14 நவம்பர் 2020

நெஞ்சுக்கு தேவை மனசாட்சி- 2

நெஞ்சுக்கு தேவை மனசாட்சி- 2 

தேசத்தின்  பாதுகாப்பு உள் நாட்டு உற்பத்தி, அபிவிருத்தி, கல்வி மேம்பாடு, மனிதவள மேம்பாடு சார்ந்த தனி நபர், சமூக பொருளாதார தற்சார்பில் அடங்கி இருக்கின்றது. பொருளாதார மேம்பாடு  நாட்டு மக்களின் ஒத்துழைப்பால் உருவாகின்றது. 

Vision of Prosperity 

திட்டங்களின் கீழ் இலங்கையில் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள், ஒரு  இலட்சம் தொழில் முனைவோர் என்று பல்வேறு திட்டங்களின் கீழ் பல சிங்கள கிராமங்கள் சிங்கள  அமைச்சர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றது. 

#காணி

வடகிழக்கு மாகாணத்தில் காணி சார்ந்த அதிகாரங்கள் அந்தந்த பிரதேச செயலகத்துக்கு  கொடுக்கப்பட்டு இருக்கின்றது. 

அரசின் அறிவிப்புகள் அனைத்தும் ( மொழி அறியாமையால்) மக்களுக்கு புரிவது இல்லை. தமிழில் மொழி பெயர்த்து மக்களுக்கு விழிப்புணர்வு தர வேண்டியவர்கள் குறித்து  எனக்குள் எந்த விமர்சனமும் இல்லை.

தமிழ் பகுதிகள் தவிர்த்த ஏனைய பிரதேசங்கள் எவ்வாறு  அபிவிருத்தி அடைகின்றது எனும்  கேள்வி க்கு பதிலும் எமக்கு தெரிய வேண்டும். சிங்கள, முஸ்லீம் இன ஆளுமைகள் துடிப்போடு செயல்பட்டு தம் மக்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொள்கின்றார்கள். அப்படி என்றால்...? 

விபரம் அறிந்த பெரும்பாலான தமிழ் மக்கள் மனதளவில் ஓய்ந்து நம்பிக்கை இழந்து ராமன் ஆண்டாலும், இராவணன்  ஆண்டாலும்  நமக்கென்ன எனும் மனநிலையில் ஒதுங்கி கொண்டார்கள்

ஈழத்தமிழர்களில்  பெரும்பான்மை கற்றோர் சமூகம்  புலம்பெயர்ந்து விட்டது. எஞ்சி இருப்போரும் 

“ நான்” “என்னால்”  “ எனக்கு எல்லாம் தெரியும்”  என  வாழ்கின்றது. 

விளைவு..? 

இன்றைய இளையோர் சரியான வலுவூட்டல்  இல்லாமல் எடுப்பார் கைப்பிள்ளைகளாகி போனார்கள்..! 

இதில் யாரால்..? யார் சரி ..? யார் பிழை என்று எழுதி நேரத்தை விரயம் செய்ய விரும்பவில்லை. நான் கடந்த காலம் எழுத போவது இல்லை. 

நிகழ் காலத்தை ஆராய்ந்து  அதனுள் மறைந்து இருக்கும் பாசிட்டிவ் என்ன..? சிங்கள மொழி அறியாமையானால் உங்களுக்கு மறைக்கப்படும்

உண்மைகள் என்ன என்பதை என்னால் முடிந்த வரை எழுத போகின்றேன். 

உங்களை சுற்றி என்ன நடக்கின்றது என்று அறிந்து நிகழ் காலத்தில்  எதிர்காலத்தை நோக்கி திட்டமிட விரும்புவோர் என் தலைப்பில் தொடர போகும் பதிவுகளை படியுங்கள். 

கடந்த கால குறைகளையும், கறைகளையும், கசப்புகளையும் காவி திரிந்து அழிந்து போவோம் என நினைப்போர் எட்டி நில்லுங்கள். 

எங்கள் எல்லோருக்கும் கடமை இருக்கின்றது  எல்லோர் மேலும்

பிழை இருக்கின்றது. நாங்கள் எல்லோரும் குற்றவாளிகள் என்று உணர்த்தபபடுவோர் 

எங்கள் தேசம், மக்கள்,பாதுகாப்பு, முன்னேற்றம், அபிவிருத்தி என்று உண்மையில் உள்ளத்துள் உணர்ந்தும் புரிந்தும் கொண்டவர்கள் என் பதிவில் உங்கள் கருத்துகளை கொடுங்கள். சரி பிழை சொல்லுங்கள். மாற்று கருத்துக்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். 

கடந்த செப்டம்பர் மாதம் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய அவர்கள் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார்..!

அது என்ன ..? 

நெஞ்சுக்கு தேவை மனசாட்சி- 4 ம் பதிவில் வரும். 

நெஞ்சுக்கு தேவை மனசாட்சி- 2 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!