15 ஜனவரி 2017

சுவிஸில் ஐஸ்!-The People vs Winter.

சுவிஸ் பனியில் ஒருமுறை வலம் வந்தால் சுவிஸில் ஐஸ் ஸ்வீட்டா என கேட்க தோன்றும்.

இது தான் இது தான் சுவிஸ். 
இங்கே  தான் நாங்கள் குடி இருக்கின்றோம். 
💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃
ரசிக்க வைத்தாலும் வலிக்க வைக்கும் நிஜங்கள்.
 உயிரை உறையவைக்கும் கணங்கள்.
மழை பொழிந்தாலும்  
வெயில் பொசுக்கினாலும் 
புயல் வீசினாலும் 
பனி கொட்டினாலும்
எம் பணி மாறிடாது. 
கடற்கரைமண் போல் முழங்கால் புதையும் ஐஸ் மணல் துகள் முன் 
ஒன்றின்மேல் ஒன்றாய் ஐந்தாறு உடைகள் உடலைக் கவசமாய்க்காக்க
பாரமாய் பாதணி பாதத்தை இறுக்க. 
சறுக்கென வழுக்கி தரையை தொட்டு முத்தமிடும் தருணத்தில் மல்லாக்க விழுந்தால் பல்லக்கிலும் பயணம் செய்வோம்.

வானத்திலிருந்து பவளமல்லிப்பூப்போல் சொரிந்திடுவதை ரசித்திடும்னதில் நான்கு கால் பேருந்தும், சிற்றூந்தும்  சறுக்கிடும் போது இரண்டு கால் மனிதர் எம்மாத்திரமென்பேன்? 

பயணிகள் பேருந்து பயணிகளுடன் சறுக்கி செல்லும் போது அதில் பயணம் செய்வோர் மன நிலை எப்படி இருக்கும்?  


சுவிஸ் வேக வீதிகள்  ஐஸ் பனி மழையின் போது...!

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எல்லாம் இருந்த போதும் / எதையும் இழக்கவில்லை எனினும் நம்மில் பலர் வாழ்க்கையை நொந்து கொண்டுதானிருக்கிறோம்.
இழந்தவைகள் இனியில்லை என்றான பின்னும் இழப்பை நினைத்து கலங்காத உள்ளம் வேண்டும்.
இழப்பதற்கு எதுவும் இல்லை எனினும் இரப்பவர்க்கு கொடுக்கும் மனம் வேண்டும்.
இழப்புக்களை நினைத்திடாமல் இறுதிவரை இரக்கத்தோடு இயங்கிடல் வேண்டும்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤



12 கருத்துகள்:

  1. இல்லாமல் இருப்பதிலிருந்து இருப்பதை கொண்டு வருவதே வாழ்க்கை...

    பதிலளிநீக்கு
  2. வாழ்வு எளிதல்ல என்பதை உணர்கிறோம் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  3. Video பிறகு காண்பேன் பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. என் மகனும் கனடாவில் இது போன்ற குளிரில் தான் இருக்கிறான் .
    நீங்களெல்லாம் குளிரை என்ஜாய் பண்ணிக்கொண்டு சந்தோஷமாக இருந்தால் சரி

    பதிலளிநீக்கு
  5. காணொளி காணும்போது Road rash game நினைவுக்கு வருகிறது!! ரோடெல்லாம் வெறுமையாக உள்ளன. போர் அடிக்கும் போலவே சகோ!

    பதிலளிநீக்கு
  6. பார்க்கவே பயமாக இருக்கிறதே சகோ! பனியில் கார் ஓட்டுவது என்பது...ஐயோ....

    கீதா: பார்க்க அழகாய் இருந்தாலும் அழகில் அபாயம் உண்டு என்பதுபோல் என் மகனும் கனடாவில் இருந்தான்...மகனின் அத்தை மகன் ஸ்விஸில் சில வருடங்கள் போஸ்ட் டாக்டோரல் ரிசர்ச்சுக்காக இருந்தான் அப்போது சொல்லியிருக்கிறான். அதற்கு முன்பே நானும் மகனும் என்றேனும் ஒரு முறையாவது ஸ்விஸ் அதுவும் வின்டரில் விசிட் செய்ய வேண்டும் என்று ஆவலுடன்....

    தங்கள் வாழ்வு நடைமுறை சிக்கல்கள் நிறைந்தது என அறிய முடிகிறது....வாழ்வு எளிதல்ல...உண்மைதான்

    பதிலளிநீக்கு
  7. அங்கு வாழும் நண்பர்கள் சொல்லியிருப்பதை கேட்டிருக்கிறேன். ஒரு பனிக்காலத்தை பார்த்துவிட்டால், அதன்பின் அங்கு வாழவே பிடிக்காது. பனி அவ்வளவு கொடுமை என்று. தங்களின் பதிவு அதை மேலும் உறுதியாக்குகிறது.
    அழகான அனுபவப் பகிர்வு!

    பதிலளிநீக்கு
  8. ஸ்நோ வென்றால் அதிகம் பிடிக்கும் எனக்கு ஆனால் வயசாகிவிட்டதால் சின்ன புள்ளைகள் மாதிரி அதில் சென்று விளையாட முடியாததால் நான் காரில் உள்ள ஸ்நோவை தள்ள சென்றுவிடுவேன் என் வேன் என் மனைவி கார் மட்டுமல்ல என் பக்கத்துவிட்டில் உள்ளவர்களின் காரையும் க்ளின் செய்துவிடுவேன் எனக்கு சந்தோஷம் அவர்களுக்கும் சந்தோஷம்

    பதிலளிநீக்கு
  9. பனிப் பொழிவு அதிகம் இருக்கும் போது பார்க்க பரவசமாய் இருக்கும் ஆனால் அடுத்து வரும் நாட்களில் பார்க்க சகிக்காது அதுவும் டிராபிக் அதிகம் இருக்கும் ரோடுகளில்......

    பதிலளிநீக்கு

  10. மழை பெஞ்சால் கவிதை எழுதுகிற ஆட்களை பார்த்து இருக்கிறேன் ஆனால் ஸ்நோ பெஞ்சால் தத்துவம் எழுதுற ஆட்களை இப்பதான் பார்க்கிறேன் ஹீஹீ வாரேன்

    பதிலளிநீக்கு
  11. இப்படி பனி பொழிவு தொடர்ந்து இருக்கும் இடத்தில் இருப்பது கஷ்டம் தான். சில நாட்கள் இப்படி பனிப்பொழிவு இருந்த இடத்தில் இருந்து “அனுபவித்து” இருக்கிறேன்.

    ஸ்விஸ் பற்றிய தகவல்கள் தொடரட்டும்.... நானும் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!