08 நவம்பர் 2020

“ மரவள்ளி கிழங்கு குச்சியும் இஞ்சியும் ஒன்றாக தின்னலாமோ..? - 1


மரவள்ளிக்கிழங்கு  தண்ணியில் போட்ட. அவிச்சு பச்ச மிளகாயும், நல்ல புளி மாங்கா போட்டு அவிச்சு மசிச்சுகடைந்து எடுத்தால்  நாக்கை சப்பு கொட்டி, சட்டி வழிச்சு விரல் நக்கி  தின்னுவம். 

எங்க ஊர கல்லாதது கூனி  போட்டு மாங்காய் கடைஞ்சால் சொல்லவே வேணும்..! உறைப்பும் புளிப்புமாய் மரவள்ளிக்கிழங்கு திண்டு நாக்கில் எச்சில் சுரக்கும்.

உங்களுக்கும் நாக்கில் எச்சில் ஊறுத்து அல்லோ..?  நல்லா ஊறட்டும்..🤪🤪

இருங்கோ வாறன்..🏃‍♀️🏃‍♀️

மரவள்ளி கிழங்கை விரல் அளவு தடிப்பாக வட்டம், சதுரமாக வெட்டி பொரிச்சு உப்பும், கூனி,செத்த மிளகாய் போட்டரைத்த 

தூளையும் தூவி தருவினம் அல்லோ.. 

சாப்பிட்டிடுக்கிங்களோ..? 

இல்லையோ..  😥 நீங்கள் கொடுத்து வைச்சது அவ்வளவு தான்..🤷‍♀️

நான் என்ன செய்ய  🙇🏻 🙇🏻 🙇🏻

இன்னும் இருக்கே ..🧚‍♀️🧚‍♀️

நல்லா மணப்புகருவாடு , மரவள்ளிக்கிழங்கு போட்டு  கட்டி தேங்காப்பால் விட்ட சொதி சுடுசோத்துக்கு பிசைந்து திண்டு மிஞ்சியது  அடுத்த நாள் பழைய மீன்குழம்பு சட்டிக்குள்  ஊத்தி அடுப்பில் வைச்சு சுண்டும் வரை சூடாக்கி,  தண்ணி ஊத்தி வைச்ச பழைய சோற்று தண்ணிய வடிச்சி போட்டு அதுக்கு மேல இந்த பழைய சொதி குழம்பு ஊத்தி பிசைந்து திண்டவங்கள் உண்டோ? 

சோத்துக்கு சொத்து எழுதி கொடுத்த கதை கேட்டதுண்டோ..? இது தான் அது 😻😻

இத்தினியும் திண்டாலும்  வயிறு உப்பிசமா இருக்கு... 😈

கொஞ்சம் இஞ்சி ப்ளென்டி குடிச்சால் நல்லா இருக்கும் எண்டு நான் சொல்ல... 

எண்டே ஆச்சி எடியே...  உனக்கென்ன விசர் புடிச்சு போட்டுதோ..? 

இப்பதான் மரவள்ளிக்கிழங்கு அவிச்சு திண்டு போட்டு இஞ்சி தேத்தண்ணி ஒரு கேடோ..? எல்லாரையும் ஒரேயடியா கட்டையில் படுக்க வைக்க  பிளான் போடுறியோ  என்று திட்டும் 😥😥

ம்கூம் ... உந்த கிழவிக்கு என்ன தெரியும்..?  இந்த இருபதாம்  நூற்றாண்டிலும் நூறு வருசத்துக்கு முந்திய பட்டிக்காடு எண்டு தலைமுடியை சிலிப்பிக்கொண்டு  டக்கு டக்கு என எழுப்பம் காட்டி ஓடிருவன் இந்த நிஷா 🤣🤣

அதானே நிஷாவா கொக்கா... 🦅 🦅🦅

இந்த கிழவிக்கு ஒன்றும் தெரியல்ல.. மொக்கு கிழவி.. இவைக்கு மரவள்ளி, இஞ்சி பத்தி என்ன தெரியும் எண்டு போட்டு ரெண்டு நாளா ஊரு உலகத்தில இருக்குற சயின்ஸ் lap எல்லாம் ஓடி தடவி தேடி இம்மாம் பெரிய பதிவை எழுதி இருக்கேன். 

யாராச்சும் புண்ணியவதி கொஞ்சூண்டு மரவள்ளிக்கிழங்கு பொரியலும் கூனி தூளும் அனுப்பி வையுங்கோ..🍵🍵🍵

பசிக்குது😻😻

Link Click பண்ணி பாருங்கோ 

Part 2 மரவள்ளி கிழங்கு மற்றும் இஞ்சியை ஒன்றாக சாப்பிடக்கூடாது’ என்பதற்குப் பின்னால் உள்ள அறிவியல் காரணம் என்ன?   

Facebook: மரவள்ளி கிழங்கு  குச்சியும் இஞ்சியும் ஒன்றாக தின்னலாமோ..? 

1 கருத்து:

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!