்று சொல்வேன் மீரா செல்வக்குமார் சாரும் என் நன்றிக்குரியவர்களாகின்றார்கள்.

கடந்த வருட நட்புலகில் என்னுள்: நுழைந்து கடல் கடந்திருந்தாலும் எழுத்தில் அருகாகியோராய்...உரிமையாய் என்னை கிண்டல் செய்வதை தாம் வேண்டிய வரமாய் கொண்ட அவர்கள் உண்மைகள் மதுரைத்தமிழனும், எல்லோரிடமிருந்து தூரமாக இருப்பதாக தன் எழுத்துக்களால் காட்டிக்கொள்ளும் ரிலாக்ஸ் பிளீஸ் வருணும், அட போட வைப்பார்கள். இவர்களுடனான என் பதிவுகளின் பின்னூட்ட உரையாடல் கண்டு என் இன்பாக்சில் வந்த சிலர் உங்களுக்கு இவர்கள் முன்னரே அறிமுகமோ என கேட்டதும் உண்டு. அதென்னமோ ஆயிரம் பேருடன் அறிமுகமிருந்தாலும் ஒரிருவர் எழுத்தில் மட்டுமே உரிமை உணர்வோடு கருத்திட முடிகின்றதென்பது ஆச்சரியமான உண்மை தான்.

இதில் நான் முக்கியமாக குறிப்பிட வேண்டியவர்கள் பட்டியலில் கில்லர்ஜி சார். தில்லையகத்து துளசிஅண்ணா, கீதாக்கா, எங்கள்பிளாக் , வெங்கட் நாகராஜ் அண்ணா, தேன் மதுரம் கிரேஷ், ஏஞ்சலோ ஏஞ்சல், தனபாலன் அண்ணா, என இன்னும் பலர் இருக்கின்றார்கள். ஒவ்வொருவரையும் குறித்து அடுத்தடுத்த பதிவுகளில் எழுதலாம் என இருக்கின்றேன்.

இந்தப்பதிவையே மதுரைத்தமிழன் சுவிஸிலிருந்து அமேரிக்காவுக்கு ரோடு போட்டேன் என கேலி செய்வார் என்பது நிச்சயம் எனினும் கிடைக்கும் நேரத்தில் அத்தனையும் எழுத வேண்டும் எனும் ஆர்வத்தில் கொஞ்சூண்டு நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்டு போனது,

மன்னீச்ச்ச்ச்ச்ச்ச்ச்சூ படிச்ச்ச்ச்ச்ச்ச்சூ கருத்திடுக.

அனைவருக்கும் அன்பின் புதுவருட நல் வாழ்த்துகள்
.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 


23 கருத்துகள்:

 1. இவ்வாண்டு மேலும் புதிய நட்புகள் மலரட்டும்...

  பதிவில் குறிப்பிட்ட அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஐயா. பதிவு போடும் வேகத்தில் வந்து பின்னூட்டமிடும் உங்கள் அதி வேகம் கண்டு வியக்கின்றேன்

   நீக்கு
 2. Elegant review of the bygone year. Congrats! இராய2செல்லப்பா2நியுஜெர்சி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சார். உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்

   நீக்கு
 3. ஆஹா... மிக அருமையான காலத்தொகுப்பு.

  காலநதி ஓடிக்கொண்டே இருக்கிறது...
  நினைவுகளை நம்மிடம் விட்டுவிட்டு..

  காற்றை உண்டு வாழும் ஒரு உயிரி போல கடந்தவைகளை நினைத்து வாழும் விநோதப்பிறவிகள் தான் மனிதன்..

  சிலருக்கு நல்லவைகளும்,சிலருக்கு ஒவ்வாதவைகளும்..

  உங்களுக்கு எப்போதும் நல்லவையே வாய்க்கும்....
  கொஞ்சம் சரியில்லை என்றாலும்..அதை சுட்டு,வேகவைத்து பக்குவப்படுத்தும் கைவாகும் உங்களிடம் உண்டு..

  பாருங்கள் கடவுளை...உங்களை நல்ல உணவளிப்பவராகவே படைத்துவிட்டார்..
  வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கவிதை வரிகள் போல் பின்னூட்டமும் அசத்தல் செல்வா சார். கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 4. சிறப்பான பகிர்வு. புது வருடம் சிறப்பாக ஆரம்பித்திருக்கிறது. சிறப்பாகவே தொடரட்டும்....

  இப்பதிவில் என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி. வலையுலகம் நமக்கு எத்தனை நட்புகளைத் தந்திருக்கிறது..........

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களை பத்தி இனித்தான் குறிப்பிடணும் சார். உங்க்ள் கருத்துக்கும் நன்றி

   நீக்கு
 5. என்னை பார்த்தால் கேலி செய்கிற ஆள் மாதிரியா இருக்கு? ஹும்ம்ம் ம்மீ பாவம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பின்னே இல்லையா? இந்த மதுரைத்தமிழன் யாருன்னு என் இன்பாக்சில் கேள்வி வந்துது தெரிவுமா? எல்லோருக்கும் சிம்ம சொப்பனமாய் அரசியல் பதிவு போட்டு அலறி ஓட வைக்கும் நீங்கள் என்னை கிண்டல் சுண்டல் தானே இதுவரை செய்வீர்கள். உங்களுக்கு பயந்தே என் நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ன்ன்ண்ட பதிவுல்லாம் குட்டி குட்டியா தான் போடுகின்றேனககும். அவ்வ்வ்வ்வ்வ்வ்

   நீக்கு
 6. நான் முகம் காட்டாதபதிவர் இல்லை முகம் காட்டும் பதிவர்தான் ஆனால் என்ன பெண்களுக்கு மட்டும் முகம் காட்டுவதில்லை காரணம் அவர்கள் என் அழகில் மயங்கி பைத்தியமாகிவிட்டால் என்ன செய்ய்வது ஹீஹீ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் ஒன்றும் உங்களை சொல்லவிலலையே> ஓஹோ உங்களுக்கு இந்த முகமூடி சேமாய் பொருந்தி இருக்குது போல .. பாவமபா நீங்களே எடுத்து மாட்டிகிட்டு முழிக்காதிங்க.

