அக்கா...!
உண்மையில் நீங்கள் எங்களுக்கு உதவனும் என்று நினைக்கின்றிர்களா..?
அக்கா உண்மையில் எனக்கு இது தெரியல்ல..!
அக்கா எனக்கு உதவி செய்யுங்கோ..?
எப்படி இந்த Form நிரப்பனும்..?
கேள்விகள்... கேள்விகள்.. கேள்விகள் ( அறிந்து வேண்டுமென்று செய்கின்றார்கள் என்று சிலர் சொல்ல கூடும். அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவே )
என்னை போல் இன்னும் சிலர் இப்படி கேள்விகளை எதிர்கொண்டார்கள்.
கேள்விகளுக்கு பின் அறியாமை நிறைந்த குரல்கள்..
என் பிள்ளையை அந்த பிள்ளை இடத்தில வைத்து பார்க்கின்றேன்.
நான் வளர்ந்த காலத்தை நினைத்து பார்க்கின்றேன்.
இந்த பிள்ளைகள் எதையும் அறிந்து உணர்ந்து செய்யவில்லை..
அது தான் சரி... அப்படித்தான் என்று பலியாடுகள் போல் வளர்க்கப்பட்டு இருக்கின்றார்கள்.
இறைவா ..! இந்த பிள்ளைகளுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை, எவரிடமும் கை ஏந்தி வாழாத சுயமான வாழ்க்கையை உருவாக்கி கொடுக்கும் வழிகாட்டலை உணர்த்த எனக்கு உடல் மன பக்குவத்தை கொடு என்று வேண்டுகின்றேன்.
உங்களிடமும் ...🙏
நான் பொதுவாக அறிமுகம் இல்லாத புதியவர்கள் யாருடனும் பேச முயற்சிப்பது இல்லை, என் செவிக்குறைபாடு காரணம் என்றாலும் ஒரேயடியாக பேச முடியாது எனும் நிலை இல்லை.
பேசலாம்.. ஆனால் ஆர்வம் இல்லை. என்னோடு பேசுபவர்களுக்கு புரியும்.
ஆனால் #காணி பதிவுக்கு நேற்றும் இன்றும் வரும் கேள்வி களுக்கு பதில். Type பண்ண முடியாமல் ( கைவலிக்குது, விரல் நோகுது).
நேற்றும் இன்றும் பலருடன் பேசி போன் மூலம் விபரம் சொல்லி கொண்டிருக்கேன்.
எவரோ ஓரிருவர் செய்யும் தவறுகள் ( சொல்லுகேளாமை, மரியாதை குறைவு, மிரட்டல் ) ஒட்டுமொத்த எங்கள் பிள்ளைகளின் மேலும் சுமத்தி குற்றமும் குறையும் சொல்லி ஒதுக்கி போவது சரியானதா..?
இன்றைய அவர்களின் அவல நிலைக்கும், அறியாமைக்கும், கட்டுப்பாடின்மைக்கும் யார் காரணம்..?
நாங்கள் எங்கள் கடமைகளை உணராமல் அவர்களை தவறு சொல்லி கொண்டே இருக்கின்றோம்.!
யோசித்து பாருங்கள்.
எங்களுக்கு தேவை .. பொறுமை, நிதானம், புரிந்துணர்வுடன் அணுகுமுறை..!
முடியுமா ....! முடியனும்😻
#காணி பதிவில் நான் உணர்ந்தேன்
#ஆல்ப்ஸ்தென்றல்நிஷா
12.11.2020
உண்மையில் நீங்கள் எங்களுக்கு உதவனும் என்று நினைக்கின்றிர்களா..?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!