27 டிசம்பர் 2016

தன்னைப்போல் தன் அயலானை நேசிக்காத மனிதர்!?

2016 ஆண்டின் இறுதி நாட்களில்.....?
12 வருட சுனாமி அழிவின்  நினைவுகளுடன்.......😕😕😕😕😟😟😟😟😟
கடந்து வந்த பாதையில்  நடந்து வந்த  காலங்களை நினைத்து பார்க்கின்றேன்.

வாக்குத்தத்தத்தின் படி இனத்துக்கு விரோதமாக இனமும், ராஜ்ஜியத்துக்கு விரோதமாக ராஜ்ஜியமும் கிளம்பும், கடல் பொங்கும், கப்பல் கவிழும், போக்குவரத்து யாவும் நிற்கும் என்பதோடு யுத்தங்களையும் அதன் செய்திகளையும் கேட்டும் உணர்ந்தும் அழிவுகளை நோக்கிய கடினமான பாதையில் நடந்து கொண்டிருந்தும் கூட மனிதர்கள் சகிப்புத்தன்மை அற்றவர்களாக பேராசை கொண்டு தம்மை குறித்து மட்டும் சிந்திக்கும் சுய நலமிகளாக இருப்பதேன்?
நிரந்தரமில்லாத இவ்வுலகில் நிரந்தரமானவை பகைமைகளும் விரோதங்களும் மட்டும் தானோ? 

கடல் கோளால்உலகம் பிரிந்தது, ஊர் அழிந்தது, மனிதர்கள் கொத்துக்கொத்தாக கடலோடு ஜலசமாதியானார்கள். ஒரே நொடியில் அத்தனை வருடம் சேர்த்து வைத்ததை இழந்து அனாதையாய் அகதியாயும் ஆனார்கள் என்றான பின்னும் மனித மனங்கள் மட்டும் கடவுள் பயம் அற்று பொய்யும்,பொறாமையும்,போட்டியும்,எரிச்சலும்,கோபமும்,வைராக்கியங்களும், விரோதங்களும், பழிவாங்கல்களும், புரிதலின்மையுமாய் உள்ளான இருதயங்களை கசப்புகளால் நிறைந்திருப்பதேன்?

காரணமேயில்லாத பகைமைகளை மனதில் விதைத்து கொண்டு அகந்தையை அகத்தில் நிரப்பி அன்பை அழித்து அகங்காரத்துடன் ஆங்காரமாய் பொருளாசையும், பேராசைக்காரருமானவர்களை விட்டு விலகிடும் வலிமை வேண்டும் இறைவா.

என்னைப்போல் எனை சூழ உள்ளோரையும் நேசித்து மதம் எனும் பெயரில் மதம் பிடித்தாடாது மனித மனங்களை புரிந்து மனிதத்தை ஜெயித்து மரணத்தினை ருசித்து உன்னை கிட்டிச்சேரும் வரம் அருள்வாய் இறைவா.
💓💓💓💓💓💓💓💓💓💓 💓💓💓💓💓💓💓💓💓💓 💓💓💓💓💓💓💓💓💓💓 

1. தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும் 
பலகோடித் திரள்கூடி குகைதேடி வேகம் ஓடும் 
விண்மீன்கள் இடம்மாறிப் பாரெங்கும் வந்து கொட்டும் 
நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் 

2. ஐந்து கண்டம் தனில் ஆளும் ஆட்சியாவும் அற்றுப்போகும் 
இருள் சூழும் இடிமுழங்கும் கூச்சல் கேட்கும் கண்ணீர் சிந்தும் 
தூயர் கூட்டம் சுத்த உள்ளம் சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும் 
நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் 


3. கடல் குமுறும் கரை உடையும் கப்பல் கவிழும் பெரும் நாசம் 
போக்குவரத்து யாவும் நிற்கும் இனி உலகம் என்பதில்லை 
வாக்குமாறா வேதம் கூறும் வார்த்தை யாவும் நிறைவேறும் 
நானோ ஆடி மிகப்பாடி என்நேசருடன் சேர்வேன்

அன்பு நட்பூக்கள் அனைவருக்கும்  இனிய கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துகள்.
💓💓💓💓💓💓💓💓💓💓 

9 கருத்துகள்:

 1. கிறிஸ்மஸ் தின நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. எங்கும் அன்பு பெருகட்டும்.....

  அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்.....

  பதிலளிநீக்கு
 3. இனிய கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 4. சிறப்புப் பதிவு வெகு வெகு சிறப்பு
  இனிய கிருஸ்மஸ் நல்வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
 5. எவ்விடமும் அன்பு பெருகட்டும்...நல்லதொரு பதிவு! எல்லோருக்கும் கிறித்துமஸ் தின வாழ்த்துக்கள்!!! இன் வரும் புத்தாண்டில் மட்டுமின்றி எல்லா வருடங்களிலும் உலகெங்கும் அன்பு தழைத்திட வேண்டுவோம்...

  பதிலளிநீக்கு
 6. அன்பிற்குமும் உண்ே டா அடை க்குந்தாள் !

  பதிலளிநீக்கு
 7. அருமையான பதிவு நிஷா..பாடலும்.
  கிறிஸ்துவின் அன்பைப் பகிர்ந்து நானும் அவர் பாதம் சேருவேன். அல்லேலூயா

  பதிலளிநீக்கு
 8. தன்னை உண்மையாக நேசிப்பவர்கள் அயலாரையும் கண்டிப்பாக நேசிப்பார்கள். உலகமெல்லாம் அன்பு பெருகட்டும்.

  பதிலளிநீக்கு
 9. இன்றுதான் தங்கள் தளம் காணும் வாய்ப்பு கிடைத்தது. அனைவருக்குமான அருமையான பிரார்த்தனை. நன்றி.

  பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!