   நீக்கு
 7. வேலைக்கு நேரமாச்சு மீதி கதையை அப்புறமா வந்து வைச்சுகிறேன் .புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும் நல் வாழ்த்துக்கள். அப்புறமா வந்து என்னத்தை வைச்சிக்க திட்டம் போட்டிங்க சார்? இன்னும் என்ன பாக்கி இருக்கு?

   நீக்கு
 8. திரும்பிப் பார்த்து கடந்த வருடத்தை அலசியிருப்பது ரசிக்க வைக்கிறது. பதிவில் எங்களுக்கும் இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி. ஃபேஸ்புக் ஊறுகாய் போலத் தொட்டுக்க கொள்ளவே என்று நான் வைத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஊறுகாயோ மெயின் டிஸ்ஸோ அமிர்தமானாலும் அளவோடு இருக்க வேண்டும் என்பது என் பாலிசி ஐயா.

   உங்கள் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 9. தாங்கள் கடந்து வந்த பாதை மிகச் சிறப்பு...

  எல்லாயிடத்துலும் எதற்கு என்னைச் சொல்லிக் கொண்டு... எழுத்து ஒரு வரம் அப்படின்னு சொல்வாங்க... ஆனா என்னைப் பொறுத்தவரை அது எல்லாருக்கும் வரும்... நாமதான் ஆரம்பிப்பதில்லை... என்னை ஆரம்பிக்க வைத்தவர் என் பேராசிரியர்... தாங்கள் நான் சொல்லும் முன்னே சேனையில் கலக்கிக் கொண்டிருந்தவர்தான்.

  நான் சேனைக்குள் வந்தபோது என்னோட முதல் தொடர்கதை குறித்து பேசினீர்கள் பாருங்க... அதுவரை என் தளத்தில் உங்க பெயரை பார்த்ததேயில்லை... கருத்துப் போட மாட்டேன்... ஆனா தேடிப் படிப்பேன்னு சொன்னீங்க அதுதான்... அந்த அன்புதான் நம்மை அக்கா-தம்பியாய் பிணைத்தது அக்கா...

  எழுதுங்க... இன்னும் எழுதுங்க....

  கீதா அக்காவின் பகிர்வுகளை முகநூலில் பார்ப்பேன்... புத்தகம் குறித்து விவரம் போட்டிருந்தார்கள் என்று நினைக்கிறேன்...

  சந்தர்ப்பம் கிடைத்தால் வாங்கி வாசிக்கிறேன் அக்கா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம்ம்ம் இருக்கலாம் குமார், ஆனால் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டியவளை இழுத்து வந்து வானத்தில்பறக்க வைத்தவர் நீங்கள் தான். அவ்வகையில் சொல்லித்தானே ஆகணும், நன்றிப்பா.

   நீக்கு
 10. புது வருடத்தில் புதிய நட்புகளின் அறிமுகம் நிறைய பதிவுகள்மூலமாக நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள அருமையான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்திருக்கும் அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள்.பின்னூட்டங்கள் வெகு சுவாரசியம்தான்..

  பதிலளிநீக்கு
 11. அன்பு நிஷா அருமையான நினைவலைகள்பா ..ஆரம்ப காலத்தில் கீதா பக்கம் அப்புறம் சில இடங்களில் உங்க பின்னூட்டங்கள் பார்த்திருக்கிறேன் நான் நினைப்பதை சில நேரம் தயங்குவதை இன்னும் சில நேரம் தொண்டைக்குள் நிற்கும் வெளி வர வார்த்தைகளை கருத்துக்களை உங்கள் கருத்துக்களில் காணும்போது வியந்திருக்கேன் //சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டு கிடப்பதை விட சுதந்திரமாய் உப்பாகி நீரோடு கரைவது மேல் ....இதை பார்த்ததும் இன்னும் ஆச்சயமே 3 நாள் முன்புதான் வாழ் நாள் முழுதும் ஆடு போலி ருப்பதை விட ஒரே ஒரு நாள் ஓநாயாக இருப்பது மேல்// என்று ஒரு படத்தையும் வாசகத்தையும் fb யில் போட எடுத்து வைத்தேன் அதே கருத்து உங்களுக்கும் வந்திருக்கே தத்துவமாக உங்களுக்கும்அ தே சிந்தனை ..
  முகப்புத்தகம் நட்புக்கள் குறித்த உங்கள் பார்வையும் புரிதலும் பிரமிக்க வைக்கிறது என்னை விட இளையவர் ஆனால் எத்தனை சீரிய சிந்தனை ..மனமார்ந்த பாராட்டுக்கள்
  நீங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள அனைவரும் எனது நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..

  பதிலளிநீக்கு
 12. நிஷா, இப்பதிவினை இன்று தான் படிக்கிறேன் என்பது வெட்கமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. என்னையும் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பது மிகவும் மகிழ்ச்சி தருகிறது நிஷா. முகநூலில் அறிமுகமாகி நெருங்கியத் தோழிகளாகிவிட்டோம். சுவிஸில் எனக்கொரு தோழி இருக்கிறார் என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு என் மனதில் அமர்ந்துவிட்டீர்கள். இந்த நட்பு என்றும் இனிமையாய்த் தொடர விரும்பி இறைவனை வேண்டுகிறேன். நன்றிப்பா

  பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!