19 டிசம்பர் 2023

யாழ்ப்பாணத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் மணல் காடு கடற்கரை


 
Jaffna Manalkadu Beach

யாழ் மாவட்டத்தின் வடமராட்சிப் பகுதியில் கிழக்குக் கிழக்குக் கரையோர கிராமம். பருத்தித்துறை நகரிலிருந்து கிழக்காக வல்லிபுரம் தாண்டி, குடத்தனை என்ற சிற்றூரைக் கடந்தால் வரும் அழகிய கடலோரக் கிராமம் மணற்காடு. மணல், காடு என்ற இரு சொற்களும் இணைந்து உருவாகியிருக்கும் பெயர் மணற்காடு. மரங்கள், செடிகள், கொடிகள் அடர்ந்திருக்கும்பகுதியைக் காடு என்பர். ஆனால் இங்கோ மணல் மேடுகள் தான் செறிந்து காணப்படுகின்றன. ஆதலினால் மணற்காடு என்ற பெயர் உருவாகிற்று என்பர். சிறு குன்றுகளாய்த் தோற்றமளிக்கும் மணல் திட்டுக்களும் அவற்றின் முடிவில் தொலை தூரத்திலே தெரியும் நீலக் கடலும் மனதை கொள்ளை கொள்ளும். வெள்ளை வெளேரென்ற மாசுமறுவற்ற மணற்திட்டுக்களைக் கடந்து சென்றால் கடல் அலை கால்களை ஆரத் தழுவும்.


இப்போது வீதி போடப்பட்டு வாகனத்தில் சுலபமாகச் செல்ல முடிகிறது.ஆயினும் கடலோரத்தை நெருங்கப் பொடி நடைதான். மண்ணில் கால் புதைத்து சிறிது தூரம் காலாற நடந்து சென்றால் அழகிய வடலிமரங்கள். பச்சைக் கம்பளமாகப் படர்ந்து கிடக்கும் அடம்பன் கொடிகள், இராவணண்மீசை, எழுத்தாணிப் பூக்கள், தாழைமரங்கள் என விரிந்து கிடக்கின்றன. பனிமலைபோலும் பரந்திருக்கும் வெண்மணல்த் தீவுகள். அதன் முடிவில் பாரிய கடல் ஆர்ப்பரித்து அலை மேலெழுந்து ஓடிவரும்.கரையிலிருந்து திரும்பினால் சிறிய செயின்ட் அந்தோனி தேவாலயம் 6 மீ உயரமுள்ள இயேசுவின் சிலையைக் கொண்டுள்ளது. விற்பனையாளர்கள் அல்லது சேவைகள் இல்லை.


2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது வெகுவாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மணற்காடும் ஒன்றாகும். அங்கிருந்த மீனவக் குடியிருப்புகளும் பெரியதேவாலயமும் ஆழிப்பேரலைகளால் உருக்குலைத்தன. மக்களின் விடாமுயற்சியால் இன்று மீண்டும் எழுந்து நிற்கிறது.

மணற்காடு.கடற்கரையின் ஒரு பகுதி முழுவதும் சவுக்குத் தோப்பாக இருக்கிறது. அப்பகுதி சவுக்கு மரங்கள் வளர்வதற்கு ஏற்ற சூழ் நிலைகளைக் கொண்டிருப்பதாலோ என்னவோ மணற்காடு கடற்கரைக்குச் செல்லும் பாதை நெடுகிலுமே சவுக்கு மரங்களைக் காண முடியும்.

