07 ஜனவரி 2017

SAVE WATER SAVE LIFE - ஒரு பிடிச்சோற்றின் முன்

மூவிரண்டாய் மூழ்கி இருந்தும் 
அடி முதல் முடி வரை விரவிப்பரந்தும் 
அங்குசமின்றி  ஆளுமை செய்தும் 
அணைகளை உடைத்து தடைகளை கடந்தும் 
அலைகளால்  அலைக்கழித்தும் 
பொங்கிப்பெருகி  காட்டாறாய்  ஓடி 
நாணிடும் நங்கை போல்  கொஞ்சி நடந்து 
கங்கா, யமுனா, சரஸ்வதி என்றென போற்றி
காவேரிக்காக களப்பலி கொடுத்ததும் ஏனோ?வண்டல் நிலமோ பாளம் போல் வெடிக்க
நெல்மணிக்கதிர்கள்  தாகத்தில் தவிக்க
கரிசல் பூமியின் கதறல் கேட்டு 
இனித்திடும் கரும்பின் சுவையும் கசக்க
பருத்திச்செடியோ செம்மண்ணின் சூட்டால் 
சுழன்று வெடித்து சுக்கு நூறாக 
வளமான மண் தேடி விவசாயி அலைய
உயிரான  நீர் வளம் உருக்குலைந்திட
விசமாக்கும் வித்தையை  களமாக்க துடிக்கும் 
அடப்பாவி மனிதா! 
ஒரு பிடிச்சோற்றின் முன் 
ஒரு கிலோ தங்கமோ,  ஓராயிரம் கோடியோ 
உன்  உயிர்க்கு உரமாகாதுணர்வாய். 
12 கருத்துகள்:

 1. எவ்வளவு பெரிய தத்துவத்தை?
  ஒரு சித்தனின் பாடல் போல...
  காணும் அவலங்கள்..
  செத்துவிழும் உழவர் மேனிகள்...
  வரிசையில் நின்று புழுங்கும் மாந்தர்கள்..

  கேட்டரிங் அம்மா...
  கேட்டோம் கேட்டோம்..

  பதிலளிநீக்கு
 2. ஒரு பிடிச்சோற்றின் முன்
  ஒரு கிலோ தங்கமோ, ஓராயிரம் கோடியோ
  உன் உயிர்க்கு உரமாகாதுணர்வாய்.
  உண்மை
  உண்மை

  பதிலளிநீக்கு
 3. அனைவரும் உணர வேண்டிய வரிகள்...

  பதிலளிநீக்கு
 4. கடைசி வரிகள் படித்து சிலிர்த்தேன்

  பதிலளிநீக்கு
 5. //ஒரு பிடிச்சோற்றின் முன்
  ஒரு கிலோ தங்கமோ, ஓராயிரம் கோடியோ
  உன் உயிர்க்கு உரமாகாதுணர்வாய். //
  அருமை நிஷா. நச்!

  பதிலளிநீக்கு
 6. வெகு சிறப்பு. எத்தனை பணம் இருந்தாலும் அதைச் சாப்பிடமுடியாது....

  இதை உணர்ந்தால் நல்லது.

  பதிலளிநீக்கு
 7. அருமை அருமை!!!! எல்லோரும் உணரவேண்டிய வரிகள்!

  //ஒரு பிடிச்சோற்றின் முன்
  ஒரு கிலோ தங்கமோ, ஓராயிரம் கோடியோ
  உன் உயிர்க்கு உரமாகாதுணர்வாய்.//

  வாவ்!!!! செம நிஷா!

  கீதா

  பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!