18 டிசம்பர் 2023

யாழ்ப்பாணத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் சங்குப்பிட்டி பாலம்

Sangupiddy Bridge


சங்குப்பிட்டி பாலம்

வட இலங்கையில் யாழ்ப்பாணக் கடல் நீரேரிக்குக் குறுக்காக அமைக்கப்பட்டுள்ள ஒரு சாலைப் பாலம் ஆகும். இது கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சங்குப்பிட்டியையும், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கேரதீவையும் இணைக்கின்றது. செறிவான மக்கள் தொகை கொண்ட யாழ்ப்பாணக் குடாநாட்டைத் தலைநிலத்துடன் இணைக்கும் இரண்டு பாலங்களில் இதுவும் ஒன்று.

இப்பாலம் ஏ-32 எனப்படும் யாழ்ப்பாணம் - மன்னார் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாகும். இப்பாலம் கட்டப்படுவதற்கு முன்னர் தலைநிலத்துக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குமான ஒரே சாலைத் தொடுப்பு ஆனையிறவு வழியான பாதையாகும். சங்குப்பிட்டிப் பாலத்தினால், தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான பயணத்தில் 110 கிலோமீட்டர் (68 மைல்) அல்லது மூன்று மணி நேரம் குறைந்துவிட்டது.

மேலும் விவரங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!