மணற்காடு கடல் சற்றே ஆபத்தானது. கரையாயினும் கூட, கடல் ஆழமாகவே இருக்கும். அலைகள் உயர்ந்து எழும்பும். நீச்சல் அனுபவம் இருந்தால் கூட எந்த வித பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி நீந்தச்செல்வது ஆபத்தானது என்றே கூற வேண்டும். பெரியவர்களின் துணையின்றி கடலினுள் இறங்குவதே ஆபத்தானது தான். அப்பகுதி சன நடமாட்டம் குறைந்த பகுதி. அந்தக் கிராமத்து மீன்வர்களின் ஆட்சிக்குட்பட்டது. அவர்கள் கூட தமது வேலை முடிந்த பின் கடற்கரையில் நிற்க மாட்டார்கள். காலை வேளை கடந்து சூரியன் உச்சத்தை அடைய அலையின் வீச்சமும் அதிகமாகவே காணப்படும். சன நடமாட்டம் இல்லாதபோது அப்பகுதியில் இனம்புரியாத தனிமையை உணரலாம். அத்தகைய வேளைகளில் தனியேயோ அல்லது அப்பகுதியைச் சேராதவர்களுடன் இணைந்து கூட்டாகவோ கடற்கரைக்குச் செல்லுதல் நல்லதல்ல. அப்பகுதிக்கு அறிமுகமில்லாதவர்களுடன் சென்று நீச்சலுக்கு கிளம்பாமல் கரையில் அலையில் நின்று காலகளை நனைத்து சூழலை ரசித்து வரலாம்.

மணக்காடு கடற்கரை ஒரு சுற்றுலா தலமல்ல. ஆனால் உள்ளூர் மக்கள், கூட்டமாக சென்று பார்த்து ரசித்து வர வேண்டிய் வெண் மணற்ப்பரப்புகளை கொண்ட முக்கிய பிரதேசம்.

இக்கட்டுரை மணற்காடு கடற்கரைக்கு நேரில் சென்று வந்தவர்களின் சுய அனுபவங்களிலிருந்து தொகுக்கப்பட்டிருக்கின்றது. தரவுகளில் தவறோ, சேர்க்க வேண்டிய புதிய விடயங்களோ இருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள். பதிவில் இணைத்து விடுவேன்.



மணக்காட்டு கடற்கரை பிரதேசத்தில் அருகில் பார்க்க கூடிய இடங்களும் அதன் தூரமும்.

1.Vallipura Aalvar Kovil - 2.4 MILES
The much-revered Vallipura Aalvar Kovil is 5km south from central Point Pedro. Its gopuram is painted in an unusually restrained colour palette and the temple interior has some very pretty Krishnas. It’s famous for the boisterous, recently revived water-cutting festival in October, which attracts thousands of pilgrims. Puja is at 7am, 9.30am, noon, 4.15pm and, on Sunday, 6pm.

2.Munai Beach - 3.26 MILES
Simply a very fine beach, not far east of the Point Pedro Lighthouse. It's often good for swimming when the water is calm.

3. Point Pedro Lighthouse - 3.53 MILES
Occupies a prominent spot with sweeping views at the east end of the spectacular VVT–Point Pedro Coast Rd. Although the lighthouse is fenced off and photos are forbidden, there is a nice beach right beside it where you can have a dip or a picnic.

4. Theru Moodi Madam - 4.07 MILES
These mysterious and elaborately carved ruins of a gate over the road are thought to date to Dutch colonial times. It's about 100m east of the heart of Point Pedro.

5. Selvachannithy Murugan Kovil - 9.89 MILES
The charming, waterfront Selvachannithy Murugan Kovil (also known as Sella Sannathy Kovil) is an important Murugan temple and a scenic stop, with a lively puja. It's 4km west of VVT.

6.Chempiyanpattu Beach - 13.34 MILES
There’s a stunning beach here – a classic tropical picture of white sand, azure ocean and swaying coconut palms – though absolutely no facilities. Perfect if you want to get away from it all. Note the huge old baobab tree.

7.Maviddapuram Kanthaswamy Kovil - 16.51 MILES
Maviddapuram Kanthaswamy Kovil is now flourishing again after the war. The priests here are very friendly and will probably do a puja for you if you like (otherwise, it’s at 11.30am). It's right by the road junction and is surrounded by fairly lush banana trees.

8. Thurkkai Amman Kovil - 16.85 MILES
Beside the KKS road at the 13km marker, south of the village of Tellippalai, the vast Thurkkai Amman Kovil is set behind a fairly deep, stepped pool. The temple celebrates the goddess Durga and draws relatively large crowds, of women especially, on Tuesdays and Fridays, when devotees pray for a good spouse. Puja is at 8am, 11am, noon and 4pm, and the priests are welcoming. Look for the carving of elephants pulling a train.


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!