10 ஜனவரி 2017

பத்துரதப்புத்திரனின் மித்திரனின் சத்துரு யார்?

ஒருவருக்கு நெருஞ்சி முள் குத்திவிட்டதாம் . மருந்து கேட்டு வைத்தியரிடம் போனாராம். வைத்தியரிடம் போய் கொஞ்சம் ஏறுக்கு மாறாக நெருஞ்சி முள் குத்தி விட்டது, மருந்து தா என கேட்க மருத்துவருக்கு வந்ததே கோபம். போயும் போயும் நெருஞ்சி முள் குத்தியதுக்கா மருந்து கேட்டு வந்தாய் எனும் கோபத்தில்.....
"பத்துரதப்புத்திரனினின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் கால் எடுத்து தேய். " என்று சொல்லி போயிட்டே இருந்தாராம்.
சரி அவர் அப்படி என்ன தான் சொல்லிப்போனார்.. உங்களுக்கு ஏதேனும் புரிகின்றதோ?
விளக்கம்
பத்துரத = தசரத;
புத்திரனின் - மகன் ராமனின்;
மித்திரனின் - நண்பனான சுக்கிரீவனின்;
சத்துருவின் - பகைவனான வாலியின்;
பத்தினியின் - மனைவி தாரையின்;
கால் எடுத்து ( தாரை என்ற சொல்லின் காலை எடுத்து தேய்.
நெருஞ்சிமுள் குத்தினால் தரையில் காலை தேய்க்க வேண்டுமாம். 

6 கருத்துகள்:

  1. அம்மா சொல்லி இதைக் கேட்டிருக்கிறேன் - என் சொந்த அம்மா.... நீங்க வேற யாரையாவது நினைச்சுக்காதீங்க! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! வெங்கட்ஜீ!!!!! சிரிச்சுட்டேன்...

      கீதா

      நீக்கு

  2. ம்ம்...எவ்வோளோ பெரியய விளக்கம்..சூப்பர்

    பதிலளிநீக்கு
  3. "முள் வலியே பரவாயில்லை" என்று நினைத்திருப்பாரோ...? ஹா.... ஹா....

    பதிலளிநீக்கு
  4. கேட்டதுண்டு! இப்போது மீண்டும் தங்கள் பதிவின் மூலம்! என்ன ஒரு அழகு விடுகதை போன்ற தீர்வு!!!

    பதிலளிநீக்கு
  5. நெருஞ்சி முள்ளுக்கு தரையில் கால் தேய்த்த அனுபவம் நிறைய இருக்கு...

    அப்படி ஒரு வலி வலிக்கும்...

    இந்த விளக்கம் முன்பே கேட்டிருக்கிறேன் அக்கா...

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!